Home > 2016 > June

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

நமது முன்னோர்கள் மற்றும் அரசர்கள் அரும்பாடுபட்டு உயரிய எண்ணத்துடன், பரந்த நோக்குடன் கட்டிய பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து, செடி, கொடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் போதிய வருமானம் இன்றி, பணியாளர்கள் இன்றி தவிக்கின்றன. அவ்வளவு ஏன் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி மூர்த்தத்தின் மீது எண்ணெயே படாத சிவாலயங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. 2012 ஆம் ஆண்டு துவக்கத்தில் (ரைட்மந்த்ரா துவக்குவதற்கு முன்னர்) நாம் திருமணஞ்சேரி சென்றிருந்தபோது,

Read More

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

'பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்?' என்கிற நமது முந்தைய பதிவில் - மகா பெரியவா ஆன்மீகத்தில் தொடாத விஷயங்களே இல்லை என்று கூறி - இது தொடர்பாக பெரியவாவின் மகிமை ஒன்றை பகிர்வதாக கூறியிருந்தோம். இதோ... ஒன்றல்ல இரண்டு பகிர்கிறோம். ஒன்று கருணை. மற்றொன்று பாடம். அதற்கு முன்: பரிகாரம் என்றால் என்ன? தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தான் தெய்வத்தின் குணம் என்று கூறுவார்கள். To err is human and to

Read More

என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ??

இன்று சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள். ஒரு மனிதனுக்கு தெய்வ பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள இவரது வரலாற்றை படித்தால் போதும். அப்படி ஒரு வைராக்கிய பக்தி இவருக்கு முருகன் மீது. 'COMPLETE SURRENDER' என்பார்கள் இல்லையா அதன் அர்த்தம் புரியவேண்டும் என்றால் இவரது வரலாற்றை படித்தால் போதும். இப்படியும் கூட இறைவனிடம் பக்தி செய்யமுடியுமா உரிமை எடுத்துக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தளவு நாடி,

Read More

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்... ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே..." - பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. அவர்களுக்கு மட்டுமல்ல பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரி(புரி)யாதவர்களுக்காகவும் தான் இந்தக் கதை! படிப்பதோடு நின்றுவிடாமல் இது உணர்த்தும் நீதியை மறக்காமல் பின்பற்றி பலனடைவோமாக. அறியாமல் செய்த தவறுக்கு சகல வல்லமை

Read More

பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!

பூஜை காணாத மற்றும் போதிய வருவாய் இன்றி தவிக்கும் பிள்ளையார் கோவில்களை அடையாளம் கண்டு அங்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பிள்ளையாருக்கு வஸ்திரம் சாத்தி, பிரசாதம் விநியோகம் செய்யும் நமது கைங்கரியத்தின் அடுத்த கட்டமாக பூவிருந்தவல்லியில் ஒரு பிள்ளையார் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இந்த பிள்ளையார் நமக்கு கிடைத்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. சில வாரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் 'சிவன்கூடல்' என்னும் கிராமத்தில் உள்ள கோ-சாலை ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது. (அங்கே அருமையான

Read More

அடியவருக்கு ஒன்று என்றால் அரங்கன் பொறுப்பானா? – Rightmantra Prayer Club

ஸ்ரீமத் ராமானுஜர் ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிப்பதற்காக சிஷ்யர்களுடன் காஞ்சிக்கு யாத்திரை புறப்பட்டார். செல்லும் வழியில் எங்கும் தங்குவது என்ற யோசனை எழுந்தது. யக்ஞேசன் என்ற சீடன் ஒருவன் வசிக்கும் ஊர் வழியில் இருப்பது தெரிந்தது. அவன் வீட்டில் தங்குவோம் என்று முடிவு செய்தவர், தனது சிஷ்யர்களை அழைத்து யக்ஞேசனிடம் தமது வருகையை பற்றி தகவல் தெரிவித்துவிடுமாறு கூறியனுப்பினார். தனது குரு தனது இல்லத்திற்கு எழுந்தருளுவது கேள்விப்பட்ட யக்ஞேசன் மிகவும்

Read More

”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”

உண்மையான ஞானிகள் மந்திர தந்திரங்களில் சித்து வேலைகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் அவதார நோக்கத்தை சிதைத்துவிடும். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் சக்தியை பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். பகவான் ரமணர் போன்ற மகான்கள் தங்கள் உபதேசங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தங்களுக்கு இருந்த மந்திர தந்திர சக்திகளில் அல்ல. காவியுடுத்தியவர்கள் எல்லாம் குரு அல்ல. முற்றும் துறந்தேன் என்று கூறுபவர்கள் எல்லாம் துறவிகளும் அல்ல. துறவின்

Read More

‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஆபத்பாந்தவன்!

கண்கண்ட கடவுள் அதாவது ப்ரத்யக்ஷ தெய்வம் என்ற ஒன்று உண்டென்றால் அது சூரியன் தான். பிரபஞ்சத்தின் இயக்கத்தில் சூரியனின் பங்கு மகத்தானது. அதனால் தான் ஷண்மதங்களை ஆதிசங்கரர் ஸ்தாபித்தபோது சூரிய வழிபாட்டையும் அதில் வைத்தார். சப்த ரிஷிகளில் ஒருவர் ரிஷிகளில் தனித்தன்மை மிக்கவர் அகஸ்திய மகரிஷி. 'வித்யா மண்டல ரிஷி' என்றே அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அவரது தவத்துக்கு

Read More

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

சிவசின்னங்களில் தனியிடம் பெற்று விளங்குவது ருத்ராக்ஷம். ருத்ராக்ஷத்தின் பெருமையை அறிந்தோ அறியாமலோ பலர் அதை அணிந்திருப்பதை பார்த்துவருகிறோம். எப்படி இருந்தாலும் அதற்கு பலன் நிச்சயம் உண்டு. (அதே சமயம் அதை அணிந்திருப்பவர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மது, மாமிசம் உள்ளிட்டவற்றை தீண்டாமல் இருக்கவேண்டும்!) இப்போதைக்கு ருத்ராக்ஷத்தின் பெருமையை விளக்கும் சிவபுண்ணியக் கதை ஒன்றை பார்ப்போம். பத்மகரம் என்னும் நகரில் ஒழுக்கம் நிரம்பிய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். புத்தி

Read More

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

சில முக்கியமான பெரிய பதிவுகளை தயாரித்து வருகிறோம். எனவே நேரம் பிடிக்கிறது. அதுவரை ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக பெரியவா மகிமையை பகிரலாமே என்று இதை தருகிறோம். மகா பெரியவா முக்காலமும் உணர்ந்த ஞானி மட்டுமல்ல... நமக்கு எது நல்லதோ அதை தர வல்லவர். இவர் ஏன் இதை சொல்கிறார் என்று யோசித்து பிற்பாடு அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை உணர்ந்து மெய்சிலிர்த்தவர்கள் பலருண்டு. அப்படி சிலிர்த்த செகந்தராபாத்தை சேர்ந்த ராமஸ்வாமி என்கிற பக்தர்

Read More

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

பலரை டீல் செய்யவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள், நான்கு பேரோடு பழக நேர்பவர்கள் முக்கியமான கைவிட வேண்டிய ஒரு குணம் 'கோபம்'. அர்த்தமற்ற கோபம் ஒருவரை அழித்துவிடும். பகைவர்களை உற்பத்தி செய்யும். சற்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வரும் கோபங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவையே. இந்த கதையில் வரும் துறவியை போல. நண்பர் ஸ்ரீராம் வாட்ஸ் ஆப்பில் நமக்கு அனுப்பிய ஒரு அருமையான ஆங்கில ஜென்

Read More

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

1965 ஆம் ஆண்டு. மகா பெரியவா ஆந்திராவில் தனது யாத்திரையை முடித்துக்கொண்டு தமிழகத்திற்குள் வந்துகொண்டிருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் போக்குவரத்து வசதி கிடையாது. பெரியவா செல்ல செல்ல அவருடன் மடத்து சிப்பந்திகள் பத்து பன்னிரெண்டு பேர் செல்வார்கள். இரவு மற்றும் அதிகாலைப் பொழுதென்றால், வெளிச்சத்திற்கு அரிக்கேன் விளக்கை இருவர் தூக்கிச் செல்வார்கள். யாத்திரை போகும் வழியில் ஆங்காங்கு கேம்ப் செய்வார். சில சமயம் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிடுவதுண்டு. அந்த பகுதி மக்களுக்கு

Read More

தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!

மகா பெரியவாவை பொருத்தவரை அவரது உபதேசங்களில் மகிமைகளில் நீக்கமற நிறைந்து காணப்படும் ஒன்று என்ன தெரியுமா? POSITIVISM எனப்படும் நேர்மறை சிந்தனை தான். இதை அவரது பல மகத்துவங்க்ளில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம். எந்த ஒரு சூழலிலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல், அவர் அணுகும் விதம் அவரை போன்ற ஒரு பரிபக்குவ ஞானிகளுக்கே சாத்தியம். இன்றைக்கு ஹிந்து மதம் அரசியல் ரீதியான தாக்குதல்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள நேரிடும்போது, நம்மவர்கள் முகநூல், வாட்ஸ் ஆப்

Read More

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

'ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செய்தபடி, புண்ணியம் செய்துகொண்டு வாழ்ந்தால் போதாதா? எதுக்கு இந்த கோவில், கடவுள் என்றெல்லாம்...' என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. இது குறித்து நமக்கு தெளிவை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கதையை தருகிறோம். சிறிய கதை தான். ஆனால், இது உணர்த்தும் நீதி வலிமையானது. உங்கள் குழந்தைகளுக்கும் சொல்ல ஏற்ற கதை. இறை பக்தியின் அவசியத்தை இக்கதையைவிட யாராலும் புரியவைக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில்

Read More