Home > 2014 > January

சும்மா கிடைத்ததா சுதந்திரம்? – தியாகிகள் தினம் (MARTYRS’ DAY) சிறப்பு பதிவு!

முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரின் தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவும், போற்றும் விதமாகவும் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிக்கு வடிவம் கொடுத்த மகாத்மா காந்தியடிகளின் மறைந்த நாள் (ஜனவரி 30) தியாகிகள் தினமாக (MARTYRS' DAY) கொண்டாடப்படுகிறது. நமது சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நினைவூட்டுவதே இதன்

Read More

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

இன்று மகத்துவம் மிக்க தை அமாவாசை மட்டும் அல்ல.... பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு முழு அமாவாசையான இன்று முழு நிலவை தனது தாடங்கத்தை (காதணி) வீசி அன்னை உமையவள் தோற்றுவித்த நாள்! நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு நாள்!! தூய பக்தர்களுக்காக நம் அன்னை எதையும் செய்வாள்... என்பதை உலகிற்கு உணர்த்திய நாள் இன்று. பக்தி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இந்த நிகழ்வு நடைபெற்றது எப்போதோ அல்ல... 18

Read More

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

நம் மக்கள் பெரும்பாலானோரிடம் இரக்க சுபாவம் இருந்தும் பிச்சைக்காரர்களுக்கு பலர் பிச்சையிட தயங்குவதன் காரணம், அந்த பணத்தை கொண்டு அவர்கள் புகை, கஞ்சா, மது என்று தவறான வழிகளில் பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தினால் தான். இது குறித்து சுவாமி விவேகானந்தர் அற்புதமான விளக்கம் ஒன்றை தந்திருக்கிறார். தாய்நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர உணர்வு அவ்வப்போது சுவாமிஜியிடம் மிகவும் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட்டது. ஒரு நாள் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார்.

Read More

‘தை அமாவாசை’ – அதன் சிறப்பு என்ன? அன்று என்ன செய்யவேண்டும்?

நாளை 30/01/2014 வியாழக்கிழமை 'தை அமாவாசை'. முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில்

Read More

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

"கோவில், குளம், பீச், பார்க், உணவகங்கள் என எங்கெங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் தென்படுகிறார்களே? எங்கு சென்றாலும் அவர்கள் தொல்லை தாள முடியவில்லை. கோவிலில் பிச்சைகாரர்களுக்கு பிச்சை தரக்கூடாது என்று சொல்கிறார்களே? பிச்சைக்காரர்களுக்கு உண்மையில் பிச்சை இடலாமா கூடாதா?" என்று நம் நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். அவர் கேட்டதும் அது குறித்த நம் கருத்துக்களை பதிவாக அளித்தோம். (Check : யார் பெரிய பிச்சைக்காரர்கள்?) மேற்படி கேள்விகளுக்கு மிக மிக தெளிவாக

Read More

தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!

எத்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா? கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது ? அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப்

Read More

அன்புக்குரியவர்கள் உங்களை காயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? MONDAY MORNING SPL 29

உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதாவது உங்களை காயப்படுத்தினாலோ அல்லது  உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டாலோ என்ன செய்வீர்கள்? சற்று யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் அனைவருக்கும் நடக்கக்கூடியதே என்பதால், கடந்த காலங்களில் அப்படி ஏதேனும் நடந்திருந்தால் உங்கள் பதில் நடவடிக்கை என்னவாக இருந்தது? "என்கிட்டேயே இப்படி நடந்துகிட்டான்". "என்னையே இப்படி பேசிட்டாங்க. என்ன செய்றேன் பாரு அவங்களை..."" "நான் செஞ்ச உதவியெல்லாம் மறந்துட்டாங்க. சே..இந்த உலகத்துல யாருக்குமே நன்றியே கிடையாது...." - நிச்சயம் பெரும்பாலானோர் ரீயாக்ஷன் இப்படித் தான்

Read More

குடியரசு தினம் என்றால் என்ன? சுதந்திர தினத்தை விட அது ஏன் முக்கியம்?

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை

Read More

கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

கடவுளை நம்புபவனுக்கு, தான் நினைத்தது நடக்காத போது, இறைவன் என்கிற ஒருவன் உண்மையில் இருக்கிறானா என்று சந்தேகம் எழுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டினால் கடவுள் கண்ணை திறந்துவிட்டார் என்று நினைப்பது அறியாமையிலும் பெரிய அறியாமை. பொருளை சாராமல் அருளுக்கே முக்கியத்துவம் தருபவர்கள் கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவதில்லை. இறைவன் ஒவ்வொரு கணமும் நம்மை காக்கிறான் என்பதே உண்மை. வரவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து காக்கிறான். நல்லவர்களின்

Read More

சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்!

நமது தளத்தின் ரோல் மாடல் பேட்டிக்காக ஒரு மிகப் பெரிய சாதனையாளர் ஒருவரை சந்திக்க வார இறுதியில், ராயப்பேட்டை பாரதி சாலை சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் நாராயணன் என்பவரும் வந்திருந்தார். பேட்டியெல்லாம் முடித்துவிட்டு ஒரு டீ சாப்பிடலாம் என்று பக்கத்தில் டீக்கடையை தேடி நடந்தபோது 'நேதாஜி தங்கிய இல்லம்' என்று கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை பாரதி சாலையில் பார்க்க நேர்ந்தது. (* மேலே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தி.நகர் முகவரி, இந்த கல்வெட்டிய

Read More

அன்னதானம் என்கிற அருந்தவம்!

புத்தாண்டை முன்னிட்டு நமது தளம் சார்பாக ஜனவரி 1 அன்று பல்வேறு அறப்பணிகள், ஆலய தரிசனம், அன்ன தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. அன்று ஹனுமத் ஜெயந்தி என்பதால் அனுமனுக்கு சிறப்பு அர்ச்சனையும் வெண்ணைக் காப்பும் சார்த்தப்பட்டது. இந்த நிகழ்வுகளை ஒரே பதிவாக எழுதி வருகிறோம். ஆகையால் சற்று நேரம் பிடிக்கிறது. இடையே வேறு சில பதிவுகளும் எழுத வேண்டியுள்ளது. கிடைக்கும் நேரமோ மிகவும் குறைவு. எனவே தான் சற்று தாமதமாகிறது.

Read More

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

மார்கழியை முன்னிட்டு நாம் தினமும் சென்று வந்த போரூர் ராமநாதீஸ்வரர் கோவில் இருக்கும் அதே தெருவில் ஒரு பத்து கட்டிடங்கள் தாண்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. ஏதோ ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் அமைக்க நிலத்தை தோண்டியபோது முருகன் சிலை ஒன்று கிடைக்க, அதையே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பிவிட்டார்கள். இது நடந்தது 40 வருடங்களுக்கு முன்பு. ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அப்படியே இந்த கோவிலுக்கும் சென்றுவிட்டு வருவது வழக்கமாக

Read More

‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி!

வாழ்க்கையில் சிலரது சந்திப்பு நமக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துவிடும். உங்கள் கர்மா நன்றாக இருந்தால் தகுதியுடையவர்களை சந்தித்து அது நல்ல திருப்புமுனையை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். கர்மா சரில்லை என்றால், தகுதியற்றவர்களை சந்தித்து அதன் மூலம் உங்கள் வாழ்க்கையே திசை மாறிப் போய்விடும். அவர்களின் நட்பெல்லாம் மகோன்னதமாகத் தெரியும். அதை கொண்டாடி மகிழ்வீர்கள். எல்லாம் முடிந்து, அனைத்தையும் இழந்து நிற்கும்போது தான் அது உறைக்கவே உறைக்கும். நம்மை பொருத்தவரை நமது வாழ்க்கையில் மிகப்

Read More

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? MONDAY MORNING SPL 28

சில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும். கீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா இறை நம்பிக்கை! என்ன ஒரு பக்குவம்... என்ன ஒரு முதிர்ச்சி... அப்பப்பா...!!! ஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே

Read More