Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > கடமையை சரியாக செய்யுங்கள்… கஷ்டங்கள் வந்த வழி ஓடிவிடும்! ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கடமையை சரியாக செய்யுங்கள்… கஷ்டங்கள் வந்த வழி ஓடிவிடும்! ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

print
ரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். ‘எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்’.

Kanci Kamatchi

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம்

மஹா பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் காஞ்சி வந்தார் பக்தர்.

‘ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது’ என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள். பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள். பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் ‘பெரியவா சரியான முடிவு சொல்லலையே?’ என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.

475

பெரியவா சொன்ன பதில்….

1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும்.

இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், ‘உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது’ என்று பக்குவமாக சொன்னார்.

பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். ‘பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்’. பெரியவாள் மனம் உருகி போய்விட்டது. ‘க்ஷேமமா இரு’.

அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

அவருக்கு தெரியாதது ஏதேனும் இருக்க முடியுமா அல்லது அவரிடம் எதையேனும் மறைக்க முடியுமா?

(நன்றி : periva.proboards.com)

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : மஹாபெரியவாவின் வாக்கினாலும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியின் அருளாலும் பிறந்த கணு என்கிற திரு.கணேசன் (72) அவர்கள்.

Nadukkaveri Kanuகணு  அவர்களை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. கடந்த இரண்டு பதிவுகளின் கதாநாயகனே அவர் தானே. கணு அவர்களை பொருத்தவரை ஒரு பொறுப்பான உத்தியோகத்தில் (ASST. TREASURY OFFICER) பணியாற்றிவிட்டு எந்த வித தவறான ரிமார்க்கும் இல்லாமல், நல்ல பெயருடன் ஒய்வு பெற்றவர். எல்லாம் மஹா சுவாமிகளின் அருள் தான் என்கிறார்.

மிகுந்த பரோபகார சிந்தனை உடைய இவர் இயன்றபோதெல்லாம் அன்னதானம் செய்கிறார். அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள கோவில்களுக்கோ அல்லது வேறு விஷேஷங்களுக்கோ வெளியூர்களில் இருந்து வரும் வேதியர்களை தன் வீட்டில் தங்கவைத்து அவர்களுக்கு உணவளிக்கும் ஒரு பெரிய தொண்டை பல ஆண்டுகளாக செய்துவருகிறார். மேலும் நடுக்காவேரியில் அவர் பகுதி மக்களின் இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும்போது, மணமக்களின் உறவினர்கள் தங்க தனது வீட்டை இலவசமாக தருகிறார். இப்படி தன்னால் இயன்ற உதவிகளை தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு அவ்வப்போது செய்துவருகிறார்.

திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் அவர்களின் தீவிர பக்தர் தான் என்று கூறும் இவர், தனிமையில் இருக்கும்போதெல்லாம் அவர் தன்னுடன் இருப்பதாக உணர்வதாக கூறுகிறார்.

நமது அறிமுகம் கிடைத்ததிலிருந்து நமக்காகவும் நமது தளத்திற்காகவும் வாசகர்களுக்காகவும் காவிரிக்கரை கணபதியிடம் நித்தம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். கோவில் குருக்களையும் கூப்பிட்டு அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வதாகவும், மேலும் தனது  மகன்,மகள், மருமகன் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனைவருடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

என்னே… நாம் செய்த பாக்கியம்!

===============================================================

பிரார்த்தனை பலித்தது!

நம் தளத்தின் பிரார்த்தனை கிளப்பில் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை சமர்பித்திருந்த மஞ்சு, கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்துள்ளான் என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.

http://rightmantra.com/?p=7960

எல்லாம் குன்றத்தூர் முருகனின் திருவருள். இங்கு சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனை ஒவ்வொன்றையும் நாம் மஹா பெரியவா அவர்கள் மூலம் குன்றத்தூர் குமரனின் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கிறோம்.

நாம் எல்லாரும் அவன் குழந்தைகளே. நிச்சயம் உங்கள் அனைவரது துயரையும் அவன் விரைவில் தீர்ப்பான் என்று உறுதி கூறுகிறோம். கந்தனிருக்க கவலை வேண்டாம்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

கண்ணுக்கு கண்ணாக ஒரு குழந்தை வேண்டும் !

வணக்கம்.

தங்களது வலைதளத்தை கடந்த இருமாதங்களாக நாள்தோறும் படித்து வருபவள். என்பெயர் தமிழ்ச்செல்வி. எனது கணவர் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் திருமுறை இசை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கண்பார்வையற்ற மற்றும் வலதுகால் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளர் ஆவார். எனது வயது 39. என்கணவருக்கு 40, கடந்த 11.9.2008 அன்று எங்களது திருமணம் நடந்தது. இதுவரை மழழைச் செல்வத்தை அடையாத எனக்கு தற்பொழுது செயற்கை கருவூட்டல் முறையில் கடந்த11ம்தேதி கருமுட்டை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்கழியில் இதுபோன்று நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஆகையால் இம்முறையாவது எங்களுக்கு இறைவன் அருளாலும் நமது நண்பர்களின் பிரார்த்தனையாலும் வெற்றி கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி!

சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல்இன்மை யறிந்து.

இல. தமிழ்செல்வி ஞானப்பிரகாசம்,
ஈரோடு.

===============================================================

புத்திர பாக்கியம் வேண்டிய அனைவருக்கும் சீக்கிரம் சந்தான ப்ராப்தி உண்டாகவேண்டும்!

சோகத்தில் பெரிய சோகம், புத்திர சம்பத்து இல்லாத சோகம். இதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும் அதில் உள்ள வலியும் வேதனையும்.

நமது தளத்தில் ஏற்கனவே சந்தான ப்ராப்தி வேண்டி பிரார்த்தனைகளை சமர்பித்திருந்த அனைவரது பிரார்த்தனைகளுக்கும் இறைவன் செவிசாய்க்கவேண்டும். அவர்கள் கோரிக்கை நிறைவேறி, அவர்கள் இல்லங்களில் மழலைச் சத்தம் விரைவில் கேட்கவேண்டும்.

===============================================================

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்…

இந்த வார கோரிக்கைக்கு மனு செய்திருக்கும் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் அவர்களின் பிரார்த்தனையையும் சூழலையும் பார்க்கும்போது உள்ளம் உருகுகிறது. நிச்சயம் இவர்களுக்கு இறைவன் புத்திர பாக்கியத்தை நல்கி, அவர்களின் கிரகத்தில் மகிழ்ச்சி பேரலைகளை உருவாக்கவேண்டும். உருவாக்குவான். அது வரை நாம் அவனது கால்களை விடப்போவதில்லை.

சைவ சமய குரவர்கள் அருளிய திருமுறையை ஒரு முறை பாடினாலோ பிறவித் துயர் நீங்கும் எனும்போது திருமுறை இசையை கற்றுத் தருபவருக்கு இப்படி ஒரு மனக்குறை என்றால் அந்த திருமுறைக்கு தான் என்ன பெருமை? இது நியாயமா? இறைவா… ஒரு கணம் நீ யோசிக்கவேண்டும்.

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
இவர்களின் குடும்பத்திலே இன்ப ஒளி உண்டாகுமே… கந்தையா….

===============================================================

இந்த வார பொது பிரார்த்தனை

சிட்டுக்குருவிகள் காப்பாற்றப்படவேண்டும் !

உயிரினத்தின் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிட்டுக்குருவி, தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, போன்ற அரிய சிறு சிறு பறவையினங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படவேண்டும். அவை வாழ்வதற்குரிய சூழல் பெருகவேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகள் சரிவிகிதத்தில் அடங்கிய உலகில் தான் பசுமை செழிக்கும். பசுமை செழிக்கும் இடத்தில் தான் மழை பொழியும். மழை பொழிந்தால் தான் அந்த நாடு சுபிட்சமாக இருக்கும்.

Sparrow couple

காடுகள் உள்ளிட்ட இயற்கை வளம் உருவாவதில் பறவைகளின் பங்கு முதன்மையானது. வேளாண் நிலங்களில் காணப்படும் பூச்சிகள், எலிகளை கட்டுப்படுத்துவது, பயிர்களின் மகரந்த சேர்க்கை, அதன் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது போன்ற செயல்களில் பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஈர நிலங்கள் உருவாகவும், மழை வளம் பெருகவும், பாதுகாப்பான சுற்றுச் சூழல் உருவாகவும் முன்னோர்களைப் போல நாமும் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயம்.

இன்று நமது தளத்தின் வாசகர்களுக்கிடையே இது குறித்து ஏற்படும் விழிப்புணர்வு, தீ போல எட்டுத்திக்கும் பரவும் என்பதில் வியப்பில்லை. திருவருள் நமது முயற்சிக்கு துணைநின்று உதவேண்டும் என்பதே நமது இந்த வார பொது பிரார்த்தனை.

===============================================================

ஈரோட்டை சேர்ந்த வாசகர் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைத்து அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கவும், இது வரை நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிள்ளை வரம் வேண்டி கோரிக்கைகளை சமர்பித்துள்ள அனைவருக்காகவும், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் அழியாமல், பல்லுயிர் பெருக்கத்தில் அவை சிறப்பான பங்கை ஆற்றி, அதன் மூலம் பசுமை செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம். மேலும் நமது தளத்தில் ஏற்கனவே சந்தான ப்ராப்தி வேண்டி பிரார்த்தனைகளை சமர்பித்திருந்த அனைவரது கோரிக்கையும் நிறைவேறவேண்டும்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மார்ச் 23,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் 63 நாயன்மார்கள் தொடரின் இயக்குனர் திரு.தனுஷ்

12 thoughts on “கடமையை சரியாக செய்யுங்கள்… கஷ்டங்கள் வந்த வழி ஓடிவிடும்! ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

  1. டியர் சுந்தர்ஜி

    மகா பெரியவர் சொன்ன அறிவுரைகளை நாமும் கடைபிடிப்போம்

    //1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

    2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

    3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும் //

    மஞ்சு, கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.கணேசன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

    ஈரோட்டை சேர்ந்த வாசகர் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைத்து அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கவும், இது வரை நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிள்ளை வரம் வேண்டி கோரிக்கைகளை சமர்பித்துள்ள அனைவருக்காகவும், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் அழியாமல், பல்லுயிர் பெருக்கத்தில் அவை சிறப்பான பங்கை ஆற்றி, அதன் மூலம் பசுமை செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

    குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்
    தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
    தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
    தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
    தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்
    பெண்கள் கருவுற
    காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
    பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
    கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
    பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
    ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
    கதா தந்தே வாணீ – முககமல தாம்பூலா ஸதாம்.

    நன்றி
    உமா

  2. வணக்கம் சார்.
    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு. கணு சார் அவர்களை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டீர்கள்.
    மேலும் அவர் மற்றவர்களுக்கு செய்துள்ள உதவிகள் பற்றியும் தற்போது எங்களுக்கு தெரியபடுத்தி இருக்கீங்க.
    இவர் அறிமுகம் கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை.
    அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் கோபுரம் தரிசனம் கிடைத்தது. நன்றி.
    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    இவர்களின் குடும்பத்திலே இன்ப ஒளி உண்டாகுமே… கந்தையா….
    படிக்கும் போதே கண்ணில் நீர் வழிந்தது.
    நம் கோரிக்கைகளுக்கு கடவுள் சிறிது தாமதம் காட்டினாலும் பரவாஇல்லை. அந்த ஈரோடு தம்பதிகள் மனம் மகிழ (தந்தையும், மகனும் ) சிவனும் முருகன் சேர்ந்து விரைவில் மழலை சத்தம் கேட்க செய்வார்கள் என்பது உறுதி.
    ஈரோட்டை சேர்ந்த வாசகர் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைத்து அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கவும், இது வரை நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிள்ளை வரம் வேண்டி கோரிக்கைகளை சமர்பித்துள்ள அனைவருக்காகவும், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் அழியாமல், பல்லுயிர் பெருக்கத்தில் அவை சிறப்பான பங்கை ஆற்றி, அதன் மூலம் பசுமை செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.
    நன்றி சார்.

    1. “நம் கோரிக்கைகளுக்கு கடவுள் சிறிது தாமதம் காட்டினாலும் பரவாஇல்லை. அந்த ஈரோடு தம்பதிகள் மனம் மகிழ (தந்தையும், மகனும் ) சிவனும் முருகன் சேர்ந்து விரைவில் மழலை சத்தம் கேட்க செய்வார்கள்” என்று நல உள்ளதோடு பிரார்த்திக்கும் உணர்வு ….அருமை …பல்லாண்டு வாழ்க ….இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

  3. திருவாலங்காடு என்று இரண்டு சிவதலங்கள் உள்ளன ….ஓன்று திருவள்ளூர் அருகில் உள்ளது ..இன்னொரு தலம் திருவாவடுதுறை அருகில் உள்ளது …திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா மூலைஅம்மை வழிபட்டு ,அர்ச்சித்து அங்கு தனி சந்நிதியில் உள்ள புத்திர தியாகேசர் அர்ச்சனை செய்து வழிபடவும் …பின்னர் அருகில் உள்ள திருவாலங்காடு சென்று அங்குள்ள புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி,வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன்[புதிய பிரதிஷ்டை ] ,பழைய அம்மனையும் அபிசேகம் செய்து , வழிபட்டு பின்பு வெளி பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள புத்திர காமேஸ்வர்ரை அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் .இதனை அமாவாசையில் செய்வது சிறப்பு …அதுவும் வரக்கூடிய பங்குனி மாதம் அம்மாவாசை நாளில் இங்கு தீர்த்த வாரி நடை பெரும் …அப்போது புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி,புத்திர காமேஸ்வர்ரை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள் என்கிறது இந்த ஆலய தலபுராணம் ……
    திருவெண்காடு முக்குள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு ,திருக்கருகாவூர் வழிபடுதல் கூடுதல் சிறப்பு ….[ஒரே நாளில் 4 திரு கோயில்களையும் வழிபடலாம் ]……
    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் ,அசைவம் வேண்டாம் …

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

    திருச்சிற்றம்பலம்

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகலின் இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.

    தினமும் திருமுறை இசைக்கும் உங்களுக்கு ஈசன் நடத்துவது திருவிளையாடலே …..அவன் அருளால் அவன் தாள் வணங்குவோம் …

    1. மிகச் சிறந்த பரிகாரத்தை கூறி வழிகாட்டியமைக்கு வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.

  4. அன்பு சகோதரி திருமதி தமிழ்செல்வி அவர்களுக்கு
    ” உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்கல்வி, மெய் ஞானம்,
    புகழ்,வலிமை,வெற்றி,நன்மக்கள்,துணிவு,பொன்,நோயின்மை,
    நல்லறிவு,அழகு,பெருமை,நல்லூழ்,வாழ்நாள்,கடவுள் பக்தி ” மற்றும் எல்லாவித சகல சௌபாக்கியங்களுடனும் கூடிய மழலை செல்வம் கூடிய விரைவில் கிடைக்க எங்களுடைய மனமார்த பிராத்தனைகள்.

  5. சுந்தர் சார் மாலை வணக்கம் …..இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.கணேசன் அவர்களுக்கு என் பணிவான நன்றி …..திருமதி தமிழ்செல்வி அவர்களுக்கு மழலை செல்வம் கூடிய விரைவில் கிடைக்க பிராத்திப்போம் …… .நமது பிரார்த்தனை கிளப்புக்கு மழலை வரம் வேண்டி கோரிக்கைகளை சமர்பித்துள்ள அனைவருக்காகவும், பிராத்திப்போம் …..நன்றி தனலட்சுமி …….

  6. ///இந்த வார பிரார்த்தனைக்கு தலைமைதாங்கும் கணு என்கிற திரு.கணேசன் சார் அவர்களுக்கு என் வணக்கங்கள்///

    ஈரோட்டை சேர்ந்த வாசகர் தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைத்து அவர்களுக்கு அழகான ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்கவும், இது வரை நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிள்ளை வரம் வேண்டி கோரிக்கைகளை சமர்பித்துள்ள அனைவருக்காகவும், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் அழியாமல், பல்லுயிர் பெருக்கத்தில் அவை சிறப்பான பங்கை ஆற்றி, அதன் மூலம் பசுமை செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம். மேலும் நமது தளத்தில் ஏற்கனவே சந்தான ப்ராப்தி வேண்டி பிரார்த்தனைகளை சமர்பித்திருந்த அனைவரது கோரிக்கையும் நிறைவேறவேண்டும். -என பிரார்த்திப்போம் ..

  7. அனைவருக்கும் வணக்கம், தங்கள் அனைவரின் வேண்டுதலால் நிச்சயம் எங்களுக்கு இறைவன் மழழைச் செல்வம் அருளுவார் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தேனூராரின் பாடல்களைத் தினமும் படித்து முருகப் பெருமானை நித்தமும் வழிபாடு செய்துவருகிறோம். அப்பாடலை கேட்க இணைப்பு……………https://dl-web.dropbox.com/get/Public/denoorar%20paatalkal.mp3?_subject_uid=9827630&w=AAD_UFG7fa7yZoC2mzJPpfLzEi1VAW8u4BaYDC5dYHD6TQ

  8. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஒப்பிலா மூலைஅம்மை திருகோயில் :04364232055…………….
    திருவாலங்காடு வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன் புத்திர காமேச்வரர் திருகோயில் :9751549549,9698563577,9626389722

  9. வணக்கம் அண்ணா
    உங்கள் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன்.மிகவும் முக்கியமான பல தகவல்கள் இதனால் எளிதாக மக்களை சென்று அடைகிறது .நீங்கள் இதனுடன் டைப் 1 எனும் குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் அண்ணா .கண்டிப்பாக இதனால் என்னை போன்ற பெற்றோர் பயனடைவார்கள்.
    நன்றி அண்ணா
    சுபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *