Home > சுய முன்னேற்றம்

முட்டாளின் அடையாளம் எது?

தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். "இன்று ஒரு தகவல்" என்று வானொலியில் தினந்தோறும் அற்புதமான கருத்துக்களை கதைகளை எளிமையாக பாமரருக்கும் புரியும் வண்ணம் சொல்லி வந்தவர். சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை குறித்து அவர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார். தினமணியில் அவர் அப்படி எழுதிய நம்மைக் கவர்ந்த கட்டுரை ஒன்றை இங்கே தருகிறோம். முட்டாளின் அடையாளம் எது? "சார் இந்த உலகத்திலே அறிவாளிகளைவிட முட்டாள்கள்கிட்டதான் அதிக எச்சரிக்கையா நடந்துக்க வேண்டியிருக்கு" என்றார் அனுபவப்பட்ட ஒருத்தர். "அப்படிங்களா?"

Read More

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

இந்தப் பதிவு இன்றைய தேவை. நம் ஒட்டுமொத்த எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. ஒரு தேர்தலில் ராட்சத பலத்துடன் மெஜாரிட்டி பெறும் ஒரு அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்கள் வாங்கி மண்ணை கவ்வுவது எப்படி? அதே போல ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த விழிப்புணர்வும், எழுச்சியும் கோடிக்கணக்கான மக்களிடம் வெகு சீக்கிரம் பரவுவது எப்படி? எத்தனையோ பேர் சொல்லியும் மக்களிடம் எடுபடாத கருத்துக்கள், ஒரு சிலர் சொல்லும்போது மட்டும்

Read More

வதந்தி சூழ் உலகு – நாம் எப்படி கரைசேர்வது? MUST READ

ஒரு காலத்தில் சாதாரண அலைபேசிகள் கூட ஆடம்பரமாக கருதப்பட்டன. ஆனால் இன்று ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் தொடுதிரை அலைபேசிகள் அத்தியாவசியமாகி அனைவரின் கைகளிலும் புழங்குகின்றனது. வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ அனைவருக்கும் முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் அக்கவுண்ட் இருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியிட்டு சலுகைகளை வாரி வழங்கின. இப்போது ஜியோ சிம் உபயம் அனைவரும் சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கியிருக்கின்றனர். இதனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஏதேனும் பயனுள்ளதா? நம் திறமைகளை வெளிப்படுத்த அவற்றை

Read More

ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து, "அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?" என ஆதங்கமாகக் கேட்டார். "எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது", என அப்பா வருத்தமான

Read More

I am blessed always! Welcome 2017

சென்ற புத்தாண்டுக்கு 'பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!' என்ற பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஸத்ஸங்கம் அதாவது நல்லவர் சேர்க்கை என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. ஒரே ஒரு நல்லவர் நட்பு போதும் உங்கள் வாழ்க்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுவிடும். ஆனால் தீயவர்கள் சேர்க்கை உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும். எனவே இந்த புத்தாண்டில் நல்லவர்கள் நட்பை ஏற்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை மனதுக்குள் விதையுங்கள். சரி ஓ.கே. புத்தாண்டு

Read More

‘நீங்களும் சாதிக்கலாம்’ – மனங்களை புரட்டிவிட்டுச் சென்ற ஒரு புயல்!

நமது பாரதி விழாவில் திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். (வருமானவரி இணை ஆணையர்) அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது எளிமையும், பண்பும், அபாரமான உரையும், வாசகர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே | சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே || ******************************************************************** யார் இந்த நந்தகுமார்? 'கற்றலில் குறைபாடு' காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்த நேர்ந்த இவர் அதன் பிறகு லாட்டரி விற்பது,

Read More

அர்த்தமுள்ள கல்யாணப் பரிசு – மகள் திருமணத்தில் தொழிலதிபர் செய்த புரட்சி!

ஒரு திருமணத்தின் மாண்பு என்பது எது எத்தனை விமரிசையாக நடைபெறுகிறது எவ்வளவு செலவு செய்யப்படுகிறது எத்தனை வி.ஐ.பி.க்கள் வந்தார்கள் என்பதில் இல்லை. அந்த மணமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. திருமணத்தை பிரமாண்டமாக நடத்திவிடுவதால் அது வெற்றி என்கிற அர்த்தம் இல்லை. ஒருவருக்கொருவர் எந்தளவு அணுசரணையாக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. திருமணங்களில் ஆடம்பரங்களை தவிர்த்து கூடுமானவரை எளிமையாக நடத்தி, பணத்தை மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் அன்று பலர்

Read More

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

நமக்கு என்ன நடக்கிறது என்பது வாழ்க்கை அல்ல. நடப்பவற்றுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. விரும்பியவற்றை எல்லாம் அடையவும் முடியாது. விரும்பியபடி ஒன்று அமையும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட விரும்பாத ஒன்று அமையும் போது கற்றுக்கொள்ளும் பாடம் பல நேரங்களில் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நாம் ஏற்கனவே சொன்னது போல, கற்றுக்கொள்ள தயார் என்றால் நாம் ஒரு புழுவிடமிருந்து கூட

Read More

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

தமிழகத்திலேயே அதிகம் விற்பனையாகும் வார இதழான 'குமுதம்' இதழின் நிறுவன ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள். 1947 ஆம் ஆண்டு குமுதம் துவக்கப்பட்ட போது முதல் முறை சந்தைக்கு அனுப்பிய பல இதழ்கள் விற்பனையாகாமல் திரும்பி வந்தது. எஸ்.ஏ.பி. சோர்ந்துவிடவில்லை. வித்தியாசமாக சிந்தித்து கடுமையாக உழைத்து அதை தமிழகத்தின் அதிகம் விற்பனையாகும் வார இதழாக கொண்டு வந்தார். தமிழக எழுத்தாளர்கள் யாவரும் ஆன்மீகமோ, புலனாய்வோ, அரசியலோ அல்லது இலக்கியமோ அவர்கள்

Read More

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

நேற்றைக்கு மாலை சுமார் ஏழு மணியளவில் மும்பையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டார். சமீபத்தில் நமது முகநூல் பகிர்வு (தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?) ஒன்றை பார்க்க நேர்ந்ததாகவும் நம்மிடம் பேச விரும்புவதாகவும் சொன்னார். கந்தசஷ்டி தரிசனத்திற்காக அப்போது போரூர் முருகன் கோவிலில் இருந்தபடியால் "கோவிலில் இருக்கிறேன். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கூப்பிடமுடியுமா? என்று கேட்டோம். நிச்சயம் அழைப்பதாக கூறியவர் அதன் படி இரவு 9.00 மணியளவில் அழைத்தார். மனிதர்

Read More

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!

வாழ்வில் சில கேள்விகளுக்கு விடை உடனே கிடைப்பதில்லை. ஏன் இப்படி நடக்கிறது? நாம் எந்த தவறும் செய்யவில்லையே, இருந்தும் ஏன் இது நிகழ்ந்தது? இதற்கு நாம் எந்தளவு பொறுப்பாளி? இதை நாம் எப்படி எதிர்கொள்வது? நமது எதிர்வினை சரிதானா? அல்லது வழக்கம்போல் மௌனமாய் கடந்து போய்விடுவோமா? அப்படி செல்வதும் சரி தானா? இவ்வாறாக... மண்டையை உடைக்கும் அளவுக்கு யோசித்தும் சில விஷயங்களை புரிந்துகொள்ளவே முடியாது. 'சரி நமது வேலையை கவனிப்போம்... சுறுசுறுப்பான தேனீக்கு

Read More

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’! – ஆயுத பூஜை ஸ்பெஷல் 2

மாதக்கடைசி தேவைகளை சமாளிக்க ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று தவித்த அந்த நடுத்தரக் குடும்பத்து இளைஞர், பொருட்ளை தானே தயாரித்து சைக்கிள் சென்று வீடு வீடாக டெலிவரி செய்து வந்தார். இன்று இந்தியாவில் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவரது நிறுவனம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. யார் இந்த இமாலய சாதனைக்கு சொந்தக்காரர்? குஜராத் மாநிலத்தில் ருப்பூர் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கர்சன்பாய்

Read More

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்! ஆயுத பூஜை SPL குட்டிக்கதை – 1

இந்த உலகமும் அதில் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஆசிரியர்கள் என்கிற பக்குவம் மட்டும் ஒருவர்க்கு வந்துவிட்டால், வாழ்க்கையே மிகவும் சுவாரஸ்யமாகிவிடும். ஒன்று வெற்றிபெறுவீர்கள். அல்லது கற்றுக்கொள்வீர்கள். இதில் இரண்டுமே தோல்வி இல்லை. ஏமாற்றங்கள் கூட புதுப்புது வாய்ப்புக்களுக்கு திறவுகோலாகிவிடும். கண்களை திறந்து பாருங்கள். வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. வாழநினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்?  அந்த பன்னாட்டு நிறுவனத்தின் எதிரே ஒரு சாலையோரக் கடையில் ஒருவர் தினசரி மசால் வடை விற்பது வாடிக்கை. வடை

Read More

வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல!

வாழ்க்கை எப்போது, யாரை, எங்கே, ஏற்றிவைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று குப்பையில் கிடப்பவர் நாளை கோபுரக் கலசமாக மாறலாம். எனவே யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்வாக நினைக்கக்கூடாது. மாரியப்பனின் வாழ்க்கை சொல்லு பாடம் அது தான். யார் இந்த மாரியப்பன்? அப்படி என்ன செய்துவிட்டார்? 31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச்

Read More