Home > ஆலய தரிசனம்

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

எந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது. ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட இந்த ஐந்தாண்டுகளில் பல சிவாலயங்களை பாடல் பெற்ற தலங்களை தரிசித்துவிட்டோம். ஒவ்வொரு தலமும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் சிறப்பை பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? இந்த ஆலயங்கள் எல்லாம் ஏதோ பொருளால் கட்டப்பட்டவை என்று பலர் கருதுகிறார்கள். இல்லை. இவை அருளால் கட்டப்பட்டவை. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களை ஒப்பந்தம் செய்தாலும்

Read More

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

புண்ணிய ஷேத்ரங்களுக்கும் திருத்தலங்களுக்கும் வயதாகி பேரன் பேத்திகள் எடுத்த பின்பு தான் செல்லவேண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. இதைவிட மிகப் பெரிய அபத்தம் வேறு எதுவும் இல்லை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே திருத்தலங்களுக்கு சென்று புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைக்கும்போதே சேமிப்பு கணக்கில் பணம் சேர்ப்பது போலத் தான் இது. அது பணம். இது புண்ணியம். புண்ணியம் சேர்க்க பல மார்க்கங்கள் இருந்தாலும் திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து

Read More

திருப்பம் தரும் தாருகாவனத்தில் சில மணித்துளிகள்!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். 'திருப்பராய்த்துறை தாருகவனேஸ்வரர்' சென்ற மாதம் தான் நமக்கு அறிமுகமானார். அதற்குள் இரண்டு முறை அங்கு சென்றுவந்துவிட்டோம். இனி திருச்சி சென்றால் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரரை தரிசிக்காமல் நம்மால் இருக்கவேமுடியாது. நமக்கு அத்தனை நெருக்கமாகிவிட்டார் இத்தலத்து இறைவன். இந்த ஆலய தரிசன பதிவை படியுங்கள். உங்களுக்கும் நெருக்கமாகிவிடுவார். பராய்த்துறைநாதர் நமக்கு எப்படி அறிமுகமானார்? நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பான். அது

Read More

சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு!

சுந்தரருக்கு சிவபெருமானுக்கும் வழக்கு நடைபெற்ற வரலாறு மிகவும் சுவையானது. சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) கோவில் முன்பாக உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் வழக்கு நடைபெற்றது. அது முதல் அந்த மண்டபம் 'வழக்காடு மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்லவேண்டும் அந்த இடத்தை தரிசித்து உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை. சமீபத்திய திருவெண்ணெய்நல்லூர் பயணத்தின்போது ஈசன் அதை

Read More

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கூவம் சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், (சென்னை நகரம் ஜனத்தொகை பெருக்கத்தில் சிக்குவதற்கு முன்னர்) ஒரு அற்புதமான நன்னீர் பாயும் நதியாக இருந்தது. ஆனால் இன்றோ நாகரீகத்தின் வளர்ச்சியால் (?!) கழிவு நீர் கலக்கும் ஒரு சாக்கடையாக மாறிவிட்டது. 'கூவம்' ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? >>>> சென்ற ஞாயிறு

Read More

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று நம் தளத்திற்கு பிறந்த நாள். இன்று நம் தளம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. விரிவான பதிவு பின்னர். இந்த நன்னாளில் நமக்கு என்றும் துணையாக நின்று வழிகாட்டி வரும் ஆனைமுகனை நினைவுகூரும் விதமாக ஒரு அற்புதமான தலத்தை பற்றி பார்ப்போம். - ஆசிரியர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நாம் காணவிருப்பது தமிழகத்திலேயே ஒரே சோடச கணபதி தலம் என்று பெயர் பெற்ற திருமக்கோட்டை

Read More

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

இன்றைக்கு துறவறம் என்றால் அவரவர் சௌகரியம் போல வாழ்கிறார்கள் உடுத்துகிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் 'துறவு' என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பட்டினத்து அடிகள் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார். சென்னையில் திருவொற்றியூரில் கடற்கரையில் பட்டினத்தாருக்கு கோவில் உள்ளது. இவரது பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. சொற்சுவையும், பொருட்செறிவும் அமைந்துள்ள இவரது பாடல்கள் மிக மிக எளிமையானவை. பாமரர்க்கும் எளிதில் விளங்குபவை. நேற்று முன்தினம் ஆடி உத்திராடம் அவரது குருபூஜை.

Read More

மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!

இன்று ஆடிகிருத்திகை. இந்நன்னாளில் இப்பதிவை அளிக்க முடிந்தது முருகன் திருவருளே. சென்னையில் அஷ்டலக்ஷ்மிகளும் கோயில் கொண்டுள்ள பெசன்ட் நகரில் அக்கோவிலுக்கு அருகே அதே கடற்கரை ஓரம் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகளும் அடங்கிய அழகிய கோவில் ஒன்று உள்ளது தெரியுமா! அதுவும் காஞ்சி மகா பெரியவாவின் அருள்வாக்கிற்கிணங்க இந்த கோவில் கட்டப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பொதுவாகவே நமது ரைட்மந்த்ரா தளத்தில் பாரம்பரியம் மிக்க தொன்மையான ஆலயங்கள்

Read More

சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

சிவாலயங்களை பொதுவாக சைவ சமயக் குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் பாடியிருக்கின்றனர். ஆனால், சித்தர்கள் பாடிய சிவாலயம் ஒன்று இருக்கிறது தெரியுமா? திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் சோளீஸ்வரர் தான் அந்த பெருமையை உடையவர். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1112ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான கோயில், நரம்புக் கோளாறுகளை நீக்கும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டது காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் திருக்கோயில். இன்றைய பேரம்பாக்கம், சோழர் காலத்தில்

Read More

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

1965 ஆம் ஆண்டு. மகா பெரியவா ஆந்திராவில் தனது யாத்திரையை முடித்துக்கொண்டு தமிழகத்திற்குள் வந்துகொண்டிருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் போக்குவரத்து வசதி கிடையாது. பெரியவா செல்ல செல்ல அவருடன் மடத்து சிப்பந்திகள் பத்து பன்னிரெண்டு பேர் செல்வார்கள். இரவு மற்றும் அதிகாலைப் பொழுதென்றால், வெளிச்சத்திற்கு அரிக்கேன் விளக்கை இருவர் தூக்கிச் செல்வார்கள். யாத்திரை போகும் வழியில் ஆங்காங்கு கேம்ப் செய்வார். சில சமயம் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிடுவதுண்டு. அந்த பகுதி மக்களுக்கு

Read More

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலை கிரிவலம் முடிந்தவுடன் நாங்கள் புறப்பட்ட இடமான வள்ளித் தவப்பீடதிற்கு வந்து சேர்ந்தோம். திரு.சக்திவேல் முருகன் அவர்களின் தலைமையில் சொற்பொழிவும் பயிலரங்கமும் நடைபெற்றது. அனைத்தும் முடிந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டோம். அன்றிரவு நல்ல உறக்கம். பின்னே அன்னை வள்ளியின் மடியல்லவா அந்த பூமி...! உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு நாள் வள்ளிமலை வந்து வழிபட்டுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும். அதன் பின்னர் நிம்மதியான உறக்கம் கியாரண்டி. இதற்கிடையே நாமும் நண்பர்

Read More

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

நாகப்பட்டினம் - திருவாரூர் மார்க்கத்தில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம் திருப்புகலூர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் பாடப்பெற்ற தலம். காவிரி தென்கரை தலங்களில் இது 75 ஆவது தலமாகும். திருப்புகலூர் செல்லும் பாதையே, வாய்க்கால்களும், வயல்களும் நிரம்பிய பசுமைப் பாதை தான். இறைவனின் திருவடிகளை புகலாக அமைந்த தலம் என்பதால் புகலூர் என்று பெயர். திருநாவுக்கரசர் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்த திருத்தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு

Read More

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

இது வள்ளிமலையில் சென்ற ஆண்டு நாம் கலந்துகொண்ட கிரிவலம் மற்றும் படி உற்சவம் பற்றிய பதிவு. ஏற்கனவே இரண்டு அத்தியாயங்கள் இது தொடர்பாக அளித்திருக்கிறோம். அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல...! வள்ளிமலை ஒரு அற்புதமான பதி. பல மகத்துவங்களை

Read More

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

வருகிற ஏப்ரல் 15 - ஸ்ரீராமநவமி. அதையொட்டி இந்த விசேஷ பதிவு அளிக்கப்படுகிறது. வேதநெறியை காக்கவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் இதுவரை ஸ்ரீமந் நாராயணன் எடுத்துள்ள ஒன்பது அவதாரங்களில் முதன்மையானது ராமாவதாரம் தான். காரணம் இறைவன் ராமாவதாரம் முழுவதிலுமே தனது இறைசக்தியை பிரயோகிக்காமல் மானிடனாகவே வாழ்ந்து, மானிடன் படும் துன்பங்களை தானும் பட்டு தர்மம் காக்க போராடினார். அகலிகை சாபவிமோசனம், ஜடாயு மோட்சம் உள்ளிட்ட சில சம்பவங்களில் அவரையுமறியாமல் அவரது 'நாராயணத்துவம்' வெளிப்பட்டுவிட்டது என்பதே

Read More