(Double click to ZOOM the image)
சென்னையில், கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, அரும்பாக்கத்தில் முற்றோதல் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
தற்போது மீண்டும் சென்னையில், கோயம்பேட்டில் வரும் மார்ச் 15, சனிக்கிழமை அன்று முற்றோதல் நடைபெறவுள்ளது.
முகவரி : தர்மசம்வர்த்தினி உடனுறை குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு-600107. சென்னை.
(கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெகு அருகே இக்கோவில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் அருகே நூறடி சாலையில் அமைந்துள்ள நாதெள்ளா திருமண மண்டபத்துக்கு நேர் எதிர்புறம் உள்ள தெருவுக்குள் சென்றால் இக்கோவிலை அடையலாம்.)
காலை 7 மணிக்கு முற்றோதல் துவங்கி மதியம் 4.00 அல்லது 5.00 மணியளவில் நிறைவடையும்.
சென்ற முறை அரும்பாக்கம் மங்களீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற முற்றோதலுக்கு, நம்முடன் நம் வாசகர்கள் சிலரும் வந்திருந்தனர். தாமோதரன் ஐயாவுக்கு அவர்களை வைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
குறுங்காலீஸ்வரர் சுவாமி அடியார்கள் திருக்கூட்டம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
வாசகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகி எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளை பெறுவீர்களாக.
கருத்தரித்துள்ள தாய்மார்கள் இதில் கலந்துகொள்ள விரும்பினால் – (பிரயாணம் அனுமதிக்கும் சூழலில் இருப்பவர்கள் மட்டும்) – தகுந்த பாதுகாப்புடன் முற்றோதலில் குறிப்பாக இறுதியில் கலந்துகொண்டு (சுமார் 1 மணிநேரம்) திருவாசகத் தேன் பருகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியில் மேள, தாளம், பம்பை, உடுக்கை ஆகிய கயிலாய வாத்தியங்களுடன் நடைபெறும் பூதகணங்கள் ஆட்டத்தை அனைவரும் பார்க்கவேண்டும். அது தான் ஹைலைட்டே!
அனைவரும் வருக! குறுங்காலீஸ்வரரின் அருளை பெறுக!!
==================================================================
இந்த பதிவில் கோவிலின் ராஜகோபுரம் புகைப்படம் ஒன்றை அளிக்கவும், நமது ‘ஆலய தரிசனம்’ பகுதிக்காகவும் நேற்று காலை இக்கோவிலுக்கு சென்றிருந்தோம். என்ன ஒரு அற்புதமான கோவில்…. பரபரப்பான கோயம்பேட்டுக்கு அருகே இப்படி ஒரு பழைமையான கோவிலா என்று வியப்பு ஏற்பட்டது.
அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி அருமையான புகைப்படங்களுடன் நாளை விசேஷ பதிவு வரவிருக்கிறது.
==================================================================
==================================================================
Also check :
திருவாசகத்தின் பெருமை!
==================================================================
[END]
டியர் சுந்தர்ஜி
குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் தாமோதர ஐயாவின் முற்றோதல் நிகழ்ச்சி நடப்பது அறிய மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் கலந்து கொள்வோம்.
நானும் வெகு நாட்களாக குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் செல்ல வேண்டும் என்று பிரயத்தனப் பட்டு செல்ல முடியவில்லை.
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
உமா
“அறம் வளர்த்த நாயகி” எப்படியெல்லாம் நம் முன்னோர் தமிழர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள் … அவர்களின் வழித் தோன்றல்கள் ,நாம் எப்படியிருக்கிறோம் . எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று …
அருகிலேயே ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது .. இரண்டும் தரிசிக்க வேண்டிய தலங்கள்
உண்மை சார்.
தர்மசம்வர்த்தினி என்பதன் நேரடி தமிழ் பெயர் அறம்வளர்த்தநாயகி.
அன்னைக்கு தான் எத்தனை எத்தனை அழகான பெயர்கள்.
சைவமும் வைணவமும் ஒன்றே என்பது போன்று இருந்தது இருகோவில்களையும் அருகருகே நாம் பார்த்தபோது.
அவசியம் தரிசிக்க வேண்டிய தலங்களுள் இவையும் அடக்கம்.
– சுந்தர்
இறவாத இன்ப அன்பு வேண்டும் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டானால் உன்னை என்றும் எப்பொழுதும் மறவாமை வேண்டும். மேலும் நீ திரு நடனம் புரியும் போது உன் அருகிலேயே நான் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருக்க வேண்டும் ……காரைக்கால் அம்மையார்
அருமை ….மிக அருமை ….சிவாய சிவ