Home > 2015 > April

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

காஞ்சி ஸ்ரீ மடத்தில் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட மகா பெரியவா செய்த பல்வேறு பூஜைகளில் உதவியாக இருந்தவரும், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருபதாண்டுகளுக்கும் மேல் பூஜை செய்தவருமான பெரியவர் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகளுடனான நமது சந்திப்பு பற்றிய குறுந்தொடர் இது. 1923 ஆண்டு, கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் பிறந்தார் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். இந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயர் ஆம்பரவனேஸ்வரர். அம்பாள்

Read More

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று கூறுவார்கள். ஆனால், தற்போது ஆணுக்கு மட்டுமின்றி பெண்ணுக்கு கூட அது ஒரு முக்கிய லட்சணமாக மாறிவிட்டது. காரணம் அடியோடு மாறிவிட்ட திருமண சந்தை. எனவே 'உத்தியோகம் திருமண ப்ராப்தம்' என்று சொல்வதே சரி. விரும்பியபடி விரும்பிய இடத்தில் வேலை என்பது அனைவருக்கும் வாய்க்காது. அது பூர்வ ஜென்ம கர்மாவோடு தொடர்புடையது. படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு வித நிர்பந்தத்தில் பேரில்

Read More

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

நேபாளத்தில் நடைபெற்ற பூகம்பத்தை பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் முகநூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் சுற்றிவரும் அதே நேரம் சென்ற ஆண்டு இறுதியில் நேபாளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இந்து மதக் கடவுளான “காதிமாய்“ என்கிற தெய்வத்தின் பெயரில் நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 5000 க்கும் மேற்பட்ட எருமைகள் துடிக்க துடிக்க தலை வெட்டப்பட்டு பலியிடப்படுகின்றன. சென்ற நவம்பர் மாத இறுதியில் இந்த உயிர்ப்பலி திருவிழா நடைபெற்று, ஆயிரக்கணக்கான

Read More

‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்தவர் மகான் சதாசிவ பிரம்மேந்திரர். இன்று (28/04/2015) அவரது ஜெயந்தி. பிரம்மேந்திரர் தான் ஸ்தூல சரீரத்தோடு நடமாடிய காலத்தில் பல்வேறு லீலைகளை அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் ஒருசிலவற்றை பார்ப்போம். குருவின் தண்டனையிலும் இன்பம் உண்டோ? ஒரு முறை சதாசிவ பிரம்மேந்திரர் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, நெல்லும் வைக்கோலும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை கடக்க நேர்ந்தது. என்ன

Read More

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி மற்றும் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த 'சொர்ணத்து மனை' ஆகிய இடங்களுக்கு கடந்த அக்ஷய திரிதியை அன்று நாம் மேற்கொண்ட பயணம் குறித்த பதிவு இது. காலடி நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையும், குளிர்ச்சியும்... பூலோக சொர்க்கம் அது. இந்த தொடரின் நோக்கமே காலடியின் மனதை வருடும் இயற்கை அழகை உங்களிடம் பகிர்ந்துகொள்வது தான். வெறும் புகைப்படங்களாக இல்லாமல், அப்படியே சங்கரரின்

Read More

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)

சென்ற ஞாயிறு காலை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் நினைவு மண்டபத்தில் இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முந்தைய நாள் மாலை தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்திருந்த இளம்பிறை மணிமாறன் அவர்களை மயிலாப்பூரில் அவர் தங்கியிருந்த இடத்திற்கே நேரில் சந்திக்க சென்றிருந்தோம். இளம்பிறை அவர்களுடன் அவரது கணவர் மணிமாறனும் வந்திருந்தார். திரு.மணிமாறன் அவர்களுடன் ஏற்கனவே நமக்கு அறிமுகம் உண்டு. இருந்தாலும்

Read More

கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!

ஒரு மிகக் சிறந்த போராளி மற்றும் வெற்றிவீரனின் உண்மைக் கதை இது. விடாமுயற்சியும், மனவுறுதியும், அற்பணிப்பு உணர்வும் இருந்தால் யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு இவர் வாழ்க்கை வரலாறு. விதியை வென்று சாதனை படைத்த வீரன்! கரோலி டகாக்ஸ். நீங்கள் இதுவரை இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஆனால், ஹங்கேரி நாட்டில் இவர் ஒரு தேசிய ஹீரோ. அந்நாட்டில் அனைவருக்கும் இவரைப் பற்றியும்

Read More

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)

சென்னை மறைமலை நகரை அடுத்து அமைந்துள்ள 'ஔஷதகிரி' எனப்படும் ஆப்பூர் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி குறித்த அப்டேட் இது. இந்த உழவாரப்பணியில் எண்ணற்ற சுவையான சமபவங்கள் நடைபெற்றதையடுத்து, இரண்டு பகுதிகளாக இந்த உழவாரப்பணி குறித்த அப்டேட்டை அளிக்கிறோம். இந்த வாரம் வெளியிடப்படும் முதல் பகுதி, உழவாரப்பணிக்கு செல்லும்போது மலையில், வழியில் அனுமனின் வழித்தோன்றல்களிடம் நாம் மாட்டிக்கொண்டு விழித்த கதை பற்றியது. இந்த கோவிலை பற்றி

Read More

பார்வையற்றோரின் வள்ளுவன் பார்வை!

ஈரோடு இசைப்பள்ளியில் தேவாரம் & திருமுறை ஆசிரியராக உள்ள பார்வைத் திறன் சவால் கொண்ட திரு.ஞானப்பிரகாசம் அவர்களை நாம் ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று கௌரவித்து பேட்டி கண்டு நமது தளத்தில் வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த பேட்டியை அவர் பார்வையற்றவர்கள் இணைந்து நடத்தும் 'வள்ளுவன் பார்வை' என்னும் மின்னஞ்சல் குழுமத்தில் வெளியிட அது ஏகோபித்த பாராட்டை பெற்றது. வள்ளுவன் பார்வை குழுமத்தின் உறுப்பினர்களின் வேண்டுகோளை அடுத்து அதன் பிறகு

Read More

கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

அந்த ஊர் வானொலி ஒன்றில் வாராந்திர பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தங்கள் கோரிக்கைகளை வானொலி நிலையத்திற்கு சொன்னால், அவர்கள் அதை அனைவருக்கும் அறிவித்து பிரார்த்தனை செய்யச் சொல்வார்கள். (நம்ம பிரார்த்தனை கிளப் போல!). அதே ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வாழ்ந்துவந்தாள். வறுமையில் வாழ்ந்தாலும் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட பெண் அவள். ஒரு நாள் அந்த வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது வீட்டில்

Read More

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

கி.பி. 7 ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் கிட்டத்தட்ட 72 வெவ்வேறு மதங்கள் இருந்தன. அனைவரும் தங்கள் மதம் தான் உசத்தி என்று கூறிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். சைவத்தையும் வைணவத்தையும் காத்து இந்து தர்மத்திற்கு புத்துயிர் ஊட்ட ஒரு அவதாரம் தேவைப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் மிகுந்த ஆச்சாரமும் பக்தியும் கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர்

Read More

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

காலடி & மதுரை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டோம். மதியம் அலுவலகம் வந்துவிட்டோம். காலடி பயண அனுபவத்தை எழுதிவருகிறோம். இந்த பயணத்தில் நாம் சேகரித்த தகவல்களையும் ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த தகவல்களையும், ஒருங்கிணைத்து எழுத வேண்டிய சவாலான பணி. கரும்பு தின்ன நமக்கு கசக்குமா? ஆனால் நேரம் தான் பிடிக்கிறது. இன்று எப்படியாவது அந்த பதிவை அளித்திட முயற்சிக்கிறோம். அல்லது அக்ஷய திரிதியை அனுபவங்கள் குறித்த பதிவு இடம்பெறும். இன்று

Read More

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

சுமார் 60 ஆண்டுகளுக்கு வள்ளிமலையில் படிகள் அமைக்கும் திருப்பணி நடந்த போது நடைபெற்ற அதிசய சம்பவம் இது. வாரியார் ஸ்வாமிகள் தாம் இருந்த காலத்தில் வருடந்தோறும் வள்ளி பிறந்த, முருகன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்கு சென்று திருப்புகழ் பாடி படி உற்சவம் நடத்துவார். திருப்புகழ் பாடிக்கொண்டே கிரிவலமும் வருவார். நடக்க முடியாத நாள் வரையில் அவர் கிரிவலம் வரத் தவறியதில்லை. வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்த இந்த படி உற்சவம்

Read More

அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!

'அக்ஷய' என்றால் வளர்வது, குறைவில்லாதது என பொருள். உன்னதமான வாழ்வின் வளர்ச்சிக்கு தக்க வழிகாட்டுவது இந்த அட்சய திரிதியை திருநாள். அட்சய திரிதியைக்கு என்ன சிறப்பு அந்நாளில் என்னென்ன நடைபெற்றது என்பது இறுதியில் தரப்பட்டுள்ளது. அதே சமயம் நம் வாசகர்கள் இந்த நாளை பற்றி சரியான புரிதலை கொள்ளவேண்டும் என்று கருதி ஏற்கனவே ஒரு முறை அளித்த இந்த பதிவில் பல புதிய விஷயங்களை சேர்த்து முற்றிலும் மெருகேற்றி தருகிறோம். அட்சய

Read More