Home > 2012 > December

யார் தலைவன் ? புத்தாண்டு ஸ்பெஷல் பதிவு!

தலைமைப் பண்புக்குரிய முக்கிய குணம் நேர்மை. தலைவனாக வரக்கூடிய ஒருவன் நிச்சயம் நேர்மையுடன் இருக்கவேண்டும். "ஆபீஸ்லயும் சர... சமூகத்திலும் சரி... நான் நேர்மையான ஆளுங்க. ஆனா என்ன பிரயோஜனம்? அவமானமும், ஏளனமும் தான் மிச்சம்" என்று அநேகர் நொந்து கொள்வதுண்டு. கீழ்கண்ட கதையை முதல்ல படிங்க. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx யார் தலைவன் ? - (குட்டிக்கதை) ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில்

Read More

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை மட்டுமல்ல வாழ்க்கையையே இழந்து தவிக்கும் சகோதரி வினோதினிக்கு சிகிச்சை செலவுக்காக தங்களால் இயன்ற பொருளுதவியை அவரது தந்தை ஜெயபாலன் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx இறைவா... உனக்கு இரக்கமில்லையா? வினோதினி ஏற்பட்ட சோகம் நம் முந்தைய பதிவு.. http://rightmantra.com/?p=1940 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx திரு.சிவா என்பவர் நமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில்.... "அண்ணா... நான் தங்கள் பதிவை பார்த்தேன். வினோதினிக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் பெரிய தொகை எதுவும் தந்து

Read More

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டு குணங்கள்

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய குணங்கள் : பொறுமை + சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் தான். நேர்மையாக நடந்துகொள்பவர்கள் தோல்வியடைவதும் தீயவர்கள் வெற்றி பெற்று சந்தோஷத்தில் திளைப்பதும் - இரண்டுமே தற்காலிகமான ஒன்று தான். ஆகவே தவறான வழிகளில் சென்று நம்மை நிரூபிப்பதை விட நேர்மையான வழிகளில் சென்று நமது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். "நேர்வழியில் தான் செல்கிறோமே..... ஆரம்பத்திலேயே நமது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாதா? ஏன் அதை இறைவன் தாமதப்படுத்துகின்றான்?" என்றால்....

Read More

கண்ணெதிரே கருகும் மொட்டு – கண்ணீரை துடைக்க கைகொடுங்கள்!

நாமெல்லாம் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் போராடுபவர்கள் நம்மை சுற்றி எண்ணற்றோர் உள்ளனர். அந்த வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள். முதலில் இறைவனுக்கு அதற்காக நன்றி சொல்வோம். நோய், விபத்து, போர் என்று நம்மை சுற்றி அன்றாடம் பாதிக்கப்படும் ஜீவன்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி போராடுபவர்களுக்கு இந்த புத்தாண்டு முதல் நம்மால் இயன்ற சிறிய உதவி ஏதேனும் செய்ய உறுதி ஏற்போம். அள்ளிக்கொடுக்கவேண்டாம். கிள்ளிக்கொடுத்தால் கூட போதும். சிறு துளி பெருவெள்ளமாகி சம்பந்தப்பட்டவர்களுக்கு

Read More

பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்!

குறுக்கு வழிகளில் சென்று காரியங்களை சாதித்து கொள்பவர்கள் புத்திசாலிகள் என்றும் நேர்மையாக நடந்து காரியம் சாதித்துக்கொள்ள சிரமப்படுகிறவர்கள் ஏமாளிகள் என்றும் ஒரு அபிப்ராயம் பொதுவாக பலருக்கு இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல, குறுக்கு வழிகளில் சென்று அற்பமான காரியங்களை தான் சாதித்துக்கொள்ளமுடியுமே தவிர மகத்தான காரியங்கள் எதையும் நிச்சயம் சாதிக்க முடியாது. மேலும் கஷ்டப்படாமல் ஒரு காரியத்தை சாதிக்கும் மனோபாவம் என்பது நாளடைவில் நம்மை முடக்கிபோட்டுவிடும். நமது திறமையும் விடாமுயற்சியும் நமக்கே

Read More

தெய்வானாம் மானுஷ ரூபாம் – (உண்மைச் சம்பவம்) – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

ஒவ்வொரு மதத்திலும் அதை பின்பற்றுகிறவர்கள் "தங்கள் மதம் தான் உயர்ந்தது" என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் மதத்திற்கு பெருமை தேடித் தர முயற்சிக்கின்றனர். அப்படி பெருமை தேடும் முயற்சியில் அவர்கள் எதை செய்துவிட்டு பெருமை தேடுகின்றனர் என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது. கீழ்கண்ட உண்மை சம்பவத்தை படியுங்கள். ஒவ்வொரு மதத்தினரும் இது போன்ற விஷயங்களில் போட்டியிட்டால் இந்த உலகம் முழுக்க அன்பும், அமைதியும், சமாதானம் தவழும் என்பதில் ஐயமில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பையும்,

Read More

அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

மார்கழி மாசம் ஆரம்பிச்சதுல இருந்து நானும் நண்பர் மாரீஸ் கண்ணனும் விஸ்வரூப தரிசனத்துக்காக (கோவல் திறந்தவுடன் கிடைக்கும் முதல் தரிசனம்) தினமும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு போய்கிட்டிருக்கோம். இது பற்றி ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். பேர் தான் கோதண்டராமர் கோவில். மற்றபடி இங்கே ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் தான் மெயின் DEITY.  (ராமருக்கு தனி சன்னதி இருக்கு). தினமும் காலை 5.30 மணிக்கு கோ-பூஜையுடன் கூடிய விஸ்வரூப தரிசனத்தை முடித்து, பின்னர் தீர்த்தப்

Read More

‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….

'கந்தன் கருணை' படத்துல "உலகத்திலேயே பெரியது என்ன?" அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான்  கேட்கும்போது  ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா? பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும்

Read More

ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!

இந்த மார்கழி மாசம் முழுக்க லௌகீக விஷயங்களை குறைச்சுகிட்டு கோவிலுக்கு போகணும். அதற்க்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம் இது. மாதம் முழுக்க போகமுடியதவங்க... என்னைக்கெல்லாம் முடியுமோ அன்னைக்கு போங்க. அதுவும் முடியாதவங்க... அவசியம் சொர்க்க வாசல் திறப்புக்காகவாவது போங்க. தமிழகத்தில் உள்ள வைணவத்  திருத்தலங்களில் நாளை காலை (Dec 24, 2012) பிரம்ம முஹூர்த்தத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒருவேளை இந்தப் பதிவை நீங்கள் தாமதமாக பார்க்க நேர்ந்தால் பரவாயில்லே.. அடுத்த வருஷம்

Read More

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ். மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது.

Read More

நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?

இந்த தளத்தை ஆரம்பிக்கும் சமயம், எனது இன்ஸ்பிரேஷன்களில் ஒருவரான திரு.நாராயணசாமி (Shivatemples.com) அவர்களை சந்தித்து ஆசி பெற சென்றேன். அப்போது வாழ்த்திய அவர், "இந்த தளம் எல்லாவித தடைகளையும் தாண்டி, வெற்றிகரமாக அமைய சிவன் உங்களுக்கு அருள் புரிவார்" என்று கூறி வாழ்த்தினார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. "உங்கள் ஆசி கிடைத்ததில் சந்தோஷம் சார். ஆனால், நான் இப்போ தான் நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறேன். இங்கேயும் தடைகள் அது இது

Read More

மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை!

'சிரஞ்சீவி' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்பர். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12

Read More

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

'பர்சனாலிட்டி' அதாவது 'ஆளுமை' என்பது ஏதோ தோற்றத்தையும், நிறத்தையும், டிப் டாப் உடைகளையும், ஆங்கில FLUENCY யையும் வைத்து மட்டும் வருவதில்லை. அது பல விஷயங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் ஒருவரை ஈர்க்க வேண்டுமானால் உங்கள் தோற்றம் பயன்படலாம். ஆனால் அந்த ஈர்ப்பை மரியாதையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் பர்சனாலிட்டி மட்டுமே உதவும். தோற்றம் உங்கள் உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தும். பர்சனாலிட்டி உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும். அது தான் விஷயம். எனவே பர்சனாலிட்டியில் சிறந்து

Read More

மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

மார்கழி மாத மகத்துவம் பத்தி பதிவு போட்டாச்சு. போட்டா போதுமா? நாம அது மாதிரி நடந்துக்கணும் இல்லையா? அதுனால் எப்படியாவது காலைல 4.30 மணிக்கு எழுந்துருச்சு குளிச்சு ரெடியாகி விஸ்வரூப தரிசனத்துக்கு போய்டணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன். கம்பெனிக்கு யாரை கூப்பிடுறது? யாராவது ஒருத்தர் வந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. எதேச்சையா நண்பர் மாரீஸ் கண்ணன் கிட்டே நைட் பேசும்போது, (நந்தம்பாக்கம் கோவிலுக்கு நம்ம கூட வந்தாரே அவரு தான்!) மார்கழி பதிவு பத்தி பேச்சு

Read More