Home > 2013 > January

காதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்!

சென்ற மாதம் ஒரு நாள், எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பிரபல நடிகருடன் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 'இப்படி ஒரு தளத்தை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்' என்று அவரிடம் கூறியவுடன், "நீ உடனே என் வீட்டிற்கு வா; ஆன்மீகத்தை பற்றி நான் உனக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறேன்" என்று கூறினார். எதிர்பாராத இந்த அழைப்பால் எனக்கு ஒரே சந்தோஷம். தேடி வரும் வாய்ப்பை எதற்கு விடுவானேன் என்று அவருடனான சந்திப்புக்கு

Read More

யாருக்கில்லைப் போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்? ஓப்ரா வின்ஃப்ரே வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

ஓப்ரா வின்ஃப்ரே - அமெரிக்க தொலைகாட்சி மற்றும் உலகத் தொலைகாட்சி நேயர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். இந்த உலகின் கோடீஸ்வர பெண்களில் ஒருவர். எந்த சூழ்நிலையில் ஒருவர் பிறந்தாலும் வளர்ந்தாலும் அவர்களும் ஒரு நாள் நிச்சயம் உலகம் போற்றும் சாதனையாளர்களாக வர முடியும் என்பதற்கு நேரடி உதாரணம் இவர். இன்று - ஜனவரி 29 - இவரது பிறந்த நாள். ஒரு வறுமையான கருப்பினக் குடும்பத்தில் பிறந்து, மிகத் துயரமான

Read More

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கும் செல்வி.பிரேமாவின் சிறப்பு பேட்டியை நம் தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது நினைவிருக்கலாம். வெற்றியாளர்களை பற்றி எத்தனை முறை படித்தால் என்ன? திகட்டவா போகிறது? அதுவும் வறுமையிலும் போராடி வெற்றி பெற்றுள்ள பிரேமாவின் சரித்திரத்தை திரும்ப திரும்ப படிக்கவேண்டும். நம்மை சார்ஜ் செய்துகொள்ளவேண்டும். கீழே காணும் செய்தியில் பிரேமாவின் தந்தை கூறியுள்ளதை படியுங்கள். //"எனக்கு இதைவிட வேறென்ன சார் வேண்டும். வாழ்க்கையில் நான்

Read More

குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு!

தைப்பூசத்தையொட்டி இந்த பதிவை சற்று முன்னரோ அல்லது தைப்பூசம் தினத்தன்றோ அளிக்க எண்ணியிருந்தேன். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களினால் சற்று தாமதமாகவிட்டது. இந்த பதிவை படிக்கும்போதே குமரன் குன்றத்துக்கு நீங்கள் சென்று வந்ததைப் போல உணர்ந்தால் நான் தன்யனாவேன். தாமதத்திற்கு முருகப் பெருமான் மன்னிக்க வேண்டுகிறேன். படப்பை மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியானமந்திர பயணம் பற்றி திட்டமிட்டவுடன் தைப்பூசம் விரைவில் வருகிறதே அதையொட்டி நாம் போகும் வழியில் ஏதாவது முருகன் கோவில்

Read More

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

நம் நாட்டில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மிக மிக கடுமையான தேர்வு என்று கருதப்படுவது சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வு. 21 வயதில் எழுத ஆரம்பித்து தொடர்ந்து எழுதி எழுதி 60 வயது கடந்தும் கூட அதை பாஸ் செய்ய முடியாது தவிப்பவர்கள் பலரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அக்கவுண்டன்சியில் புலி என்று சொல்லப்படுபவர்கள் கூட சற்று கிலியோடு பார்க்கும் தேர்வு இது. இந்த தேர்வை மும்பையை ஒரு ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா

Read More

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. அந்த தம்பதிகள் இருவரும் புதிதாக மணமானவர்கள். கணவன் அடுத்த நாள் சபரிமலைக்கு புறப்படவிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரது புது மனைவிக்கு கைகள் இரண்டிலும் - தோள்பட்டையிலிருந்து கீழே விரல்கள் வரை - ஏதோ அலர்ஜி ஏற்பட்டு எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது காயத்தில் மிளகாய்த் தூளை தடவியது போன்ற ஒரு எரிச்சல். காரணம் என்ன ஏது என்று தெரியவில்லை. உடனே மருத்துவமனைக்கு

Read More

நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?

மனுஷனுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னா அதை சில அறிகுறிகள் வெச்சி தெரிஞ்சிக்கலாம். 'கேடு வரும் பின்னே மதி கெட்டுவிடும் முன்னே' அப்படின்னு பொதுவா சொல்வாங்க. சனிபெயர்ச்சி அல்லது ஜோதிட ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட ஆரம்பிக்கும். நவக்கிரகங்கள் நம்மை ஆட்டிபடைத்து தீய பலன்களையோ நல்ல பலன்களையோ தருவது எப்படித் தெரியுமா? நம் மனதில் தோன்றும் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி தான். எண்ணம் மாறினாலே எல்லாமே

Read More

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

"தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும். கழுகு தூக்கினும் குஞ்சுக்காக துடித்து எழும் கோழி. சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட திருப்பித்தாக்கும். சாக்கடை புழுக்களல்ல நீங்கள். சரித்திரத்தின் சக்கரங்கள்"  என்று முழங்கிய இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்த நாள் இன்று. 'ஜெய் ஹிந்த்' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய்

Read More

நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1

ஜனவரி 20, ஞாயிறன்று நாம் திட்டமிட்டதைவிட சிறப்பாக படப்பை - மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் முடிவுற்றது. போனஸாக வழியில் இருந்த குன்று முருகன் கோவில் ஒன்று + கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் & விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றையும் தரிசித்தோம். பர்சனல் கமிட்மென்ட் காரணமாக இதற்கு முன்பு நாம் இருமுறை இந்த இடத்திற்கு சென்றபோதும் என் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களில் நண்பர் சிட்டியும் ஒருவர். மகாவதார் பாபாஜியின்

Read More

முற்றுப்புள்ளியில் வாழ்க்கையை தொடங்கிய அதிசய மனிதர்

"ஒன்னு விடாம எல்லா வித்தைகளையும் செஞ்சு பார்த்துட்டேன் சார்.. நோ யூஸ்....  தொட்டது எல்லாத்துலயும் தோல்வி தான். இனிமே என்னால எந்த நஷ்டத்தையும் தாங்க முடியாது... இனிமே எப்படி போறதுன்னும் தெரியலே.." என்னும் ஒரு முற்றுப்புள்ளி நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் (அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) பலர் உண்டு. அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கையில் உடனடியாக ஒரு மிகப் பெரிய திருப்பத்தை பார்க்கவேண்டும் என்றால் - அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். எதையும் நேர்மறையாக (பாஸிட்டிவ்)

Read More

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

"எல்லாமே விதிப்படி தான் நடக்குது... நம்ம ஜாதகத்துல கட்டம் என்ன சொல்லுதோ அதுப்படி தான் எல்லாம் அமையுதுங்குறப்போ என்ன கோவிலுக்கு போய் என்ன சார் பலன்? என்ன பரிகாரம் செஞ்சி என்ன மாறிடப்போது? என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும் சார்" - இது போன்ற புலம்பல்களை நாம் நம்மை சுற்றிலும் அதிகம் கேட்பதுண்டு. ஏன் நாமே கூட சில சமயம் விரக்தியில் அப்படி புலம்புவதுண்டு. என்றாலும் அதில் உள்ள

Read More

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

நம்மை சுற்றி எத்தனையோ அநீதிகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். தீயவர்கள் சுகப்படுகிறார்கள். அதர்மம் அரசாள்கிறது. ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு ஏன் இந்த கதி என்று நம் மனம் குமுறும் அளவுக்கு நாளிதழ்களை புரட்டினால் விபத்து, கொலை, கற்பழிப்பு போன்ற செய்திகளே பிரதானமாக கண்ணில் படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாது, 'எனக்கு நடக்காதவரைக்கும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை' என்று குதிரைக்கு கடிவாளம் போட்டபடி செல்பவர்களை விடுங்கள்.... ஆனால்

Read More

படப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!

சென்னை நகருக்கே வெளியே, பல கி.மீ. தொலைவில் (தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில்) உள்ள படப்பையில் மலைப்பட்டு கிராமத்தில் யோகதா சத்சங்க நிறுவனத்தின் தியான மந்திர் & ஆஸ்ரமம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நெருங்கிய நண்பர் திரு.ஹரி நிர்மாணித்திருக்கும் இந்த தியான மந்திருக்கு இதற்கு முன்பு நாம் பலமுறை சென்று வந்திருக்கிறோம். செல்லும் வழி நெடுக பசுமை.... தூய்மையான காற்று என்று நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் ஒரு உன்னத

Read More

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

சென்னையில் 36 வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் துவங்கும் இந்த புத்தகக் கண்காட்சி சுமார் 15 நாட்கள் நடைபெறும். புத்தக ஆர்வலர்களை பொருத்தவரை இது மிகப் பெரிய விருந்து. ஒரே இடத்தில் அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைப்போடு மட்டுமல்லாமல் 10% டிஸ்கவுன்ட் வேறு. சொல்லவேண்டுமா கூட்டத்தை பற்றி? ஐயா திரு.பாலம் கலியாணசுந்தரம் சென்ற வாரம் ஒரு நாள் அலைபேசியில் நம்மை அழைத்தார். சென்னையில் அடுத்த

Read More