ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான். ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர்.
எந்த ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
இறைவனின் அருள் கொட்டிக்கிடக்கும் இடம் அவன் திருவடிகளே!
பக்தர்களின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை அவற்றுக்கு உண்டு. ஆகையால் தான் பெருமாள் கோவில்களில் சடாரி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இறைவனின் திருவடியை கிரீடம் போன்று செய்திருப்பார்கள். அதை வைத்து நமக்கு ஆசி கூறுவார்கள். அது எத்துனை முறை நம் தலை மீது வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்களவு நமது தலையெழுத்து நன்றாக இருக்கும். இறுதியாக இறைவனின் திருவடியை பணிபவர்களுக்கு வேறு எவர் காலிலும் விழவேண்டிய அவசியம் எந்த நாளும் ஏற்படாது!
தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார். எனவே இராமனின் பாதுகைகளை கொண்டு போய் அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான் பரதன். இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தையே ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியவர் இயற்றியிருக்கிறார். முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஒரே இரவுக்குள் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்தார் என்பது தான் இதன் சிறப்பு.
தினமும் காலையில் எழுந்த அவரவர்க்குரிய சமயக் கடமைகளை செய்யவேண்டும். பின்னர் தாம் பாராயணம் செய்ய விரும்பும் ஸ்லோகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் .
ப்ராணாயமம் செய்து… மனதை ஒரு நிலைப் படுத்திக்கொள்ளவேண்டும்.
பிறகு சங்கல்பத்தை செய்துகொள்ளவேண்டும். பிறகு,
ஸ்ரீமாந் வேங்கட நாதார்யா : கவிதார்க்கிகேஸரீ
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிததத்தாம் ஸதாஹ்ருதி
என்று சொல்லி பாதுகா சஹாஸ்ரத்தை அருளிய நிகமாந்த தேசிகரை மனதால் நினைத்து வணங்கவேண்டும்.
பின்னர் 108 முறை கீழே தரப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும்.
ஸ்லோகங்களை ஜபிக்கும்போது, மனதில் இறைவனின் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்கவேண்டும். பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையுடன் இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜபித்து வந்தால்… கோரிய பலன் கிட்டும். ஒருவேளை அது தாமதமானாலும் அவநம்பிக்கை கொள்ளாது கொள்ளாது பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் கோரியது கிடைக்கும். யார் உங்களை கைவிட்டாலும் பாதுகா உங்களை கைவிடாது.
பாராயணம் முடிந்த பின்னர்,
கவிதார்க்கிகஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :
என்று சொல்லி பூர்த்தி செய்யவேண்டும்.
கெட்ட எழுத்து நல்ல எழுத்தாக மாற
கெட்ட எழுத்து என்றால் பிரம்மாவினால் ஒவ்வொருவர் நெற்றியிலும் எழுதியுள்ள எழுத்து. அதாவது அவரவர் பாக்கியம் எனலாம். அத்தகைய பாக்கியம் கெட்டதாக துர்பாக்கியமாக இருந்தால் அது மாறுதலடைந்து சுக பாக்கியங்கள் ஏற்படுவதற்கு கீழ்கண்ட சுலோகத்தை ஜபிக்கவேண்டும்.
50: பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்
பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:
க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:
பொருள் : பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய். உன்னைத் தீய மக்கள் அண்டிவிடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய்; இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்?
விளக்கம் : சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு ரஸவாதம் என்று பெயர். இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன. ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது. இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று அனைவராலும் போற்றும்படியாக மாறிவிடுகின்றனர்.
தங்கத்தால் செய்யப்பட்ட சடாரிதான் நம்முடைய தலை எழுத்தைத் தங்கமாக மாற்றும் என்று அவசியம் இல்லை. இந்த வெள்ளிச் சடாரியும் மாற்றும்.
(ஸ்லோக உதவி : http://namperumal.wordpress.com | ஸ்ரீ பாதுகாசஹஸ்ரம் முழு புத்தகத்துக்கு : www.lifcobooks.com)
[END]
Very nice article precious info. God bless u!
தலை எழுத்தை மீண்டும் மாற்ற அதுவும் மங்களகரமாக
மாற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்லவும்.
பிரம்மனுக்கு கோவில் திருப்பட்டூரில் (திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் )
இருக்கிறது. இது திருச்சியில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ளது.
சிறுகனுருக்கு மேற்க்கே 5 கிலோ மீட்டரில் உள்ளது.
ஜாதகத்தை இறைவன் காலடியில் வைத்து பக்தர்கள் எடுத்து செல்கிறார்கள்.
அப்படி செய்யும் போது பிரம்மா அதை மங்களகரமாக மாற்றி எழுதுவார்
என்று நம்புகிறார்கள்.
(ஒரு தொலைக்காட்சியில் பார்த்து குறிப்பு எழுதி வைத்திருந்தேன்.)
———————————————————————————
தங்கள் வருகைக்கு நன்றி. ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ என்ற பெயரில் விகடன் பிரசுரத்தில் இது நூலாகவே வெளிவந்துள்ளது தெரியுமா?
http://books.vikatan.com/index.php?bid=2043
– சுந்தர்
விதுர நீதி!
விண்ணுலகிற்கு நம்மை இட்டு செல்வதற்கு, ஒரே ஒரு ஏணி தான் உண்டு; மாற்று ஏணி கிடையாது. கடலைக் கடக்க உதவும் படகைப் போல், உலகைக் கடந்து, அமர வாழ்விற்கு இட்டுச் செல்லும் அந்த ஒரே ஏணி …..சத்தியம் தான்
அன்பே சிவம்
manadukku inimayanadu.vazhkayai arthamulladagha vazha vazhi kattudu