‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அதாவது ‘Health is Wealth’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஆரோக்கியம் தான் மற்ற எல்லா செல்வங்களைவிடவும் சிறந்தது. அதை இழந்த பின்னர் தான் நம்மில் பலர் அதன் அருமையை உணர்கின்றோம்.
“எங்களுக்கு தான் எங்க கம்பெனியில குடும்பத்தோட MEDICAL INSURANCE COVERAGE கொடுத்திருக்காங்களே. ஏதாவது ஒண்ணுன்னா மொத்த பணமும் எங்க கம்பெனி கட்டிடும்” என்று அறியாமையுடன் கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல விஷயம் தான். பணத்தால் ஆபரேஷன் பண்ணலாம். மருந்து வாங்கலாம். ஆனா ஆரோக்கியத்தை வாங்க முடியாதுங்களே?
கீழே நான் கொடுத்திருக்குற விஷயம் நண்பர் ஆர்.கோபி மற்றும் பாலாஜி வேணுகோபாலன் மூலமா கொஞ்ச காலத்துக்கு முன்னாடி MAIL FORWARDING ல் வந்தது. மேலோட்டமா படிச்சிட்டு விட்டுட்டேன். ஆனா நிச்சயம் இதை எப்படியாவது எல்லார்க்கிட்டேயும் பகிர்ந்துக்கனும்னு முடிவு பண்ணிருந்தேன். இதோ இப்போ இந்த RIGHTMANTRA.COM தளத்தில் பகிர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சி அதை மொழி பெயர்க்க வேண்டி, வரிக்கு வரி பொறுமையா படிச்சேன். நம்ம ட்ராக்கை கொஞ்சம் லைட்டா மாத்தினதுக்கான பலனை இன்னைக்கு அனுபவப்பூர்வமா உணர்ந்தேன்.
படிக்க படிக்க பல விஷயங்கள் எனக்கு பின்னந்தலையில் அடிச்சி சொல்ற மாதிரி இருந்திச்சு. இதுல டாக்டர் தேவி ஷெட்டி சொல்லியிருக்குற பல விஷயங்களை நடைமுறை வாழ்க்கையில் அப்ளை செய்ய முடிவு செய்திருக்கிறேன். முக்கியமா “இதய நோய் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க இந்த உலகம் குறித்த தங்களோட அணுகுமுறையை மாத்திக்கணும். எல்லாத்துலயும் பர்பெக்ஷன் எதிர்பார்க்கக்கூடாது.” அப்படிங்கிற வரி கல்வெட்டில் பொறிக்க வேண்டிய ஒன்னு.
நீங்களும் இதுல அவர் சொல்லியிருக்குற விஷயங்களை பின்பற்றி நோயற்ற வாழ்வு வாழவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதை படியுங்க. முடிஞ்சா பிரிண்ட் எடுத்து வெச்சிக்கோங்க. நண்பர்களுக்கு அனுப்புங்க.
சொல்லவேண்டியதை சொல்லிட்டோம். ப்ராப்தம் இருக்குறவங்க பிழைச்சுக்கட்டும்!
இதய நோய் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க இந்த உலகம் குறித்த தங்களோட மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவேண்டும்
பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனம், தனது பணியாளர்களின் நலன் வேண்டி பிரபல ஹிருதய நோய் நிபுணர் டாக்டர்.தேவி ஷெட்டி அவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த உரையாடலில் இருந்து…..
கே : இதயத்தை பாதுக்கப்பதில் அடிப்படை விதிகள் என்ன? எவற்றை அவசியம் செய்யவேண்டும்?
டாக்டர். தேவி ஷெட்டி : 1) டயட் – குறைந்த கார்போஹைட்ரேட், ஆயில் மற்றும் கூடுதல் புரதச் சத்து. 2) உடற்பயிற்சி – தினசை அரை மணிநேரம் நடக்கவேண்டும். வாரத்திற்கு ஐந்து முறையாவது. லிப்டுக்கு பதில் படிகளை உபயோகிக்கவேண்டும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். 3) புகைப்பிடிப்பதை நிறுத்தவேண்டும். 4) உடல் எடையை கட்டுப்படுத்தவேண்டும் 5) ரத்த அழுத்தத்தையும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கவண்டும்.
கே : மீன் உள்ளிட்ட அசை உணவுகள் சாப்பிடுவது நல்லதா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி: நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கே சில சமயம் ஹார்ட் அட்டாக் வருகிறது என்பதை கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படித் தான் எடுத்துக்கொள்வது?
டாக்டர். தேவி ஷெட்டி : இதற்க்கு ‘சைலன்ட் அட்டாக்’ என்று பெயர். ஆகையால் தான் 30 வயது தாண்டி விட்டால் அனைவரையும் நாங்கள் ரெகுலராக ஹெல்த் செக்கப் மேற்க்கொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கேள்வி: இதய நோய் பரம்பரை ரீதியானதா? (Hereditary)
டாக்டர். தேவி ஷெட்டி : ஆம்.
கேள்வி : இதயத்திற்கு எப்போதெல்லாம் கூடுதல் சுமை (அழுத்தம்) ஏற்படுகிறது ? அதை சரி செய்துகொள்வது எப்படி?
டாக்டர். தேவி ஷெட்டி : வாழ்க்கை குறித்த உங்கள் மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லாவற்றிலும் PERFECTION எதிர்பார்க்கக்கூடாது.
கேள்வி : நடப்பது, ஜாக்கிங் எது சிறந்ததா? அல்லது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதை விட சற்று கடுமையான பயிற்சி தேவையா?
டாக்டர். தேவி ஷெட்டி : ஜாகிங்கை விட வாக்கிங்கே சிறந்தது. ஜாக்கிங்கால் நமக்கு அழற்சி சற்று முன்கூட்டியே வந்துவிடும். தவிர மூட்டுகளுக்கும் அது பிரச்னையை ஏற்படுத்தும்.
கேள்வி : நீங்கள் ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நிறைய செய்திருக்கிறீர்கள். உங்களை அதற்க்கு தூண்டியது யார்?
டாக்டர். தேவி ஷெட்டி : எனது பேஷன்ட்டாக இருந்த அன்னை தெரசா.
கேள்வி : குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதய நோய் வருமா?
டாக்டர். தேவி ஷெட்டி : மிகவும் அரிதாக வருவதுண்டு.
கேள்வி : கொலஸ்ட்ரால் சிறு வயதிலிருந்தே உடம்பில் சேர ஆரம்பித்துவிடுமா? எனக்கு தற்போது வயது 22 தான் ஆகிறது. அல்லது 30 வயதுக்கு மேல் தான் அதைப் பற்றி கவலைப்படவேண்டுமா?
டாக்டர். தேவி ஷெட்டி : கொலஸ்ட்ரால் நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே உடம்பில் சேரத் துவங்கிவிடுகிறது.
கேள்வி : கன்னாபின்னாவென்று கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது எப்படி இதயத்தை பாதிக்கிறது?
டாக்டர். தேவி ஷெட்டி : நமது உணவுப் பழக்கம் கண்ணா பின்னாவென்று ஒழுங்கற்று இருக்கும் போது, நாம் என்ன செய்கிறோம்? நொறுக்குத் தீனிகளை நாடுகிறோம். ஆகையால் நமது செரிமானத்திற்க்காக நமது உடல் ரிலீஸ் செய்யும் என்சைம்கள் குழப்பமடைகிறது.
கேள்வி : மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாமல் நமது உடலில் கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?
டாக்டர். தேவி ஷெட்டி : கட்டுப்பாடான உணவுமுறைகள் மற்றும் நடைபயிற்சி அப்புறம் வால்நட் சாப்பிடுவது.
கேள்வி : இதயத்திற்கு சிறந்த உணவு எது? மோசமான உணவு எது?
டாக்டர். தேவி ஷெட்டி : காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. எண்ணெய் மோசமானது.
கேள்வி : எது நல்லது – கடலெண்ணெய், சன் ஃபிளவர் ஆயில், ஆலிவ் ஆயில்?
டாக்டர். தேவி ஷெட்டி : எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
கேள்வி : நாம் ரெகுலராக செய்ய வேண்டிய செக்கப்புகள் என்ன? குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா?
டாக்டர். தேவி ஷெட்டி : சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை பரிசோதிக்க ரெகுலர் இரத்த பரிசோதனை, ரத்த அழுத்தி செக் செய்ய BP செக்கப், அப்புறம் எக்கோவுக்கு பிறகு ட்ரெட்மில் டெஸ்ட்.
கேள்வி : ஹார்ட் அட்டாக் வந்துவிட்டால் செய்யவேண்டிய முதலுதவி என்ன?
டாக்டர். தேவி ஷெட்டி : பாதிக்கப்பட்ட நபரை முதலை படுக்கவைக்கவேண்டும். நாக்கிற்கு கீழே ஆஸ்பிரின் மாத்திரையை வைக்கவேண்டும். சோர்பிட்ரேட் மாத்திரை இருந்தால் அதையும் உடன் சேர்த்து வைக்கவும். அடுத்து உடனடியாக அவரை இதயநோய் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லவும். காரணம் அட்டாக் வந்த ஒரு மணிநேரத்திற்குள் தான் அதிக பட்ச உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.
கேள்வி : அட்டாக்கினால் வரும் இதய வலிக்கும், கேஸ் ட்ரபுளினால் வரும் வலிக்கும் எப்படி நீங்கள் வேறுபாடை உணர்வீர்கள்?
டாக்டர். தேவி ஷெட்டி : ஈ.சி.ஜி. இல்லாவிட்டால் அது மிகவும் கடினம்.
கேள்வி : இன்றைய இளைஞர்கள் மத்தியில் இதய நோய்கள் மிகவும் சகஜமாகிவிட்டதே… 30-40 வயதிற்க்குட்பட்ட இதய நோயால் பதிக்கப்பட்ட பலரை நான் பார்க்கிறேன்.
டாக்டர். தேவி ஷெட்டி : அதை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அதிகம் ஏற்பட்டிருப்பதால் அது வெளியே தெரிகிறது. மற்றபடி ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளை விட மூன்று மடங்கு பரம்பரை ரீதியிலான இதய நோய் வருவதற்கு சாத்தியம் அதிகமுள்ள நமது மக்கள் உழைப்பேயில்லாத வாழ்க்கை முறை (கம்ப்யூட்டரில் உட்கார்ந்த்கொண்டு), புகைப் பழக்கம், நொறுக்குத் தீனி, உடற்பயிற்சி என்பதே இல்லாத சூழலில் வாழ்கின்றனர்.
கேள்வி : நார்மல் அளவிற்கு மேல் அதாவது 120/80 க்கும் மேல் BP இருந்தும் ஆரோக்கியமாக இருக்கமுடியுமா?
டாக்டர். தேவி ஷெட்டி : முடியும்.
கேள்வி: நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய்க்கு வழி வகுக்குமா?
டாக்டர். தேவி ஷெட்டி : ஆம் அது குழந்தை கருவில் வளரும்போது குறைபாடுகளை கொண்டு வளர காரணமாக அமைகிறது. அது மரபு ரீதியான நோயாகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படி நேர்ந்தால் உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் குழந்தையாக பிறக்காமல் போக வாய்ப்புண்டு.
கேள்வி : எங்களில் பலருக்கு அலுவலக நேரம் தாறுமாறாக இருக்கிறது. பல சமயங்களில் அலுவலகத்தில் இரவு முழுக்க கண் விழித்து பணி செய்யவேண்டியிருக்கிறது. இது இதயத்தை பாதிக்காதா? என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
டாக்டர். தேவி ஷெட்டி : நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, இயற்க்கை உங்களை இது போன்ற ஒழுங்கீனங்களில் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால் வளரும்போது உயிரியல் கடிகாரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
கேள்வி : Anti-hypertensive மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் (குறைந்த / நீண்ட காலத்துக்கு) வேறு ஏதேனும் பிரச்னையை உடலில் ஏற்படுத்துமா?
டாக்டர். தேவி ஷெட்டி : ஆம்… பல மருந்துகள் பக்க விளைவுகளை கொடுக்ககூடியது. ஆனால் தற்போதைய நவீன மருத்துவ முறை மருந்துகள் பக்க விளைவுகள் அற்றது.
கேள்வி : காபி அல்லது டீ அதிகளவு உட்கொள்ளுதல் ஹார்ட் அட்டக்குக்கு வழிவகுக்குமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி: ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு இதய நோய் எளிதில் வரும் என்று கருதலாமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி : Junk food என்று நீங்கள் வரையறுப்பது எவற்றை?
டாக்டர். தேவி ஷெட்டி : பொறிக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் கே.எப்.சி., மெக்.டொனால்ட்ஸ், சமோசா ஏன் மசாலா தோசையும் கூட.
கேள்வி : இந்தியர்களுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகிறீர்கள். இதற்க்கு காரணம் என்ன? சொல்லப்போனால் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கூடத் தான் அதிகம் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள்.
டாக்டர். தேவி ஷெட்டி : மனித குலத்தில் ஒவ்வொரு இனமும் குறிப்பிட்ட சில வகை நோய்களுக்கு சுலபத்தில் ஆளாகின்றன. ஆனால் இந்தியர்கள் தான் பாவம்.. மிகவும் காஸ்ட்லியான நோய்க்கு ஆளாகிறார்கள்.
கேள்வி : வாழைப்பழங்களை உட்கொள்வது Hypertension ஐ குறைக்குமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி : ஹார்ட் அட்டாக் வந்தால் ஒருவர் தனக்குத் தானே உதவிக்கொள்ள முடியுமா? (ஏனென்றால் இது குறித்து எங்களுக்கு அதிகளவு மெயில் பார்வார்டிங்குகள் வருகின்றன).
டாக்டர். தேவி ஷெட்டி : ஆம்… தரையில் சொகரியமாக படுத்துக்கொள்ளுங்கள். நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக எவருடைய துணையின் மூலமோ பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்கவேண்டாம். பல நேரங்களில் அவை குறித்த நேரத்தில் வருவதில்லை.
கேள்வி : இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவது மற்றும் ஹீமோக்ளோபின் அளவு குறைவது இதய நோய்க்கு வழிவகுக்குமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை. ஆனால் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு நார்மலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடற் பயிற்சிக்கான திறத்தை அதிகரிக்கும்.
கேள்வி : நேரமின்மை காரணமாக எங்களால் உடற்பயிற்சி செய்யமுடிவதில்லை. ஆகையால் அன்றாட வாழ்க்கையில் நடப்பது மற்றும் படிகள் ஏறுவது உள்ளிட்ட பணிகள் உடற்பயிற்சிக்கு மாற்றாக கருதலாமா?
டாக்டர். தேவி ஷெட்டி : நிச்சயமாக. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்கவும். அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரவேண்டாம். அப்படி நேர்ந்தால் சேரில் இருந்து எழுந்து சென்று வேறு சேரில் போய் அமருங்கள். அது கூட நல்லது தான்.
கேள்வி : இதய நோய்க்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவிற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
டாக்டர். தேவி ஷெட்டி : நிச்சயமாக. இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. காரணம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களை விட ஹார்ட் அட்டாக் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.
கேள்வி : இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன?
டாக்டர். தேவி ஷெட்டி : டயட், உடற்பயிற்சி, சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுதல், கொழுப்பை கட்டுப்படுத்துடல், BP ஐ கட்டுக்குள் வைத்திருத்தல், எல்லாவற்றுக்கும் மேல் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல்.
கேள்வி : பகலை விட நைட் ஷிப்டுகளில் பணிபுரிபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சத்தியம் அதிகமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி : நவீன anti-hypertensive மருந்துகள் என்ன?
டாக்டர். தேவி ஷெட்டி : அது நிறைய இருக்கிறது. உங்கள் டாக்டர் உங்களுக்காக சரியான காம்பினேஷனை கூறுவார். என்னைப் பொறுத்தவரை நான் கூறுவது என்னவென்றல மருந்துகளை தவிர்க்கவும். அதற்கு பதில் இயற்கையான ஆபத்தற்ற வழிமுறைகளுக்கு மாறுங்கள். நடை பயிற்சி, உடல் எடையை குறைக்க ஏதுவான டயட், நமது வாழ்க்கை முறை குறித்த நமது அணுகுமுறையில் மாற்றங்கள் இவை தான். இது தான் என்றும் பாதுக்கப்பானது.
கேள்வி : டிஸ்பிரின் அல்லது அது போன்ற தலைவலி மாத்திரைகள் ஹார்ட் அட்டாக்கை அதிகரிக்குமா?
டாக்டர். தேவி ஷெட்டி : இல்லை.
கேள்வி : பெண்களை விட ஆண்கள் மத்தியில் இதய நோய் அதிகம் இருப்பது ஏன்?
டாக்டர். தேவி ஷெட்டி : பெண்களை இயற்க்கை அவர்களது 45 வயது வரை பாதுக்காக்கிறது. (தற்போதை உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு பெண்கள் மத்தியில் இதய நோய் பெருகியிருப்பதை காட்டுகிறது).
கேள்வி : இதயத்தை நல்லா முறையில் ஒருவர் வைத்துக்கொள்வது எப்படி?
டாக்டர். தேவி ஷெட்டி : சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். அடிக்கடி உடம்பை செக்கப் செய்துகொள்ளவேண்டும். அதுவும் 30 வயதை கடந்தால் அவசியம் அடிக்கடி உடம்பை அடிக்கடி செக் செய்துகொள்ளவும். (குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது).
English Transcription
Walking is better than jogging
A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees. The transcript of the chat is given below. Useful for everyone.
Q: What are the thumb rules for a layman to take care of his heart?
Ans:
1. Diet – Less of carbohydrate, more of protein, less oil
2. Exercise – Half an hour’s walk, at least five days a week; avoid lifts and avoid sitting for a long time
3. Quit smoking
4. Control weight
5. Control blood pressure and sugar
Q: Is eating non-veg food (fish) good for the heart?
Ans: No
Q: It’s still a grave shock to hear that some apparently healthy person
gets a cardiac arrest. How do we understand it in perspective?
Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.
Q: Are heart diseases hereditary?
Ans: Yes
Q: What are the ways in which the heart is stressed? What practices do you suggest to de-stress?
Ans: Change your attitude towards life. Do not look for perfection in everything in life.
Q: Is walking better than jogging or is more intensive exercise required to keep a healthy heart?
Ans: Walking is better than jogging since jogging leads to early fatigue and injury to joints
Q: You have done so much for the poor and needy. What has inspired you to do so?
Ans: Mother Theresa , who was my patient.
Q: Can people with low blood pressure suffer heart diseases?
Ans: Extremely rare.
Q: Does cholesterol accumulates right from an early age
(I’m currently only 22) or do you have to worry about it only after you are above 30 years of age?
Ans: Cholesterol accumulates from childhood.
Q: How do irregular eating habits affect the heart ?
Ans: You tend to eat junk food when the habits are irregular and your body’s enzyme release for digestion gets confused.
Q: How can I control cholesterol content without using medicines?
Ans: Control diet, walk and eat walnut.
Q: Which is the best and worst food for the heart?
Ans: Fruits and vegetables are the best and the worst is oil.
Q: Which oil is better – groundnut, sunflower, olive?
Ans: All oils are bad .
Q: What is the routine checkup one should go through? Is there any specific test?
Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok. Check BP, Treadmill test after an echo.
Q: What are the first aid steps to be taken on a heart attack?
Ans: Help the person into a sleeping position , place an aspirin tablet under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a coronary care unit since the maximum casualty takes place within the first hour.
Q: How do you differentiate between pain caused by a heart attack and that caused due to gastric trouble?
Ans: Extremely difficult without ECG.
Q: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.
Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.
Q: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?
Ans: Yes.
Q: Marriages within close relatives can lead to heart problems for the child. Is it true?
Ans: Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may not have a software engineer as a child
Q: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart ? What precautions would you recommend?
Ans: When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.
Q: Will taking anti-hypertensive drugs cause some other complications (short / long term)?
Ans: Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.
Q: Will consuming more coffee/tea lead to heart attacks?
Ans : No.
Q: Are asthma patients more prone to heart disease?
Ans: No.
Q: How would you define junk food?
Ans: Fried food like Kentucky , McDonalds , samosas, and even masala dosas.
Q: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?
Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.
Q: Does consuming bananas help reduce hypertension?
Ans: No.
Q: Can a person help himself during a heart attack (Because we see a lot of forwarded emails on this)?
Ans: Yes. Lie down comfortably and put an aspirin tablet of any description under the tongue and ask someone to take you to the nearest coronary care unit without any delay and do not wait for the ambulance since most of the time, the ambulance does not turn up.
Q: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to heart problems?
Ans: No. But it is ideal to have normal hemoglobin level to increase your exercise capacity.
Q: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So, does walking while doing daily chores at home or climbing the stairs in the house, work as a substitute for exercise?
Ans: Certainly. Avoid sitting continuously for more than half an hour and even the act of getting out of the chair and going to another chair and sitting helps a lot.
Q: Is there a relation between heart problems and blood sugar?
Ans: Yes. A strong relationship since diabetics are more vulnerable to heart attacks than non-diabetics.
Qn: What are the things one needs to take care of after a heart operation?
Ans: Diet, exercise, drugs on time , Control cho lesterol, BP, weight.
Q: Are people working on night shifts more vulnerable to heart disease when compared to day shift workers?
Ans: No.
Q: What are the modern anti-hypertensive drugs?
Ans: There are hundreds of drugs and your doctor will chose the right combination for your problem, but my suggestion is to avoid the drugs and go for natural ways of controlling blood pressure by walk, diet to
reduce weight and changing attitudes towards lifestyles.
Q: Does dispirin or similar headache pills increase the risk of heart attacks?
Ans: No.
Q: Why is the rate of heart attacks more in men than in women?
Ans: Nature protects women till the age of 45. (Present Global census show that the Percentage of heart disease in women has increased than in men)
Qn: How can one keep the heart in a good condition?
Ans: Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke and, go for health checkup s if you are past the age of 30 ( once in six months recommended) ….
Great information buddy..
Thanks for ur noble intention to share this
valuable information to us all..
Expecting more such articles regarding our health..
Anna nice info na………. U done a good job and u r a real rajini fan na…………. Many people r watch his movie and enjoy….. But u r very different from others u follow our thalaivar messages and advice it’s nice….. Keep it up na….. All the very best na…………
Thank you. Over perfection is my weakness and I now feel that I should follow the instructions given in this article. Thank you once again.
sundar neram kidacha http://www.anatomictherapy.org paarunga.
THANK YOU VERY MUCH SIR.
நடை பயிற்சி ஹார்ட் அட்டாக், ப்ளூட் பிரஷர் , சுகர் , வெயிட் கண்ட்ரோல் , கொழுப்பு குறைப்பு , போன்ற பல நோய்களை கட்டுபடுத்த உதவுகிறது. எனவே 30 அல்லது 45 நிமிடம் நடங்கள் என்று எல்லா டாக்டர்களும் கூறுகிறார்கள். இத்தனை நிமிடங்கள் என்று கூறுவதை விட இவ்வளவு தூரம் நடங்கள் என்று குறிப்பிடவேண்டும். 30 நிமிடத்தில் ஒருவர் 1|2 கி .மீ . நடக்கலாம் . மற்றவர் 3 கி .மீ . நடக்கலாம் . விளையாட்டு மருத்துவ துறை ஆய்வுப்படி நேரத்தை விட தூரத்தை குறிபிடுவது சரியானது . டாக்டர் தேவி ஷெட்டி இருதைய நோய் குறித்து எளிமையான அருமையான விளக்கம் தந்துள்ளார் . எம் வாழ்த்துக்கள். விளையாட்டு மருத்துவ பேராசிரியர் பாரிஸ் ஜமால் .
டாக்டர் தேவி ஷெட்டிக்கு எமது வாழ்த்துக்கள்.
தினமும் நடை பயிற்சியும், உணவு கட்டுபாடுடன் இருந்தால் ஹார்ட் அட்டாக் வருவதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளளலாம்
டாக்டரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அழகாக சொல்லி இருக்கிறார்.
இதை பதிவாக தொகுத்து அளித்தமைக்கு நன்றி
நன்றி
உமா