ஹைதராபாத்தை அப்போது நிஜாம் ஆண்டுகொண்டிருந்த நேரம். நிஜாமை சந்தித்து தனது பல்கலைக்கழகத்திற்க்கான நன்கொடைய பெற நேரே அரண்மனைக்கு சென்றார் மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார்.
ஒரு ஹிந்து பல்கலைக்கழகம் துவங்க முகம்மதியரான தன்னிடம் வந்து பொருள் கோரும் மாளவியாவை பார்த்து கடும் கோபமடைந்த நிஜாம், “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் ஒரு ஹிந்து பல்கலைக்கழகம் துவக்க என்னிடம் பொருள் கேட்பாய்? மரியாதையாய் வெளியே போய்விடு…” என்று கூற, மாளவியா சிறிதும் பதட்டப்படாமல், “நாடு முழுதும் பலர் இதற்கு உதவி வருகிறார்கள். தயவு செய்து நீங்களும் உதவுங்கள். சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெறும். இது இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்” என்று கூறினார்.
மாளவியா கூறியதை கேட்டு மேலும் கோபமடைந்த நிஜாம், “ஏய்… பரதேசி உடனே இங்கிருந்து போய்விடு…” என்று கூறி, தன்னுடைய காலணி ஒன்றை தூக்கி அவர் மீது விசிறி எறிந்தார்.
சபை ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. மாளவியா சிறிதும் கலங்கவில்லை. அந்தக் காலணியை கையில் எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி நிஜாம் அவர்களே! உங்களின் நன்கொடையாக இந்த செருப்பையே ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறி, அரண்மனையை விட்டு வெளியேறினார்.
வெளியே வந்தவர், நேரே சந்தைக்கு சென்றார். ஒரு மேடையின் மீது ஏறி நின்று, “ஒரு மாபெரும் விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை ஏலம் விடப் போகிறேன். இதோ என் கையில் இருக்கும் இந்த செருப்பு பெருமதிப்பிற்குரிய நம் நிஜாம் அவர்களுடையது! இப்போது தான் அரண்மனையில் இருந்து அவரிடம் இருந்து இதை பெற்றுக்கொண்டு வருகிறேன்!!” எனச் சத்தமிட்டுக் கூவினார்.
“என்னது நிஜாமின் செருப்பு ஏலமா?” என்று வியந்த மக்கள் அங்கு கூடிவிட்டனர். பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து, அவரவர் அவரவர் வசதிக்கு ஏற்றபடி கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர்.
இதை கவனித்துக்கொண்டிருந்த அரண்மனை ஒற்றன் ஒருவன் உடனே நிஜாமிடம் ஓடிச்சென்று, மாளவியா நிஜாமின் காலணியை ஏலம் விட்டுக்கொண்டிருக்கும் விபரத்தை தெரிவிக்கிறான். மேலும் மக்கள் அதற்கு கேட்கும் தொகையை பற்றியும் கூறுகிறான்.
தனது காலணி கால் பணம், அரை பணம் என்று ஏலம் போவது தனக்கு தான் அவமானம் என்று கருதிய நிஜாம் “என்ன செலவானாலும் சரி கொடுத்து அந்த காலணியை நீ ஏலத்தில் எடுத்துக்கொண்டு வா!” என ஆணையிட்டார். ஒற்றனும் விரைந்து சென்று யாரும் கொடுக்க முடியாத ஒரு பெரிய விலையை கொடுத்து அந்த ஒற்றை காலணியை ஏலம் எடுத்துக்கொண்டு வந்தான்.
எந்த செருப்பை தூக்கியடித்து மதன் மோகன் மாளவியாவை நிஜாம் அவமதித்தாரோ கடைசியில் அதே செருப்பை மிகவும் விலை கொடுத்து அவர் வாங்க வேண்டியிருந்தது. மாளவியாவும் தனது பல்கலைக்கழகத்திற்கு மிகப் பெரிய தொகையை திரட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றார். நிஜாம் மனமுவந்து கொடுத்திருந்தாலும் கூட அவ்வளவு பெரிய தொகை கிடைத்திருக்காது.
எதற்கும் கலங்காத நேர்மறை சிந்தனை உடையவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் வாய்ப்பு தான். எதிர்மறை சிந்தனை உடையவர்களுக்கு வாய்ப்பு கூட பிரச்னை தான்.
இந்த தளம் துவங்கியது முதல் உங்களிடம் எத்தனையோ கதைகளை நாம் பகிர்ந்துகொண்டுள்ளோம். ஆனால் நமக்கு பிடித்த கதை எது தெரியுமா? இது தான்!
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனில் வெளியான ஒரு தொடரில் படித்த கதை இது.
வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்று கருதுகிறவர்களுக்கு மேலே கண்ட மதன் மோகன் மாளவியா அவர்களின் மனோபாவம் தான் இருக்கவேண்டும். எந்த சூழ்நிலையையும் நேர்மறையாக பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துகொள்ளவேண்டும்.
வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் 1001 சாதனையாளர்களை சந்திப்பது என்று லட்சியத்துடன் நாம் உழைத்து வருவது நீங்கள் அறிந்தததே. இப்படி சாதனையாளர்களை சந்திக்க நாம் செல்லும்போது, செல்லும் இடங்களில் எல்லாம் நமக்கு இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்படுவதில்லை. ஓரிரு இடங்களில் நாம் அவமதிப்புக்களையும், புறக்கணிப்புக்களையும் கூட சந்திக்கவேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் மேற்க்கூறிய கதை தான் நமக்கு நினைவுக்கு வரும்.
எடுத்த செயலை நிறைவேற்றிட துடிப்பவர்கள், இடையில் சந்திக்கும் அவமானங்களை அவமதிப்புக்களை பொருட்படுத்தவேகூடாது. அவர்கள் நோக்கம் எல்லாம் தங்களது குறிக்கோளை எட்டுவதிலேயே இருக்கவேண்டும்.
சாதனையாளரை சந்தித்து அவரை உங்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களது அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் பரவசம் தான் நம் கண்களுக்கு தெரியுமே தவிர, ஒரு சில இடங்களில் நமக்கு ஏற்படும் கசப்புக்கள் அல்ல.
(அப்படி நம்மை அவமதித்தவர்கள் ஒரு சிலரையும் காலப்போக்கில் நம்மை புரிந்துகொள்ள வைத்து நமது நண்பர்களாக மாற்றியது தனிக்கதை!).
எப்படியாகினும் சந்திப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல அனுபவம் நமக்கு கிடைத்துவிடுகிறது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு சிலரிடம் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம். ஒரு சிலரிடம் எப்படி இருக்கக்கூடாது என்று கற்றுக்கொள்ளலாம்.
மொத்தத்தில் நேர்மறை சிந்தனை வாழ்க்கையையே சுவாரஸ்யமாக்கி விடுகிறது என்பது தான் உண்மை.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. (குறள் 597)
(பொருளை கூகுள் செய்து பார்ப்பீர்கள் தானே?)
[END]
Very nice Incident.
இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்.
இதை படிக்கும் போது அன்னை தெரசா அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு முறை ஆசிரமதிற்காக நன்கொடை பெற ஒரு செல்வந்தரிடம் சென்றார்.
ஆனால் அவருக்கு பணம் தர மனமில்லை. அன்னையோ விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார்.
மிகவும் எரிச்சலடைந்த அவர் அன்னையின் முகத்தில் காரி உமிழ்தார்.
அன்னையோ மிகவும் பொறுமையுடன் “எனக்காக இதை தந்து விட்டீர்கள் . என் குழந்தைகளுக்காக எதாவது தாருங்கள் ” என கேட்டார்.
இதை கேட்டதும் செல்வந்தர் வெட்கி தலை குனிந்து, அன்னையிடம் மன்னிப்பு கேட்டு பண உதவியும் செய்தார்.
இந்த அவசர காலத்தில் நமக்கு மிகவும் தேவை பொறுமை.
// எதற்கும் கலங்காத நேர்மறை சிந்தனை உடையவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் வாய்ப்பு தான். எதிர்மறை சிந்தனை உடையவர்களுக்கு வாய்ப்பு கூட பிரச்னை தான். /
// ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு சிலரிடம் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம். ஒரு சிலரிடம் எப்படி இருக்கக்கூடாது என்று கற்றுக்கொள்ளலாம். //
அருமையான கதை.
நான் காலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தேன். தங்களின் மாளவியா கதை படித்து முடித்தவுடன் மனதில் ஒரு தெளிவு கிடைத்தது.
தங்களுக்கு பிடித்த கதை இபோது எனக்கும் பிடித்த கதை ஆகிவிட்டது.
நன்றி சுந்தர் சார்.
– ராஜா –
வணக்கம் சார்.
monday spl வழக்கம் போல அருமை.
சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா.தனக்கு அவமானம் ஏற்பட்டாலும் அதை ஏற்று கொண்டு எடுத்த காரியத்தில் துணிவுடன் நின்று ஜெயித்தார்.
அதை போல அவமானங்களை தாங்கி கொள்ள பொறுமையும் பக்குவமும் வேண்டும்.
அந்த பக்குவத்தை ஆண்டவன் உங்களுக்கு நிறையவே கொடுத்து உங்கள் பணியில் வெற்றி பெற அருள் புரியட்டும்.
எடுத்த காரியம் முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏதும் கஷ்டமில்லை.
குருவருளும் திருவருளும் இருக்க துணிவுக்கு பஞ்சமேது
வாழ்க வளமுடன். நன்றி.
Dear Sundar,
The article is excellent. This morale very much needed for our current life. Ungal pani sirakka enn manmartha Vazthukal.
Narayanan.
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
சிம்ப்லி சூப்பர்.
வணக்கம் சார்
நல்ல கதை கொடுத்து இந்த வாரத்தை தொடங்கியதுக்கு
நன்றி .
சுந்தர் சார் வணக்கம் ….. மிக அருமையான பதிவு …..ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு சிலரிடம் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம். ஒரு சிலரிடம் எப்படி இருக்கக்கூடாது என்று கற்றுக்கொள்ளலாம்…..எதற்கும் கலங்காத நேர்மறை சிந்தனை உடையவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் வாய்ப்பு தான். எதிர்மறை சிந்தனை உடையவர்களுக்கு வாய்ப்பு கூட பிரச்னை தான்…… அருமையான கதை ….. நன்றி தனலட்சுமி ……..
ஒரு பொது நோக்கத்திற்காக அதுவும் மற்றவர்கள் நன்மைக்காக வாழ்பவர்கள் இதுபோன்ற அவமானங்களை நிச்சயம் சந்திக்க நேரிடும். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படாமல் நேர்மறை சிந்தனை உடையவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களும் இத்தகைய முறையை கையாண்டு தனக்கு எதிரான ஒரு சூழ்நிலையை சாதகமாக மாற்றிக்கொண்டு இன்றும் நம்மால் பிரம்மிப்புடன் பேசப்படுகிறார்.
இன்றும்கூட நம் சமூகத்தில் சில பெரிய மனிதர்கள்மீது செருப்பு வீசப்படுகிறது, கன்னத்தில் அறையப்படுகிறார்கள், முகத்தில் மை பூசப்படுகிறது, . ஆனால் என்ன செய்ய? சமூகத்திற்கு எந்தப்பலனும் இல்லை. அவர்களுக்குதான் விளம்பரம்.
///இன்றும்கூட நம் சமூகத்தில் சில பெரிய மனிதர்கள்மீது செருப்பு வீசப்படுகிறது, கன்னத்தில் அறையப்படுகிறார்கள், முகத்தில் மை பூசப்படுகிறது, . ஆனால் என்ன செய்ய? சமூகத்திற்கு எந்தப்பலனும் இல்லை. அவர்களுக்குதான் விளம்பரம்.///
Wonderful point!
– Sundar
அருமையான கதை, நன்றி.
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
sundar sir…arumaiyana article…thirukural very very nice sir
\\\ ஐந்து ஆண்டுகளுக்குள் 1001 சாதனையாளர்களை சந்திப்பது என்று லட்சியத்துடன் நாம் உழைத்து வருவது நீங்கள் அறிந்தததே. இப்படி சாதனையாளர்களை சந்திக்க நாம் செல்லும்போது, செல்லும் இடங்களில் எல்லாம் நமக்கு இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்படுவதில்லை. ஓரிரு இடங்களில் நாம் அவமதிப்புக்களையும், புறக்கணிப்புக்களையும் கூட சந்திக்கவேண்டியிருக்கிறது.\\\
நேர்மறை சிந்தனை வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது .
அருமையான விளக்கத்துடன் எளிமையான கதை ….
recharge done .
-மனோகர்