இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதி இருக்கிறது. பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்கும் பணத்திற்கு விதி இல்லாமல் இருக்குமா?
தொடரின் முதல் அத்தியாயத்தில் சில அடிப்படை பண காந்த விதிகளை பார்த்தோம். தற்போது மேலும் சில நுணுக்கமான எளிய விஷயங்களை பார்ப்போம். கீழே கூறியவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது, உங்களிடம் உள்ள நெகடிவ் எனர்ஜி தானாகவே வெளியேறி சென்றுவிடும். பணத்தை ஈர்க்கும் ஒரு பாசிடிவ் சோர்ஸாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.
ஆனால் அதற்கு முன்னர் நம்மிடம் உள்ள சில குறைகளை களையவேண்டும். நீங்கள் பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவதற்கு முன்னர் இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு அவற்றை நடைமுறைபடுத்தவேண்டும்.
பணம் மற்றும் செல்வம் குறித்த உங்கள் அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாறாதவரை, சாட்சாத் அந்த லக்ஷ்மி தேவியே உங்கள் வீட்டு முன் வந்து நின்றாலும் உங்களால் அதை உணர முடியாது. எனவே தேவை ஒரு மாற்றம். நமது அணுகுமுறைகளில். நமது பார்வையில். நமது சிந்தனையில். அதற்கு உங்களை தயார் படுத்துவது தான் இந்த பதிவு.
ஆப்பரேஷன் செய்வதற்கு முன் டெட்டாலை போட்டு கிளீன் பண்ணுவாங்க தெரியுமா அது போலத் தான் இது.
செய்து பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.
பணத்தை ஈர்க்க செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!
* பலர் பணம் தங்களிடம் போதுமானளவு இல்லை என்கிற காரணத்தால் அதை வெறுக்கிறார்கள். நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களை தேடி எப்படி வரும்? பணத்தை நேசிக்கவும். அதன் மீது அன்பு செலுத்தவும். ஆனால் அதன் மீது வெறி கூடாது. நம்முடைய கவனம், ஆற்றல், பார்வை எதன் மீது இருக்கிறதோ அதை நாம் ஈர்க்கிறோம். பணமும் அப்படியே. நம்மிடம் பணம் இல்லை என்பதில் உங்களுடிய கவனமும், ஆற்றலும் இருக்குமானால், உங்களால் பணத்தை ஈர்க்கவே முடியாது.
* நீங்கள் செலவு செய்ய விரும்பும் தொகை உங்களிடம் இருப்பதாகவும் அதை நீங்கள் குறிப்பிட்ட அந்த செலவிற்கு உபயோகிப்பதாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். (VISUALIZE).
* உங்களுடைய, சொல், செயல், சிந்தனை அனைத்தும் உங்களிடம் பணமும் வளமையும் அளவற்று இருப்பதை போல இருக்கவேண்டும். “என்னிடம் பணம் இல்லை.” “அது மிகவும் காஸ்ட்லி” “என்னால் ஒருக்காலும் அதை வாங்க முடியாது” போன்ற நெகட்டிவ்வான சொற்களை அறவே மனதில் இருந்து நீக்கவேண்டும்.
* “பணம் இல்லை” என்கிற பேச்சே உங்களிடம் வரக்கூடாது. எந்த சூழ்நிலையிலும்.
* உங்களிடம் இப்போது இருக்கும் பணத்திற்கு முதலில் இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு முறையும் பணத்தை நீங்கள் கையாளும்போது நன்றியுணர்ச்சியுடன் கையாளுங்கள்.
* போதுமான பணம் உங்களிடம் இருந்தால் நீங்கள் வாங்க விரும்புபவற்றை ஒரு பட்டியலிடுங்கள். (டி.வி., ப்ரிட்ஜ், புது வாஷிங் மெஷின், இப்படி!)
* ஒரு பெரிய செல்வந்தனின் சிந்தனையை போன்றே உங்கள் சிந்தனையும் இருக்கவேண்டும். (இது ஒரு நுணுக்கமான வரி. அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளுங்கள்!) என்னிடம் தேவையான எல்லா சக்திகளும் வளங்களும் இருக்கின்றன என்பதை திரும்ப திரும்ப சொல்லுங்கள். திரும்ப திரும்ப திரும்ப!
* அற்புதம் என்பது வேறு. அதிர்ஷ்டம் என்பது வேறு. இரண்டுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் அற்புதத்தை எதிர்பார்க்கலாம். அதற்காக காத்திருக்கலாம். அதிர்ஷ்டத்தை அல்ல.
* எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள். அற்புதமான விஷயங்கள் நம்மை தேடி வரும் ஏனெனில் நாம் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியுணர்ச்சியுடன் இருக்கிறோம்.
* உங்களை சுற்றியுள்ள வளங்களை போற்றுங்கள். மற்றவர்களின் வளங்கள் உட்பட அனைத்தையும் போற்றுங்கள்.
* உங்களுக்கு தேவையான பணம் உங்களிடம் வரும் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.
* பணம் உங்களை தேடி வர, முதலில் நீங்கள் உங்களை நேசிக்க வேண்டும். பணம் நம்மை தேடி வந்து குவிய நமக்கு தகுதி இருக்கிறது என்று நம்புங்கள்.
* “நான் ஒரு பண காந்தம். பிரபஞ்சத்தின் பணகாந்த விதிகளுக்கு உட்பட்டு எனது செயல்களை நான் வடிவமைத்துக்கொள்கிறேன். எனது சிந்தனை மற்றும் உணர்ச்சிகள் மூலம் நான் பணத்தை விரட்டுகிறேனா? என்று அடிக்கடி உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
* “நான் ஒரு பண காந்தம். பணம் என்னை தேடி வரும்” என்று அடிக்கடி சொல்லுங்கள். தினமும் சொல்லுங்கள்.
* உங்களுக்கு தேவையான பணத்தை ஒரு செக்கில் எழுதி, அது அடிக்கடி உங்கள் கண்ணில் படுகிறார் போல வைத்துக்கொள்ளுங்கள்.
* நம்மை நன்றாகவும், சௌகரியமாகவும், மனநிறைவாகவும் உணரச் செய்யும் எந்த செயலை வேண்டுமானாலும் செய்யலாம். எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் இருக்குமாறு மனநிலையை வைத்துக்கொள்வது உங்களை மிகப் பெரிய பண காந்தமாக மாற்றும்.
* சந்தோஷமாக இருங்கள். உங்களை நேசியுங்கள். நேர்மறையாக சிந்தியுங்கள். உங்களிடம் இருக்கும் ஒவ்வொன்றுக்கும், வரும் ஒவ்வொன்றுக்கும் நன்றி கூறுங்கள். இன்னும் நம்மை தேடி நிறைய வரும் என்று நம்புங்கள். உங்களுக்கு நீங்கள் உதவமுடியுமே தவிர வேறொருவர் உதவ முடியாது. உங்களுக்கு தேவையான அனைத்து சக்தியையும் பிரபஞ்சம் உங்களுக்குலேயே வைத்திருக்கிறது. அதை உணரவேண்டியது தான் உங்கள் கடமை.
* “நான் எனது மனம் விரும்பும் அனைத்திற்கும் தகுதியுடையவானவேன். அது எனது தெய்வீக பாரம்பரிய உரிமை!” இந்த வாக்கியத்தை முழுமையாக நம்புங்கள். அடிக்கடி சொல்லுங்கள்.
இந்த தொடரை பொருத்தவரை நாம் சற்று இடைவெளி விட்டதற்கு காரணம் இருக்கிறது. உங்களுக்கு சொல்வதற்கு முன்னர் அதை சொல்வதற்கு அடிப்படை தகுதிகளை எமக்கு நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டாமா? எனவே தான் இந்த தாமதம்.
எனவே இந்த தொடர் உங்களுக்கு மட்டுமல்ல… நமக்கும் சேர்த்து தான். நாமளும் உங்க கூடவே வர்றோம் ஒரு ஓரமா! OK?
அடுத்த அத்தியாயத்தில் மேலும் பல ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் மற்றும் சூத்திரங்கள்.
….to be continued
==============================================================
Also check
அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1 –
==============================================================
Lovely Article Sir. We all Individuals on this earth are controlled bya law called “Law of Attraction. This kind of Positive mental Attitude(PMA) Make us successful.
நேர்மறையான எண்ணம் என்றும் நமக்கும் நன்மையே தரும். நல்ல அற்புதமான பதிவு.
நன்றி ஜி
ப.சங்கரநாராயணன்
டியர் சுந்தர்ஜி
Very good article
///“நான் எனது மனம் விரும்பும் அனைத்திற்கும் தகுதியுடையவானவேன். அது எனது தெய்வீக பாரம்பரிய உரிமை!” இந்த முழுமையாக நம்புங்கள். அடிக்கடி சொல்லுங்கள். ///
இந்த அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி
உமா
தன்னிறைவு தொடர் அருமை.
பண காந்த விதிகள் எல்லா புள்ளி விவரங்களும் நன்றாக கொடுத்து (VISUALIZE) பண்ண சொல்லயுள்ளிர்கள்.
பணம் நம்முடன் வரும், நாம் அதன் பின்னே போககூடாது. என்ற தத்துவம் கேள்விபட்டுளேன்.
அற்புதம் என்பது வேறு. அதிர்ஷ்டம் என்பது வேறு. இரண்டுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் அற்புதத்தை எதிர்பார்க்கலாம். அதற்காக காத்திருக்கலாம் .
நன்றி சார்.
சுந்தர்ஜி
இந்த பதிவு பணத்திற்கு மட்டுமான பதிவு மட்டுமல்ல. மொத்த வாழ்க்கைக்கும் இந்த எளிமையான விதிகள் பின்பற்றப்பட்டால் நன்றாக இருக்கும். அருமையான வாசகங்கள். தொடர்ந்து பணத்தை ஈட்டலாம். நன்றி!
இந்த அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி
நந்தகோபால்
வந்தவாசி
வணக்கம் இந்த பதிவு அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நாம் அனைவரும் இதை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். மற்றும் வங்கி வரைவோலையை குக்குள் சென்று டவுன்லோட் செய்து அதை பிரிண்ட் செய்து தங்கலுக்கு தேவையான தொகையை தங்கள் கைப்பட எழுதி வீட்டில் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.அதை தினம் தினம் பார்த்து வாருங்கள் கண்டிப்பாக அது நடக்கும் ..நன்றி
ஆ.பாலசுப்ரமணியன்
சேலம் .
சுய முன்னேற்றம்…
தொடர்களில் அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் …என்னை இந்த பட்டறை தான்.புதியவடிவம் கொடுத்து பக்குவபடுதிகொண்டுள்ளேன் .
என்னைப்போல் அதிகம் நபர்கள் இந்த கல்லூரியை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் காண்பார்கள் என்பது உண்மை .
மாணவர்களில் ஒருவன் …
-மனோகர்
நான் ஒரு பண காந்தம். பணம் என்னை தேடி வரும்” என்று சொல்லுவதை விட பணம் என்னை தேடி வருகிறது. என்று சொல்லுவது சரியானதாகும்.
எதிர் காலம் என்பதை விட நிகழ் காலம் சரியானதாகும்.
தொடர் மிக அருமை. இன்னும் அதிகமாக
எதிர் பார்க்கிறோம்.
அனு தினமும் எபோதும் சொல்லுங்கள்……………………………….
நான் பணத்தை விரும்புகிறேன்.நான் அதை புத்தி சாலிதனமாக
ஆக்கபுர்வமாகவும் , விவேகத்துடனும் பயன் படுத்துகிறேன். பணம்
என் வாழ்கையில் தொடர்ந்து எபோதும் புழங்கி கொண்டுஇருகிறது.
நான் அதை மகிழ்ச்சியுடன் விடுவிக்கிறேன். அது அற்புதமான
வழிஇல் பல மடங்காக என்னிடம் திரும்பி வருகிறது. பணம் நல்லது
மிகவும் நல்லது .பணம் காட்டு ஆற்று வெள்ளமாய் என்னை நோக்கி
பாய்ந்து வருகிறது . நான் அதை நல்லவைக்கு மட்டுமே பயன்
படுத்துகிறேன் . நான் என்னிடம் உள்ள நல்லவைக்கும் , என் மனதின்
சொத்துகளுக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.
இந்த வாக்கியத்தை தினமும் பல முறை சொல்லுங்க .
பணம் உங்களை தேடி வரும்.
– ராஜா –