Home > 2014

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

வருடத்தின் கடைசி நாள். தவிர வைகுண்ட ஏகாதசிப் பொழுது. நேற்று வரை இந்த பதிவை இன்று அளிக்கவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. இப்படி ஒரு பதிவு அமைவது உண்மையில் அரங்கன் அருள் தான். நினைத்ததைவிட சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறோம். உண்மையில் வைகுண்ட ஏகாதசிக்கு இதைவிட பொருத்தமான ஒரு பதிவை அளிக்க முடியாது. அரங்கனுக்கு நன்றி. எழுவகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை 'அரிதரிது

Read More

வைகுண்ட ஏகாதசி + புத்தாண்டு ஆலய தரிசன விபரம்!

வரும் ஜனவர் 1, 2015 ஆங்கிலப் புத்தாண்டு அன்று வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. காலங்களில் வசந்த காலத்தையும், மாதங்களில் மார்கழியையும் சிறப்பித்துக் கூறுவார்கள். இந்த மார்கழி மாதம் முழுவதும் விரதங்கள், வழிபாடுகள், பஜனைகள், கச்சேரிகள், உற்சவங்கள், உபந்யாசங்கள், கதாகாலட்சேபங்கள், தெய்வீக சொற்பொழிவுகள், ஆன்மிக யாத்திரைகள் சிறப்பாகவும், விமரிசையாகவும் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது மிகவும் அவசியம். மகா பெரியவா அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில்

Read More

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடுகிறோமோ இல்லையோ உலகமே கொண்டாடுகிறது. நமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் அர்த்தமுள்ள வகையில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பது நம் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இதன் பொருட்டு விடியற்காலை துவங்கி நண்பகல் வரை நண்பர்களுடன் சேர்ந்து பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிப்பது உண்டு. 2014 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடிய தருணங்களை இந்த பதிவில் நினைவு கூர்கிறோம். இந்த பதிவை எப்போதோ அளித்திருக்கவேண்டியது. ஆனால்

Read More

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

அந்த ஊர் சுவாமியை தொடர்ந்து மூன்று புத்தாண்டுகள் தரிசனம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு புத்தாண்டும் அந்த தலத்து இறைவனை தரிசிக்க கூட்டம் முண்டியடிக்கும். எங்கெங்கிருந்தோ மக்கள் படையெடுப்பார்கள். அதே ஊரில் ஒரு மிகப் பெரிய பக்தர் இருந்தார். அனைவர் மீதும் கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தும் பண்பாளரான அவர் அடுத்தவர்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடோடிச் சென்று உதவும் மனப்பான்மை உள்ளவர். அவர் மீது

Read More

‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்!

அண்மையில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி தொடர்பாக பலர் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது. ஜோதிடர் ஒருவரால் முறைப்படி கணிக்கப்பட்டுள்ள பன்னிரண்டு ராசிகளுக்குமான சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் இத்துடன் தரப்பட்டிருக்கின்றன. உங்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன் எப்படி சொல்லப்பட்டிருந்தாலும் அதை பற்றி கவலைப்படாது கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வாருங்கள். நல்லதே நடக்கும். இந்த பலன்களை அளித்திருக்கும் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணன் நம் தளத்தின் வாசகர். பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில்

Read More

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

மார்கழியின் மகத்துவம் பற்றி சமீபத்தில் நாம் அளித்த பதிவில் இந்த ஆண்டு மார்கழி தரிசனத்திற்கு ஒரே ஆலயமாக செல்லாமல் எங்கள் பகுதியை சுற்றிலும் உள்ள அனைத்து தொன்மையான ஆலயங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆலயம் வீதம் செல்லவிருப்பதாக கூறியிருந்தோம். அதை படித்த நம் வாசகி தாமரை வெங்கட் அவர்கள், நாம் திருவேற்காடு வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும், தன் குடும்பத்தினருடன் தாம் வேதபுரீஸ்வரரை தரிசிக்க வருவதாகவும் கூறியிருந்தார். (அவர்கள் வசிப்பது திருவேற்காடு.) (Check

Read More

ஒரு மாலைக்கு கிடைத்த மரியாதை!

பிரம்மனும் திருமாலும் ஈசனின் அடிமுடி காணாவியலாதது முதல் இறைவன் ஜோதி சொரூபம் ஏற்று திருவண்ணாமலையில் நிலைகொண்டது வரை திருக்கார்த்திகை பரணி தீபத்தின் பின்னணியில் உள்ள பல தாத்பரியங்கள் அனைத்தும் நீங்கள் அறிந்ததே. ஆனால் இவை எல்லாவற்றையும் விட மலையுச்சியில் பரணி தீபம் ஏற்றுவதன் நோக்கம் தெரியுமா? முதுமை மற்றும் உடல் குறைபாடு காரணமாக மலைக்கோவில்களில் குடிகொண்டுள்ள இறைவனை படியேறி சென்று சென்று தரிசிக்க இயலாதவர்களின் மனக்குறையை தீர்க்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டதே இந்த பரணி

Read More

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை குறிப்பாக நவக்கிரக பரிகாரத் தலங்களை தரிசித்துவிட்டு சென்னை திரும்பியாகிவிட்டது. இது எம் தங்கை குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த பயணம். முதலில் நாம் இதில் கலந்துகொள்வதாக இல்லை. ஆனால் பயணத்தில் எம் பெற்றோரும் இடம்பெற்றபடியால் அவர்களுடன் இருக்கும் பொருட்டும் தங்கை குடும்பத்தினரின் வேண்டுகொளுக்கிணங்கவும் கடைசி நேரத்தில் உடன் சென்றோம். மேலும் ஒரே கல்லில் பல மாங்காய்கள்

Read More

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

சென்ற வாரம் நடைபெற்ற நமது விருதுகள் வழங்கும் விழாவில் நாம் உரையாற்றும்போது இந்தக் கதையை கூறுவதாக இருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக கூற முடியவில்லை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட, படித்த சுயமுன்னேற்ற நீதிக் கதைகளில் மிகச் சிறந்த கதையாக இது இருக்கக்கூடும். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை இது ஏற்படுத்தக்கூடும். நம் முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த கதை இது. முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப்

Read More

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club

'திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது' என்பதற்கு உதாரணமாக விளங்குவது அருணகிரிநாதர் வாழ்க்கைஇந்த பிரார்த்தனை பதிவில் அருணகிரிநாதர் வாழ்வில் முருகன் செய்த திருவிளையாடல் ஒன்றை பார்ப்போம். உயர்குடியில் பிறந்திருந்தும் எந்த வித லட்சியமும் இன்றி பரத்தையர் வீட்டுக்கு செல்வதையே ஆனந்தமாக கருதி அருணகிரி வாழ்ந்து வந்தார். அவரிடம் செல்வம் வற்றி, உடலில் ரோகம் பீடித்த பின்னர், 'அற்ற குளத்து அறுநீர் பறவை'  போல அனைவரும் விலகிச் சென்றுவிட, ஊரார் வெறுத்து ஒதுக்க, திருவண்ணாமலை

Read More

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

இன்று மகா பெரியவா ஆராதனைத் திருநாள். அதாவது அவர் மகாசமாதி அடைந்த நாள். அவரைப் பற்றி இந்த எளியவன் என்ன செல்வது? தேடி வந்து தடுத்தாட்கொண்ட தெய்வம் அவர். நினைத்ததை நடத்தி தரும் கருணாமூர்த்தி. அவர் கொடுப்பதிலும் கருணை இருக்கும். கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கும். பொறுமையுடன் இருந்தால் அந்த பிரவாகத்தை உணரலாம். எல்லாம் அறிந்தவர். ஆனால் ஏதும் அறியாதவர் போல இருப்பார். தர்மத்தை காக்க இராமனாக அவதரித்த ஸ்ரீமன்

Read More

‘அப்பா… வேணாம்ப்பா!’ – நம் விருதுகள் பட்டியலில் ஒரு திடீர் வரவு!

இந்த ஆண்டு ரைட்மந்த்ரா விருதுகள் பட்டியலில் ஒன்பது பேர் தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விழா நெருங்கும் சமயம் அதாவது கடைசி நேரம் ஒருவர் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து பேர் இந்த விருது பெற்றனர். கடைசியாக சேர்க்கப்பட்ட அந்த நபர் யார் ? அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? தமிழகத்தில் உள்ள 7.20 கோடி மக்களில், ஒரு கோடி பேருக்கு மேல் மது பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. விவசாயத்

Read More

மாற்றமும் ஏற்றமும் தரும் மார்கழி – என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ?

மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம். இதை பீடை மாதம் என்று சொல்வார்கள். அதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். 'பீடுடைய மாதம்' என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது. பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பிய என்று அர்த்தம். 'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை புரிந்துகொள்ளுங்கள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.

Read More

அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

நமது தளத்தின் சமீபத்திய விழாவில் நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களுள் ஒன்றை உங்களிடையே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம். பாரதி தனது பாடல்கள் பலவற்றில் வலியுறுத்திய விஷயம் ஏழையின் கல்வி மற்றும் பசித்த வயிற்றுக்கு உணவு. அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். ஏழையின் கல்விக்கு உதவுவதை விட மகத்துவமான விஷயம் வேறேதும் இருக்க முடியாது என்பது அவன் தீர்ப்பு. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் பாரதி

Read More