Home > 2015 > March

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

இன்று செவ்வாய்க்கிழமை. முருகனுக்கு உகந்த நாள். இன்னும் இரண்டொரு நாளில் பங்குனி உத்திரம் வேறு வருகிறது. முருகப்பெருமான் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பதிவை அளிக்க ஆசை. கைவசம் இருக்கும் பதிவுகள் பல (வள்ளிமலை, காங்கேயநல்லூர் etc.) பலமணி நேரம் உழைப்பு தேவைப்படுபவை. இதனிடையே... சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், பா.தீனதயாளன் எழுதி(மிரட்டி)யிருக்கும் 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்கிற தேவரின் வாழ்க்கை வரலாற்று நூலை தற்போது படித்து வருகிறோம். இந்த நூலிலிருந்து ஏற்கனவே

Read More

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

'ஈஸ்வரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈஸ்வர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?' என்று கேட்டால், ஈஸ்வரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்யக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான், குருர் ப்ரஹ்மா

Read More

ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான். "நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை

Read More

ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!

நாளை மார்ச் 28, சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமி. உங்களையெல்லாம் அந்த ராமச்சந்திர மூர்த்தியை காண அழைத்துச் செல்லவேண்டி அளிக்கப்படும் சிறப்பு பதிவு இது. இந்த வருட ராம நவமியை முன்னிட்டு நாம் அளித்து வரும் ராம நாம மகிமை தொடரின் இறுதிப் பதிவாக ஏதேனும் ஒரு பிரசித்தி பெற்ற ராமர் கோவில் பற்றிய ஆலய தரிசன பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டு வந்தோம். அப்போது நினைவுக்கு வந்தது தான் மதுராந்தகத்தில்

Read More

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

பிள்ளையார் பழம்! குழுமணி நாராயண சாஸ்திரி தான் எழுதிய வால்மீகி இராமாயண உரையை பகவானிடம் சமர்பிக்க விரும்பினார். வெறுங்கையோடு போகக்கூடாது என்று ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினார். ஒரு விநாயகர் கோவிலை கடந்து தான் வரவேண்டியிருந்தது. கோவிலைக் கடக்கும்போது மானசீகமாக ஒரு பழத்தை விநாயகருக்கு அர்ப்பணம் செய்தார். ஆஸ்ரமம் வந்து சேர்ந்தவுடன் பகவானை வணங்கி, அந்த பழங்களை அவர் முன்னே வைத்தார். அங்கிருந்த சேவகர் அதை உள்ளே எடுத்து வைக்க முயன்ற போது, பகவான், "கொஞ்சம்

Read More

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

நம் தள வாசகர் நண்பர் நாராயணன் அவர்கள். இவர் தந்தை திரு.சாரங்கன், காஞ்சியில் ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும், சங்கர மடத்துக்கும் அடிக்கடி செல்வதுண்டு. மடத்திற்கு சென்று மஹா பெரியவாவிடம் அடிக்கடி ஆசி பெற்று வருவார். அப்போது மஹா பெரியவாவின் மாணவர்களில் ஒருவருடன் நன்கு அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் நாராயணன் நம்மிடம் ஒரு நாள், "சுந்தர்ஜி, எனக்கு காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாவுடன் நெருங்கி

Read More

வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா?

பக்கத்து வீட்டுக்காரர்கள் வளர்க்கிறார்கள், எதிர் வீட்டுக்கார்கள் வளர்க்கிறார்கள், நம்ம குழந்தை ஆசைப்படுகிறது என்றெல்லாம் சிலர் ஆசை ஆசையாய் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வாங்கி வளர்க்கிறார்கள். இந்த அவசர யுகத்தில் மனிதர்களை கவனிக்கவே  யாருக்கும் நேரமிருப்பதில்லை. விலங்குகளுக்கு? வாழ்க்கையின் ஓட்டத்தில் ஈடுகொடுக்கவே சிரமப்படுபவர்கள் அவற்றை வளர்க்க முடியாமல் திடீரென அனாதையாக விட்டுவிடுகிறார்கள். பிராணிகளை வளர்ப்பதோ வளர்க்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம். ஆனால் அவற்றை அலைகழிப்பது? எது எத்தனை பெரிய பாவம்? வாயில்லா

Read More

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராக உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வந்த காலம். (10 ஆம் நூற்றாண்டு தொடக்கம்). திருவிடைமருதூரில் அவர் தங்கியிருந்தபோது ஒரு நாள், இறைவன் மகாலிங்க சுவாமி அவர் கனவில் தோன்றி, "திருவெண்காடா, நமது திருத்தலங்கள் அனைத்தையும் சென்று தரிசித்து நம்மை பாடுவாயாக!" என்று கட்டளையிட்டார். உடனே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கேஸ்வரரையும் அன்னை பெருநலமுலையம்மையையும் தரிசித்துவிட்டு திருத்தல யாத்திரை புறப்பட்டார். அப்படி யாத்திரை புறப்பட்டவர்,

Read More

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

இராமனின் பெருமை அளவிடற்கரியது. அவன் நாமத்தின் மகிமையோ அதனினும் பெரியது. அதை சொல்லும் அவன் அடியார்களின் பெருமையோ அதையும்விட பெரியது. அதை படிக்கும் மக்கள் யாவரும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார் என்பதை சொல்லவும் வேண்டுமோ? மார்ச் 28, 2015 சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமியையொட்டி அளிக்கப்படும் குறுந்தொடர் இது. இராமாயணத்தில் குகனின் பாத்திரம் எந்தளவு சிறப்பை பெற்றதோ அதே அளவு சிறப்பை பெற்றது சபரியின் பாத்திரம். சபரி அடிப்படையில் ஒரு

Read More

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்? இனிதே நடைபெற்ற நமது சிறப்பு வழிபாடு!

21/03/2015 சனிக்கிழமை காலை வடதிருநள்ளாறு ஷேத்ரத்தில் நம் தளம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அபிஷேகமும் விசேஷ அர்ச்சனையும் இனிதே நடைபெற்றது. மேற்படி சிறப்பு வழிப்பாட்டுக்கு கிட்டத்தட்ட 18 வாசகர்கள் தங்கள் பெயர் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர், ராசி, நட்சத்திர, கோத்திர விபரங்களை நமக்கு அனுப்பியிருந்தனர். (மொத்தம் சுமார் 70 பெயர்கள்). சனிக்கிழமை காலை 6.30 க்கு அபிஷேகம் என்பதால் காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு புறப்பட்டுவிட்டோம். கோவிலுக்கு நாம்

Read More

ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ? MONDAY MORNING SPL 85

அந்தோணி பர்ஜஸ். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை கடந்துகொண்டிருந்த ஒரு சராசரி நடுத்த வர்க்கத்து மனிதர். அவருக்கு அன்பு மிக்க மனைவி. பிரிட்டிஷ் இராணுவத்தினரின் இசைக்குழுவில் இசை இயக்குனராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். சந்தோஷமாக போய்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பேரிடி விழுந்தது. அவருக்கு திடீரெனெ விசித்திர காய்ச்சல் ஒன்று வந்தது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் ஒரு சிறிய புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் அதிகபட்சம் இன்னும்

Read More

சிவபெருமான் தந்த வரமும் சனீஸ்வரனின் மகத்துவமும் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

ஒருவர் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால், தனது தசையின் போது அவருக்கு அதிர்ஷ்டத்தை தருவதும், அதுவே பாபங்கள் செய்திருந்தால் பல்வேறு சோதனைகள் துன்பங்களை கொடுத்து அந்த ஜீவனை நல்வழிப்படுத்துவதுமே சனீஸ்வரனின் கடமையாகும். இது சனி பகவானுக்கு 'கிரக' அந்தஸ்தை கொடுத்தபோது சிவபெருமான் அவருக்கு இட்ட கட்டளை. இதில் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை. அதே சமயம், தன்னை சரணடைந்தவர்களின் பாபங்களை சர்வேஸ்வரன் நோக்கியே திருப்பிவிட்டு, அவரிடம் மன்னிப்பை பெற்று தருவார்.

Read More

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

நீண்ட நாட்களாக இந்த 'குரு மகிமை' தொடருக்காக காஞ்சியில் நாம் சந்தித்து பேட்டி கண்ட - மகா பெரியவாவின் மாணவராக அவரிடம் வேதம் படிக்கும் பாக்கியம் பெற்ற ஒரு பெரியவரின் பேட்டியை -  அளிக்க வேண்டி முயற்சித்து வருகிறோம். அதோ இதோ என்று தட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது. சரி... இன்றைக்கு அதை அளித்தே தீரவேண்டும் என்று அமர்ந்து அந்த பதிவை தயாரித்துக் கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. உங்களிடம் பகிராமல்

Read More

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

நம் தள வாசகரும் நண்பருமான திரு.செந்தில் என்பவரின் வாழ்வில் சமீபத்தில் நடந்த அதிசயம் இது. திரு.செந்தில் அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரியும்.  பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். நம்முடன் பல ஆலயங்களுக்கு வந்திருக்கிறார். தன்னால் இயன்ற உதவிகளை தளத்திற்கு அவ்வப்போது செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரிக்கு நம்முடன் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார். இவருடைய உடன் பிறந்த அக்கா திருமதி.காந்திமதி. அவருடைய கணவர் திரு.சின்னையா. திரு.சின்னையா

Read More