Home > 2013 > April

மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!

இந்த தளம் துவக்கியபோது... 'இணையத்தில் ஏற்கனவே இது போன்று எண்ணற்ற ஆன்மீக / சுயமுன்னேற்ற தளங்கள் உள்ளனவே... நம்மால் என்ன பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் அல்லது வாசகர்களை பெற்றுவிட முடியும்?' என்று நினைத்தேன். ஆனாலும் ஆண்டவன் கட்டளை இது என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாது பயணத்தை துவக்கினேன். நண்பர்களின் ஆதரவும் குருமார்களின் ஆசியும் சேர்ந்துகொள்ள இதோ நம்மால் இயன்ற ஒரு சிறிய விதையை நட்டிருக்கிறோம். இது வளர்ந்து விருட்சமாவது இறைவன்

Read More

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!

ஒரு ஏழைப் பெண் தன் பகுதியில் இருந்த மளிகை கடை ஒன்றிற்கு சென்றார். அவள் முகத்தை பார்க்கும்போது அவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது. தனது கணவர் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தானும் தனது நான்கு குழந்தைகளும் பட்டினியால் வாடுவதாகவும் சில மளிகை பொருட்களை கடனாக கொடுத்து உதவும்படியும் கடைக்காரரிடம் கேட்கிறார். கடைக்காரர் அந்த பெண்ணை ஏளனமாக பார்த்து, "என்னது கடனா? உடனே இடத்தை காலி பண்ணும்மா... வந்துட்டா

Read More

பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தாயின் அரவணைப்பும் அன்பும் எப்படி 24 மணிநேரமும்  தேவைப்படும் என்பதை குழந்தை பெற்ற தாய்மார்கள் அறிவார்கள். அருகே இருந்து பார்க்கும் தந்தைமார்கள் அதை விட அதிகம் அறிவார்கள். கைக்குழந்தைகளை பொறுத்தவரை தாய் தந்தை இருவரின் அரவணைப்பு கூட சில சமயம் போதாமல் போவதுண்டு. காரணம்... குழந்தைகளின் தேவைகள் அப்படி. 24 மணி நேரமும் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். "குழந்தை ஏன் அழுகிறதோ

Read More

பௌர்ணமிகளில் சிறப்பு மிக்க சித்ரா பௌர்ணமி

அமாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பௌர்ணமிகளில்  சித்ரா பௌர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன. பூமியை சுற்றி வரும் சந்திரன் இன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார். அதாவது இன்றைய தினத்தின் சந்திர ஒளி (பூரண கலை) மற்ற பௌர்ணமிகளை விட பொலிவாக இருக்கும். பௌர்ணமி அன்று மலைக்கோவில்களுக்கு சென்று கிரிவலம் வருதல் சிறப்பு. சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருதல் பன்மடங்கு சிறப்பு. மேலும் இந்த நாளானது

Read More

எதிரிகளை வெல்வதைவிட விட நம் மனதை வென்று அடக்கியாள்வது மேலானது – மகாவீர் ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைன மத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து போதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது. அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் பெரிய கல்விமான். ஆனால், ஆணவம் மிக்கவர். அவர் மகாவீரரைச் சந்தித்து, வேதங்கள் சொல்லியுள்ளபடியே

Read More

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

* "விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?" என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்? அப்போ அவசியம் இந்த பதிவு உங்களுக்கு தான். * "என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால என்ன சார் புண்ணியம்...?" என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான். * "வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்.... வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா

Read More

அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

பிரார்த்தனை நிகழ்ந்தவுடன் நாம் அனைவரும் ஒரு உடனடி மாற்றத்தை அதிசயத்தை எதிர்பார்க்கிறோம். தவறில்லை. ஆனால்.... சரி கீழே நான் சொல்ற உண்மை சம்பவத்தை படிங்க. இதுல இருந்து ஏதாவது உங்களுக்கு புரியுதான்னு பாருங்க.... தோல்வியிலும் நன்றி அவர் அரசியல் கட்சி ஒன்றில் முன்னணி தலைவர். வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களில் நிச்சயம் அவரும் ஒருவர். ஒரு முறை பொதுத் தேர்தல் வந்தது. அவரும் அவர் கட்சியை சார்ந்தவர்களும் அவரது வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்தனர்.

Read More

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராமநவமித் திருநாளில் நிச்சயம் ஏதாவது ஒரு ராமர் கோவிலுக்கு போய் ராமனை தரிசித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காலையில் நேரமிருக்கலை. சரி சாயந்திரம் போகலாம்னு விட்டுட்டேன். நாம ஏதாவது ஒரு பிளான் பண்ணி டயத்துக்கு கிளம்பனும்னு முடிவு பண்ணா அன்னைக்கு தான் ஆபீஸ்ல அதிக வேலை கொடுப்பாங்க. இன்னைக்கும் அதே தான். அட...ராமா இது என்ன சோதனைன்னு நொந்துட்டேன். ஒரு வழியா வேலையை முடிச்சு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போதே மணி 7.30

Read More

ராமரை நம் நெஞ்சில் நிறுத்தி பட்டாபிஷேகம் செய்யும் மகா பெரியவா – ஸ்ரீ ராமநவமி ஸ்பெஷல் 1

இன்று ஸ்ரீ ராம நவமி. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இராமாவதாரத்துக்கு என்றே பல சிறப்புக்கள் உண்டு. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது எது சரி எது தவறு என்று உணர்த்துவதற்காக இறைவன் படைத்த CODE OF CONDUCT தான் வேதங்கள். ஒரு கட்டத்தில் - அதாவது திரேதா யுகத்தில் - மக்களிடையே 'வேதங்களின் படி மனிதன் வாழ்வது சாத்தியமேயில்லை.... ஏன் அந்த கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அதுப் படி வாழ்றது

Read More

ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

அது ஜெர்மனியில் உள்ள ஒரு உயர் தர பெர்ஃப்யூம்  தயாரிக்கும் நிறுவனம். தினமும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்புவார்கள். ஒரு முறை, தான் வாங்கிய பேக்கில் பெர்ஃப்யூம் இல்லையெனவும், வெறும் பாக்ஸ் தான் இருந்தது எனவும் கஸ்டமர் ஒருவர் புகார் கூறினார். அடுத்தடுத்து நாட்களில் மேலும் சிலர் இதே போல புகார் கூறவே... காலி பாக்ஸ்கள் எப்படியோ விற்பனைக்கு சென்ற யூனிட்டுகளில் கலந்துவிட்டதை கண்டுபிடித்தார்கள். கம்பெனி நிர்வாகம்

Read More

தேச விடுதலைக்காக திருமணத்தை துறந்த தியாகத்தின் சிகரம் தீரன் சின்னமலை!

இந்த தளத்தை நான் துவக்கியபோது ஒரு விஷயத்தில் மட்டும் மிக மிக உறுதியாக இருந்தேன். எந்தப் பதிவு என்று வருகிறதோ இல்லையோ.... ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்கள் பற்றிய பதிவு நிச்சயம் அவர்களின் பிறந்தநாளின் பொழுதோ அல்லது நினைவு நாளின்போழுதோ கூடுமானவரை மறக்காமல் வரவேண்டும் என்பது தான். (சற்று தாமதமாக வந்தாலும் அன்றைய தினம் எப்படியாவது சம்பந்தப்பட்ட பதிவுகள் தரமுயற்சிக்கிறேன்.

Read More

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

திருமழிசை அருள்மிகு ஜெகன்னாத பெருமாள் கோவிலில் நமது தளத்தின் சார்பாக 07/04/2013 அன்று நடைபெற்ற உழவாரப்பணி வெகு சிறப்பாக கோவிந்தனின் கருணையினால் நடந்தேறியது. முதலில் நம் பணி நடைபெறவிருந்தது மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்று. தவிர்க்க இயலாத காரணங்களினால் அங்கு முடியாமல் போக கடைசி நேரத்தில் எந்த கோவிலில் பணி செய்வது என்று சற்று குழப்பமாக இருந்தது. மேலும் அவனுக்கு பணி செய்ய அவன் இடத்தை நாம் தேர்வு செய்வதாவது?

Read More

“ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல!” டாக்டர் அம்பேத்கர்

பாபாசாகேப் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கர் நம் பாரதம் கண்ட ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர். இந்திய சட்ட நிபுணர், அரசியல் தலைவர், தத்துவவாதி, மாந்தவியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேச்சாளர், பொருளாதார மேதை, பள்ளி ஆசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் என் பன்முகம் கொண்டவர். டாக்டர்.அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

Read More

மகா பெரியவாவும் தமிழ் புத்தாண்டும்! MUST READ!!

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டை எல்லோரும் வரவேற்று கொண்டாடும் இந்த தருணத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா அவர்கள் தாம் வாழ்ந்தபோது சங்கர மடத்தில் தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடினார் என்று பார்ப்போமா? முக்கிய நாள் மற்றும் விசேஷங்களின்போது நாம் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அதை வைத்தே தெரிந்துகொள்ளலாம். மகா பெரியவா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விதத்தை பற்றி படிக்கும்போது கடந்த ஆண்டுகளில் நாம் புத்தாண்டுகளை

Read More