Home > 2015 > May

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

நாளை வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். ஆம் அவர்கள் அரங்கன் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! என்ன அரங்கன் வனவாசம் சென்றானா? ஆம்... ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான். இதன் பின் உள்ள சம்பவங்கள் கல்நெஞ்சையும் கரையவைக்கும் என்றால் மிகையாகாது. "கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீராற் காத்தோம். கருகத் திருவுளமோ?"

Read More

மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி தம்மை நாடி வருவோரின் பாபங்களை தனது அருட்பார்வையினால் பொசுக்கி, இகபர சுகங்களை அவர்களுக்கு அளித்து வரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் 122 வது மஹா அனுஷ ஜெயந்தி மஹோத்சவம் காஞ்சி ஸ்ரீ மடம், விழுப்புரத்தில் உள்ள அவரது அவதார தலம், கோவிந்தபுரத்தில் உள்ள அவரது தபோவனம், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி

Read More

எது நிஜமான பக்தி?

சமீபத்திய 'சக்தி விகடன்' இதழில் படித்த கதை இது. சிறிய கதை தான். ஆனால் வலுவான மெசேஜ். அதுவும் குருவாரத்தில் பகிர்வதற்கு ஏற்றாற்போல் குருவின் உபதேசத்துடன் சேர்ந்து இருந்ததால் இங்கே பகிர்கிறோம். பிளஸ்டூ தேர்வுக் காலம் துவங்கி முடிவுகள் வரும் வரையிலும் பக்திப் பழமாகத் திகழ்ந்தான் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி. விடியற்காலையில் தெருமுக்கு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம், வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து அனுமனிடம் பிரார்த்தனை, மாலையில் சிவாலயத்தில் நவகிரக தரிசனம்... மற்றபடி

Read More

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

செய்தித் தாள்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார, மாத இதழ்களையும் படித்து நம்மை அப்டேட்டாக வைத்துக்கொள்ள என்றுமே நாம் தவறியதில்லை. அப்படி படிக்கும்போது, “அட… நல்லாயிருக்கே இது!” என்று நமக்கு தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியே இந்த பகுதியை துவக்கியுள்ளோம். நம் தளத்திற்கு மன ஆறுதலும் ஒரு வித REMEDY தேடியும் தான் பலர் வருகிறார்கள். இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு மாறுதலை கொடுக்கும். ஒரேடியாக சீரியஸான பதிவுகளை அளிப்பதில்

Read More

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஏப்ரல் 21 அன்று வந்த 'அட்சய திரிதியை' நன்னாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை பற்றிய பதிவு இது. அடுத்த முறை அட்சய திரிதியை என்றால் இந்த பதிவில் விளக்கியிருப்பதை போல "இன்று நம்மால் முடிந்த அறச்செயல்களை அவசியம் செய்ய வேண்டும்" என்கிற எண்ணமே உங்களுக்கு வரவேண்டும். அது தான் இந்த பதிவின் நோக்கம்! பொதுவாக ஒரு பயணத்தை திட்டமிட்டுவிட்டால், அந்த பயணம் நல்லபடியாக நடந்து முடியும்

Read More

ஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்!

ஒரு ஒட்டகமும் அதோட குட்டியோட படுத்திருந்தது. "அம்மா... நான் உன்கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா?" "தாராளமா கேளுடா கண்ணு... என்ன சந்தேகம் உனக்கு?" - இது அம்மா ஒட்டகம். "அம்மா அது வந்து நமக்கெல்லாம் ஏன்மா பெரிசா முதுகுக்கு மேல் செதில் இருக்கு??" "அதுவா... அதாவது நாம பாலைவனத்துல வாழற பிராணிகள். நமக்கு தண்ணீர் கிடைக்கிறது அபூர்வம். அதுனால் தண்ணி கிடைக்கும்போது, செதில்ல சேர்த்து வெச்சுக்குவோம். அதனால் தண்ணியே இல்லாட்டி கூட நம்மால பல நாட்கள்

Read More

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

நம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மை மிகவும் பாதிப்பதுண்டு. சில மயிலிறகு போல நம் மனதை வருடிவிட்டு செல்லும். சில கன்னத்தில் அறைந்தாற்போல அழுத்தமான பாடம் தரும். சில நமது கண்களை திறக்கும். அப்படிப்பட்ட சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இந்த தொடரின் நோக்கம். தொடரை கூடுமானவரை சுவாரஸ்யமாக / பயனுள்ளதாக தர முயற்சிக்கிறோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. ஒரு திருமணத்தின் மாண்பு எங்கே இருக்கிறது? சென்ற வருட மத்தியில் நண்பர் ஒருவரது திருமணத்திற்கு

Read More

தவளையை கொன்றது எது?

தவளை ஒன்றை பிடித்து ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த பாத்திரத்தை சூடேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீர் சூடேற சூடேற பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்பத்துக்கு ஏற்ப தவளை தனது உடலின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். நீரின் வெப்பம் ஏற ஏற தவளை தனது உடலின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகும். நீர் மிகவும் சூடேறிவிட்ட நிலையில் தவளையால், மேற்கொண்டு

Read More

‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர் குகை நமசிவாயர். நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஓர் குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூற, குகையில் தங்கியதால்

Read More

கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

பிறவிகளிலேயே சிறப்பானது, அரியது மனிதப்பிறவி தான். ஏனெனில், மனிதப்பிறவிக்கு மட்டும் இறையுணர்வு உண்டு. இறைவனை தொழுது மேற்கொண்டு பிறவிகள் இல்லாமல் செய்துகொள்ளும் வாய்ப்பு மனிதப் பிறவியில் தான் ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும். பலர் தங்களுக்கு அடுத்த பிறவியும் மானிடப் பிறவியாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிறவி மானிடப் பிறவியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த நிச்சயமுமில்லை. "அரிது அரிது மானிடராதல் அரிது" என்று அதனால் தான் ஒளவையும் பாடினார். புழுவாய் பிறக்கினும்

Read More

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

மகா பெரியவா ஸ்தூல சரீரத்தோடு இருந்தபோதும் சரி... தற்போது அதிஷ்டானத்தில் சூட்சும சரீரத்தோடு இருக்கும் போதும் சரி... ஸ்ரீமடம் ஒரு கற்பக விருட்சமாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுத்து வந்துள்ளது. பிள்ளையின் பசியறிந்து பாலூட்டும் அன்னையை போல, பெரியவா பல சமயங்களில் தன்னை நாடி வந்தவர்கள் கேட்காமலே அவர்களின் உள்ளக் கிடைக்கையை அறிந்து அவர்களுக்கு உதவியிருக்கிறார். அதுவும் ஸ்ரீமடத்தின் ஊழியர்கள் மற்றும் அணுக்கத் தொண்டர்கள் என்றால் அது பற்றி சொல்லவேண்டுமா என்ன? மகா

Read More

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

நம் தள வாசகரும் நண்பருமான ஒருவர் சமீபத்தில் நம்மை தொடர்பு கொண்டு, மிகப் பெரிய சந்தேகம் ஒன்றை கேட்டார். "தப்பா நினைக்காதீங்க சுந்தர்ஜி... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முதன் முதல்ல எங்களை சுந்தரகாண்டம் படிங்க... சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்... வீட்ல சர்வ மங்களம் உண்டாகும்னு சொன்னீங்க... வாங்கி படிச்சேன். கொஞ்ச காலம் கழிச்சி வேல்மாறலை எங்களுக்கு அறிமுகப்படுத்தி, அதோட அருமை பெருமைகளை சொல்லி அதை படிங்க. நினைச்சது எல்லாம் நடக்கும், உங்க

Read More

ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டென்ஷனா?

அடுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிளஸ்-டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. நாளை எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. பொதுவாகவே ஜூன் மாதம் என்றாலே பெற்றோர்களுக்கு ஒரு வித டென்ஷனும் பயமும் வந்துவிடும். ஃபீஸ் கட்டவேண்டும், பிள்ளைகள் விரும்பிய கல்வியை, விரும்பிய கல்வி நிறுவனத்தில் அளிக்கவேண்டும்... இப்படி பல டென்ஷன்கள். (இப்போல்லாம் ஓரளவு சுமாரான ஸ்கூல்ல எல்.கே.ஜி. ஃபீஸே ரூ.30,000/- ஆகுது.) நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பல மாணவர்களுக்கு விரும்பிய படிப்பை

Read More

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

அந்த ஊரில் இரண்டு குறும்புக்கார அண்ணன் தம்பிகள் இருந்தார்கள். சிறுவர்களுக்கே உரிய சேட்டைகளும் குறும்புத்தனங்களும் அவர்களிடம் நிரம்ப இருந்தன. யாராவது வீட்டில் வைத்து பூட்டப்பட்டாலோ அல்லது வளர்க்கும் நாயின் முகத்தில் குடத்தை மாட்டிவிட்டாலோ அல்லது சைக்கிளில் காற்றை பிடுங்கிவிட்டிருந்தாலோ தபால் பெட்டியில் வெடிச் சத்தம் கேட்டாலோ சந்தேகமின்றி அது இவர்களாகத் தான் இருப்பார்கள். அந்தளவு குறும்புக்கு பெயர் போனவர்கள் இந்த சிறுவர்கள். ஊரார் அடிக்கடி இவர்கள் வீடு தேடி வந்து இவர்களின்

Read More