கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஸ்ரீகிருஷ்ணபக்தி இயக்கத்தினரின் மூலமந்திரமாக இந்த மந்திரம் உள்ளது. நாமசங்கீர்த்தனத்தை மூச்சாகக் கொண்டுள்ள கிருஷ்ணபக்தி இயக்கத்தினரின் இந்த மூலமந்திரத்தை முதன்முதலில் அளித்தவர் தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி இயக்க வரலாற்றில் சைதன்ய மஹாபிரபுவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
‘கிருஷ்ணப் பிரேமை’ என்று கூறப்பட்ட ராதையின் உயர்ந்த கிருஷ்ண பக்தியை பற்றி கிருஷ்ணர் ஒரு முறை ராதையிடம் கேட்டபோது, “இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது பிரபு. நீங்கள் நானாக பிறக்கவேண்டும். நான் நீங்களாக பிறக்கவேண்டும். அப்போது தான் உங்களுக்கு புரியும்!” என்று கூறினாள்.
ராதையின் பக்தியை உணர்வதற்காகவே கிருஷ்ணர் ராதையின் அம்சமாக கலியுகத்தில் மேற்கு வாங்க மாநிலம், கங்கைக்கரையோர கிராமமான மாயாபூரில் ஜகந்தாத மிஸ்ரர்-சசிதேவி தம்பதியின் தவப்பயனாய் 1486ஆம் அவதரித்தார். அந்த குழந்தை தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு.
ஸ்ரீ சைதன்யர் குறித்து இணையத்தில் கண்ட ஒரு கதையை பார்ப்போம்…
உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?
ஒரு முறை சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கம் வந்தார். அங்கே ஒருவர் தினமும் தவறான சுலோக உச்சரிப்பில் கீதை வாசித்து கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கேலி செய்வார்கள். சைதன்ய மகாபிரபு வருகிறார் என்று அறிந்த ஆலயபொறுப்பாளர்கள் அவரை ஒரு ஒதுக்கு புறமாக இருந்து கீதை வாசிக்க விட்டனர். அங்கே வந்த சைதன்யருக்கு யாரோ கீதையை தவறாக வாசிப்பது காதில் விழுந்தது.
அவர் அருகில் சென்று கேட்டார்.., “உங்களுக்கு சமஸ்கிருதம் நன்றாக தெரிவதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஏன் இப்படி தவறாக வாசிக்கிறீங்கள்..?” என்றார் சைதன்ய மகாபிரபு.
அதற்கு அவர் சொன்னார், “கீதையை திறந்ததும்.. தேரில் கிருஷ்ணரும் அர்ஜுனனும் நிக்கிறார்களே சுவாமி..! அதை காணும் போது என் உடல் நடுங்கிறது..! என் நா தழுதழுக்கிறது..! கண்ணீர் பெருகி ஒடுகிறது..! வார்த்தைகள் தவறுகிறது..! நான் என்ன செய்வேன் பிரவு..?” என கண்ணீர் விட்டார்.
திரும்பி மற்றவர்களை பார்த்து சைதன்ய மகாபிரபு கேட்டார்.. “உங்களுக்கு அந்த தேராவது தெரிந்ததோ..?”
வெட்கி தலை குனிந்தனர் அவரை கேலி செய்தவர்கள்.
இங்கே இருக்கிறது பக்தி. பக்தி என்பது ஒரு கண்ணீவிடும் மிக உயர்த உண்ணதமான உணர்வு. அதில் ஆய்வுக்கோ விமர்சனத்துக்கோ இடமில்லை. இந்த சரணாகதியை அடைந்தவர்களை யாரும் வெல்லவோ.. தோற்கடிக்கவோ முடியாது.
(நன்றி : tamilenkalmoossu.blogspot.in)
===============================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் 63 நாயன்மார்கள் தொடரின் இயக்குனர் திரு.தனுஷ்.
தந்தி டி.வி.யில் ஒவ்வொரு ஞாயிறும் பகல் 12.00 மணிக்கு சிவனடியார்களின் திவ்ய சரித்திரமான ’63 நாயன்மார்கள்’ தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. (சனிக்கிழமை காலை 10 மணிக்கு மறுஒளிபரப்பு).
கணவன் மனைவி துரோகம், கூடா நட்பு, டீன் ஏஜ் காதல், கள்ளக் காதல், ஆசிரியர் மாணவி காதல், மாமியார் மருமகள் சண்டை, மருமகன் மாமியார் சண்டை, வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு எப்படி துரோகம் செய்வது, அடுத்தவர் குடும்பத்தை எப்படி கெடுப்பது etc.etc.etc. போன்றவை மெகா சீரியல் என்ற பெயரில் நுழைந்து சமூகத்தை சீரழித்து வரும் வேளையில் ஈசன் திருமேனி பட்ட தென்றலாக ’63 நாயன்மார்கள்’ வரலாறு தொடராக வருவது ஒரு மகத்தான போற்றத்தக்க முயற்சி.
நாயன்மார்கள் சிலரது வரலாறு திரைப்படமாக வந்துள்ளது. ஆனால், தொலைக்காட்சி வரலாற்றில் இந்த ’63 நாயன்மார்கள்’ கதை தொடராக வருவது இது தான் முதல் முறை. தொலைக்காட்சி தொடர் என்றாலும் சர்வதேச தரத்துக்கு ஈடாக ஒரு திரைப்படத்திற்கே உரித்த அபாரமான தொழில்நுட்பத்தோடு தந்தி டி.வி.யின் இந்த தொடர் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
இதன் இயக்குனர் தனுஷ் என்பவரை சந்தித்து நமது தளத்தின் பாராட்டுக்களை தெரிவித்து அவருக்கு உற்சாகமூட்ட விரும்பினோம். கடும் முயற்சிக்கு பிறகு அவரது அலைபேசி எண் கிடைத்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அலைபேசியில் விஷயத்தை சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டார். நமது வாசகர் ஹரீஷ் உடன் வர காம்தார் நகரில் உள்ள திரு.தனுஷ் அவர்களின் அலுவலகத்தில் 13/03/2014 வியாழன் மாலை 7.30 அளவில் சந்திப்பு நடைபெற்றது. நமது தளத்தின் சார்பாக அவரது அரிய பணியை பாராட்டி, அவரை கௌரவித்தோம். தொடர்ந்து நினைவுப் பரிசு வழங்கினோம்.
தொடர் தோன்றிய விதம், சுவாரஸ்யமான சம்பவங்கள், படப்பிடிப்பில் இறைவன் அருள் என விரிவான பேட்டி விரைவில் வரவிருக்கிறது.
’63 நாயன்மார்கள்’ தொடரை இயக்கிவந்தாலும் அடிப்படையில் திரு.தனுஷ் ஒரு கிருஷ்ண பக்தர். இதற்கு முன் வேறு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பக்த விஜயம்’ தொடரை இயக்கியிருக்கிறார். அந்த அனுபவமே இவருக்கு ’63 நாயன்மார்கள்’ தொடரை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
இஸ்கானை சேர்ந்த தவத்திரு பக்தி விகாச ஸ்வாமிகளிடம் தீட்சை பெற்றுள்ள இவரின் இயற்பெயர் தாமோதர கௌரங்க தாஸ் என்பதாகும்.
’63 நாயன்மார்கள்’ தொடரை இயக்கும் வாய்ப்பை பற்றி கேட்டபோது, இப்படி ஒரு மகத்தான பணிக்கு இறைவன் தன்னை தேர்ந்தெடுத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் சிவனருளால் அனைத்தும் நல்லபடியாக போய்கொண்டிருக்கிறது என்றும் சொன்னார்.
சந்திப்பில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அது பற்றி நமது தளத்தில் விரிவான பதிவு வரவிருக்கிறது.
சந்திப்பில் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
வரும் ஞாயிறு ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் அவதார தினம். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிதாமகராக விளங்கியவர் ஸ்ரீ சைதன்ய மஹா பிரபு. அது பற்றி நமக்கு எடுத்துக்கூறிய திரு.தனுஷ், ஞாயிற்றுக்கிழமை இஸ்க்கான் கோவிலில் இருந்து தாம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.
===============================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா…?
வாழ்க்கை போராட்டம் தீரவேண்டும்!
சார், எனக்கு நான்கு தங்கைகள். எல்லாருக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டு நான் கடைசியில் திருமணம் செய்துகொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
முதல் குழந்தை பெயர் ஸ்ரீ விஜய ராகவேந்திரா. அடுத்தவன் பேறு ஸ்ரீ ஹரி கிருஷ்ணா.
என்னுடைய பிரச்னை என்னவென்றால் எனக்கு இப்போது 42 வயதாகிறது. நான் பி.காம் படிப்பும், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் படிப்பும் படித்துள்ளேன். IBM ல் 15 வருடங்களாக SYSTEM ENGINEER ஆக இருந்தேன். என்னோட கெட்ட நேரம் என்னை திடீர்னு பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அங்கு செல்லமுடியவில்லை. ஏன்னா என் அம்மாவுக்கு வயது 65. பி.பி., சுகர், வீசிங் இதெல்லாம் அவங்களுக்கு இருக்கு. எந்த ஒரு வேலையையும் நான் தான் பக்கத்துல இருந்து செய்ய வேண்டியிருக்கு. இப்போ நான் வேலை கஷ்டப்படுறேன். நான் இப்போ இருக்கிறது திருச்சி. நான் எப்பவுமே ஹரி ஸ்மரனையிலே இருப்பேன். எனக்கு காஞ்சி மகா பெரியவா அப்புறம் ஸ்ரீ சீரடி சாய் பாபா, ராகவேந்திர சுவாமி இவங்களை ரொம்ப பிடிக்கும். எப்பவுமே இவுங்க நாமாவை சொல்லிக்கிட்டு இருப்பேன். எனக்கு இப்ப 2 குழந்தையை வெச்சிகிட்டு வேலை இல்லாம குடும்பத்தை நடத்த முடியலே. அதனால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க நீங்க எல்லாரும் பிரார்த்தனை பண்ணனும்.
ஹரே ராம ஹரே கிருஷ்ண!
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம!!
சிவக்குமார்,
திருச்சி.
மொபைல் : 9894883868
===============================================================
உயிருக்கு போராடும் நண்பர் – விரைவில் நலம் பெறவேண்டும்!
எனது நண்பர் திரு. சுரேஷ் ராஜ் (37) அவர்கள் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். சமீப காலமாக அவருக்கு DENGUE நோயால் அவதிப்பட்டுள்ளார். அதன் விளைவாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருடய இதயம் செயல் திறன் குறைந்து வருவதாக கூறியுள்ளனர். இதற்கு ஒரே வழி அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அவருக்கு அதற்கான சோதனைகள் செய்ய பட உள்ளன. இதய மாற்று அறுவை என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் எனில் இதற்கு பல கட்டங்கள் மற்றும் நுணுக்கங்கள் உள்ளன அவை அனைத்தும் சேர்ந்தால் மட்டுமே இதய மாற்று வெற்றி பெரும்.
நண்பர் இந்த சோதனையில் வெற்றி பெற்று இதய மாற்று அறுவை இல்லாமல் மருந்தின் துணையொடு மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டிக்கொள்கிறேன்
நன்றி !.
ஆர்.ஸ்ரீராம்,
சென்னை
===============================================================
நம்பினால் நம்புங்கள்!
நம்பினால் நம்புங்கள். நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கும் சிறப்பு விருந்தினர்களை அந்தந்த வாரம் தான் தேர்வு செய்வோம். இது குறித்து நாம் அலட்டிக்கொள்வதே கிடையாது. ஒருவரையொருவர் விஞ்சும் வண்ணம் நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனை செய்ய சான்றோர்கள் கிடைத்து வருகிறார்கள் என்பது உண்மையில் திருவருள் தான்.
இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு சிறந்த கிருஷ்ண பக்தரான திரு.தனுஷ் தலைமை ஏற்றிருப்பதன் பின்னணியில் இறைவனின் மிகப் பெரிய திருவிளையாடல் இருப்பதாகவே நமக்கு படுகிறது.
இங்கு முதலில் இடம்பெற்றுள்ள பிரார்த்தனை கோரிக்கையை அனுப்பியிருக்கும் நண்பர் சிவக்குமார் சென்ற வாரமே நமக்கு அனுப்பிவிட்டார். அவசர அவசரமாக அதை ஒரு GLANCE பார்த்துவிட்டு, அடுத்த வாரம் வெளியிடும்போது விரிவாக படித்துக்கொள்ளலாம் என்று அந்த மின்னஞ்சலை ARCHIVE செய்து வைத்தோம்.
தளத்தில் வெளியிட இன்று அவரது மின்னஞ்சலை ஓப்பன் செய்து படித்தபோது தான் அவர் ஹரி ஸ்மரணையில் தொடர்ந்து ஈடுபடுபவர் என்று தெரிந்துகொண்டோம்.
இந்நிலையில் நேற்றைய நமது சந்திப்பில், திரு.தனுஷ் அவர்கள் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க கோரிக்கை விடுத்து அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஹரி ஸ்மரணையில் ஈடுபடும் தன் பக்தன் ஒருவன் பிரார்த்தனைக்கு எப்படி தன் இயக்கத்தின் தீட்சை பெற்ற ஒருவரையே தலைமை ஏற்க செய்திருக்கிறான் இறைவன் பார்த்தீர்களா?
இது நிச்சயம் தற்செயல் அல்ல. திருவருள் தான். ஏனெனில் தனுஷ் அவர்களை சந்திப்பது நேற்று வரை நிச்சயமாகவில்லை.
மேலும் தனுஷ் அவர்களுடன் நாம் இருக்கும் புகைப்படத்தில், பின்புறம் திரு.சிவக்குமார் அவர்கள் வணங்கும் குருமார்களில் ஒருவராக ஷீரடி சாய்பாபாவின் படம் இடம்பெற்றிருக்கிறது பார்த்தீர்களா? திருவருள் மட்டுமல்ல… குருவருளும் சிவக்குமார் அவர்களுக்கு உண்டு போல…
நன்றாக கவனத்தில் கொள்ளவேண்டும் : திரு.தனுஷ் அவர்களை நாம் நேற்று தான் சந்தித்தோம். பிரார்த்தனைக்கு அவரை தலைமை ஏற்க்க சொல்லி கேட்டுக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தது அவரது சந்திப்பின்போது தான்.
எல்லாம் அவன் செயல். வேறென்ன சொல்ல?
எத்தனை சோதனை வந்தாலும் நம்மை வணங்கும் தெய்வத்தை பற்றியிருப்போம். ஏதோ ஒரு ரூபத்தில் அருள்மழையை நிச்சயம் தெய்வம் பெய்விக்கும் என்பது உண்மை.
திரு.சிவக்குமார் அவர்களுக்கு ஏற்ற ஒரு பணியை திருச்சியில் உள்ள நம் வாசக அன்பர்கள் தேடித் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆகையால் அவரது அலைபேசி எண்ணையும் தந்திருக்கிறோம்.
===============================================================
இந்த வார பொது பிரார்த்தனை
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்காகவும் பிரார்த்தனை!
கடந்த 7–ந்தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு மலேசியாவின் தலைநகர் குவாலா லம்பூரில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு மலேசிய பயணிகள் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்துக்குப் பின்னர், அதாவது 8–ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி) ரேடார் தொடர்பை இழந்தது. விமானாம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உறவுகளையும் நண்பர்களையும் வரவேற்க பெய்ஜிங் விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த மக்கள், விமானம் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து கதறி அழுதுவிட்டார்கள்.
பன்னாட்டு கப்பல்கள் மற்றும் செயற்கை கோள்கள் விமானத்தை பத்து நாட்களுக்கும் மேலாக தேடி வரும் சூழ்நிலையில் விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் கடத்தல் காரர்கள் தொடர்புகொனு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்திருப்பார்கள் என்றும் விமானம் விபத்தில் சிக்கியிருக்கவே வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இல்லை இல்லை விமானம் கடத்தப்பட்டிருக்கிறது என்று மாறி மாறி தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் நாம் ராக்கெட் விட்டாலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து காணாமல் போயிருக்கும் ஒரு விமானத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை எனும்போது இந்த பிரபஞ்சத்தின் முன், மனிதனின் விஞ்ஞான அறிவு ஒன்றுமேயில்லை என்பது நிரூபணமாகிறது.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (குறள் 337)
என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கேற்ப, அடுத்த நொடி வாழ்க்கை இந்த உலகில் நிச்சயமில்லை. இருக்கும் வரை, நல்லதை நினைத்து, நல்லதை சொல்லி, நல்லதை செய்வோம். இறைவனிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு செயலாற்றுவோம். இதுவே நிம்மதிக்கு வழி.
மேற்படி விமானத்தில் பயணம் செய்த அனைவருக்காகவும் அவர்களை காணாமல் தவிக்கும் அவர்களது சொந்தங்கள் ஆறுதல் அடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.
===============================================================
நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற ஒரு நல்ல உத்தியோகம் விரைவில் கிடைக்கவும், அவரது தாயார் பானுமதி (65) அவர்கள் நோய்நோடியி இன்றி சௌக்கியமாக வாழவும், அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இதர பிரச்னைகள் தீர்ந்து சந்தோஷம் பூத்து குலுங்கவும் இறைவனை வேண்டுவோம். அதே போல, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் நண்பர் சுரேஷ் ராஜ் அவர்களும் இதய நோயிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியத்துடன் எஞ்சிய நாட்களை கழிக்கவும், மலேசிய விமான விபத்தில் சிக்கிய அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையவும் அவர்களை இழந்து வாடும் சொந்தங்கள் ஆறுதல் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : மார்ச் 16, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘யுவ ஸ்ரீ கலா பாரதி’ திருக்குறள் தீபிகா அவர்கள்.
டியர் சுந்தர்ஜி
சைதன்ய மகா பிரபுவை பற்றி இப்பொழுது தான் கேள்வி படுகிறோம். மிகவும் அருமையான கதை. இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு தனுஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
திரு சிவகுமார் அவர்களுக்கு 100% கிருஷ்ணனின் அருள் பரிபூர்ணமாக இருக்கிறது. கண்டிப்பாக அவருக்கு நல்ல வேலை கிடைக்கும்.குருவருளும் திருவருளும்கண்டிப்பாக அவருக்கு உள்ளது
உயிருக்கு போராடும் திரு சுரேஷ் ராஜ் விரைவில் குணமடைய பிராத்திப்போம்
மற்றும் மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்காகவும் அவர்களை காணாமல் தவிக்கும் அவர்களது சொந்தங்கள் ஆறுதல் அடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.
வேலை கிடைக்க
ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ
தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
திரு தனுஷ் அவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட விசயங்களை பற்றிய பதிவை எதிர் பார்க்கிறோம்
நன்றி
உமா
உமா மேடம் வணக்கம்
வேலை கிடைக்க
எபோது சொல்ல வேண்டும்.?
எத்தன முறை சொல்ல வேண்டும் ?
எங்கு சொல்ல வேண்டும் ?
எப்படி சொல்ல வேண்டும் ?
எனக்கு கொஞ்சம் சொன்னால்
சொல்லுங்க மேடம்.
மிக்க நன்றி.
சாத்தூர் ராஜா.
எனக்கு கொஞ்சம் சொல்லுங்க மேடம்.
எழுத்து பிழை வந்து விட்டது.
சாத்தூர் ராஜா.
நன்றி.
டியர் Mr ராஜா
தினமும் காலையில் 10 டைம்ஸ் மற்றும்
வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும். முடிந்தால் குரு சரித்திரா ஒரு வாரத்தில் படித்து முடிக்கவும். குரு சரித்திரத்திற்கு கை மேல் பலன் உண்டு. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. இதை பற்றிய article already நம் ரைட் mantra வில் வந்திருக்கிறது
Definitely you will get a good job, We will pray for you.
நன்றி
உமா
நன்றி உமா மேடம் .
நான் T N P S C ( குரூப் 2 ) டெஸ்ட் கு படித்து வருகிறேன். ( மே 18 டெஸ்ட் எழுத போகிறேன் ).
டெய்லி செய்ய போகிறேன். குரு சரித்திர பற்றி
விபரம் கொஞ்சம் தேவை படுகிறது. தயவு செய்து
எந்த மாத கட்டுரை ல் வந்து உள்ளது என கூறினால்
நல்லா இருக்கும்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும். ரொம்ப ரொம்ப நன்றி.
– ராஜா –
டியர் Mr ராஜா
Guru Charithra book is available in Mylapore Sai baba Temple.
The price of the book is Rs.100/- All the best
Regards
Uma
மிக்க நன்றி.
– ராஜா –
திரு. சிவகுமார் வேலைக்கு நான் முயற்சிக்கிறேன்… ஓம் சாய்.
மிக்க நன்றி நோபிள் அவர்களே.
மற்றவர்களும் இது விஷயமாக முயற்சி செய்து சிவக்குமார் அவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
– சுந்தர்
இயக்குனர் தனுஷ் அவர்கள் நம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றத்துக்கு நன்றியையும் வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்…
ஈசன் திருமேனி பட்ட தென்றலாக ’63 நாயன்மார்கள்’ வரலாறு தொடராக வருவது ஒரு மகத்தான போற்றத்தக்க முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது –
அடுத்து நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற ஒரு நல்ல உத்தியோகம் விரைவில் கிடைக்கவும், அவரது தாயார் பானுமதி (65) அவர்கள் நோய்நோடியி இன்றி சௌக்கியமாக வாழவும், அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இதர பிரச்னைகள் தீர்ந்து சந்தோஷம் பூத்து குலுங்கவும் இறைவனை வேண்டுவோம். அதே போல, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் நண்பர் சுரேஷ் ராஜ் அவர்களும் இதய நோயிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியத்துடன் எஞ்சிய நாட்களை கழிக்கவும், மலேசிய விமான விபத்தில் சிக்கிய அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையவும் அவர்களை இழந்து வாடும் சொந்தங்கள் ஆறுதல் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம். –
\\\\நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற ஒரு நல்ல உத்தியோகம் விரைவில் கிடைக்கவும், அவரது தாயார் பானுமதி (65) அவர்கள் நோய்நோடியி இன்றி சௌக்கியமாக வாழவும், அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இதர பிரச்னைகள் தீர்ந்து சந்தோஷம் பூத்து குலுங்கவும் இறைவனை வேண்டுவோம். அதே போல, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் நண்பர் சுரேஷ் ராஜ் அவர்களும் இதய நோயிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியத்துடன் எஞ்சிய நாட்களை கழிக்கவும், மலேசிய விமான விபத்தில் சிக்கிய அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையவும் அவர்களை இழந்து வாடும் சொந்தங்கள் ஆறுதல் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.\\\
-நன்றிகளுடன்
மனோகர்
சிவகுமார் அய்யா அவர்களுக்கு ,வீட்டு பக்கதுல மருந்தை வச்சுக்கிட்டு வெளில தேடினா எப்படி சார் …..உங்க மொத்த துன்பமும் தீர உங்க திருச்சி பக்கத்துல இருகிற துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருநெடுங்களம் ஒப்பிலா நாயகி உடனமர் நித்திய சுந்தரேசுவரர் திருகோயில் சென்று அங்கு சுவாமி ,அம்பாள் அபிசேகம் ,அர்ச்சனை செய்து விட்டு அங்கிருந்து 5 தடவை சம்பந்தரின் பதிகமான “மறையுடையாய் தோலுடையாய்”பாராயணம் செய்து விட்டு வரவும் …..அப்புறம் திருச்சி மலைகோட்டை வணங்கி அதன் எதிரில் உள்ள பெரிய கடை வீதி சென்று அங்குள்ள அக்கசாலை பிள்ளையார் திருகோயில் அருகில் இருக்கும் சொர்ண பைரவர் திருகோயில் இல்[ 9943150533 ] 3 தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொண்டு ,வெள்ளை நாய் வாகனத்தில் பைரவர் வலம் வரும் பொது மரிகொளுந்து சாற்றி , கருவரை தீபத்துக்கு நெய் வாங்கி கொடுக்கவும்…..சம்பந்தரின் “மறையுடையாய் தோலுடையாய்” தொடர்ந்து 48 நாட்கள் காலை ,மாலை பாராயணம் செய்து வரவும் …அசைவம் கண்டிப்பாக தவிர்கவும்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுன
சிவகுமார் அய்யா அவர்களுக்கு ,வீட்டு பக்கதுல மருந்தை வச்சுக்கிட்டு வெளில தேடினா எப்படி சார் …..உங்க மொத்த துன்பமும் தீர உங்க திருச்சி பக்கத்துல இருகிற துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருநெடுங்களம் ஒப்பிலா நாயகி உடனமர் நித்திய சுந்தரேசுவரர் திருகோயில் சென்று அங்கு சுவாமி ,அம்பாள் அபிசேகம் ,அர்ச்சனை செய்து விட்டு அங்கிருந்து 5 தடவை சம்பந்தரின் பதிகமான “மறையுடையாய் தோலுடையாய்”பாராயணம் செய்து விட்டு வரவும் …..அப்புறம் திருச்சி மலைகோட்டை வணங்கி அதன் எதிரில் உள்ள பெரிய கடை வீதி சென்று அங்குள்ள அக்கசாலை பிள்ளையார் திருகோயில் அருகில் இருக்கும் சொர்ண பைரவர் திருகோயில் இல்[ 9943150533 ] 3 தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொண்டு ,வெள்ளை நாய் வாகனத்தில் பைரவர் வலம் வரும் பொது மரிகொளுந்து சாற்றி , கருவரை தீபத்துக்கு நெய் வாங்கி கொடுக்கவும்…..சம்பந்தரின் “மறையுடையாய் தோலுடையாய்” தொடர்ந்து 48 நாட்கள் காலை ,மாலை பாராயணம் செய்து வரவும் …அசைவம் கண்டிப்பாக தவிர்கவும்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
ஸ்ரீ ராம் அய்யா அவர்களுக்கு ,
உங்கள் நண்பரை ,
திருச்சிற்றம்பலம்
தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ.
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.
ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் – கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.
உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.
இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.
சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.
வாம தேவன் வளநகர் வைகலுங்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னம தீசன் அடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.
விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.
இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.
திருச்சிற்றம்பலம்
48 நாட்கள் தினமும் முடிந்தவரை இரு பதிகம்களயும் பாராயணம் செய்ய சொல்லவும் ….சென்னை ஆவடி அருகில் உள்ள திருநின்றவூர் மரகதவல்லி இருதயாலீஸ்வரர் திருக்கோயில்[பூசலார் கோயில் ]சென்று அர்ச்சனை ,அபிசேகம் சுவாமி ,அம்பிகைக்கு செய்து வழிபட்டு வரவும் …மேலும் நன்னிலத்திலிருந்து மேற்கே 8 கி.மீ.தூரத்தில் உள்ள வாழவந்தநாயகி
உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருகோயில் சென்று சுவாமி ,அம்பாள் ,எமன் ,யோக பைரவர் அபிசேகம் ,அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடவும் ..இங்கு முதலில் ஈசனின் ஆணைப்படி குப்தா கங்கை இல் நீராடி ,அப்புறம் எமனை வழிபட்டு பின்பு சுவாமி,அம்பாள் வழிபட வேண்டும் ….
விஷ்ணு சஹசர நாமம் பாராயணம் தினமும் செய்வதும் இதய நோயை குணபடுத்தும் … குருநாதர் ஷீரடி சாய் பாபா
நமது , தந்தி டிவி “63 நாயன்மார்” சீரியல் டைரக்டர் அடியார் .தனுஷ் அவர்களை பதம் பணிந்து அடியவரின் திருவடியை என் தலை மேல் தாங்க ஈசனிடம் வேண்டி பணிகிரேன்….சித்தத்தை சிவன் பாலே வைத்தார்கும் அடியேன்……
I pray The Almighty for speedy recovery Mr. Suresh Raj and also early employment to Mr.Sivakumar and recovery of his mother.
Mr. Sivakumar, please pray Lord Thirumala Srinivasa. You will get a good job nearby your place. After getting the Job please visit Tirupathi
All the best
KK, Navi Mumau
சுந்தர் சார் வணக்கம் …..சிவகுமார் சார் அவர்களுக்கு அவர் தகுதிக்கு ஏற்ற படி ஒரு நல்ல வேலை அமைய அவர் துன்பம் அகல இறைவனை பிராதிப்போம்…. நண்பர் சுரேஷ் ராஜ் சார் அவர்களும் இதய நோயிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியத்துடன் வளமாகவும் வாழவும் …..மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்காகவும் அவர்களை காணாமல் தவிக்கும் அவர்களது சொந்தங்கள் ஆறுதல் அடையவும் இறைவனை பிரார்த்திப்போம்……தனுஷ் சார் அவர்கள் நம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றத்துக்கு மிக்க நன்றி ………தனலட்சுமி ….ஓம் சாய் நமோ நம ஸ்ரீ சாய் நமோ நம ……..
சேக்கிழார் பெருமானின் அருளால் நமக்கு பெரியபுராணம் கிடைத்தது .அவர் சென்னை அருகிலிருக்கும் குன்றதூரை சேர்ந்தவர் .
ஊடகத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் தினத்தந்தி மற்றும் திரு தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , சிவனருள் அவருக்கும் திரு சிவகுமார் ஸ்ரீராம் அவர்களின் நண்பர் சுரேஷ் ராஜ் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்தனை செய்வோம்
ஸ்ரீ சைதன்ய மஹா பிரபு அவதரதிருநாளில் உண்மையான பக்தி எத்தகையது என்பதை அருமையான சம்பவத்தின் வாயிலாக உலகுக்கு உணர்த்தியதை வாசிக்கும்போது நாம் இறைவன் மீது கொண்டுள்ள பக்தி எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் இனியும் கடந்து செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதையும் நமக்கு தீர்கமாக உணர்த்துகிறது
நிச்சயம் அவர்களைப்போல பக்தி செலுத்துவது முடியாத காரியம் தான் ஆனபோதும் அவரவர்க்கு தெரிந்த வழியில் நல்ல குருமார்களின் வழிகாட்டுதலோடு மனப்பூர்வமாக அந்த பரம்பொருளை நோக்கி ஒரு அடி எடுத்து வைபோமேய்யானால் எல்லாம் வல்ல அந்த இறைவன் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார் என்பது உலகறிந்த உண்மை
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறுகிய இந்த வாழ்நாளில் யாருடைய மனதுக்கும் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினைக்காது கிடைத்தற்கு அறிய இந்த மனித பிறவியை நமக்கு அளித்த அந்த பரம்பொருளுக்கு என்றென்றும் நன்றி கூறி நம் ஜென்மத்தை கடைத்தேற்றுவோம்
இந்த கலியுகத்தில் எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ச்சி கண்டிருந்தாலும் காணாமல் போன ஒரு விமானத்தையும் அதில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான உயிர்களின் நிலை என்ன என்பதையும் அறிய முடியாமல் நம் நெஞ்சம் பதைக்கிறது
இறைவா
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க அருள் புரிவாய்
நாங்கள் எவ்வளவோ பிழைகள் செய்திருக்கலாம்
அவை அனைத்தையும் பொறுத்து எங்களை நல்வழிப் படுத்தி
என்றென்றும் உன் நினைவோடு
உனது திருவடி நிழலில் இருக்க அருள் புரிவாயாக !!!
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
தற்போது திரு. சுரேஷ் அவர்களுடைய மருத்துவ சோதனை முடிந்து முடிவுகள் வர இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. பிரார்த்தனை மற்றும் பதிகங்கள் தந்து உதவிய அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. சோதனை முடிவுகள் வெற்றி கரமாக அமைய இறையை பிரார்த்திப்போம்.
நன்றி.