Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 27, 2022
Please specify the group
Home > Featured > தூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

தூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
டவுளின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமம் என்று உணராத ஒருவர், எத்தனை தான், தன்னை வருத்திக் கொண்டு தவம் செய்தாலும், ஞானத்தையோ, கடவுளின் அருளையோ பெற முடியாது என்பதற்கு, ராம பக்தையான சபரியே சாட்சி!

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின், காடு, மலை, வனம் என, எல்லா இடங்களிலும் சீதையை தேடி வருகிறார் ராமர். அவ்வாறு வரும் போது, சபரி இருந்த, மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி, வந்து கொண்டிருந்தார்.

Sabari_Rama

முக்தியை அளிக்கும் மூர்த்தியான ராமரின் வருகையை அறிந்த முனிவர்கள், அவரை வழியிலேயே சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒரு முனிவர், ‘ராமபிரானே… இங்கு ஒரு குளம் இருக்கிறது. அதன் நீர் முன்பு, தெளிந்து, சுத்தமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை சிறிது காலமாகவே, அந்தக் குளத்து நீர், புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்…’ என்றார். அதற்கு ராமர், ‘முனிவர்களே… சில காலங்களுக்கு முன், சபரி என்ற வேடுவ குல பெண்மணி இங்கு வசித்து வந்தாள். அவள் தினந்தோறும், அதிகாலையில் இருட்டு பிரிவதற்கு முன் எழுந்து, முனிவர்கள் நீராட வரும் இக்குளக்கரையின் வழியை பெருக்கி, தூய்மை செய்வாள்.

‘ஒருநாள் அவ்வாறு அவள் பெருக்கி கொண்டிருந்த போது, நீராடி விட்டு வந்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் காலில், சபரியின் ஆடை லேசாக பட்டுவிட்டது.

‘உடனே அந்த முனிவர் கோபப்பட்டு, சபரியை ஏளனமாக பேசி, மறுபடியும் போய் குளத்தில் நீராடினார். தன்னலம் கருதாத, தெய்வ சிந்தனை மிகுந்த சபரியை ஏசியதால், இக்குளம் அன்றிலிருந்து முனிவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு, புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது…’ என்று, ராமர் சொல்லி முடித்ததும், ‘ராம பிரானே இக்குளம் தூய்மையாக வழியே இல்லையா…’ எனக் கேட்டனர் முனிவர்கள்.

‘உண்டு… பிரதிபலன் எதிர்பார்க்காத, தூய்மையான பக்தையான சபரியின் கால்பட்ட நீரை, அக்குளத்திற்குள் விட்டால், சுத்தமாக மாறி விடும்…’ என்றார்.

அதன்படி, சபரியின் கால்பட்ட நீரை குளத்தில் விட, குளம் தூய்மையானது.

குலத்தால் மட்டுமே ஒருவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆகிவிட முடியாது; நற்பண்புகளும், நல்லொழுக்கமும், தெய்வ சிந்தனையும், பிறருக்கு தீங்கிழைக்காத மனமும், தன்னலம் கருதா உள்ளம் கொண்டோரே, பகவானுக்கு பிரியமான பக்தர்கள். அவர்களை இறைவனே தேடி வருவார்.

(நன்றி : பி.என்.பரசுராமன் | தினமலர்)

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : அண்ணாமலையார் உழவாரப்பணி’ மன்றத்தின் திரு.ஜெயராமன்.

நம்மை அனுதினமும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம் என்ன? பிரார்த்தனை, பூஜை, வேள்வி, அர்ச்சனை, இவை அனைத்தும் அவனுக்கு நன்றி சொல்லத் தான் என்றாலும் இவை அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கும். ஆனால் சுயநலம் இன்றி நாம் இறைவனுக்கு செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது. அது தான் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

சில வாரங்களுக்கு முன்பு சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில், உழவாரப்பணி அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் உழவாரப்பணியும் ‘உலக தர்ம சேவை மன்றம்’ என்கிற அமைப்பு மூலம் நடைபெற்றது.

அதற்க்கு சென்ற பொது தான் திரு.ஜெயராமன் அவர்களை சந்தித்தோம். (இவரைப் பற்றிய பதிவு நம் தளத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !)

கை கால்கள் நன்றாக இருப்பவர்களே உழவாரப்பணிக்கெல்லாம் வருவதற்கு தயங்கும் சூழ்நிலையில் இடுப்புக்கு கீழே அனைத்தையும் இழந்துள்ள திரு.ஜெயராமன் அவர்கள் மேற்படி உழவராப்பணிக்கு வந்திருந்து தன்னால் இயன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

DSC01562

ஆம்… அவருக்கு இரு கால்களும் கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் ரயில்வே லைனை கிராஸ் செய்தபோது ரயிலில் சிக்கி தொடைக்கு கீழே அனைத்தையும் இவர் இழந்துவிட்டார். உயிர் பிழைத்ததே அதிசயம் தான்.

விபத்தை தொடர்ந்து இவரது அன்றாட வாழ்க்கை போரட்டமாகிவிட, மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மூத்த மகன் வீட்டில் சேர்க்கவில்லை. இளைய மகனின் அரவணைப்பில் தற்போது இருக்கிறார்.

விபத்துக்கு முன்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், தற்போது அதே வங்கியிலேயே FIILING CLERK ஆக பணிபுரிகிறார். போக்குவரத்துக்கு ட்ரை சைக்கிள் பயன்படுத்துகிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இது போன்ற உழவாரப்பணிகளில் பங்கேற்று தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார்.

(திரு.ஜெயராமனுடன் நண்பர் குட்டி சந்திரன்)
(திரு.ஜெயராமனுடன் நண்பர் குட்டி சந்திரன்)

விதியை எண்ணி இவர் வருந்தினாலும், இரு கால்களை இழந்த நிலையிலும் இறைவனுக்கு தொண்டு செய்து வரும் இவரது  பக்திக்கும் தொண்டுக்கும் முன்னர் நம்முடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் புரிந்தது.

இவரை சந்தித்த அன்றே நமது பிரார்த்தனைக்கு ஒரு நாள் இவர் தலைமை ஏற்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டோம்.

இதோ இந்த வாரம் திரு.ஜெயராமன் அவர்கள் தான் நம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றிருக்கிறார். இது பற்றி சொன்னவுடன், மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டவர், ஞாயிறு மாலை பிரார்த்தனை நேரத்தில் நிச்சயம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

=================================================================

சென்ற வார பிரார்த்தனையில் நாம் குறிப்பிட்டிருந்த நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், தீவிரவதிகளிடமிருந்து மாணவிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விரைவில் அம்மாணவிகள் பத்திரமாக திரும்ப கிடைப்பார்கள் என்று நம்புகிறோம். இறைவனுக்கு நன்றி.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து, புதிய அரசு பதவி விரைவில் பதவி ஏற்கவிருக்கிறது. திரு.நரேந்திர மோடிக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முந்திய அரசின் குறைகளை களைந்து, வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள நம் நாட்டின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்துவார் என்று நம்புகிறோம். இறைவனுக்கு நன்றி.

இந்த வார பிரார்த்தனையை பொறுத்தவரை, இந்த வாசகி பிரச்சனையின் அம்சத்தை பொறுத்து தனது பெயரை வெளியிடவிரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரை போன்ற பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நமது பிரார்த்தனை கிளப் பற்றியோ அல்லது பிரச்னையை தீர்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்வதற்கோ எவரும் இல்லாம் இருக்கலாம். எனவே இவரைப் போன்ற பெண்கள் அனைவருக்காகவும் இந்த வாரம் பிரார்த்திப்போம்.

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

கணவர் தீய தொடர்பை விடுத்து மனம் திருந்தி வரவேண்டும்!

அன்புள்ள சுந்தர் அவர்களுக்கும் ரைத்மந்த்ரா வாசகர்களுக்கும் என் வணக்கம்.

என் தோழி ஒருவர் மூலமாகத் தான் இந்த தளம் பற்றி அறிந்தேன். சரியான நேரத்தில் இந்த தளத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். (இந்த கடிதம் கூட என் தோழி தான் எனக்காக தயார் செய்து தந்து உதவினாள்.)

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அன்பான கணவர் தான். என் கணவரின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக காலமான பிறகு நாங்கள் தனியாக ஒரு பிளாட்டில் தான் வசித்துவருகிறோம்.

அண்மைக் காலங்களாக என் கணவரின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிகிறது. நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் வீட்டில் சாப்பிடுவதில்லை. கேட்டால், நான் வெளியே சாப்பிட்டுவிட்டேன் என்கிறார். சம்பளப் பணத்தை வீட்டிற்கு சரியாக கொடுப்பதில்லை.

திடீர் திடீர் என்று ஆபீஸ் விஷயமாக வெளியூர் போகிறேன் என்று எங்கோ போய்விடுகிறார். விடுமுறை நாட்களில் கூட வீட்டில் இருப்பதில்லை. இது பற்றி கேட்டால் எனக்கும் அவருக்கும் வீண் சண்டை தான் வருகிறது. அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாக அவரது சக ஊழியர் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். அவரது நடத்தை வேறு சரியில்லை என்றும் சொல்கிறார்கள்.

எங்கே என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. நான் மிகவும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவள். எனக்காக பரிந்து பேசக் கூட எவரும் இல்லை.

எனது தோழி ஒருத்தியிடம் இது பற்றி நான் முறையிட்டு அழுதபோது, அவர் தான் எனக்கு இங்கு பிரார்த்தனை கிளப்பில் பெயரை வெளியிடாமல் பிரார்த்தனைக்கு மனு செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.

என் குழந்தைகள் மட்டும் இல்லையென்றால் என் முடிவு வேறு மாதிரி இருக்கும். என் குழந்தைகளுக்காகத் தான் நான் வாழ்கிறேன். என் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. என் கணவர் தீய சகவாசத்தை விட்டுவிட்டு, மனம் திரும்பி மீண்டும் என்னுடன் சேரவேண்டும். ஒழுங்காக வீட்டுக்கு வரவேண்டும். பொறுப்பை உணர்ந்து ஒரு நல்ல குடும்ப தலைவனாக நடந்துகொள்ளவேண்டும்.

இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத உங்கள் வாசகி

=================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

கடுமையாக உயரப்போகும் அரிசி விலை!

நாட்டின் வருங்காலத் தூண்களான நம் இளைஞர்கள் அர்த்தமற்ற கவலைகளில் மூழ்கியிருக்கும் ஒரு சூழ்நிலையில், மிகப் பெரிய பிரச்னை ஒன்றை நாம் சந்திக்கவிருப்பதாக அண்மையில் செய்தித் தாள் ஒன்றில் படிக்க நேர்ந்த போது அடி வயிற்றை கலக்கியது.

Dinamalar News on Rice price
தினமலர் 11/05/2014

தமிழகத்தில் தொடர் வறட்சி காரணமாக, நெல் சாகுபடி பரப்பு குறைந்து. விளைச்சலும் அதனால் குறைந்து நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பற்றாக்குறை காரணமாக, அரிசி விலை, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக,அச்செய்தி தெரிவிக்கின்றது.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் நடுத்தர மக்களும் ஏழை எளிய மக்களும் முழிபிதுங்கும் ஒரு சூழ்நிலையில் இந்த அரிசி விலை ஏற்றம் பற்றிய செய்தி திகிலூட்டுகிறது. எப்படித் தான் வாழ்வது இங்கே என்கிற அச்சம் வாட்டுகிறது.

அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விளைச்சல் அதிகரித்து, விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும். ஏழை எளிய மக்கள் எந்த வித துன்பமும் படக்கூடாது என்பதே நமது இந்த வார பொது பிரார்த்தனை.

=================================================================

ஊர் பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகியின் கணவர் மனம் திருந்தி, தீய தொடர்பை விடுத்து குடும்பத்தில் கவனம் செலுத்தவும், அவர் தம் இல்லறம் சிறக்கவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய விலை பொருட்களின் விலை கட்டுக்குள்  இருக்கவும், மத்தியில் புதிதாக பதவி ஏற்க உள்ள அரசு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வண்ணம் ஒரு நல்லாட்சியை வழங்கிடவும் இறைவனை வேண்டுவோம். மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.ஜெயராமன், அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று வாழவும் பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 18,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  விழுப்புரம் மாவட்டம் வளையாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி பாஞ்சாலி அம்மாள்

6 thoughts on “தூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது? ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

 1. இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் ஜெயராமன் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றிட பிராத்திப்போம்.
  மேலும் பெயர் தெரியாத வாசகி அவர்கள் கணவர் மனம் திருந்தி மீண்டும் அவர்களுடன் நலமாக வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்

 2. தங்கள் பதிவிற்கு நன்றி

  உண்மையான உன்னதமான கடவுள் பக்திக்கு சபரியே சான்று. நம்மிடம் ஆத்மார்த்தமான பரிசுத்தமான இறை பக்தி இருந்தால் கடவுளின் கடைக்கண் பார்வை நிச்சயமாக நம் மேல் விழும் என்பதற்கு இந்த கதையே உதாரணம்

  நம் நாட்டின் பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் திரு மோடி அவர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு ஜெயராமன் அவர்களுக்கு எமது பணிவான வணக்கங்கள் . தனது கால்களை இழந்தாலும் இறை பணியை செய்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். உடல் நலம் நன்றாக இருந்தாலும் இறைவனுக்கு தொண்டு செய்ய உழவார பணிக்கு வராதவர்கள் மத்தியில் இவரது தொண்டு அலற்பர்கரியது.

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் நமது வாசகிக்காக பிரார்த்தனை செய்வோம். அவர் தனது கணவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்த வேண்டும். மற்றும் அனைவருக்காகவும் நாடு சுபிக்ஷம் பெறவும் பிரார்த்தனை செய்வோம்.

  லோக சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  uma

 3. //குலத்தால் மட்டுமே ஒருவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆகிவிட முடியாது; நற்பண்புகளும், நல்லொழுக்கமும், தெய்வ சிந்தனையும், பிறருக்கு தீங்கிழைக்காத மனமும், தன்னலம் கருதா உள்ளம் கொண்டோரே, பகவானுக்கு பிரியமான பக்தர்கள். அவர்களை இறைவனே தேடி வருவார். -முத்தான வார்த்தைகள் ..//

  ஊர் பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகியின் கணவர் மனம்
  திருந்தி, தீய தொடர்பை விடுத்து குடும்பத்தில் கவனம் செலுத்தவும், அவர் தம் இல்லறம் சிறக்கவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய விலை பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கவும், மத்தியில் புதிதாக பதவி ஏற்க உள்ள அரசு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வண்ணம் ஒரு நல்லாட்சியை வழங்கிடவும் இறைவனை வேண்டுவோம். மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.ஜெயராமன், அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று வாழவும் பிரார்த்திப்போம். –

 4. நம் வாசகியின் கணவர் மனம்திருந்தி, தீய ஒழுக்கத்தால் உண்டான தொடர்பை விடுத்து,மனம் திருந்தி குடும்பத்தில் கவனம் செலுத்த கும்பகோணம் அருகில் உள்ள அணைக்கரை சென்று, தேவநாஞ்சேரி அருகில் உள்ள “இணைபிரியா வட்டம்” என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அர்ச்சனை செய்யவும்..பின்பு “அவள் இவள் நல்லூர்”[கும்பகோணம் …பட்டீஸ்வரம் ..ஆவூர் சென்று அங்கிருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் “அவள் இவள் நல்லூர்”உள்ளது ]..அங்கு ஒரு அமாவாசை தினத்தில் சென்று அங்கு ஆலயத்தின் எதிரில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி அவள் இவள் நல்லூர் சௌந்தர நாயகி உடனுறை சாட்சி நாதரை அபிசேகம்,அர்ச்சனை வழிபடவும்[04374316 911 ]…திருச்சாத்தமங்கை[சீயாத்தமங்கை 9842471582]இருமலர்க்கண்ணம்மை உடனுறை அயவந்தீஸ்வரர் திருகோயில் சென்று அங்கு உள்ள சுவாமி ,அம்பாள் ,திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவிமங்கையர்க்கரசி சன்னதியிலும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ….தவறாமல் தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை இரவில் செய்து வாருங்கள் …தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை செய்யுங்கள் …இந்த 8 தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையில் ஒருநாள் கும்பகோணம் ,திருவிடைமருதூர் அருகில் உள்ள “அம்மாசத்திரம்” பைரவர் திருகோயில் [04352411060] சென்று வழிபடவும் …கண்டிப்பாக ஒரு வெள்ளிகிழமை இரவு சீர்காழி சட்டைநாதர் திருகோயில் சென்று அங்கு வெள்ளிகிழமை இரவில் 10 மணி முதல் 2 மணி வரை நடை பெரும் சட்டைநாதர்[பைரவர் ] பூஜையில்[04364270235] கலந்து கொள்ளவும் .. வெள்ளிகிழமை இரவில் சட்டைநாதர்பூஜையின் போது தலையில் பூ சூடி கொள்ளக் கூடாது..சட்டைநாதரை வணங்கினால் தீய குணங்கள்,தீய ஒழுக்கம் ,முறை தவறிய காமம் முதலியனவும் சட்டை செய்யாது விலகும்! சங்கடங்கள் தீரும்,சிவசக்தி அருள் பரிபூரணமாய் கிடைக்கும்… இந்த 8 தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையின் போது அந்த 8 மாதம்களும் அசைவம் விலக்கினால் வெகு விரைவில் பலன் கிடைக்கும் …பதிகம்களை தினமும் தொடர்ந்து 48 நாட்கள் எப்போதும் படித்து வாருங்கள் ….

  திருச்சிற்றம்பலம்

  மாதர்ப் பிறைக்கண்ணி யானை
  மலையான் மகளொடும் பாடிப்
  போதொடு நீர்சுமந் தேத்திப்
  புகுவா ரவர்பின் புகுவேன்
  யாதுஞ் சுவடு படாமல்
  ஐயா றடைகின்ற போது
  காதன் மடப்பிடி யோடுங்
  களிறு வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  போழிளங் கண்ணியி னானைப்
  பூந்துகி லாளொடும் பாடி
  வாழியம் போற்றியென் றேத்தி
  வட்டமிட் டாடா வருவேன்
  ஆழி வலவனின் றேத்தும்
  ஐயா றடைகின்ற போது
  கோழி பெடையொடுங் கூடிக்
  குளிர்ந்து வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  எரிப்பிறைக் கண்ணியி னானை
  யேந்திழை யாளொடும் பாடி
  முரித்த இலயங்க ளிட்டு
  முகமலர்ந் தாடா வருவேன்
  அரித்தொழு கும்வெள் ளருவி
  ஐயா றடைகின்ற போது
  வரிக்குயில் பேடையொ டாடி
  வைகி வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  பிறையிளங் கண்ணியி னானைப்
  பெய்வளை யாளொடும் பாடித்
  துறையிளம் பன்மலர் தூவித்
  தோளைக் குளிரத் தொழுவேன்
  அறையிளம் பூங்குயி லாலும்
  ஐயா றடைகின்ற போது
  சிறையிளம் பேடையொ டாடிச்
  சேவல் வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  ஏடு மதிக்கண்ணி யானை
  ஏந்திழை யாளொடும் பாடிக்
  காடொடு நாடு மலையுங்
  கைதொழு தாடா வருவேன்
  ஆட லமர்ந்துறை கின்ற
  ஐயா றடைகின்ற போது
  பேடை மயிலொடுங் கூடிப்
  பிணைந்து வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  தண்மதிக் கண்ணியி னானைத்
  தையல்நல் லாளொடும் பாடி
  உண்மெலி சிந்தைய னாகி
  உணரா வுருகா வருவேன்
  அண்ண லமர்ந்துறை கின்ற
  ஐயா றடைகின்ற போது
  வண்ணப் பகன்றிலொ டாடி
  வைகி வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  கடிமதிக் கண்ணியி னானைக்
  காரிகை யாலொடும் பாடி
  வடிவொடு வண்ண மிரண்டும்
  வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
  அடியிணை ஆர்க்குங் கழலான்
  ஐயா றடைகின்ற போது
  இடிகுர லன்னதோர் ஏனம்
  இசைந்து வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  விரும்பு மதிக்கண்ணி யானை
  மெல்லிய லாளொடும் பாடிப்
  பெரும்புலர் காலை யெழுந்து
  பெறுமலர் கொய்யா வருவேன்
  அருங்கலம் பொன்மணி யுந்தும்
  ஐயா றடைகின்ற போது
  கருங்கலை பேடையொ டாடிக்
  கலந்து வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  முற்பிறைக் கண்ணியி னானை
  மொய்குழ லாளொடும் பாடிப்
  பற்றிக் கயிறறுக் கில்லேன்
  பாடியும் ஆடா வருவேன்
  அற்றருள் பெற்றுநின் றாரோ
  டையா றடைகின்ற போது
  நற்றுணைப் பேடையொ டாடி
  நாரை வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  திங்கள் மதிக்கண்ணி யானைத்
  தேமொழி யாளொடும் பாடி
  எங்கருள் நல்குங்கொ லெந்தை
  எனக்கினி யென்னா வருவேன்
  அங்கிள மங்கைய ராடும்
  ஐயா ரடைகின்ற போது
  பைங்கிளி பேடையொ டாடிப்
  பறந்து வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.

  வளர்மதிக் கண்ணியி னானை
  வார்குழ லாளொடும் பாடிக்
  களவு படாததோர் காலங்
  காண்பான் கடைக்கணிக் கின்றேன்
  அளவு படாததோ ரன்போ
  டையா றடைகின்ற போது
  இளமண நாகு தழுவி
  ஏறு வருவன கண்டேன்
  கண்டே னவர்திருப் பாதங்
  கண்டறி யாதன கண்டேன்.
  ……திருவையாறு [அப்பர்]
  ……………………………………………………………………………………………………………..

  கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
  தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
  கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
  அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

  ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
  ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
  தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க
  ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.

  நீறுடைய மார்பில்இம வான்மகளோர் பாகம்நிலை செய்து
  கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
  ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்
  ஆறுடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே.

  பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
  பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்து
  துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்க
  அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.

  குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
  கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
  தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்
  அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே.

  துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்து
  நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்
  மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவி
  அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.

  கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்
  பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்
  காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
  ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

  ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இப்
  பெருவரையின் மேலோர்பெரு மானுமுள னோவென வெகுண்ட
  கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
  அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.

  பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
  வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்
  செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்
  அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.

  கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
  வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்
  பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
  அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

  ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
  போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வூரன்
  ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
  தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே.
  …அவள் இவள் நல்லூர் [சம்பந்தர் ]

  …………………………………………………………………………………………………………
  சம்மோகன கிருஷ்ணன் ஸ்துதி சொல்லி வரவும் ….

  ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
  த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
  பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
  சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஷம் ||
  இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஷாஷ்டகை
  ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
  ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண
  மாஸ்ரயே ||
  …….ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி

 5. ஜெயராமன் நாயனார்
  ஜெயராமன்
  .

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *