Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

print
தொண்டை மண்டலத்தில் சிறப்புறத் திகழும் தலம் வள்ளிமலை. (வேலூர் – சோளிங்கர் சாலையில் உள்ளது). வள்ளிமலை என்று சொன்னதுமே ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகளின் பெயரும் நினைவுக்கு வரும். ஞானத்தால், திருப்புகழால் ஸித்தியடைந்தவர்! இவருடைய சமாதி ஆலயம் இருப்பது வள்ளிமலையில்தான். இவர் வள்ளிமலையை அடைந்து தவ வாழ்வு மேற்கொண்டதற்கு காரணமும் உண்டு. அது – முருகப் பெருமான் தொடர்புடையது!

Vallimalai

வள்ளிமலையில் ஆலயம் மற்றும் மலைப் பகுதிகளை சீரமைத்து, அங்கேயே தங்கி ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார். திருப்புகழின் பெருமையைப் பரப்பினார். நாடி வரும் அடியவர்களுக்கு திருநீறு அளித்தும், திருப்புகழ் மந்திரம் ஓதியும் நோய் தீர்த்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். சென்னையில் சில காலம் வசித்தார். திருப்புகழையே உயிர்மூச்சாகக் கொண்டவர் வள்ளிமலை ஸ்வாமிகள்.

சென்ற வாரம் மயிலை பாரதி வித்யா பவனில் நடைபெற்ற திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘மஹா பெரியவா மகிமைகள்’ சொற்பொழிவில் வள்ளிமலை ஸ்வாமிகள் தொடர்புடைய அற்புதம் ஒன்றை திரு.சுவாமிநாதன் கூறினார். அதை உங்களிடம் இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.

இட்லிக்கும் காபிக்கும் அரோகரா!

திருப்புகழை பாடுவதில் பெரும் ஈடுபாடு கொண்ட வள்ளிமலை ஸ்வாமிகள், ஒரு முறை அடியார்களுடன் சேர்ந்து திருப்புகழ் பாடிக்கொண்டு திருத்தணி மலையை சுற்றி வந்துகொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து அடியார்களும் கிரிவலம் வந்துகொண்டிருந்தனர்.

Vallimalai Swamigalஇதோ முடிப்பார் அதோ முடிப்போர் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க, சுவாமிகளோ கிரிவலத்தை முடிப்பதாக தெரியவில்லை. ஸ்வாமிகள் திருப்புகழை பாட நேரம் போவதே தெரியாமல் அதிலேயே மூழ்கிவிடுவார். பசி, தாகம், களைப்பு இது எதையுமே அறியாதவர் அவர். அவர் ஞானி அப்படி இருக்கமுடியும். ஆனால் அவருடன் செல்லும் அடியார்களும் பொதுமக்களும்? அவர்கள் பசியால் துவள ஆரம்பித்தனர். இருப்பினும் சுவாமிகளிடம் போய் எப்படி இதை சொல்வது. அவர்கள் பாட்டுக்கு “வடிவேல் முருகனுக்கு அரோகரா… வள்ளி மணவாளனுக்கு அரோகரா…” என்று கோஷம் போட்டபடி சென்றுகொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒரு அடியாருக்கு கடுமையான பசி. ஸ்வாமிகள் எப்போது கிரிவலத்தை முடிப்பார் நாம் எப்போது பசியாறலாம் என்று இவர் ஆவலுடன் காத்த்துக்கொண்டிருக்க ஸ்வாமிகள் முடிப்பதாக தெரியவில்லை. திடீரென இவர், “இட்லிக்கும் காபிக்கும் அரோகரா!” என்று கோஷமிட்டுவிட்டார்.

உடனே பக்தர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சந்தடி சாக்கில் யாரோ ‘இட்லிக்கும் காபிக்கும் அரோகரா’ என்று கோஷமிட்டது ஸ்வாமிகள் காதில் விழுந்துவிட்டது. தனது நடையை நிறுத்தி, சற்று திரும்பி பார்த்தவர், ஏதும் சொல்லாமல் மீண்டும் நடக்க ஆரம்பித்துவிட்டார். கோஷம் போட்ட பக்தருக்கோ ஒரு நொடி ஜன்னியே வந்துவிட்டது.

DSCN2576

மீண்டும் இவர்கள் நடக்க ஆரம்பிக்க…. சிறிது தூரம் தான் போயிருப்பார்கள். எதிரே ஒருவர் கையில் இரண்டு பெரிய தூக்குகளுடன் எதிர்பட்டார்.

“எல்லாரும் ஒரு நிமிஷம் நில்லுங்க… கொஞ்சம் ஓரமா அப்படி நிழல்ல உட்காருங்க… இந்த தூக்குல இட்லியும் காபியும் இருக்கு. எல்லாரும் சாப்பிட்டு பசியாறிட்டு அப்புறம் நடையை கட்டுங்க” என்று கூற, ஏற்கனவே பசியோடு இருந்த பக்தர்கள், சுவாமிகளை பார்க்க, “ம்… முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க!” என்றார்.

அனைவரும் இட்லியையும் சட்னியையும் ஒரு பிடிபிடித்தனர். பின்னர் சூடான காபி.

சாப்பிட்டுவிட்டு, இட்லியும் காபியும் கொண்டு வந்த நபரை தேடினால் அவர் எங்குமே தென்படவில்லை.

எப்படி தென்படுவார்? வந்தது சாட்சாத் அந்த வள்ளி மணவாளனாயிற்றே!

இறைவன் ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறான். அதுவும் குருவுடன் நாம் இருக்கையில் நம்மை கூடுதலாக கவனிப்பதோடல்லாமல் நமது தேவைகளை இன்னமும் விரைந்து நிறைவேற்றுகிறான் என்பதே உண்மை.

=================================================================

திருச்சி பயணம்!

பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக இன்றிரவு திருச்சி புறப்படுகிறோம். நாளை எங்கள் குல தெய்வம் வயலூர் முருகனுக்கு அபிஷேகங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். முருகனை அனுதினமும் சிந்தை தொழுதுவந்தாலும் குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி, குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும். தவிர திருச்சியில் உறவினர் ஒருவர் இல்ல திருமணத்தில் பங்குகொள்ளவேண்டியுள்ளது.

நம் வழக்கமான ஆலய தரிசனமும் நம் தளத்தின் சாதனையாளர் சந்திப்பும் இந்த பயணத்தின் இடையே நடைபெறும். திருச்சியில் ஒரு அபார சாதனையாளரை சந்திக்கவிருக்கிறோம். நாளை சனிக்கிழமை மதியம் அந்த சந்திப்பு நடைபெறும்.

நம்முடன் பங்கேற்க விரும்பும் திருச்சி நண்பர்கள் / வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும்.

* நாளை (சனிக்கிழமை ஏப்ரல் 19) வெளியிட பதிவு ஒன்றை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறோம். அது நாளை முற்பகல் AUTO PUBLISH ஆகிவிடும்.

நன்றி!

– சுந்தர்,
www.rightmantra.com
M : 9840169215

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : குன்றத்தூர் முருகன் கோவில் மற்றும் கந்தலீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் திரு. திருமுருகன் அவர்கள்.

திருமுருகன் அவர்களை பொருத்தவரை பல ஆண்டுகளாக குன்றத்தூர் முருகன் கோவிலிலும் கந்தலீஸ்வரர் கோவிலிலும் அர்ச்சகராக தொண்டு செய்துவருகிறார்.

செய்யும் பணியை கடமைக்கு செய்யாமல் அதை சிரத்தையுடன் செய்துவருபவர் இவர். ஆகையால் தான் இவரது குழந்தைகள் கல்வி செலவுகளை நம் தளம் சார்பாக ஏற்றுக்கொண்டு பாரதி விழாவில் இவரை கௌரவித்தோம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/12/DSC_0085.jpg

முறைப்படி வேதம் படித்துள்ள திருமுருகன் அவர்கள், சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் வேத ஆகம பள்ளியில் அர்ச்சகருக்கான அடிப்படை கல்வியை கற்றவர். தனது பணிநேரம் முடிந்த பின்னரும் கோவிலின் நடையை சாத்தாமல், கூடுதல் நேரம் செலவழிப்பவர். இதன் மூலம் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார் திருமுருகன். தனது டூட்டி டயம் முடிவதற்கு முன்பாகவே கோவிலின் நடையை சாத்திவிட்டு வீட்டுக்கு ஓடுபவர்கள் மத்தியில் திருமுருகன் அவர்களின் தொண்டு மிகப் பெரிய ஒன்று.

மேலும் ஆலய தரிசனத்தின் மேன்மையை பலரிடம் எடுத்துக்கூறி அவர்கள் தொடர்ந்து ஆலய தரிசனம் செய்ய ஒரு கருவியாக இருக்கிறார்.

கோவிலில் உள்ள மூர்த்தங்களுகும் விக்கிரகங்களுக்கும் அடிக்கடி எண்ணை காப்பிட வேண்டும். அப்போது தான் அதற்கு ஒரு தனி சக்தி  கிடைக்கும். உரு ஏறும். ஆகர்ஷன சக்தியும் அதிகரிக்கும். ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களுக்கு தூய நல்லெண்ணையில் அடிக்கடி காப்பிடுவது மிகவும் அவசியம்.

DSC06205

சில ஆலயங்களில் காப்பிட எண்ணை இல்லாத காரணத்தால் காப்பிட மாட்டார்கள். சில ஆலயங்களில் எண்ணை இருந்தும் காப்பிட ஆள் இல்லாத காரணத்தால் காப்பிட மாட்டார்கள். இந்த அவசர யுகத்தில் பகவானுக்கு எண்ணைக் காப்பிடுவது பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? ஆனால், திருமுருகன், தான் டூட்டியில் இருக்கும் ஆலயத்தில் அனைத்து விக்கிரகங்களுக்கும் தானே முன்வந்து, அடிக்கடி எண்ணை காப்பிடுவார். அதன் மூலம் அந்த மூர்த்தங்கள் ஆகர்ஷன சக்தி அதிகம் பெற்று பிரகாசிக்கும்.

எண்ணை காப்பிட்ட பின்னர் அந்த தெய்வத்திடம் நீங்கள் ஏதேனும் கோரிக்கை வைத்து பாருங்கள். அது சீக்கிரம் நிறைவேறும். எண்ணை காப்பிடும்போது அந்த தெய்வத்தின் சக்தி பன்மடங்கு அதிகரிக்குமாம்.

இந்த பதிவை  தயாரிக்க, திருமுருகன் அவர்களிடம் பேசியபோது தான், எண்ணை காப்புக்கு பின்னணியில் உள்ள இந்த விஷயங்கள் நமக்கு தெரியவந்தது.

http://rightmantra.com/wp-content/uploads/2013/12/DSC_6498.jpg

சமீபத்தில் ஒரு முறை, நாம் வழக்கமாக நம் தளம் சார்பாக வாங்கி தரும் நல்லண்ணை (அக்மார்க) டின் வாங்கித் தந்தபோது, அதைக் கொண்டு கந்தலீஸ்வரர் கோவிலில் இருக்கும் அறுபத்து மூவர் விக்ரகங்களுக்கும், ஒன்று விடாமல் எண்ணை காப்பிட்டார் திரு.திருமுருகன்.

(எண்ணை வாங்கித் தந்தாலும் இதையெல்லாம் செய்வதற்கு பல கோவில்களில் ஆள் இல்லை பாஸ்!)

பாரதி விழாவின் போது அவரிடம் கல்வி உதவியை அளித்த போது நாம் சொன்னது ஒன்றே ஒன்று தான். “இப்போது போலவே எப்போதும் எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு செய்யும் தொண்டை எந்த குறையும் இல்லாது மனப்பூர்வமாக நீங்கள் செய்து வாருங்கள். உங்கள் குழந்தைகளின் கல்வி தேவையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!” என்பது தான் அது.

DSC06210

அதன்படி இன்றும் தனது திருத்தொண்டை குன்றத்தூர் முருகன் கோவிலிலும், கந்தலீஸ்வரர் கோவிலிலும் மனப்பூர்வமாக செய்துவருகிறார் திருமுருகன்.

இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் திருமுருகன்.

இறைவனுக்கு திருமஞ்சனமும் எண்ணைக் காப்பிடும் தொண்டும் செய்துவரும் திருமுருகன், நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்பது நாம் செய்த பாக்கியமே அன்றி வேறில்லை.

கந்தலீஸ்வரர் கோவிலில் எண்ணை காப்பிட்டபடி இந்த வார பிரார்த்தனையை செய்வதாக கூறியிருக்கிறார் திருமுருகன். அவருக்கு நம் நன்றி.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=================================================================

Father suffering from stomach cancer

Dear Sundar,

I am seeing your website regularly. I want to take it my request on this week prayer club. It is my humble request, Please do the needful.

My father Mr.Narasimman (66) was admitted in hopsital on 18.03.014 due to cancer in stomach. First Surgery was done on 19.03.014 and after that surgery he cannot take any food and it come out at regular intervals. Then doctor absorb that there is block in his stomach and another surgery done on 28.03.014. Still he is in hospital and he has to be discharged today but yesterday night all his food has come out and doctor advised to stay another few days in hospital.

I request to pray for my father for his speedy recovery in right mantra prayer club.

Please do the needful.

Thanks & Regards,
N.Venkat
Alandur, Chennai 600 016

=================================================================

மகன் நல்லபடியாக வெளிநாடு சென்று திரும்பவேண்டும்

ரைட் மந்த்ரா EDITOR சுந்தர் அவர்களுக்கும், வாசகர்களுக்கும் வணக்கம்.

கடந்த ஆறு மாதங்களாக ரைட் மந்த்ரா வாசித்து வருகிறேன். தளத்தை பார்க்காமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. பதிவுகள் அனைத்தும் மிகவும் உபயோகமாக உள்ளது. மேன்மேலும் தளம் வளரவும் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஒரே மகன் கே.பால பிரசாத் (28) அலுவலக ப்ராஜக்ட் மற்றும் ட்ரெயினிங் விஷயமாக விரைவில் வெளிநாடு (ஜெர்மனி) செல்லவிருக்கிறான். மொத்தம் ஆறு மாத காலம் அவன் அங்கு இருக்கவேண்டும். இது அவனுக்கு முதல் வெளிநாட்டு பயணம். இதை அவன் வெற்றிகரமாக முடித்தால்  ஊதிய உயர்வு, ப்ரோமோஷன் மற்றும் இதர சலுகைகள் உண்டு. அவன் நல்லபடியாக பணியை முடித்துவிட்டு திரும்பவேண்டும். மேலும் முன்பின் தெரியாத நாட்டுக்கு செல்வதால், எனக்கு சற்று அச்சமாக உள்ளது. அடிப்படையில் இவன் மிகவும் சாது. என் பயத்துக்கு காரணமே அது தான்.

அவன் பத்திரமாக திரும்பும்வரை எனக்கு படபடப்பாகத் தான் இருக்கும். என் மகனுக்காகவும் அவன் வேலைக்காகவும் உத்தியோக உயர்வுக்காகவும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்காகவும் என் பிரார்த்தனை உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– ஹேமா கிருஷ்ணகுமார்,
தாராபுரம், ஈரோடு.

=================================================================

இந்த வார பொது பிரார்த்தனைகள் மொத்தம் 2

(1) மக்களவை தேர்தல் அமைதியாக நடக்கவேண்டும் – நல்லாட்சி மலரவேண்டும்!

பல கட்டங்களாக நம் நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தல் வரும் 24 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியா போன்ற, பல அரசியல் கட்சிகள் கொண்ட மிக அதிக மக்கள்தொகை கொண்ட பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் தேர்தல் நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுவும் வன்முறையின்றி அமைதியாக நடத்துவது உண்மையில் தேர்தல் கமிஷனுக்கு மிகப் பெரிய சவால்.

Photograph Courtesy : New Indian Express

நாடு இப்போதும் மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் உள்ளது. விலைவாசி உயர்வு, தொழில்துறை வீழ்ச்சி, கடன் சுமை, என் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்துவருகிறது.

india_election1

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த மக்களவை தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடக்கவேண்டும். மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமைகளை மறக்காமல் செலுத்தவேண்டும். அதிகபட்ச வாக்குகள் பதிவாகவேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்கு ஒரு முற்றுப் புள்ளி விழுந்து, குடிமக்களின் நலன் பேணும் ஒரு நல்லாட்சி மலரவேண்டும்.

=================================================================
(2) தென்கொரிய கப்பல் விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை!

மலேசிய விமான விபத்தின் சோகம் தீர்வதற்கு முன் இதோ தென்கொரியாவில் மாணவர்களை பெருமளவு ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் மூழ்கி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் கொரிய நாட்டில், பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற கப்பல், கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், பல உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 325 மாணவர்கள் உட்பட, 475 பேர், இந்த கப்பலில் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன, 287 பயணிகளை காணவில்லை. தென் கொரியா அருகே உள்ள ஜீஜூ, என்ற சுற்றுலா தீவுக்கு, மிகப்பெரிய சொகுசு கப்பல், ஏப்., 15 ல் புறப்பட்டது. கப்பல் புறப்பட்ட, 3 மணி நேரத்தில், விபத்துக்குள்ளானது.

South Korea Ship Sinking

மீட்புக்குழுவினர் அந்த இடத்தை நெருங்கிய போது, கப்பல் உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தது. நீச்சல் தெரிந்த மாணவர்கள் சிலர், கடலில் குதித்து மீட்பு படகில் ஏறி உயிர் தப்பியுள்ளனர். கடலில் தத்தளித்த, 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்; 287 பேரை காணவில்லை; 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில், தென்கொரிய ராணுவத்தின் படகுகளும், மீட்புப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. ஆழ்கடலில் நீந்தும் வீரர்கள் சுமார் 500 பேர் நீரில் மூழ்கி, காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

கப்பல் மூழ்கும்போது, தங்களுக்கு முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரை தொடர்புகொண்டு கடைசியாக பேசிய விபரங்கள் வெளியாகி கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.

மீட்புப் பணி வெற்றி பெறவும், எஞ்சியோர் காப்பாற்றப்படவும், பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.

இவையே நம் பொது பிரார்த்தனை.
=================================================================
ஆலந்தூரை சேர்ந்த திரு.வெங்கட் அவர்களின் தந்தையார் திரு.நரசிம்மன் அவர்களுக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் நீங்கி அவர் எஞ்சியுள்ள நாட்களை எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் கழிக்கவும், தாராபுரத்தை சேர்ந்த திருமதி.ஹேமா கிருஷ்ணகுமார் அவர்களின் மகன் திரு.பால பிரசாத், வெற்றிகரமாக நல்லபடியாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும், நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து, நாட்டில் ஒரு நல்லாட்சி மலரவும், கொரிய கப்பல் விபத்தின் மீட்புப் பணி வெற்றி பெறவும், எஞ்சியோர் காப்பாற்றப்படவும், பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 20,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மயிலை திருவள்ளுவர் கோவில் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்கள் அவர்கள்

11 thoughts on “அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

  1. இந்த பதிவின் மூலம் வள்ளி மலை சச்சிதானந்தா சுவாமிகளை பற்றி தெரிந்து கொண்டோம். வள்ளிமலை சுவாமிகள் பற்றி திரு சுவாமிநாதன் அவர்கள் கூறிய கதையை நீங்கள் தொகுத்து வழங்கியது மிகவும் நன்றாக உள்ளது.

    //இறைவன் ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறான். அதுவும் குருவுடன் நாம் இருக்கையில் நம்மை கூடுதலாக கவனிப்பதோடல்லாமல் நமது தேவைகளை இன்னமும் விரைந்து நிறைவேற்றுகிறான் என்பதே உண்மை.// மிகவும் அருமையான வரிகள்.

    கோவிலில் உள்ள மூர்த்தங்களுக்கும் விக்கிரகங்களுக்கும் அடிக்கடி எண்ணை காப்பிட வேண்டும் என்பதன் அவசியததை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்

    வயலூர் முருகனை தரிசித்து வாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
    இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு முருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த வார் பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அணைவருக்க பிராத்திப்போம். மகா பெரியவர் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர் நிச்சயமாக.

    படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது அடுத்த முறை சோளிங்கர் செல்லும் பொழுது வல்லிமலையை கண்டிப்பாக தரிசிப்போம்

    நன்றி
    உமா

  2. Dear Sundar,

    Really thanks to include my father problem in Prayer club. Tomorrow morning he has surgery, hence i request all to pray for the my father speedy recovery.

    Thanks & Regards,

    N.Venkat.

  3. சார் வெங்கட் சார்,உடனே நீங்க ஸ்ரீவாஞ்சியம்[ வாஞ்சிநாதர் வாழவந்த நாயகி ],திருவதிகை[வீரட்டானேசுவரர் பெரியநாயகி] ஈசனை மனதில் எப்போதும் நினைது கொள்ளுங்கள் … கூடவே உங்கள் குல தேவதையும் ,முன்னோர்களையும்……….
    இந்த பதிகம்களை தினமும் எப்போதும் பாராயணம் செய்து வாருங்கள் …

    துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
    வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
    அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே

    மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
    சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
    செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
    அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே

    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
    ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
    ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
    ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே

    நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
    செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
    கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
    அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே

    கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
    அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
    தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
    அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே

    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே

    வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
    பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
    மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
    ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே

    வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
    பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
    தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
    அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே

    கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
    சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
    பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
    ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே

    புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
    சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
    வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
    அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே

    நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
    கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
    அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
    உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
    நினையாதொரு போதும் இருந்தறியேன்
    வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
    நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
    அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
    படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
    துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
    பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
    டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மனே.

    முன்னம்மடி யேன்அறி யாமையினான்
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
    பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
    தலையாயவர் தங்கட னாவதுதான்
    அன்னநடை யார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
    வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
    உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
    ஒருவர்தலை காவலி லாமையினல்
    வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
    பயந்தேயென் வயிற்றின கம்படியே
    பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
    அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னாத்துறை அம்மானே.

    வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
    வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
    சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
    சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
    கலித்தேயென் வயிற்றி னகம்படியே
    கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
    அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
    புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
    துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
    நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
    என்போலிக ளும்மை இனித்தெளியார்
    அடியார்படு வதிது வேயாகில்
    அன்பேஅமை யும்மதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
    புறங்காடரங் காநட மாடவல்லாய்
    ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
    அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
    வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
    என்வேதனை யான விலக்கியிடாய்
    ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.

    மாதம் இருமுறை சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருகோயில் சென்று கருவறை தீபத்தில் நெய் சேர்த்து வாருங்கள் ….

  4. ஆலந்தூரை சேர்ந்த திரு.வெங்கட் அவர்களின் தந்தையார் திரு.நரசிம்மன் அவர்களுக்கு, இன்று நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக அமைந்து, வயிற்றில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் நீங்கி, எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் மீண்டு வரவும், தாராபுரத்தை சேர்ந்த திருமதி.ஹேமா கிருஷ்ணகுமார் அவர்களின் மகன் திரு.பால பிரசாத், வெற்றிகரமாக நல்லபடியாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும், அவருக்கு நல்ல வேளையில் நல்ல முன்னேற்றம் காணவும், நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து, நாட்டில் ஒரு நல்லாட்சி மலரவும், கொரிய கப்பல் விபத்தின் மீட்புப் பணி வெற்றி பெறவும், எஞ்சியோர் காப்பாற்றப்படவும், பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  5. ஆலந்தூரை சேர்ந்த திரு.வெங்கட் அவர்களின் தந்தையார் திரு.நரசிம்மன் அவர்களுக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் நீங்கி அவர் எஞ்சியுள்ள நாட்களை எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் கழிக்கவும், தாராபுரத்தை சேர்ந்த திருமதி.ஹேமா கிருஷ்ணகுமார் அவர்களின் மகன் திரு.பால பிரசாத், வெற்றிகரமாக நல்லபடியாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும், நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து, நாட்டில் ஒரு நல்லாட்சி மலரவும், கொரிய கப்பல் விபத்தின் மீட்புப் பணி வெற்றி பெறவும், எஞ்சியோர் காப்பாற்றப்படவும், பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

  6. அனைவர்க்க்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.

  7. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திருமுருகன் அவர்களை வரவேற்கிறேன் .

    இந்த வார பிரார்த்தனைக்கு சமர்ப்பித்த அனைவருக்கும் மகாபெரியவா ஆசீர்வாதம் கிடைக்க அனைவரும் பிரார்த்திப்போம் .

    நன்றி .
    மனோகர்

  8. திருச்சுழி [மதுரை அருகில் ]துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருகோயில் சென்று அங்கு திருமேனிநாதர் , துணை மாலையம்மன் வழிபாடு செய்து ,திருமேனிநாதரை தொழுது வரும் அடியவர்களின் திருவடி தொழுது , வாருங்கள் ….தங்கள் மகன் கண்டிப்பாக கிடைக்கும் நல்ல வேலையில் உயர் பதவி வகிப்பார் ..செல்வம் சேரும் ..இதனை நான் சொல்லவில்லை ..திருச்சுழி தல பதிகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார் …இதோ அப் பதிகம் …” திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார்அடி தொழுவார் அவ்வத்திசைக்கு அரசாகுவார் அலரால் பிரியாளே” ….[அலரால்-மஹா லக்ஷ்மி ]…அதாவது திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடு செய்து, திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் ; அதாவது அவர்களுடைய வேலையில் உயர் பதவி கிட்டும் .திருமகள் அவர்களை விட்டு நீங்காள் என்பதாம் ..தினமும் பைரவர் வழிபாடு செய்து வாருங்கள் ..பைரவர் தங்கள் மகனின் வெளிநாட்டு பயணம் முழுவதும் துணை நிற்பார் ..இதனை நீங்கள் அனுபவத்தில் உணரலாம் .பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்…தினமும் பைரவர் அஷ்டகம் படித்து வாருங்கள் …
    தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

    வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

    நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்

    நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .

    காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்

    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்

    ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம்.

    பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்

    காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..

    புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்

    பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .

    வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்

    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்

    கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .

    ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்

    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

    ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்

    நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .

    ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்

    காஷிகாபுராதினாதகால பைரவம் பஜே ..

    அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்

    த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .

    அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்

    காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .

    பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்

    காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .

    நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

    காஷிகாபுராதினாதகால பைரவம் பஜே .

    காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்

    க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .

    ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்

    ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

    இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்

    ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

    கந்தர் சஷ்டி கவசம் தினமும் படித்து மாதம் இருமுறையாவது அருகில் உள்ள சென்னிமலை சென்று முருக பெருமானை வழிபட்டு,நெய் தீபம் ஏற்றி வருவது ரெட்டிப்பு பலன்களை அள்ளி தரும் ..

  9. Dear Vijay Periyasamy,

    Thanks a lot for your concern, Will visit marudeeshwar temple in tiruvanmayur without fail. Thks a lot once again

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *