Home > 2016 > August

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

சிவபுண்ணியத்தின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் கதை இது. சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஒரு மிகப் பெரிய நீதியை உணர்த்தும். 'இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?' என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது

Read More

ரூபாய் கட்டுக்கு பதில் சில்லறை கேட்ட கலைவாணர் என்.எஸ்.கே – ஏன் தெரியுமா?

இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள அற்புதமான மனிதர்களுள் என்.எஸ்.கே. அவர்களும் ஒருவர். நகைச்சுவை என்கிற பெயரில் இன்று எதை எதையோ ரசிக்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனால், கலைவாணர் சிரிக்கவைத்து சிந்திக்கவைத்தவர். விரசமில்லாத தரமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர். தன்னை நாடி வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாத கொடை வள்ளல். வாழும் கர்ணனாய் விளங்கியவர். வறுமையில் சிக்கி இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூட அவரை நாடி வந்தவர்களுக்கு அள்ளி

Read More

சுந்தரர் அவதரித்த தலத்தில் ஒரு சுகானுபவம்!

வாசகர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக நாம் சென்னையில் இல்லை. திடீர் பயணம். இன்று காலை தான் சென்னை திரும்பினோம். இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமையேற்றிருக்கும் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்களை சந்தித்து பிரார்த்தனை விபரங்களை, அன்பர்களின் பெயர் ராசி நட்சத்திர விபரங்களை அளிக்க கடந்த சனிக்கிழமை காலை பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் சென்றிருந்தோம். அவரை சந்தித்து பட்டியலை அளித்து அப்போதே ஒரு அர்ச்சனை அனைவரின் பெயர்களுக்கும் செய்தோம். மறுநாளும் அதாவது ஞாயிறு மாலை

Read More

கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club

நேற்று ஆகஸ்ட் 25 ஆங்கில தேதிப்படி வாரியார் சுவாமிகள் பிறந்தநாள். வாரியார், மகா பெரியவா, போன்ற அருளாளர்களை பொறுத்தவரை குருபூஜை அல்லது ஜயந்தி உற்சவத்திற்கு தான் நாம் பதிவளிக்க விரும்புகிறோம். ஆங்கிலத் தேதிப்படி அல்ல. (வாரியார் ஜயந்தி செப்டம்பர் 6 வருகிறது). இருப்பினும் நண்பர் ஒருவர் கேட்டுகொண்டபடியால் இன்றைய பிரார்த்தனை பதிவில் வாரியார் கூறிய அற்புதமான ஒரு விளக்கத்தை கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறோம். கோவில் கும்பாபிஷேகம் ஒன்றின் சிறப்பு மலருக்கு வாரியார் அளித்த

Read More

கண்ணன் பிறந்த போது பூமி எப்படி உணர்ந்தது தெரியுமா? – கிருஷ்ண ஜெயந்தி SPL 2

பூமியில் அசுரர்கள் பெருகியதாலும் அதர்மம் தலைதூக்கியதாலும் நல்லவர்கள் அழிந்து தர்மம் சாய்ந்ததாலும் பாரம் தாங்காது கதறிய பூமாதேவி, ஒரு பசுவின் வடிவத்தில் சென்று தேவர்கள் சபையில் அழுது முறையிட்டாள். "பிரம்மதேவரே பாபிகளின் பாரம் தாங்கமுடியவில்லை. என் மீது படிந்துள்ள இந்த பாரத்தை குறைக்க நீங்கள் தான் ஏதேனும் வழிசெய்யவேண்டும்!" என்றாள். "இதை நான் தீர்க்கமுடியாது பூமி மாதா. வாருங்கள் எல்லோரும் பாற்கடல் சென்று பரந்தாமனைப் பணிவோம். அவரே இதை தீர்க்கவல்லவர்" என்று கூறிய

Read More

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1

இன்று கண்ணனின் பிறந்த நாள், கோகுலாஷ்டமி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். மக்கள் சரியாக புரிந்துகொள்ளத் தவறிய அவதாரமும் அது தான். கிருஷ்ணரின் பாத்திரத்தை பற்றி எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. மிக மிக கடினமான ஒன்று. அவருடைய அவதாரத்தின் உண்மையான நோக்கத்திற்கும் நமது புரிதலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. கேட்டதை வைத்து படித்ததை வைத்து நாமாகவே கற்பனை செய்தவை தான் அதிகம். ஒரு

Read More

சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…

நமக்கு ஒருவர் எதுவும் திருப்பி செய்ய முடியாது என்கிற நிலையில் நாம் அவருக்கு செய்யும் உதவி தான் உண்மையான உதவி. சொல்லப்போனால் அதுதான் உண்மையான தருமமும் கூட. 'தர்மம்' என்றால் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மேல் தர்மம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. தர்மம் என்பதன் அர்த்தம் 'வாழும் முறை'. அது ஒரு நெறிமுறைகளின் தொகுப்பு. 'தானம்' என்பது அதில் ஒரு அங்கம். நம்மை சுற்றியுள்ள நம்மை

Read More

நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!

அலுவலகமோ, வீடோ, இந்த சமூகமோ நம்முடன் பழகுபவர்கள் மற்றும் நமக்கு கீழ் உள்ளவர்களை சரியாக மேலாண்மை செய்து உறவுகளை தக்கவைத்துக்கொள்வது நமது காரியங்களை சாதித்துக் கொள்வது அத்தனை சுலபமல்ல. கொடிய காட்டு விலங்குகளிடம் கூட நட்பு வைத்து நம் காரியங்களை சாதித்துக்கொண்டுவிடலாம். ஆனால், இந்த மனிதர்களை டீல் செய்வது தான் மிக மிக சவாலான ஒன்று. யார் எப்போது மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. நமது வட்டம் விரிவடைய விரிவடைய

Read More

பிரார்த்தனைக்கு வந்த சோதனை!

நாம் பலமுறை சொல்லிவிட்டோம். நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்புகிறவர்கள், அதை தளத்தில் வெளியிடலாமா அல்லது வேண்டாமா, பெயர்களை வெளியிடவேண்டுமா அல்லது வெளியிடக்கூடாதா போன்ற விபரங்களை எல்லாம் தெரிவிக்கவேண்டும் இல்லையா குறைந்தபட்சம் மின்னஞ்சல் அனுப்பும்போது அவர்கள் அலைபேசி எண்ணையாவது  நமக்கு அனுப்பவேண்டும் என்று. இந்த பிரார்த்தனை கிளப் எவ்வாறு நடைபெறுகிறது என்று கூட அறிந்துகொள்ள முற்படாமல் பலர் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புவது வேதனையளிக்கிறது. நமது நேரம் திரும்பவும் சிலரால் வீணடிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை பதிவு

Read More

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

மகா பெரியவா தன்னை காண வரும் பக்தர்களிடம் அடிக்கடி வலியுறுத்தி விரும் விஷயங்களில் ஒன்று குலதெய்வ வழிபாடு மற்றும் கிராம தேவதை வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. அது தெய்வத்திடம் நாம் காட்டும் நன்றியுணர்ச்சி சம்பந்தப்பட்டது. குலதெய்வத்தை அடிக்கடி தரிசித்து அவரவர் சக்திக்கேற்ப அபிஷேக அர்ச்சனாதிகளை செய்து ஆராதித்து வந்தாலே வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்கும். குலதெய்வத்தையும் கிராம தெய்வத்தையும் புறக்கணித்துவிட்டு நீங்கள் என்ன தான் உருண்டு உருண்டு புரண்டாலும்

Read More

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

இன்றைக்கு துறவறம் என்றால் அவரவர் சௌகரியம் போல வாழ்கிறார்கள் உடுத்துகிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் 'துறவு' என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பட்டினத்து அடிகள் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார். சென்னையில் திருவொற்றியூரில் கடற்கரையில் பட்டினத்தாருக்கு கோவில் உள்ளது. இவரது பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. சொற்சுவையும், பொருட்செறிவும் அமைந்துள்ள இவரது பாடல்கள் மிக மிக எளிமையானவை. பாமரர்க்கும் எளிதில் விளங்குபவை. நேற்று முன்தினம் ஆடி உத்திராடம் அவரது குருபூஜை.

Read More

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபுண்ணியக் கதைகள் யாவும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. மிகப் பெரிய நீதிகளை உணர்த்துபவை. ஒரு ஜீவன் வாழும் காலத்தே எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒரு சிவபுண்ணியச் செயலை செய்யும்போது அது நற்கதியை பெற்றுவிடுகிறது. அப்படியெனில், வாழ்நாள் முழுதும் பலன் கருதாது சிவபுண்ணியத்தை செய்துவருபவர்கள் பெறக்கூடிய நன்மையை பட்டியலிட முடியுமா? வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும்! ஞானிகளுள் சிறந்தவராகிய ரிஷப முனிவர் ஒரு முறை

Read More

“குடிசையில் வாழும் அந்த துறவிக்கு உதவி செய்” – கனவில் கட்டளையிட்ட துர்க்கா தேவி!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - இந்த பெயரை சொல்லும்போதெல்லாம் ஒரு இனம் புரியாத உற்சாகம் பீறிட்டு கிளம்பும். நம்பிக்கை துளிர்விடும். மனம் லேசாகும். தாம் வாழ்ந்த காலத்திலேயே அவதார புருஷராகக் கொண்டாடப்பட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். மிக கடினமான வேத, உபநிடத கருத்துக்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் விளக்கி ஏழை எளியோர்களின் குருவாக திகழ்ந்தார் ராமகிருஷ்ணர். அவரது குருமார்களில் ஒருவர் பைரவி பிராம்மணி என்ற பெண்மணி.

Read More

“லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே, ஆனா…” – திரு.பஞ்சு அருணாசலம் அவர்களுடன் சில மணித்துளிகள்!

பிரபல தயாரிப்பாளரும் கவிஞருமான திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் (ரைட்மந்த்ரா துவங்குவதற்கு முன்) தி.நகர் பாகீரதியம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடியது மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அவரை நாம் கண்ட பேட்டியிலிருந்து முக்கியமான சில EXCERPTS. பஞ்சு அருணாச்சலம் அவர்களை பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டவர். இசைஞானி

Read More