Home > 2016 > January

“கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club

இந்த கதை அநேகமாக அனைவருக்கும் தெரிந்த கதையாக இருக்கலாம். இருப்பினும் படியுங்கள். தற்போதைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. அவன் ஒரு பக்திமான். அவனது பக்திக்கு இரங்கி கடவுள் அவன் முன் தோன்றி "என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்" என்றார். (சும்மா கதைக்காக வைத்துக்கொள்வோமே!) இவனோ இறைவனைவிட நமக்கு பெரிய துணை யாரிருக்கப்போகிறார்கள் என்று கருதி.... "எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும் பிரியாது இருந்தாயானால் அது போதும். நான் எங்கு சென்றாலும் நீ

Read More

கோர்ட், கேஸ் மற்றும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…

நம் தளத்தின் பிரார்த்தனை கிளப் பதிவுகளை பொருத்தவரை யாரை தலைமை ஏற்கச் செய்யவேண்டும், என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது. மகா பெரியவா தொடர்பான பதிவுகளில் கூட இப்படித் தான். சமீபத்திய திருவாரூர் பயணத்தில் நாம் கவர்

Read More

கழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை!

சென்ற காணும் பொங்கல் அன்று குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேவார பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்றது நினைவிருக்கலாம். பேருந்திற்குள் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரே லூட்டி தான். வாழ்வின் மிக இனிமையான தருணங்கள் அவை. நமது வாசகர் ஒருவர் பேருந்து கட்டணத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். சுற்றுலா ஏற்பாட்டையும், ஒருங்கிணைப்பையும் இதர செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். திருவையாவூர், சாத்தனூர் சென்று பின்னர் திரும்ப வரும் வழியில் மாணவர்களுடன் திருவண்ணாமலை தரிசனம். பாடசாலை ஆசிரியர்

Read More

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

நண்பர் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் 'ஞானத்திரள்' இதழின் 6 ஆம் ஆண்டு விழா திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் 26 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க நமது உதவியாளருடன் திருவாரூர் சென்றிருந்தோம். 26 ஆம் தேதி விழாவில் பங்கேற்றுவிட்டு மறுநாள் 27 ஆம் தேதி நம் தளத்தின் ஆலய தரிசன பதிவுகளுக்காக சில திருகோவில்களை இந்த திருவாரூர் பயணத்தில் கவர் செய்ய திட்டமிட்டிருந்தோம். பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரிதினும் அரிய பரிகாரத்

Read More

“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6

சில நேரங்களில் நமது கவனக்குறைவினாலும் மறதியினாலும் நமது பணம் அது சிறிதோ பெரிதோ நம்மை விட்டுப் போய்விடும். அது போன்ற நேரங்களில் எப்படி நடந்துகொள்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.  சமீபத்தில் அனுமத் ஜெயந்தி பதிவுக்காக காக்களூர் சென்றிருந்தோம் நினைவிருக்கிறதா? காக்களூர் தவிர திருவெண்பாக்கம், நம்பாக்கம் ஆகிய தலங்களுக்கும் அன்று சென்றிருந்தோம். அம்மா திருவெண்பாக்கம் மின்னொளி அம்மையை தரிசிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாக கேட்டு வந்ததால் ஒரு கால் டாக்ஸி புக் செய்து

Read More

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்!

நண்பர் ஒருவர் தைப்பூசத்திற்கு எதுவும் பதிவளிக்கவில்லையா முருகனை மறந்துவிட்டீர்களா என்று விளையாட்டாக கேட்டார். 'என்ன முருகனை மறப்பதா? பிறவிப் பயனையே முருகன் புகழை எழுதவல்லவா ஒப்படைத்திருக்கிறேன். ஒரு நாள் அவனை மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்' என்றோம் சீரியஸாக. சொற்பொழிவுகளில் குகனின் பெருமையையும் குருவின் பெருமையையும் பேசிவிட்டு பிறகு தான் சொற்பொழிவையே துவக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். 'வள்ளிமலை அற்புதங்கள்' தொடரில் அடுத்த அத்தியாயத்தை இன்று தைப்பூச ஸ்பெஷலாக அளிக்க நினைத்திருந்தோம். ஆனால் அந்த

Read More

கொடுக்கும் பணம் நன்கு விருத்தியாக திரும்ப… பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 5

'பொருளாதார தன்னிறைவு' - இந்த ஒரு இலக்கை நோக்கி தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். சிலர் குறுக்கு வழிகளில் ஓடிப்போய் கீழே விழுகிறார்கள். கைகால்களை உடைத்துக் கொள்கிறார்கள். சிலர் மீள முடியாத பாதாளத்தில் விழுகிறார்கள். சிலர் நேர்வழிகளில் ஓடுகிறார்கள். இலக்கை அடைகிறார்கள். அவரவருக்கு இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ ஓடுகிறார்கள். அதை பொறுத்தே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடைகிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.... நாம் மேலே ஏறுவது

Read More

பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

ஆலய தரிசனமும், விரதமும், வழிபாடும் 'ஆன்மிகம்' என்னும் ஆலமரத்தில் ஒரு சிறு கிளை. அவ்வளவே. அது ஒன்றே ஆன்மீகம் ஆகிவிடாது. இறையருளையும் பெற்றுத் தராது. இறைவனை தேடி நாம் போகாமல் இறைவனை நம்மை தேடி வரச் செய்யவேண்டும். அது தான் ஆன்மிகம். போகிற போக்கில் மனதில் இருக்கும் சிறு ஈரத்தால் நாம் செய்யும் ஒரு செயல், இறைவனை நம் பக்கம் ஈர்த்து நமது வாழ்க்கையையே மாற்றிவிடும். இதை நாம் பலமுறை உணர்ந்திருக்கிறோம்.

Read More

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

இன்று 'பீஷ்ம ஏகாதசி'. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றிய நாள். பாரதப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது கிருஷ்ணர் பீஷ்மரிடம் பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் 'ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்' என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இதில் சிவபெருமானும் இடையே தோன்றி ஆமோதிப்பது

Read More

பழனி தைப்பூச அன்னதானத்தில் பங்கேற்று சேவை செய்ய அரிய வாய்ப்பு!

நேற்றைய பதிவில் திருப்பதி திருவண்ணாமலையோடு பலரது ஆன்மிகம் முடிந்துவிடுகிறது, அதற்கு அப்பால் பல மகத்தான விஷயங்கள் இருக்கிறது என்றும் அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்றும் கூறியிருந்தோம் அல்லவா? அவற்றுள் ஒன்று தற்போது பார்க்கலாம். மனிதன் இறையருளை பெற பலவித வழிகள் உண்டு. அவரவரர் சக்திக்கும் ஞானத்துக்கும் ஏற்ப பக்தி செய்து இறைவனை அடையவேண்டும். அவரவர் பிறக்கும், வாழும், வளரும் சூழ்நிலைக்கேற்ப அவர்களது பக்தியின் தன்மை மாறுபடும். எனவே ஒருவருக்கு வைக்கப்படும் அளவுகோல்

Read More

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

தடுக்கி விழுந்தால் சிலர் திருப்பதி, திருவண்ணாமலை போன்ற பிரசித்தி பெற்ற தலங்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இது ரொம்ப  நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு மேல் அவர்களுக்கு ஆன்மீகத்தில் வேறு எதிலும் நாட்டமிருப்பதில்லை. அவர்களை பொருத்தவரை திருப்பதி, திருவண்ணாமலையோடு அவர்கள் ஆன்மிகம் முடிந்துவிடுகிறது. மேற்படி கோவில்களுக்கு அடிக்கடி சென்று வருவதை ஏதோ பெரிய சாதனை போல எண்ணிக்கொண்டிருப்பார்கள். அடிக்கடி மேற்படி தலங்களுக்கு போய்வந்து ஆண்டவன் தங்களுக்கு அருள

Read More

குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB

இந்துக்களின் புனித நகரான காசியிலே எண்ணற்ற மகான்கள் தோன்றியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் ஆக்ரஜி. சிறந்த விஷ்ணு பக்தரான இவர் பல நற்குணங்களை கொண்டவர். இவரது பக்தியின் தன்மையை கண்டு சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனே இவருக்கு அடிக்கடி காட்சி தந்து அளவளாவுவதுண்டு. அந்தளவு உத்தமர். ஒரு முறை காசியிலே தோன்றிய கடுமையான பஞ்சத்தையடுத்து மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கூட மிகவும் சிரமமாயிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்விதவை,

Read More

உங்கள் பிள்ளை நன்றாக தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற…!

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் தற்போது கூடுதல் நாட்களும் கூடுதல் நேரமும் இயக்கப்படுகின்றன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எந்த சூழ்நிலையிலும் பாதித்துவிடக்கூடாதே என்று ஆசிரியர்களும், பிள்ளைகள் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை பெறவேண்டுமே என்று பெற்றோர்களும் கவலைப்படுகிறார்கள். மாணவர்களுக்கு இதனால் ஒருவித மன-அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம். முதற்கண் பெற்றோர்கள் செய்யவேண்டியது, மாணவர்களுக்கு பரீட்சை முடியும்வரை அவர்கள் சில தியாகங்களை செய்யவேண்டும். பிள்ளைகள் மனம் பாதிக்கும்படி

Read More

யார் உங்கள் தலைவர்?

யாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அவரது பண்புகள் என்ன? அவர் உங்களை சரியாக வழி நடத்துகிறாரா? உங்கள் குழப்பங்களை தீர்த்துவைக்கிறாரா? சுயநலமற்று இருக்கிறாரா? காட்சிக்கு எளியரா? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எல்லோரும் தலைவனாகிவிடமுடியாது. தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள்  இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும். தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால்

Read More