Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > Featured > ‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கலக்கம்?’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கலக்கம்?’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
தென் தமிழ்நாட்டில் ராமதீர்த்தர் என்ற ஒரு குரு இருந்தார். வேத, சாஸ்திரங்களை முறைப்படி கற்று தேர்ந்த அவர், தான் கற்ற வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் தன்னோடு மட்டுமே போய்விடக்கூடாது என்று கருதி, ஏழை மாணவர்களை தனது ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கெல்லாம் இலவசமாக வேதம் சொல்லிக்கொடுத்து வந்தார்.

தன்னலம் இல்லாது வேதம் சொல்லிக் கொடுத்து வந்ததாலோ என்னவோ அவருக்கு சித்திகள் கைகூடி வந்தன. இருப்பினும் வீண் பரபரப்புக்காகவோ அல்லது பெருமைக்காகவோ அதை அவர் பயன்படுத்துவதில்லை.

திருவாரூர் கமலாலயக் குளம்!
திருவாரூர் கமலாலயக் குளம்!

தனது சிஷ்யர்களில் நந்து என்கிற முதன்மையான ஒருவனை அழைத்துக்கொண்டு ஒரு நாள் அடுத்த ஊர் சென்றுகொண்டிருந்தார் ராமதீர்த்தர். காடு வழியே நடந்து சென்றபோது சீடனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் களைப்பு ஏற்பட்டது. அந்த சீடனுக்கு அன்று நேரம் சரியில்லை. அன்று அவன் பாம்பு கடித்து இறப்பான் என்கிற விதி இருந்தது. இது ராம தீர்த்தருக்கு தெரியும். (இந்தியாவில் இன்றும் ஆண்டுக்கு, 23 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை பாம்பு கடிக்கு ஆளாவதாகவும், இதில், 11 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது!!)

களைப்பு மிகுதியால் சீடன் தடுமாறுவதை பார்த்த குரு. “வேண்டுமானால் இங்கு ஒரு சில மணிநேரம் ஓய்வெடுத்துவிட்டு பிறகு பயணத்தை தொடர்வோம்” என்றார்.

ThiyagarajaMain
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி

ஒருவர் உறங்கும்போது, மற்றவர் விழித்திருந்து காவல் காப்பது என்று முடிவானது. சீடன் ஏற்கனவே காய்ச்சல் வந்து மிகவும் களைப்படைந்து இருந்ததால் அவன் முதலில் உறங்கினான். ராமதீர்த்தர் காவல் இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த பக்கம் ஒரு மிகப் பெரிய நல்ல பாம்பு ஊர்ந்து வருவதை பார்க்கிறார் ராமதீர்த்தர். அவர் பார்த்துகொண்டிருக்கும்போதே நந்துவை அது கொத்தப்போக, ராமதீர்த்தர் உடனே “ஏ… நாகமே நில்!”  என்றார்.

வேதம் படித்தவரின் ஆணை என்பதால் நாகம் அப்படியே நின்றது.

“நீ அவனை இன்று கடிக்க முடியாது. உடனே இங்கிருந்து போ!” என்றார்.

“ராமதீர்த்தரே, விதியின் கட்டளைப்படி நான் செயல்படுகிறேன். இன்று இவனை நான் கொத்தவேண்டும், இவன் இரத்தம் பூமியில் சிந்தவேண்டும் என்பது எனக்கிடப்பட்டுள்ள கட்டளை. காலதேவனின் செயலில் அனைத்தும் அறிந்த நீங்களே குறுக்கிடலாமா?”

“நாகமே, உனக்கு தேவை இவன் ரத்தம். அவ்வளவு தானே. அதை நானே தருகிறேன். எந்த பாகத்தில் இருந்து உனக்கு ரத்தம் வேண்டும்?”

“வலது கால்!” என்றது நாகம்.

உடனே ராமதீர்த்தர், கையில் ஒரு கத்தியை எடுத்து, சீடனின் கால்களில் ஒரு வெட்டு வெட்டினார். இரத்தம் பீறிட்டு கிளம்பி, நாகத்தின் மீது தெறித்தது.

திடீர் வலியை உணர்ந்த சீடன் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தான். எதிரே கத்தியுடன் தனது குரு அமர்ந்திருப்பதை பார்க்கிறான். எதுவும் நடக்காதது போல மீண்டும் கண்களை மூடி உறங்கத் துவங்கினான்.

தனக்கு தேவையான இரத்தத்தை பெற்றுகொண்டதும் நாகம் அங்கிருந்து வெளியேறியது.

நந்து கண் விழித்ததும் குரு கேட்டார்… “ஏன் கண்களைத் திறந்தாய்? பின்னர் ஏன் மூடிக்கொண்டாய்?”

“என் காலை யாரோ வெட்டியது போல இருந்தது. யாரோ என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கருதி கண்ணைத் திறந்தேன். ஆனால் கத்தியைப் பிடித்திருப்பது நீங்கள் தான் என்பதை பார்த்தேன். எனக்கு நீங்கள் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன்!” என்றான்.

ஒரு குரு எப்படி இருக்கவேண்டும், அவர் சீடன் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது அல்லவா?

குரு என்பதற்குப் பதிலாக அந்த இடத்தில் கடவுளை வைத்துப் பாருங்கள். சில உண்மைகள் உங்களுக்குப் புரியவரும். அந்த சீடன் போல கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்தால் போதும். நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் ஏற்படலாம். அந்தப் பாம்பு போல் உயிருக்குக் கூட ஆபத்து நேரிடலாம். ஆனால் நாம், ‘கடவுள் நம் அருகில் இருக்கிறார்’ என்பதை உணர வேண்டும். ‘அவர் பார்த்துக் கொள்வார்’ என்று முழுமையாக நம்பவேண்டும். நமக்கு ஏற்படும் சிறு சிறு சோகங்களைக்கூட, கடவுள்தான் அந்த குருவைப் போல, பாம்புக் கடியிலிருந்து தப்பிக்க கொஞ்சம் ரத்தம் மட்டும் தந்ததைப் போல, பெரிய பிரச்னையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விதியையே மாற்றி, அதன் அடையாளமாக சின்னதாய் வலி தந்திருக்கிறார் என்று உணரவேண்டும்.

================================================================

இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : உழைப்பால் உயர்ந்த உத்தமர் மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி. பாலன் அவர்கள்.

பாலன் அவர்களை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. டிசம்பர் 8, 2013 அன்று நடைபெற்ற நமது பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர். எளிமையின் சிகரம்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கையில் ஒரு நயா பைசா இல்லாமல் திருச்செந்தூரில் இருந்து ரயிலேறி சென்னை வந்து, சுற்றித் திரிந்து அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு நிற்பவர்களுக்கு இடம் பிடித்து கொடுத்து, அவர்கள் தந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாயை வைத்து அன்றைய பசியை பசியை போக்கிக்கொண்டவர். (அப்போதெல்லாம் ஒரு ரூபாய் மிக மிக மதிப்பு மிக்கது!).

கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க தூதரகத்துக்கு வரும் பயண முகவர்களுடன் (Travel Agents) பழக்கம் ஏற்படுகிறது. விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்கிறார். இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தூதரகத்தின் வரிசையில் இடம் பிடிக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, அங்கு வரிசையில் நிற்கும் மற்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களுக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொடுக்கவும் மற்றும் பயணத்தேவைகளை பூர்த்தி செய்யவும், விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது வரையிலும் பாலன் பொறுப்பேற்கிறார்.

DSC_6346
மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி. பாலன் அவர்கள் நம் பாரதி விழாவில் உரையாற்றுகிறார்

வாடிக்கையாளரின் திருப்தியே தனது திருப்தி என்பதைக் கொள்கையாகக் கொண்டு பாலன் இயங்க ஆரம்பிக்கிறார். பாலனின் பழக்க வழக்கம், நாணயம், நம்பிக்கை, உழைப்பு இவை சென்னை மாநகரில் இருக்கக்கூடிய பயண முகவர்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்கவும், வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவும் காரணமாக அமைந்தன.

பாலனை நம்பி எத்தனை இலட்சங்களும் கடன் கொடுக்கப் பல விமானப் பயண முகவர்கள் முன்வந்தனர். இவற்றையே மூலதனமாகக் கொண்டு மதுரா டிராவல் சர்வீஸ் பிறந்தது. இன்று எழும்பூரில் ஓங்கி உயன்ர்ந்து நிற்கும் ஒரு கட்டிடத்தில் மதுரா ட்ராவல்ஸ் இயங்கிவருகிறது.

தனது அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளார் திரு.வி.கே.டி. பாலன்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருக்கும் திரு.சண்முகநாதன் அவர்களின் பிரார்த்தனையுடன் இது வரை நமது தளத்தில் புத்திர பாக்கியம் வேண்டி பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியவர்களின் விபரங்களையும் கூறி அவர்களுக்காகவும் திரு.பாலன் அவர்களை பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுகொள்ளவிருக்கிறோம்.

================================================================

நம்பினோர் கைவிடப்படார்! இது நான்மறை தீர்ப்பு!!

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.சண்முகநாதன் அவர்களின் கோரிக்கையை படிக்கும்போதே அவர் எந்தளவு துன்பத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இராமாயணத்தில் ஒரு கட்டத்தில், இராவணனின் துக்கத்தை விவரிக்கும் கம்பர், “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கூறுவார். அந்தளவு கடன் ஒருவருக்கு ஆற்றொண்ணா துன்பத்தை கொடுக்கும்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. (குறள் 1049)

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாது என்று கூறுகிறார் வள்ளுவர்.

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் – வையத்து
அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்

என்கிற நல்வழியின் பாடலுக்கு இணங்க, எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எந்த ஏழையின் வயிற்றெரிச்சலை கொட்டிகொண்டோமே தெரியாது.

இறைவனிடம் சரணடைந்து அவன் பாதங்களில் வீழ்வோம். செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற அனைத்து தவறுகளில் இருந்தும் நம்மை காக்கும்படி அவனிடம் வேண்டுவோம். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்.

இறைவனின் கருணை என்னும் அருள் மழையை கொண்டு கடன் என்னும் நெருப்பை அணைக்கமுடியும். கவலைவேண்டாம். இரண்டொரு நாளில் நண்பர் திரு.சிவ.விஜய் பெரியசுவாமி அவர்கள் கூறும் பரிகாரத்தை செய்து வாருங்கள். அல்லது நீங்கி நல்லதே நடக்கும்.

நம்பினோர் கைவிடப்படார்! இது நான்மறை தீர்ப்பு!!

================================================================

வியாபாரத்தில் நஷ்டம்; கழுத்தை நெரிக்கும் கடனால் எதிர்காலம் குறித்த பயம்!

Dear Sir,

For the past 20 years i am working hard. Three years back i started a businees with 3 partners. I have invested all the assets. Unfortunately business was great loss. No result. I have to pay Rs.8 lakhs to my parties and relatives. I am in a very critical position. Please pray for me and guide me. I have two female child as dependents.

Also pray for pray for my employees, my family members and my friend Venkat and his family & my sister’s family. We are all in critical position.

Thank you sir.

S.Shunmuganathan.
Perundhurai,
Erode

(* பிரார்த்தனைக்கு கோரிக்கைகளை நமக்கு மின்னஞ்சல் அனுப்புகிறவர்கள் மறக்காமல் தங்கள் ஊர் பெயரை மாவட்டத்துடன் குறிப்பிடவும். ஊர் பெயரை குறிப்பிட்டால் தான் அவர்கள் ஊரின் அருகில் ஏதேனும் பரிகாரத் தலம் இருந்தால் சொல்வதற்கு சுலபமாக இருக்கும்.)

================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்படவேண்டும்!

அமைதி என்பதே இல்லாத ஒரு நாடாகிவிட்டது ஈராக். தினம் தினம் ஒரு குண்டுவெடிப்பு; அதில் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த சோகமே கொஞ்சமும் மாறாத சூழ்நிலையில், தற்போது உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் சுமார் 1700 வீரர்களை கடத்திச் சென்று அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.

தற்போது நம் இந்திய தொழிலாளர்கள் சுமார் 40 பேரை கடத்தி சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். மத்திய அரசு அவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

IRAQ_1955982f

எப்போது என்ன நடக்குமோ என்று தெரியாது என்பதால் இங்குள்ள கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்’ என்கிற கதையாக, ஈராக்கில் நிலவி வரும் உள்நாட்டு போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துவருகிறது. இதையடுத்து நாடு முழுதும் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் தீவிரவாதம் அடியோடு களையப்பட்டு அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரவேண்டும். அங்கு ஜனநாயகம் தழைக்கவேண்டும். அமைதி திரும்பவேண்டும். கடத்தப்பட்ட இந்தியார்கள் யாவரும் எந்த வித ஆபத்தும் இன்றி உடனடியாக விடுதலை பெறவேண்டும். இதுவே நமது இந்த வார பொது பிரார்த்தனை.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.சண்முகநாதன் அவர்களின் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் நீங்கி, இலாபம் பெருகவும், அவரது கடன் சுமைகள் நீங்கி, பொருளாதார மேம்பாடு ஏற்படவும் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் நண்பர்களும் சுபிக்ஷமாகவும் சந்தோஷமாகவும் வாழவும், ஈராக்கில் அமைதி திரும்பி, அங்கு கடத்தப்பட்டுள்ள நமது இந்திய தொழிலாளர்கள் எந்த வித ஆபத்தும் இன்றி உடனடியாக விடுவிக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 22,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கபாலீஸ்வரர் கோவில் வாசலில் யாசகம் பெறும் சிவனடியார் திரு.பலராமன்

10 thoughts on “‘கத்தி இருப்பது அவன் கையில்! பிறகெதற்கு கலக்கம்?’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

 1. சீடனுக்கு குருவின் மேல் உள்ள அதி உன்னதமான பக்தியை இந்த கதையின் மூலம் தெரிந்து கொண்டோம். நாமும் சீடனை போல் நாம் வணங்கும் தெய்வத்திடம் அதீத நம்பிக்கை வைத்திருந்தால் கடவுள் நம் பக்கம் கண்டிப்பாக திருப்புவார். நமக்கு வரபோகும் சோதனைகளையும், துன்பத்தையும் இன்பமாக மாற்றுவார். எல்லோருக்கும் ஏற்ற அற்புத கதை. கமலாலய குளம் தண்ணீருடன் பார்பதற்கு கொள்ளை அழகு. .

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு பாலன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வணக்கங்கள். பாரதி விழாவில் அவர் ஆற்றிய உரையை கேட்டோம் ஒரு எளிய வாழ்க்கையிலிருந்து தன விட முயற்சியால் முன்னேறி நம் எல்லோருக்கும் அவர் ரோல் model ஆக இருக்கிறார்..

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் திரு சண்முகநாதன் மற்றும் அவர் குடும்பத்திற்காக பிரார்த்திப்போம்., அவர் கடனிலிருந்து மீண்டு புது வாழ்கை வாழ பிரார்த்தனை செய்வோம்

  ஈராக்கில் தீவிரவாதம் அடியோடு களையப்பட்டு அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரவேண்டும். என பிரார்த்திப்போம்

  மற்றும் குழ்ந்தை இல்லா தம்பதியருக்காக இறைவனை வேண்டுவோம்

  லோக சமஸ்த சுகினோ பவந்து
  ராம் ராம் ராம்
  நன்றி
  உமா

 2. உழைப்பு மட்டுமே வெற்றியைத் தருமென நிரூபித்த மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் இவ்வார பிரார்த்தனைக்குத் தலைமை தாங்குவது பொருத்தமானதே!………..நண்பர் சண்முக நாதன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் துயரம் தீரவும் ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் ஓய்ந்து அமைதி பிறக்கவும் மகாபெரியவா அவர்களின் திருவடியை தொழுகிறேன்!.குருவின் மீது சீடன் வைத்திருந்த நம்பிக்கையை விளக்கிய கட்டுரையும் நன்று!.

 3. திரு சண்முகநாதன் அவர்கள் பொருளாதார சிக்கல்களிலிருந்து வெற்றி பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும்…!

  அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வள்ளலார் போற்றி…!
  —————————-
  ராஜா கே துரைசாமி

 4. திரு சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது தந்தையார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

 5. ஒரு திங்கட்கிழமை காலையில் திருவாரூர் கமலாம்பிகை உடனுறை தியாகராஜர் திருக்கோயில்[94433 54302]சென்று அங்கு வெளி பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீரிண விமோசனரை மரிகொளுந்து சாற்றி ,வில்வத்தால் அர்ச்சித்து , நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .பின்பு நண்பகலில் அங்கிருந்து நேராகஅருகில் உள்ள திருசேறை ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு [கடன் நிவர்த்தி ஈஸ்வரர்] வழிபாடு செய்யவும் . பதினொரு திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்தால், கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் திருகோயில் அலுவலகத்தில் முதல் திங்கள் அன்று செல்லும் போதே 250 ரூபாய் செலுத்தி விட்டால் 9 வார திங்கள்கிழமைகலில் அர்ச்சனை பிரசாதம் வீடு தேடி வரும். கடைசி 11 வது வார திங்கள் அன்று மீண்டும் திருகோயில் வந்து அபிஷேகம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் .தேவார பாடல் பெற்ற காலபைரவரும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

  “விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
  தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
  உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
  சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!”…
  – திருநாவுக்கரசர்.
  ‘பற்பலவாய் விரிந்து எங்கும் பரவும் ஒளிக் கதிர்கள் பொருந்திய சூலத்தினையும் வெடியென முழங்கும் உடுக்கையையும் தம் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்துடன் கால வைரவன் எனத் தோன்றி – தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து தம் மீது ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட அருஞ்செயலைக் கண்டு, அச்சம் கொண்ட உமையவளை நோக்கி ஒளி பொருந்திய பெருஞ் சிரிப்புடன் அருள் செய்தாரே!… அந்த சிவபெருமான் செந்நெறிச் செல்வனாக இங்கே, திருச்சேறை எனும் இந்தத் திருத்தலத்தில் உறைந்து நமக்கும் புன்னகையுடன் அருள் புரிகின்றார் ” – என்பது திருக்குறிப்பு.
  ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து, இத்திருப்பாடலை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்ய பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு.
  பின்பு மாலையில் திருநல்லூர் பெருமணம்( ஆச்சாள்புரம்/திருஞான சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலம் ) சிவலோக தியாகேசர் உடனுறை திருவெண்ணீற்று உமையம்மை திருகோயில் சென்று அங்கு உள்ள ஸ்ரீரிண விமோசனரை
  நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.பின்பு அன்று இரவு அருகில் உள்ள சிதம்பரம் திருகோயில்லில் அர்த்தசாமபூஜை [ இரவு 9.30 முதல் 10 மணிக்கு நடைபெறுகிறது ] நடராஜரை வழிபட்டு அவர் அருகில் உள்ள ஸ்வர்ண பைரவரை வழிபடவும் [ஸ்வர்ண பைரவர் வெளியில் இருந்து பார்த்தல் முடியாது .சிற்சபையில் தீட்சிதர்கள் உதவியுடன் மட்டுமே தரிசிக்கமுடியும் ]…பின்பு வீட்டில் தினமும் பின்வரும் பாடலை எப்போதும் படித்து வரவும் .

  விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
  கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
  கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
  தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

  கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
  காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
  கங்காதராய கஜராஜ விமர்தனாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
  உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
  ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
  பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
  மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
  தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

  பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
  ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
  ஆனந்த பூமிவரதாய தமோமயாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பானுப்ரியாய பவஸாகர தாரணாய
  காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
  நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
  நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
  புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  முக்தேச்வராய பலதாய கணேச்வராய
  கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
  மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  …….”கடன் நிவாரண ஸ்தோத்ரம்”இது ..தினமும் ஈசனை நினைத்து எப்போதும் படித்து வரவும் ..முடிந்தால் ஒருமுறை திண்டுக்கல் அருகிலுள்ள தாடிகொம்பு என்ற இடத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குதொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி நாட்களில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .உங்கள் வீட்டில் விடுபட்டு போன பித்ரு பூசை ,குலதெய்வ பூசனை செய்து வரவும் ..பின்வரும் பதிகம்களை தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வரவும் “சொல்லுவார்க்கு இல்லை துன்பமே” இதை தினமும் மனமுருகி படித்து உங்கள் பண கடன் முழுமையும் தீர்த்து விடலாம் , . …விட்டு போன திருகோயில் பிரார்த்தனைகளை உடனே நிறைவு செய்யவும் …அசைவம் தவிர்கவும் ….

  “மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
  பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
  கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறை ஊரில் பாண்டிக்கொடுமுடி
  நற்றவா ! உன்னை நான மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  இட்டநும் அடியேத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
  கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி
  வட்ட வாசிகை கொண்டு அடிதொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
  நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடைமேல்
  காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர்புனல் காவிரிப்
  பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
  நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணி
  கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை
  நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
  வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
  அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
  பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
  நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  ஏடு வான் இளந்திங்கள் சூடினை என் பின் கொல் புலித் தோலின் மேல்
  ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அந் தண் காவிரிப்
  பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
  சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன
  நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
  குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
  விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
  வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
  கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
  நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி என்று
  பேர்எண் ஆயிரம் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
  நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
  காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
  பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
  பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத்தாரனைப் படப்பாம்பு அரை
  நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே”….. [சுந்தரர் ]

  திருச்சிற்றம்பலம்
  ………………………………………………………………………………………………………….

  பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
  போக முந்திரு வும்புணர்ப் பானைப்
  பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
  பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
  இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
  எம்மா னைஎளி வந்தபி ரானை
  அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கட்ட மும்பிணி யுங்களை வானைக்
  காலற் சீறிய காலுடை யானை
  விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
  விரவி னால்விடு தற்கரி யானைப்
  பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
  வாரா மேதவி ரப்பணிப் பானை
  அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
  கலைக்கெ லாம்பொருளாய்உடன் கூடிப்
  பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
  பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
  ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
  உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
  ஆர்க்கின் றகட லைமலை தன்னை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  செத்த போதினில் முன்னின்று நம்மைச்
  சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
  வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
  மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
  முத்தன் எங்கள் பிரான்என்று வானோர்
  தொழநின் றதிமில் ஏறுடை யானை
  அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  செறிவுண் டேல்மனத் தாற்தெளி வுண்டேல்
  தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
  மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
  வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
  பொறிவண்டாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றைப்
  பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
  அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
  ஆரூரானை மறக்கலு மாமே.

  பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
  பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
  மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
  வாரா மேதவிர்க் கும்விதி யானை
  வள்ளல் எந்தமக் கேதுணை என்று
  நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
  அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கரியா னைஉரி கொண்டகை யானைக்
  கண்ணின் மேல்ஒரு கண்ணுடையானை
  வரியா னைவருத் தங்களை வானை
  மறையா னைக்குறை மாமதி சூடற்
  குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
  ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்(கு)
  அரியா னைஅடி யேற்கெளி யானை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  வாளா நின்று தொழும்அடி யார்கள்
  வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
  நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
  நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
  கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
  கிளைக்கெ லாந்துணை யாம்எனக் கருதி
  ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
  ஆரூரானை மறக்கலு மாமே.

  விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
  வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
  கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
  கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
  இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
  சடையா னைஉமை யாளையோர் பாகத்
  தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
  உச்சிப் போதனை நச்சர வார்த்த
  பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
  பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
  கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
  காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
  செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
  ஆரூரானை மறக்கலு மாமே.

  ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
  உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
  காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
  முடியன் காரிகை காரண மாக
  ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
  அம்மான் தன்திருப் பேர்கொண்ட தொண்டன்
  ஆரூ ரன்னடி நாய்உரை வல்லார்
  அமர லோகத் திருப்பவர் தாமே. [திருவாரூர் பதிகம் …சுந்தரமூர்த்தி சுவாமிகள் ]

 6. ஒரு திங்கட்கிழமை காலையில் திருவாரூர் கமலாம்பிகை உடனுறை தியாகராஜர் திருக்கோயில் சென்று அங்கு வெளி பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள ஸ்ரீரிண விமோசனரை மரிகொளுந்து சாற்றி ,வில்வத்தால் அர்ச்சித்து , நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .பின்பு நண்பகலில் அங்கிருந்து நேராகஅருகில் உள்ள திருசேறை ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு [கடன் நிவர்த்தி ஈஸ்வரர்] வழிபாடு செய்யவும் . பதினொரு திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்தால், கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் திருகோயில் அலுவலகத்தில் முதல் திங்கள் அன்று செல்லும் போதே 250 ரூபாய் செலுத்தி விட்டால் 9 வார திங்கள்கிழமைகலில் அர்ச்சனை பிரசாதம் வீடு தேடி வரும். கடைசி 11 வது வார திங்கள் அன்று மீண்டும் திருகோயில் வந்து அபிஷேகம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் .தேவார பாடல் பெற்ற காலபைரவரும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

  “விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
  தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
  உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
  சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!”…
  – திருநாவுக்கரசர்.

  பின்பு மாலையில் திருநல்லூர் பெருமணம்( ஆச்சாள்புரம்/திருஞான சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலம் ) சிவலோக தியாகேசர் உடனுறை திருவெண்ணீற்று உமையம்மை திருகோயில் சென்று அங்கு உள்ள ஸ்ரீரிண விமோசனரை
  நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.பின்பு அன்று இரவு அருகில் உள்ள சிதம்பரம் திருகோயில்லில் அர்த்தசாமபூஜை [ இரவு 9.30 முதல் 10 மணிக்கு நடைபெறுகிறது ] நடராஜரை வழிபட்டு அவர் அருகில் உள்ள ஸ்வர்ண பைரவரை வழிபடவும் [ஸ்வர்ண பைரவர் வெளியில் இருந்து பார்த்தல் முடியாது .சிற்சபையில் தீட்சிதர்கள் உதவியுடன் மட்டுமே தரிசிக்கமுடியும் ]…பின்பு வீட்டில் தினமும் பின்வரும் பாடலை எப்போதும் படித்து வரவும் .

  விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
  கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
  கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
  தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

  கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
  காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
  கங்காதராய கஜராஜ விமர்தனாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
  உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
  ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
  பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
  மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
  தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

  பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
  ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
  ஆனந்த பூமிவரதாய தமோமயாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பானுப்ரியாய பவஸாகர தாரணாய
  காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
  நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
  நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
  புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  முக்தேச்வராய பலதாய கணேச்வராய
  கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
  மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  …….”கடன் நிவாரண ஸ்தோத்ரம்”இது ..தினமும் ஈசனை நினைத்து எப்போதும் படித்து வரவும் ..முடிந்தால் ஒருமுறை திண்டுக்கல் அருகிலுள்ள தாடிகொம்பு என்ற இடத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குதொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி நாட்களில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .உங்கள் வீட்டில் விடுபட்டு போன பித்ரு பூசை ,குலதெய்வ பூசனை செய்து வரவும் ..பின்வரும் பதிகம்களை தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வரவும் “சொல்லுவார்க்கு இல்லை துன்பமே” இதை தினமும் மனமுருகி படித்து உங்கள் பண கடன் முழுமையும் தீர்த்து விடலாம் , . …விட்டு போன திருகோயில் பிரார்த்தனைகளை உடனே நிறைவு செய்யவும் …அசைவம் தவிர்கவும் ….

  “மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
  பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
  கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறை ஊரில் பாண்டிக்கொடுமுடி
  நற்றவா ! உன்னை நான மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  இட்டநும் அடியேத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
  கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி
  வட்ட வாசிகை கொண்டு அடிதொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
  நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடைமேல்
  காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர்புனல் காவிரிப்
  பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
  நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணி
  கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க் கரை
  நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
  வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
  அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
  பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
  நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  ஏடு வான் இளந்திங்கள் சூடினை என் பின் கொல் புலித் தோலின் மேல்
  ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அந் தண் காவிரிப்
  பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
  சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன
  நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
  குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
  விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
  வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
  கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
  நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி என்று
  பேர்எண் ஆயிரம் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
  நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
  காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

  கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
  பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
  பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத்தாரனைப் படப்பாம்பு அரை
  நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே”….. [சுந்தரர் ]

  திருச்சிற்றம்பலம்
  ………………………………………………………………………………………………………….

  பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
  போக முந்திரு வும்புணர்ப் பானைப்
  பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
  பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
  இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
  எம்மா னைஎளி வந்தபி ரானை
  அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கட்ட மும்பிணி யுங்களை வானைக்
  காலற் சீறிய காலுடை யானை
  விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
  விரவி னால்விடு தற்கரி யானைப்
  பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
  வாரா மேதவி ரப்பணிப் பானை
  அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
  கலைக்கெ லாம்பொருளாய்உடன் கூடிப்
  பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
  பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
  ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
  உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
  ஆர்க்கின் றகட லைமலை தன்னை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  செத்த போதினில் முன்னின்று நம்மைச்
  சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
  வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
  மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
  முத்தன் எங்கள் பிரான்என்று வானோர்
  தொழநின் றதிமில் ஏறுடை யானை
  அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  செறிவுண் டேல்மனத் தாற்தெளி வுண்டேல்
  தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
  மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
  வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
  பொறிவண்டாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றைப்
  பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
  அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
  ஆரூரானை மறக்கலு மாமே.

  பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
  பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
  மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
  வாரா மேதவிர்க் கும்விதி யானை
  வள்ளல் எந்தமக் கேதுணை என்று
  நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
  அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
  ஆரூரானை மறக்கலு மாமே.

  கரியா னைஉரி கொண்டகை யானைக்
  கண்ணின் மேல்ஒரு கண்ணுடையானை
  வரியா னைவருத் தங்களை வானை
  மறையா னைக்குறை மாமதி சூடற்
  குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
  ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்(கு)
  அரியா னைஅடி யேற்கெளி யானை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  வாளா நின்று தொழும்அடி யார்கள்
  வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
  நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
  நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
  கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
  கிளைக்கெ லாந்துணை யாம்எனக் கருதி
  ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
  ஆரூரானை மறக்கலு மாமே.

  விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
  வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
  கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
  கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
  இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
  சடையா னைஉமை யாளையோர் பாகத்
  தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
  ஆரூரானை மறக்கலு மாமே.

  ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
  உச்சிப் போதனை நச்சர வார்த்த
  பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
  பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
  கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
  காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
  செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
  ஆரூரானை மறக்கலு மாமே.

  ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
  உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
  காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
  முடியன் காரிகை காரண மாக
  ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
  அம்மான் தன்திருப் பேர்கொண்ட தொண்டன்
  ஆரூ ரன்னடி நாய்உரை வல்லார்
  அமர லோகத் திருப்பவர் தாமே. [திருவாரூர் பதிகம் …சுந்தரமூர்த்தி சுவாமிகள் ]

 7. சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈசன் ஆறுதல் அளித்து ,அவரது தந்தைக்கு தன சிவ பதம் அளித்து சிவகணமாய் அருள பிரார்த்திப்போம் …சிவாய சிவ

 8. நல்ல கட்டுரை. விஜய் பெரியசுவாமி நல்ல உள்ளம் படைத்த மனிதர். அனைத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன். இறைவன் அருள் புரிவார்.

 9. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு பாலன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் திரு சண்முகநாதன் மற்றும் அவர் குடும்பத்திற்காக பிரார்த்திப்போம்., அவர் கடனிலிருந்து மீண்டு நிம்மதியான வாழ்கை வாழ பிரார்த்தனை செய்வோம்

  ஈராக்கில் தீவிரவாதம் அடியோடு நீங்கி அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரவேண்டும். என பிரார்த்திப்போம், மற்றும் குழ்ந்தை இல்லா தம்பதியருக்காக மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  தந்தையை இழந்து வாடும், நம் சகோதரர் சந்திரசேகருக்கும், அவரது குடும்பத்தாரும் மன ஆறுதல் பெற பிரார்த்தனை செய்வோம்.

  வாழ்க வளமுடன்.

  நன்றி

 10. துன்பங்கள் தொலைந்து
  இன்பம் என்றென்றும் நிலைத்திருக்க
  எல்லாம் வல்ல இறைவனை
  மனமுருக பிரார்த்திப்போம்

  இறைவா நீயே கதி !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *