Home > 2015 > October

‘விதியே உனக்கு ஒரு வேண்டுகோள்!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் (Rightmantra Prayer Club)

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலை வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டங்களில் தமிழகம் முழுதும் இவர்கள் கால்நடையாகவே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு 'திருமுறை' என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் பதிகம் பாடி புரியாத அதிசயமே இல்லை எனலாம். இந்த பதிவில் சுந்தரர் புரிந்த அதிசயம் ஒன்றை பார்ப்போம். விதியையே புரட்டிப் போட்ட

Read More

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

மகா பெரியவாவின் பதிவுகளை பொருத்தவரை என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது. இன்று நாம் அளிக்க நினைத்த பதிவு ஒன்று அளிப்பதோ வேறு ஒன்று. பெரியவாவின் விருப்பம் இது தான் போல! சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் இது ஒரு

Read More

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

இறைவனின் அருளைப் பெற நாம் செய்யும் பக்திகளில் ஒன்பது வகை உண்டு. 'நவபக்தி' என்று இதற்கு பெயர். இவற்றில் பூஜை என்பது ஒரு வழி. அதிலும் மானஸ பூஜை என்று ஒன்று உண்டு. இந்த நவபக்தியின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் பக்த பிரகலாதர். அதற்கு பிறகு ஆதி சங்கரர். அதிலும் மானஸ பூஜை செய்வது ஆதி சங்கரருக்கும் பிடிக்கும். அந்த சங்கரனுக்கும் பிடிக்கும். சாதாரணமாக நாம் பூஜை செய்யும்போது கடவுளின் விக்ரகமோ,

Read More

யார் மிகப் பெரிய திருடன் ?

அவன் ஒரு பலே திருடன். வாழ வழி தெரியாமல் சிறு சிறு திருட்டுக்களில் ஆரம்பித்து பின்னர் அது பழகிவிட வீடுகளில் புகுந்து திருடும் மிகப் பெரிய திருடனாகிவிட்டான். ஒரு கட்டத்தில் சாதாரண திருட்டு போரடித்துவிட, பிரபலங்களின் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். இது மிகவும் சேலஞ்சிங்காக சுவாரஸ்யமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டில் தனது கைவரிசையை

Read More

அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!

நமது ரைட்மந்த்ரா அலுவலகத்தில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை பற்றிய பதிவு இது. ஆயுத பூஜை என்பதே செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து கொண்டாடப்பட்டு வரும் ஒன்று. அதுவும் நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம் துவக்கிய பின்பு வரும் முதல் ஆயுத பூஜை என்பதால் நிச்சயம் சற்று வித்தியாசமாக கொண்டாடவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், எப்படி என்று தான் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகள் மற்றும் பர்சேஸிங்கில்

Read More

அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!

நாளை மறுநாள் செவ்வாய்கிழமை ஐப்பசி பௌர்ணமி, அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகத் திருநாள். அன்னாபிஷேகம் குறித்து இது வரை நம் தளத்தில் பல பதிவுகள் வெளியாகியிருந்தாலும் மேலும் சில தகவல்களை திரட்டி இந்த பதிவை அளிக்கிறோம். பதிவு உங்களை கவரும் என்று நம்புகிறோம். மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். சிவபெருமானுக்கு அடிக்கடி அபிஷேகம் செய்து வருவது சகலவிதங்களிலும் நன்மை தரக்கூடியது. தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச் சாறு,

Read More

சகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’!

நாளை சனிக்கிழமை 'கோ துவாதசி' அதாவது கோவத்ஸ துவாதசி. ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் இந்த துவாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு 'கோ துவாதசி' என்று பெயர். கோ-சம்ரட்சணத்துக்கும் கோ தரிசனம் மற்றும் கோ பூஜைக்கு ஏற்ற நாள் இந்த கோ-துவாதசி. அன்று கன்றுடன் கூடிய பசுவை பூஜித்து வணங்க வேண்டும். பிராமணர் , பசுக்கள் இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் 'அமுல்யம்' அதாவது விலை

Read More

பாபா ஓர் கருணாலயம், பாதம் தான் கமலாலயம்!

இன்று ஷீரடி சாய்பாபா மகாசமாதியடைந்த நாள். இந்த விஜயதசமி திருநாளில் இந்த பதிவை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு பதிவும் நம்மை பொறுத்தவரை ஒரு தவம் போல என்பதை நீங்கள் அறிந்ததே.  எனவே சற்று அலசி ஆராய்ந்து நீண்ட நெடிய தேடலுக்கு பிறகு இதை அளிக்கிறோம். நிச்சயம் உங்களை கவரும் என்று நம்புகிறோம். * நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவரும் 'ஓம்' இதழில் திரு.பா.சி.ராமச்சந்திரன் என்பவர் எழுதிய கட்டுரை இது. சிறந்த முறையில்

Read More

என்ன தவம் செய்தனை யசோதா…!

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் பவானி என்கிற பசு, பெண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. தளம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் பதிவில் அதுவும் விஜயதசமி அன்று இதை விட நல்ல செய்தியை சொல்லமுடியுமா? இந்த கோவிலில் கடந்த மூன்றாண்டுகளாக நம் தளம் சார்பாக ஒவ்வொரு மாதமும், நாள்கிழமை விஷேடங்களின் போதும் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே. இந்த காலகட்டங்களில் இங்குள்ள பசுக்கள் பல கன்றுகளை ஈன்றுள்ளன.

Read More

மஹாசக்தி ஜனனம் துக்க நிவாரணம் – வாசகர் வீட்டு கொலு – இறுதி பாகம்!

நவராத்திரி சிறப்பு பதிவில் வாசகர் வீட்டு கொலு இறுதிப் பகுதி இது. இந்த இறுதிப் பகுதியில் ஜகன்மாதா அம்பிகை மூன்று சக்திகளாக தோன்றிய கதையை பார்ப்போம். மகிஷாசுரன் என்ற அசுரன் தேவர்களையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி கொண்டு அரசாட்சி செய்து வரும் காலகட்டங்களில் தேவர்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளானார்கள். இனியும் மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாது என்று கட்டத்தில் பிரும்மதேவரை அழைத்துக்கொண்டு சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் சந்தித்து முறையிட சென்றார்கள். அவர்கள் கூறுவதை

Read More

எது உண்மையான கௌரவம்?

"வாழ்வில் ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்?" என்பது பற்றிய போதனையை ஒரு துறவி ஊர் ஊராக சென்று சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கீதை முதல் ராமாயணம் வரை, ஏவுகணை முதல் ஏரோப்பிளேன் வரை அவர் தொடாத சப்ஜெக்ட்டுக்களே இல்லை எனலாம். மக்கள் அவர் பேசுவதை கேட்க முண்டியடித்துக்கொண்டு செல்வார்கள். பல புராண இதிகாச சம்பவங்கள், குட்டிக்கதைகள் என அவரது உரை பிரமாதமாக இருக்கும். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட மக்கள் அவரை ஆற்றிய உரையை

Read More

“கொலுவும் திருவும்!” – வாசகர் வீட்டு கொலு – பாகம் 2

மத்தூர் மகிஷாஷுர மர்த்தனி அம்மன் கோவிலுக்கு கொலு பொம்மைகள்  தருவது என்று முடிவானவுடன், மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றுகொண்டிருந்த கொலு கண்காட்சிக்கு சென்று, பொம்மைகள் வாங்கினோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமானது. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் விலையில் தனி கவனம் செலுத்தினோம். வருடத்திற்கு ஒருமுறை தான் இவர்களுக்கு வியாபாரமே. பேசினால் ஒரு நூறு ரூபாய் வரைக்கும் குறைக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்று

Read More

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club

அவர் ஒரு அரசு உயரதிகாரி.  கடவுள் நம்பிக்கையெல்லாம் அவருக்கு கிடையாது. கோவிலுக்கெல்லாம் செல்வது கிடையாது. அப்படியே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சென்றாலும், உள்ளே செல்லமாட்டார். வெளியே உட்கார்ந்துவிடுவார் அல்லது பொழுதுபோக்க கோவிலை சுற்றிப் பார்ப்பார். அவ்வளவு தான். நண்பர் ஒருவர் மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்திற்கு சென்றதையடுத்து அவருடன் செல்லவேண்டிய நிர்பந்தம். நண்பர் அம்பாளை தரிசித்து அர்ச்சனை முதலியவற்றை செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, கடவுள் நம்பிக்கையற்ற இவரது நண்பர் ஒருவர்

Read More

சுபிக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் – வாசகர்கள் வீட்டு கொலு – பாகம் 1

கிரகத்தில் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும், தழைத்தோங்க செய்யும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நவராத்திரி கொலு குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டியும், கொலு வைப்பவர்களை ஊக்குவிக்கவேண்டியும் நம் வாசகர்களிடம் அவரவர் வீட்டு கொலுவை படமெடுத்து அனுப்பும்படியும், நமது தளத்தில் அது வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தோம். இதையடுத்து பல வாசகர்கள் அவர்கள் வீடு கொலு படங்களை அனுப்பியிருக்கிறார்கள். கொலுவானது அவரவர் வாழும் சூழ்நிலை, இட வசதி, பணி தொடர்பான நிர்பந்தங்கள், நேரக்குறைவு இவற்றுக்கு நடுவே

Read More