சிவபெருமான் அபிஷேகப் பிரியன். திருமால் அலங்காரப் பிரியன். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் சிவனுக்கு நடக்கும் அன்னாபிஷேகம் மிகுந்த சிறப்பு பெற்றது. பொதுவாக அன்னத்தை போன்ற கலவை சாதம் (தயிர் சாதம், எலுமிச்சம் சாதம், எள் சாதம், சர்க்கரை பொங்கல்) செய்து அதைத் தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் சிவனுக்கு மட்டுமே வெறும் அன்னத்தை அபிஷேகம் செய்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா இன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகமே பஞ்ச பூதங்களின் சங்கமம் தான். ஆகாயத்தில் உற்பத்தியாகும் காற்றின் துணையுடன் தீயானது எரிந்து, பூமியில் விளையக்கூடிய அரிசியை கொண்டு நீர் விட்டு சாதம் வடித்து அதைகொண்டு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எனவே அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் முக்தியும் பெறலாம்.
நாம் உண்ணும் அன்னமானது மிகவும் புனிதமானது. அதை வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேகம் என்ற வைபவத்தை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். மற்றபடி அவனுக்கு கல்லும் ஒன்று. குருனையும் ஒன்று தான்.
அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுவதும் வெள்ளைப் போர்வையை போர்த்தியது போன்று அன்னத்தை அப்பி, சிவலிங்கத்தை முழுதும் மூடிவிடுவார்கள். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாட செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
வடிவத்தில் சிவலிங்கத்தை போன்றதும் மனிதர்களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கு நைவேத்தியமாகவும், யாகத்தின் அவிர்பாகமாகவும் அர்ப்பணிக்க கூடியதுமான அன்னத்தை அந்த சிவனுக்கே அபிஷேகம் செய்யும்போது, இறைவன் மனம் குளிர்ந்து தடையற்று அன்னத்தை தரக்கூடும்.
மேலும் ஐப்பசியன்று வரக்கூடிய பவுர்ணமியன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண ஒளியுடன் விளங்குகின்றான்.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை புத்திரபேறு இல்லாதவர்கள் பக்தியுடன் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த பிரசாதத்தை சாப்பிட்டால், வியாபாரம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும். குபேர சம்பத்து கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதமாக தரப்படமாட்டது. அவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் மட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பின்னர் ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். அதாவது லிங்கத்தின் மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. இதற்க்கு காரணம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மீன் உள்ளிட்ட சகல ஜீவராசிகளுக்கு அந்த மகாப் பிரசாதம் கிடைக்கவேண்டும் என்பதால் தான்.சிவலிங்கத்தின் மீது விழும் ஒவ்வொரு பருக்கைக்கும் பலன் உண்டு. எனவே அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடக்க இன்று சிவாலங்களுக்கு ப.அரிசி முதலானைவைகளை வாங்கித் தந்து பலன் பெறுங்கள்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க !
[END]
Just now returned from the powerful energetic Tiruvannamalai after Girivalam. Grand decorations and crowdy all over there with more ‘Anna Dhaanam’ outlets.
Antha Arunchaleswarar Arulal, Rightmantra.com users will be showered with Positivity n Prosperities.
I wish u all the very Best for ur future endeavours on this Good Day. 🙂
Yesterday I went to Perur patteswarar temple in Coimbatore. It is very old temple (http://www.perurpatteeswarar.in/history.html). I didn’t get chance to visit this temple for past 2 years when I start working in Coimbatore (laziness only). After read this article yesterday, I decided to go to this temple. So I started early from office and reached there (20km away from my office) @6.30pm. With the huge crowd I got the Dharisanam of Annabhishega Lingam. It was wonderful experience.
Thank you very much Sundar for posting this article. Expecting this kind of special spiritual occasions in future.
——————————————————-
இதை இதைத் தான் நான் எதிர்பார்ப்பது. இதைப் படித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. என் பணி என்ன என்று இறைவன் இன்னும் தெளிவாக புரியவைத்துவிட்டான்.
மிகப் பெரும் புண்ணியத்துக்கு என்னை ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல் நீங்களும் மிகப் பெரும் பேறு பெற்றுவிட்டீர்கள்.
இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்?
– சுந்தர்