மணிமண்டபம் சிறப்பான முறையில் பரமாரிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற இடங்களில் அவசியம் நமது உழவாரப்பணி நடைபெறவேண்டும், நமது கால்கள் படவேண்டும் என்று விரும்பியே இங்கு பணி செய்ய ஒப்புக்கொண்டோம். அதற்கு ஏற்றார்போல, ஒட்டடை அடிப்பது, ஜன்னல்களை துடைப்பது, தரையை துடைப்பது, உள்ளிட்ட பணிகள் நமக்கு அங்கு இருந்தன.
குன்றதூருக்கு பஸ் வசதி இருந்தபடியால் போக்குவரத்திற்கு வேன் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் நாம் உழவாரப்பணி தொடர்பான பொருட்களை குட்டி யானை எனப்படும் வண்டியில் தான் கொண்டு வந்தோம்.
பணி நடைபெற்ற ஜூன் 22 ஞாயிறு காலை சொன்னது போல 7.30 க்கெல்லாம் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.
முன்னதாக பணி துவங்கும் முன்னர் அனைவரும், அருகில் உள்ள வட திருநாகேஸ்வரம் சன்னதி சென்று நாகேஸ்வரரையும், காமாக்ஷி அம்மனையும் தரிசித்தோம்.
மணிமண்டபத்துக்கு திரும்பி வந்தவுடன் நாம் கொண்டுவந்திருந்த காலை சிற்றுண்டி (கிச்சடி + சாம்பார்).
எப்போதுமே உழவாரப்பணியின் போது எங்கள் காலை உணவை அருந்தும் முன்னர், பசுவுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு பின்னரே நாங்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இம்முறை பசுவை எவ்வளவு தேடியும் அந்த பகுதியில் பார்க்க முடியவில்லை. ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தது நம் காக்கையார் தான். எங்களிடம் உணவிருப்பதை பார்த்துவிட்டு ‘கா…கா…’ என்று அது கத்த, மிகப் பெரிய தொண்டுக்கு ஆளாக்கினாய் எங்களை என்று கூறி அந்த காக்கைக்கு உணவிட்டோம். அது உணவருந்திய இடத்தின் அருகில் தான் அதன் கூடு இருந்தது. சமீபத்தில் தான் அது முட்டையிட்டு குஞ்சு பொறித்தது போல. சர்வேஸ்வரா!
மணிமண்டபத்தின் தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிறகு பணிகளை துவக்கினோம்.
அனைவரும் அவரவர் செய்யவேண்டிய பணிகளும் பகுதிகளும் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
மெயின் ஹாலில் சேக்கிழாரின் திருவுருவச் சிலைக்கு அருகே மிகப் பெரிய பித்தளை விளக்கு ஒன்று இருந்தது. தூசி படிந்து நிறம் மாறி காணப்பட்ட அந்த விளக்கு சுத்தம் செய்ய மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த விளக்கை நிச்சயம் ஒருவர் மட்டும் தூக்க முடியாது. அத்தனை எடை. எனவே இருவர் சேர்ந்து தான் தூக்கி சென்றோம். ஆனால் சீதை சிவதனுசை சுண்டு விரலால் புரட்டியதை போல, நம் மகளிர் அணியினர் மிக மிக அசால்ட்டாக அந்த விளக்கை அப்படி இப்படி புரட்டிப்போட்டு சுத்தம் செய்வதை பார்த்தபோது நமக்கு பகீரென்றது (!!??).
சுமார் ஒரு மணிநேரம் பீதாம்பரி, புளி, சபேனா இவற்றை போட்டு மகளிர் அணியினர் அந்த விளக்கை நன்கு தேய்த்து புத்தம் புதிய விளக்கு போலாக்கிவிட்டனர்.
விளக்கை சுத்தம் செய்து சேக்கிழார் அருகே அதை வைத்த பிறகு மகளிர் அணியினர் மணிமண்டபத்தை சுற்றி, உள்ள நடைபாதையை கூட்டிப் பெருக்க ஆரம்பித்தனர்.
நண்பர் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோர் மணிமண்டபத்தில் உள்ள மெயின் ஹால் முழுக்க ஒட்டடைஅடித்தனர். ஹரி, குட்டி சந்திரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தியான மண்டப்பத்தை பார்த்துக்கொண்டனர்.
தியான மண்டபத்தில் (இங்கு தினசரி தியான வகுப்பு நடைபெறுகிறது) உள்ள ஃபேன்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, இறக்கைகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் சோப் பவுடரும் நீரும் விட்டு நன்கு வாஷ் செய்யப்பட்டது. நாட்பட்ட தூசிகள் மற்று அழுக்குகள் நீங்கி அவை பளிச்சென்று மாறின. மீண்டும் பொருத்தும்போது அனைத்து ஃபேன்களும் புத்தம்புது பேன்கள் போலாகிவிட்டன.
பின்னர் தியானமண்டபத்தில் மேல் உள்ள டூம் முற்றிலும் ஒட்டடை அடிக்கப்பட்டது. இது சற்று உயரம் என்பதால் ஒட்டடை அடிக்க சவாலாக இருந்தது. ஏணியை கொண்டு வந்தும் உயரம் போதவில்லை. ஒரு வழியாக அட்ஜஸ்ட் செய்து நண்பர்கள் ஒட்டடை அடித்து முடித்தனர்.
ஒட்டடை அடித்து முடித்தபின்னர், தரை கூட்டிப் பெருக்கப்பட்டு, மகளிர் குழுவினரை கொண்டு சோப் ஆயில் கொண்டு தரை முழுக்க மாப் செய்யப்பட்டது. இதையடுத்து மணிமண்டபம் முழுக்க பளபளவென சுத்தமாகிவிட்டது.
==============================================================
நீ பிறர்காக வாழ்வது இன்பம் அல்லவோ!
இன்றைய உழவாரப்பணியின் போது மணிமண்டபத்தில் துப்புரவு பணியை திறம்பட செய்து வரும் தீபா மற்றும் சத்யா ஆகிய இரு பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு புடவை, ரவிக்கை மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
பொதுவாக இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்டவர்களை கௌரவிப்பதற்கு முன்பு, அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா என்று தெரிந்துகொண்டு தான் கௌரவிப்பது நம் வழக்கம். (நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது.)
ஒரு சில கோவில்களில், இப்படி துப்புரவு பணி செய்யும் பெண்களிடம் சாட்சாத் அந்த அம்பிகையையே கண்டு வியந்திருக்கிறோம். தெய்வானாம் மானுஷ ரூபாம்! (அது பற்றி ஒரு பதிவு தனியாக வரும்!)
சேக்கிழார் மணிமண்டபத்தில் உள்ள தோட்டத்தையும் புல்வெளிகளையும் பராமரிப்பது இவர்கள் பணி. சம்பளத்துக்கு தான் வேலை என்றாலும், அதையும் ஆத்மார்த்தமாக செய்பவர்கள் இவர்கள்.
நாங்கள் காலை உழவாரப்பணி செய்ய இறங்கியபோது, ‘இவர்கள் தான் வேலை செய்கிறார்களே நாம் சும்மா நிற்போம்’ என்று கருதாமல் தங்கள் கடமையை அவர்கள் பாட்டுக்கு கருத்தாக செய்துவந்தனர். பேச்சு கொடுத்ததில் அவர்கள் குடும்பத்தின் நிலையை தெரிந்துகொண்டோம். இவர்களை போன்றவர்கள் வீட்டு வேலை செய்தாலே சுலபமாக பல ஆயிரங்கள் சம்பாதிக்க முடியும் என்பது தான் யதார்த்தம். அப்படியிருக்க, சேக்கிழார் மணிமண்டபத்தில் பணி செய்வது மிகப் பெரிய விஷயம்.
நம் வாசகியரை கொண்டு தீபா மற்றும் சத்யா இருவருக்கும் புடவை, ரவிக்கை பிட் மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மண்டபத்தின் காவலாளியாக பணிபுரிந்துவரும் பெரியவர் வேலாயுதம் அவர்களை, அவரது சேவையை கௌரவிக்கும் விதமாக நம் தளம் சார்பாக சால்வை அணிவித்து வேஷ்டி பரிசளிக்கப்பட்டது.
மலை போல பலமான மனம் வேண்டும் உனக்கு
செய் நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு
தெய்வங்கள் ஒன்றென்று நம்பிக்கை கொண்டு
சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்
நீ பிறர்காக வாழ்வது இன்பம் அல்லவோ!
==============================================================
பணிக்கு வந்தவர்களுக்கு அன்புப்பரிசு!
நமது உழவாரப்பணிகளில் பங்கேற்பவர்களுக்கு ஏதோ நம்மால் இயன்ற சிறு சிறு அன்புப்பரிசு வழங்குவது நம் வழக்கம்.
இன்று பணியில் பங்கேற்றவர்களுக்கு, ‘பலன் தரும் திருமுறைப்பதிகங்கள்’, மனனம் செய்யவேண்டிய அறுபத்துமூவர் இறையடியார் வரலாறு, மற்றும் மகா பெரியவாவின் லேமினேட் செய்யப்பட்ட சிறிய புகைப்படம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.
எளிமையான பரிசுதான். ஆனால் வலிமையானது அல்லவா? சரிதானே?
பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும் இறைவா!
==============================================================
சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நமது தேவைகளை கேட்டறியவும், மதிய உணவை ஏற்பாடு செய்யவும் வந்திருந்தார்.
பணி செய்ய வாய்ப்பளித்தமைக்கு அவருக்கு நன்றி கூறி மணிமண்டபத்துக்கு நம் தளத்தின் பிரார்த்தனை படம் பரிசளிக்கப்பட்டது. பின்னர் அது தியான மண்டபத்தில் மாட்டப்பட்டது.
அனைத்து வேலைகளும் ஒருவழியாக முடிந்த பிறகு, அருகில் உள்ள பன்னிரு திருமுறைகள் பாராயணம் நடக்கும் சேக்கிழார் பஜனை கூடத்தில் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுடச் சுட சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு பொரியல், + தயிர் சாதம். தேவார்மிதம் என்று சொல்வார்கள் இல்லையா? அதற்கு அர்த்தம் இது தான். முதலில் பசிக்காதது போல இருந்தது. ஆனால், சாம்பார் சாதத்தின் சுவை அனைவரையும் ஒரு பிடி பிடிக்க வைத்துவிட்டது. தொடர்ந்து தயிர் சாதம். மாதுளை முத்துக்கள் திராட்சை இவை போடப்பட்ட தயிர்சாதம். சுவைக்கு கேட்க வேண்டுமா?
இந்த உழவாரப்பணி கடந்த ஜூன் 8 அன்றே நடைபெறவேண்டியது. முதலில் திட்டமிட்ட தேதியும் அது தான். ஆனால் எம் பாட்டியின் திடீர் மறைவையடுத்து 10 நாள் காரியங்களும் 13 ஆம் நாள் செய்யப்படும் சுபமும் முடியாமல் எங்கும் போகக்கூடாது என்று வீட்டில் சொல்லிவிட்டபடியால், இங்கு பணி செய்ய இயலாத நிலையில் இருந்தோம். (இது பற்றி ஏற்கனவே இங்கு தெரிவித்திருந்தோம்.) நமது இக்கட்டான நிலையை விளக்கி, “வேறு யாரையாவது வைத்து இம்முறை செய்துகொள்ளுங்கள். எங்களுக்கு கொடுத்துவைத்தது அவ்வள்ளவு தான்” என்று பொறுப்பாளர் திரு.பாலுவிடம் நாம் சொல்ல நினைத்த நேரத்தில், “சேக்கிழார் விழா ஜூன் 28 தான் நடக்கிறது. எனவே எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிறு வந்தாலே போதுமானது!” என்று கூறி நமது வயிற்றில் பால் வார்த்தார்கள்.
ஏனெனில், இங்கு ஒவ்வொரு வருடமும் சேக்கிழாரின் குரு பூஜை முடிந்ததும் தொடர்ந்து வரும் இரண்டாம் வாரம் இங்கு சேக்கிழார் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை அது சற்று தள்ளி நடைபெறுகிறது. சேக்கிழாரின் கருணையே இதுவன்றி வேறொன்றுமில்லை. (விழாவின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இயன்றோர் கலந்துகொள்ளுங்கள்)
மொத்தத்தில் சேக்கிழார் பெருமான், எங்களுக்கு பணி செய்ய வாய்ப்பை தந்து, எங்களை புனிதர்களாக்கி, மனம் நிறைய வைத்து இறுதியில் வயிற்றையும் நிறைய வைத்துவிட்டார். மனம் வயிறும் ஒருங்கே நிறைந்தது ஈசன் கருணை.
ஞாயிறன்று பல்வேறு சொந்த அலுவல்களை தியாகம் செய்து இந்த உழவாரப்பணிக்கு வந்திருந்து சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் திருவருளும், தொண்டர்க்கெல்லாம் தொண்டன், தலைவர்க்கெல்லாம் தலைவன் நம் பரமேஸ்வரனின் அருளும் பரிபூரணமாய் உரித்தாகுக.
ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டம்செய் வரதர்பொற் றாள்தொழ
– திருத்தொண்டர் புராணம்
(Double Click the image to ZOOM & READ)
இந்த வாய்ப்பையும் அனுமதியையும் எங்களுக்கு வழங்கி, சிறப்பான முறையில் ஏற்பாடுகளும் செய்து அன்ன பரிபாலனமும் செய்த தெய்வ சேக்கிழார் அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மீக பணியும் தமிழ் பணியும் தொடரவேண்டும் என்று சேக்கிழார் பெருமானை இந்த தருணத்தில் வேண்டிக்கொள்கிறோம்.
(ஜூன் 15, 2014 அன்று பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணியின்போது இறைவன் திருவுளப்படி தீபமேடையும், பெரிய பெடஸ்ட்ரல் ஃபேனும் ஒப்படைக்கப்பட்டது. உழவாரப்பணியும் சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய பதிவு விரைவில் அளிக்கப்படும். அனைவருக்கும் நன்றி!)
=================================================================
Also check :
[END]
வணக்கம் சார்,
உண்மையிலேயே குன்றத்தூர் உழவரபணி ஒரு வித்தியாசமான பணியாக அமைந்தது.
கடந்த ஒன்றரை வருடங்களாக நமக்கு கோவில் வளாகமும் ,சன்னதியும் சிலைகளும் தான் பழகிவிட்ட ஒன்று.
ஆனால் மணிமண்டபம் பணி செய்யும் போது ஒரு சித்தர் பீடத்தை தூய்மை செய்யும் வாய்பாகவும் சென்னையில் நாம் இல்லாமல் வேறு ஒரு நகரத்தில் இருப்பது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது .
திரு. ராஜா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு பணியில் பங்கு கொண்டு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
மகளிர் குழுவை வஞ்ச புகழ்ச்சி மாதிரி கலாட்டா பண்ணி உள்ளது நன்றாக தெரிகிறது.
நன்றி .
Thank you so much for your article on Kundrathur Sekizhar mani mandapa uzavarapani. We feel very proud of doing such magnificent work in that Temple. The way in which Right Mantra has organized the programme is marvellous.
The team members done their duties in a perfect manner. RM has honoured the temple workers and staff in a virtuous manner.
Sambar rice and Curd rice was very much appetizing and good. Our sincere thanks to Mr Balu for organizing lunch for us.
Finally, the gifts (Thirumurai pathigam and magaperiyava abaya hasta photo) given to by Right Mantra Editor is really valuable. The songs contained in that book are Thirumurai medicines for the betterment of life.
Our sincere Namaskar to Sekhizar who will definitely enlighten all our lives.
Awaiting Perambakkam U.Pani article.
Regards
Uma
மணிமண்டபம் கொள்ளை அழகு. அங்கு பணி செய்த நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அங்கு பணிபுரிபவர்களை நீங்கள் கௌரவித்தது உண்மையில் நெகிழ வைக்கும் ஒன்று. அவர்கள் முகத்தில் தெரியும் ஒரு வித நிறைவு… .அப்பப்பா.. சொல்ல வார்த்தைகள் இல்லை.
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
சென்னை வரும்போது நிச்சயம் சேக்கிழார் மனிமண்டபத்தையும் நாகேஸ்வரரையும் தரிசிப்பேன்.
மேட்டூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் உழவாரப்பணி வைத்தால் நிச்சயம் என் குடும்பத்தினருடன் கலந்துகொள்வேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
உழவாரப்பணியில் ஈடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
இதெல்லாமே அவனின் ஆணைஇன் படிதான் நடக்கிறது . நீங்கள் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள் . என் இனிய வாழ்த்துகள் . நன்றிகள் . இ.வைரமுத்து , சேலம் -636004.
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பங்கேற்ற உழவாரபணி ,வரகூடாது என்று எதுவும் இல்லை வாய்ப்புகள் அமையவில்லை ,இந்த தடவை நானே அமைத்து கொண்டேன் அவ்வளவுதான்
சார்
நன் தங்களது பணியை பார்த்து மனம் மகிழ்ந்தென் என்னை தங்களது உழவர பணியல் கலந்துகொள குபிடும் படி பணிஉடன் கேடுக்குல்ல்கிறேன்
பணி உடன்
ரா.சிவஷன்முகனந்தன்
கைபேசி : 7845906619, 8015404257
ஓம் சிவ சிவ ஓம்
Dear Sir
Please include add my name in your list of Volunteers .
Regards
Ramesh
+919444413781
Email gramesh1968@gmail.com
என்னுடைய பெயரையும் தங்களது உழவாரப்பணி தொண்டர்களின் பட்டியலில் இணைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.
Sure. thank you.
Mail me your name, address and mobile number to simplesundar@gmail.com and rightmantra@gmail.com quoting Temple cleaning volunteer in subject.
Also look out for Scrolling Announcement in our site’s homepage whenever we arrange for Uzhavarappani.
thanks.
I WANT TO PARTICIPATE IN YOUR ACTIVITIES MY MOBILE NO IS 9585649947
WITH WARM REGARD