Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

print
ன்று நாம் அண்ணாந்து பார்க்கும், உலகையே தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும், பல முன்னணி தொழில் சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்தை பார்த்தோமானால் விடாமுயற்சியும், அற்பணிப்பும், எதற்கும் கலங்காத மனமும் கொண்ட தனி மனிதன் ஒருவர் தான் நிச்சயம் பின்னணியில் இருப்பார்.

பூகம்பத்தாலும் போரினாலும் மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு மண்ணிலிருந்து ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒருவரது நம்பிக்கையூட்டும் வரலாற்றை தற்போது பார்ப்போம்.

1906 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் ஜப்பானில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் சோய்ச்சிரோ. அவர் அம்மா ஒரு நெசவாளி. மிகவும் சிக்கலான நெசவுகளை லாவகமாக செய்யக்கூடிய தறி ஒன்றை தானே வடிவமைக்கும் அளவுக்கு அவர் புத்திசாலி. அப்பா இரும்பு பட்டறை வேலை செய்யும் கருமார். சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இது தான் சோய்ச்சிரோவின் குடும்பம்.

1930. உலகம் முழுதும் கடும் பொருளாதார மந்தநிலை ஆட்கொண்டிருந்த நேரம். (The Great Depression). உழைப்புக்கு பெயர் போன ஜப்பானும் இதற்கு தப்பவில்லை. சோய்ச்சிரோ அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். ஏழை மாணவர் அவர். அவருக்கு என்று ஒரு கனவு இருந்தது. மோட்டார் வாகனத்தின் இன்றியமையாத உதிரி பாகமான பிஸ்டன் ரிங் ஒன்றை தனது கற்பனைப்படி செய்ய வேண்டும் என்பது தான் அது. காலை முழுதும் பள்ளியில். மாலை வீட்டுக்கு வந்ததும், தனது கனவு கண்டுபிடிப்புக்கு வடிவம் கொடுப்பதில், இறங்கிவிடுவார். நள்ளிரவு தாண்டியும் அவரது ஆராய்ச்சி நீளும். ஆராச்சியில் அவரது ஆடைகள் அழுக்காகும். முகமெங்கும் கிரீஸ் அப்பிக்கொள்ளும். கையில் சிறுக சிறுக சேமித்து வைக்கும் பணமும் இந்த ஆராய்ச்சியில் செலவாகிவிடும்.

அவருடைய நோக்கம் என்னவென்றால் அற்புதமான பிஸ்டன் ரிங் ஒன்றை கண்டுபிடித்து அதை பிரபல மோட்டார் நிறுவனமான டோயோட்டாவுக்கு விற்கவேண்டும் என்பது தான்.

ஆராய்ச்சி நீண்டுகொண்டே சென்றது. இதற்கிடையே அவருக்கு திருமணம் வேறு ஆகிவிட்டது.  தன் மனைவியின் நகைகளையும் தனது ஆராய்ச்சிக்காக அடமானம் வைக்க அவர் தயங்கவில்லை.

ஒரு நாள் அவர் நினைத்த படி தனது பட்டறையில் ஒரு பிஸ்டன் ரிங்கை வடிவமைத்தார். அதை எடுத்துக்கொண்டு கனவுகளையும் சுமந்துகொண்டு டோயோட்டாவின் அலுவலக கதவுகளை தட்டினார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. “நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இது இல்லை. இதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று கூறி அடிக்காத குறையாக விரட்டிவிட்டனர்.

சோய்ச்சிரோ கல்லூரிக்கு சென்றபோது சக மாணவர்கள் கேலி செய்தனர். “இதெல்லாம் ஒரு மாடல்னு இதை கொண்டு போய் வேற காட்டிட்டியா? உன்னை உதைக்காம விட்டாங்களே…” என்றனர்.

சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. தனது தோல்வியில் கவனம் செலுத்துவதற்கு பதில், தனது கனவில் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகள் இடையறாத முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னர் ஒரு நாள் டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது.

சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. தனது தோல்வியில் கவனம் செலுத்துவதற்கு பதில், தனது கனவில் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகள் இடையறாத முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னர் ஒரு நாள் டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது.

ஆனால் அந்தோ பரிதாபம்… ஜப்பானை அப்போது போர் மேகங்கள் சூழ்ந்த நேரம். கையில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் காண்ட்ராக்ட்  உள்ளது. உடனடியாக ஒரு தொழிற்சாலையை துவக்கவேண்டும். ஆனால் போர்க்காலம் என்பதால் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு  நிலவியது. ஆனாலும் மனம் தளரவில்லை சோய்ச்சிரோ. கட்டுமானத்திற்கு தேவையான கான்க்ரீட் மிக்சரை தயாரிக்க ஒரு புது யுக்தியை கண்டுபிடித்தார். அதன்படி, அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு பாக்டரியை கட்டி முடித்தார்.

ஒரு வழியாக பாக்டரியை கட்டி முடித்தாகிவிட்டது. உற்பத்தியை துவக்கவேண்டியது தான் பாக்கி. இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த நேரம் அது. ஒரே நாளில் அவரது பாக்டரி அமெரிக்க விமானங்களின் குண்டுகளுக்கு இரையாகி தரைமட்டமானது.

large

கான்க்ரீட் தட்டுப்பாட்டுடன் இம்முறை ஸ்டீல் தட்டுப்பாடும் சேர்ந்துகொண்டது.

அப்போதும் மனம் தளரவில்லை சோய்ச்சிரோ.

தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்தார். “அதோ அந்த விமானங்களை பின்தொடர்ந்து ஓடுங்கள். விமானங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிய பின்னர் கீழே வீசப்படும் GASOLENE கேன்களை சேகரியுங்கள். அதில், நமது பாக்டரிக்கு தேவையான மூலப்பொருள் உள்ளது. அது வேறெங்கும் கிடைக்காது. அமெரிக்க அதிபர் ட்ரூமன் நமக்கு தரும் பரிசு அது!” என்றார். எப்பேற்ப்பட்ட பக்குவம்!

நேர்மறை சிந்தனை செய்யும் அற்புதத்தை பார்த்தீர்களா? பிரச்சனைகளில் கூட வாழ்வதற்கு ஒரு வழியை கண்டுபிடித்துவிடுகிறது.

ஓரளவு பாக்டரியை நிர்மாணித்து மீண்டும் உற்பத்தியை துவக்கவிருந்த நேரம். இம்முறை ஜப்பானுக்கே உரிய நிலநடுக்கம்.

ஜப்பான் முழுதும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஜப்பானே உருக்குலைந்துவிட சோய்ச்சிரோவின் பாக்டரி மட்டும் தப்புமா என்ன? பாக்டரி முழுதும் மீண்டும் தரைமட்டமானது. வேறு வழியின்றி இம்முறை தனது பிஸ்டன் தொழில்நுட்பத்தை டோயோட்டாவுக்கே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சோய்ச்சிரோ.

இறைவன் ஒரு கதவை மூடினால் நிச்சயம் மறுகதவை திறப்பான். மூடிய கதவையே பார்க்கும் நாம் திறக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.

போர் முடிந்ததும் ஜப்பான் முழுதுமே தலைகீழாக புரட்டிபோட்டது போன்று இருந்தது. மூலப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. அடிப்படை பொருட்களை கூட மக்கள் ரேஷனில் சென்று தான் வாங்கவேண்டிய நிலை. எனவே மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் அவதிப்பட்டனர்.

தனக்கு என்று ஒரு மோட்டார் வாகனம் இருந்தபோதும், அதை மார்கெட்டுக்கு ஓட்டிச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாது சோய்ச்சிரோ மிகவும் சிரமப்பட்டார். விரக்தியிலும், தோல்வி தந்த வேதனையிலும் நாட்களை கழிப்பதற்கு பதில், ஒரு புதிய முடிவை அவர் எடுத்தார். இந்த சூழலிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டும் என்று தனக்கு தானே சூளுரைத்துக்கொண்டார்.

அவர் தனக்கு தானே ஒரு வலிமையான கேள்வியை கேட்டுக்கொண்டார். “என் குடும்பத்தை நான் எப்படி காப்பாற்றுவது? என்னிடம் ஏற்கனவே இருக்கும் திறமையையும் பொருட்களையும் வைத்து நான் எப்படி வாழ்க்கையில் ஜெயிப்பது?” இது தான் அவர் தன்னைக் கேட்டுக்கொண்ட கேள்வி. கேள்வி தேடலாக மாறியது.

விளைவு… விடை கிடைத்தது.

Honda-Aஅவரிடம் ஒரு சிறிய மோட்டார் இருந்தது. புல்வெட்டும் இயந்திரத்தில் பொருத்தி புல்லை வெட்டக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய மோட்டார் அது. தன்னுடைய சைக்கிளில் அதை பொருத்தினார். சைக்கிள் மோட்டார் சைக்கிள் ஆனது. மோட்டார் சைக்கிள் உருவான கதை இது தான்.

வீட்டிற்கும் மார்கெட்டுக்கும் இடையே அந்த மோட்டார் சைக்கிளை சோய்ச்சிரோ பயன்படுத்தினார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அவர் நண்பர்களும், அவர்களுக்கும் அதே போல ஒன்றை செய்து தரும்படி கேட்டனர்.

கையில் இருந்த மூலப்பொருட்களை வைத்து அவரால் மேலும் சில மோட்டார் சைக்கிள்களையே செய்ய முடிந்தது. அதற்கு மேல் தயாரிக்க இயலவில்லை. தனக்கென்று மோட்டார்களை தயாரிக்க ஒரு தொழிற்சாலை துவக்குவதே சரியான வழி என்று பட்டது சோய்ச்சிரோவுக்கு.

Honda-Civic-1975 copyஆனால் அதற்க்கு பணம்? அவரிடம் சல்லிக்காசு கூட இல்லை. ஜப்பானோ போரால் நிர்மூலமாகி இருந்தது.

சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. ஜப்பானில் உள்ள ஒரு சைக்கிள் கடை விடாமல் 18,000 சைக்கிள் கடைகளுக்கும் கடிதம் எழுதினார். ஜப்பானை மீண்டும் புனரமைக்க தமது கண்டுபிடிப்பு எந்த வகையில் உதவியாக இருக்கும் என்று அவர்களுக்கு விளக்கினார். தனது மோட்டார் சைக்கிள் காரை விட மிகவும் விலை மலிவாக இருக்கும் என்றும், மக்கள் எங்கு வேண்டுமானாலும் தனது கண்டுபிடிப்பான மோட்டார் சைக்கிளில் ஏறி  தாரளமாக போய்வரமுடியும் என்றும் குறுகலான சாலைகளில் கூட மக்களால் இதன் மூலம் பயணம் செய்ய முடியும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூறினார். தமது தொழிற்சாலையில் முதலீடு செய்யும்படியும் அவர்களை கேட்டுக்கொண்டார்.

18000 பேரில், சுமார் 3000 பேர் ஹோண்டாவுக்கு உதவ முன்வந்தனர். அவர்கள் அளித்த பொருளுதவியை கொண்டு தனது முதல் உற்பத்தியை துவக்கினார் சோய்ச்சிரோ.

Honda-Interceptor copy

இப்போதாவது ஜெயித்தாரா சோய்ச்சிரோ என்றால் அது தான் இல்லை. மோட்டார்  பொருத்தப்பட்ட மோட்டார்கள் மிகவும் பெரியதாக இருந்தது. வெகு சிலரே அதை  வாங்கினர். தவறு எங்கே நடந்தது என்று ஆராய்ந்த சோய்ச்சிரோ கடைசீயில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். தீவிர ஆராய்ச்சிக்கு பின்னர் தனது மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்ற அழகான சிறிய என்ஜினை கண்டுபிடித்தார். அதற்கு ‘சிங்கக் குட்டி’ என்று பெயரிட்டார். (THE CUB). சிங்கக்குட்டி  ஹிட்டானது. சோய்ச்சிரோவின் அந்த கண்டுபிடிப்புக்கு ஜப்பான் பேரரசரின் THE EMPEROR AWARD கிடைத்தது. “சரியான அதிர்ஷ்டசாலிப்பா (!) இந்த சோய்ச்சிரோ” என்று அவரது உறவினர்கள் பெருமூச்சு விட்டனர்.

ஜப்பானில் வெற்றிக்கொடி நாட்டிய பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் சோய்ச்சிரோவின் மோட்டார் சைக்கிள் எஞ்சின்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இத்தோடு முடிந்ததா ?

அது தான் இல்லை.

1970 களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜப்பானில் அல்ல. அமெரிக்காவில். ஆட்டோமொபைல் சந்தையின் கவனம், சிறிய ரக கார்களை நோக்கி திரும்பியது. சிறிய ரக என்ஜின்களை தயாரிப்பதில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றிருந்த சோய்ச்சிரோ நிறுவனத்தினர், சிறிய ரக கார்களை தயாரித்து மார்கெட்டில் விட்டனர். இதற்கு முன்பு இப்படி சிறிய ரக கார்களை எவரும் பார்த்ததில்லை என்னுமளவுக்கு அவர்களது மாடல்கள் இருந்தன. விளைவு…. நான்கு சக்கர வாகன சந்தையும் அவர்கள் கைக்கு வந்தது.

Soichiro_Hondaஅது சரி… சோய்ச்சிரோவின் முழு பெயர் தெரியுமா?

சோய்ச்சிரோ ஹோண்டா.

இன்று சோய்ச்சிரோவின் ஹோண்டா நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டும் 1,00,000 ஊழியர்களுக்கும் மேல் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் பல புதுமைகளை புகுத்தி ஏற்றம் கண்டு இன்று உலகின் முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஹோண்டா.

1991 ஆம் ஆண்டு சோய்ச்சிரோ ஹோண்டா மறையும்போது, அவர் சாதித்திருந்தது என்ன தெரியுமா? சுமார் 470 கண்டுபிடிப்புக்கள். 150 பேட்டன்ட்டுகள். மிக்கிகன் பல்கலைக்கழகத்திலும் ஓஹியோ பல்கலைக்கழகத்திலும் கௌரவ டாக்டர் பட்டம். ஜப்பான் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ப்ளூ ரிப்பன்’ விருது மற்றும் பல.

ஒன்றரை லட்ச ரூபாயில் ஆரம்பித்த சோய்ச்சிரோவின் ஹோண்டா நிறுவனம், தற்போது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அனாயசமாக வர்த்தகம் செய்கிறது.

இதற்கு காரணம் என்ன?

சோய்ச்சிரோ ஹோண்டா என்கிற தனி மனிதன் ஒருவனின் விடா முயற்சி. அயராத உழைப்பு. பிரச்னைகளோ சூழ்நிலைகளோ தன்னை பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை. இடியே விழுந்தாலும் நிலை குலையாத மனப்பான்மையை அவர் பெற்றிருந்தார். பிரச்சனைகளை கண்டு அவர் ஓடியிருந்தால் இன்று ஹோண்டா என்கிற சாம்ராஜ்ஜியம் இல்லை.

2010_03_HondaCRZmodel copy

ஜெயிக்க வேண்டும் என்று நாம் உண்மையில் விரும்பினால், நமக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வழி உண்டு என்பதே ஹோண்டாவின் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம்.

“வெற்றி குறித்து பலர் கனவு காண்கின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை வெற்றி என்பது இடைவிடாத தோல்விகளுக்கு பிறகு,  பல பரிசோதனைகளுக்கு பிறகு கிடைக்கும் ஒன்று. உங்களுடைய உழைப்பில் 1% மட்டுமே வெற்றி. மற்றது தடைகளை நாம் தகர்ப்பதில் தான் இருக்கிறது. தடைகளை கண்டு நீங்கள் கலங்கவில்லை என்றால் வெற்றி உங்களை தேடி வந்து அணைக்கும்!” என்றார் சோய்ச்சிரோ ஹோண்ட ஒருமுறை.

“வெற்றி குறித்து பலர் கனவு காண்கின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை வெற்றி என்பது இடைவிடாத தோல்விகளுக்கு பிறகு,  பல பரிசோதனைகளுக்கு பிறகு கிடைக்கும் ஒன்று. உங்களுடைய உழைப்பில் 1% மட்டுமே வெற்றி. மற்றது தடைகளை நாம் தகர்ப்பதில் தான் இருக்கிறது. தடைகளை கண்டு நீங்கள் கலங்கவில்லை என்றால் வெற்றி உங்களை தேடி வந்து அணைக்கும்!” என்றார் சோய்ச்சிரோ ஹோண்ட ஒருமுறை.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (குறள் 620)

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

விடாமுயற்சியும் நேர்மறை சிந்தனை உடையவர்களுக்குமே இந்த உலகம் சொந்தம். அவர்களை இந்த உலகை ஆள முடியும்.

‘முடியாது’, ‘இல்லை’, ‘அதிர்ஷ்டம் இல்லை’ போன்ற வார்த்தைகளை அறவே உங்கள் சிந்தனையில் இருந்து தூக்கிவிடுங்கள்.

அவற்றுக்கு பதில், ‘என்னால் முடியும்’, ‘நான் சாதிக்கப் பிறந்தவன்’, ‘நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி’, ‘எனக்கு வரும் பிரச்னைகள் அனைத்தும் உண்மையில் மிகப் பெரிய வாய்ப்புக்கள்’ என்று சொல்லிப் பழகுங்கள்.

பிறகென்ன?

உலகம் உங்கள் காலடியில்!

[END]

17 thoughts on “விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

 1. காலையில் மிகவும் சோர்துள்ள மனதிற்கு மிகவும் உற்சாக டானிக் இந்த பதிவு. சிறிய தோல்விகளை கண்டு துவண்டு விடும் நமக்கு இவரது வாழ்கை மிகப்பெரிய பாடம்.
  சோதனைகள், துன்பங்கள் அவமானங்கள், தோல்விகள் எத்தனை வந்த போதும் துவளாமல் அதனை பொறுமையுடன், சாமர்த்தியமாக கையாண்டு அதில் வெற்றி காண்பவனே வாழ்கையில் ஜெயிக்கிறான்.
  அதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
  இன்று எனக்கு மிகவும் பொருத்தமான பதிவு.
  கடவுள் எனக்கு இந்த பதிவின் மூலம் மிகுந்த ஆறுதலை தந்துள்ளார்.
  “வெற்றி குறித்து பலர் கனவு காண்கின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை வெற்றி என்பது இடைவிடாத தோல்விகளுக்கு பிறகு, பல பரிசோதனைகளுக்கு பிறகு கிடைக்கும் ஒன்று. உங்களுடைய உழைப்பில் 1% மட்டுமே வெற்றி. மற்றது தடைகளை நாம் தகர்ப்பதில் தான் இருக்கிறது. தடைகளை கண்டு நீங்கள் கலங்கவில்லை என்றால் வெற்றி உங்களை தேடி வந்து அணைக்கும்!” என்றார் சோய்ச்சிரோ ஹோண்ட ஒருமுறை.
  இந்த வரிகள் மிகவும் அருமை.

 2. ஜெயிக்க வேண்டும் என்று நாம் உண்மையில் விரும்பினால், நமக்கு எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வழி உண்டு என்பதே ஹோண்டாவின் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். –

 3. வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
  தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
  வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
  லட்சியம் எட்டும் வரை எட்டு…

  சாதனை மனிதரின் சாதனை வரிகள் ‘என்னால் முடியும்’, ‘நான் சாதிக்கப் பிறந்தவன்’, ‘நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி’, …..

  recharge done .
  -மனோகர்

 4. வணக்கம் சார்.
  இந்த பதிவு படிக்கும் அனைவருக்கும் புத்துணர்வு தரும்.
  தோல்விகளை கண்டு மனம் தளராமல் மேலும் மேலும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அப்போது நம்மை கேலி செய்தவர்களே நம்மை பாராட்டும்படி அமையும்.
  தோல்விகளின் போது அதை நமக்கு ஒரு அனுபவமாக எடுத்து கொள்ளவேண்டும்.
  மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
  யார் என்ன சொன்னால் என்ன, என் வழி தனி வழி. எத்தனை தடங்கல் வந்தாலும் என் வழியில் நான் பாட்டுக்கு போய் கொண்டே இருப்பேன் என்ற கொள்கை கொண்ட உங்களுக்கு மிகவும் அற்புதமான பதிவு.

 5. உத்வேகம் தரும் உற்சாகப்பதிவு.

  தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.

 6. டியர் சுந்தர்ஜி,
  “இறைவன் ஒரு கதவை மூடினால் நிச்சயம் மறுகதவை திறப்பான். மூடிய கதவையே பார்க்கும் நாம் திறக்கும் கதவை கவனிக்க தவறிவிடுகிறோம்.”

  First Class Line . Nothing to tell more .

 7. சுந்தர் சார்,
  நல்ல பதிவினை தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு.

 8. நல்ல பதிவினை தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு.

  நந்தகோபால்
  வந்தவாசி

 9. சுந்தர் ஜி,

  மிகவும் அருமையான பதிவு. தொழில் தொடங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்கிறேன்.

  இப்படிக்கு,
  தயாளன்
  பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *