Home > பிரார்த்தனை

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

நம் நண்பர் சுந்தர் மறைவு ஏற்று கொள்ள முடியாத பெரிய இழப்பு. நண்பர்களும், ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய வெற்றிடம் தான் தெரிகிறது. அவரின் இந்த அசுர மாற்றம் கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்டது. அவர் பிறவியிலேயே நல்ல எழுத்தாளர். சூப்பர் ஸ்டார் தளத்திலும் ஏகப்பட்ட வாசர்கள் உண்டு. www.rightmantra.com எந்த அளவிற்கு பரவியதோ அந்த அளவிற்கும் மேல் ரைட் மந்த்ரா சுந்தர்ஜி யின் புகழ் பரவியது. அவரின் தொண்டு, சுய முன்னேற்றம்,

Read More

கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற வருவாய் கருணாம்பிகையே! Rightmantra Prayer Club

அவிநாசி மிகப் பழமையான தலம். மிகுந்த வரலாற்று பெருமையை உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அவை: அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா (பவானி), கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், வெஞ்சமாங்கூடலூர். இந்த ஏழில் முதன்மையானது அவிநாசி ஆகும். அவிநாசியின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்கினித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம். 'விநாசி' என்றால் பெருங்கேடு என்று பொருள்படும்.

Read More

பசுவுக்கும் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதை + புகைப்படங்கள் – Rightmantra Prayer Club

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் "நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!" என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுநீதிச் சோழன் என்பவனும் ஒருவன். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும்

Read More

ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

மதுரை நகரில் அடியார்க்கு நல்லான் என்ற வேளாளன் ஒருவன் இருந்தான். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது பெரும் பக்தியும் அன்பும் செலுத்தி வாழ்ந்து வந்த அவன், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு' என்னும் குறள்நெறிப்படி பலவித தான தருமங்களைச் செய்து வந்தான். அவன் மனைவி தருமசீலை கணவனுக்கு ஏற்ற மனைவியாக  அன்பிலும், அருளிலும், கற்பிலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். உழவுத் தொழில் செய்து வந்த அடியார்க்கு நல்லான், ஆறில் ஒரு பங்கை

Read More

ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது? Rightmantra Prayer Club

சென்ற வாரம் ராமேஸ்வரம் சென்று வந்தது வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. இந்த ஆண்டு துவக்கத்தில் (பிப்ரவரி 2016) சுமார் ஐம்பது லட்சம் பேர் பங்கேற்ற - பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் - மகாமகம் சென்றபோது கிடைத்த மகிழ்ச்சியை விட மனநிறைவை விட ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்திலும் ஏனைய 22 தீர்த்தங்களிலும் நீராடியபோது கிடைத்த மகிழ்ச்சி அதிகம். மேலும் ராமநாத சுவாமியை தரிசித்தபோது கிடைத்த மகிழ்ச்சி அதையும் விட

Read More

குமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்!

பிரார்த்தனை கிளப் பதிவுகள் தயாரிப்பது முன்னைப் போல சுலபமானதாக இல்லை. பொருத்தமான கதை + பதிகம் / பாசுரம் + சிறப்பு விருந்தினர் + பிரார்த்தனை கோரிக்கைகள் + பொதுப் பிரார்த்தனை + FOLLOW UP என பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் எப்பாடுபட்டாவது பிரார்த்தனை கிளப் பதிவை மட்டும் மாதமிருமுறை தவறாமல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். சில சமயம் இடைவிடாத பணிகள் + பயணம் காரணமாக அது முடிவதில்லை. பதிவு

Read More

பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! Rightmantra Prayer Club

மகாராஷ்டிரத்தில் கோமாபாய் என்ற ஆதரவற்ற இளம்விதவை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தனக்கு எல்லாமுமாக கொண்டு பக்தி செய்து வந்தாள். பிழைக்க வழி எதுவும் இல்லாததால் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தாள். இப்படியாகப்பட்ட நாட்களில் ஒரு நாள் ஆஷாட சுத்த ஏகாதசி திருநாள் வந்தது. பண்டரிநாதன் உறையும் பண்டரிபுரத்தில் அதையொட்டி வெகு விமரிசையாக உற்சவம் துவங்கியது. அதைக் காண கோமாபாய் பண்டரிபுரத்திற்கு

Read More

ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்!

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. இறைவன் என்னும் மாபெரும் ஆற்றலை நம்பி, அவரது அருளைச் சார்ந்து வாழும் யாரும் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட்டதில்லை. ஆனால் அந்த அருள் எப்படி செயல்படும், எந்த வழியில் நம்மை காக்கும் என்று இறைவன் ஒருவனுக்கே தெரியும். அற்புதமானவை அவரது வழிகள். சாதாரணமான மனிதனின் வாழ்க்கையிலேயே இது உண்மை என்றால் சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்களின் வாழ்க்கையில் அது இன்னும் எவ்வளவு உண்மையாக

Read More

அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club

சென்ற பிரார்த்தனைப் பதிவு அளிக்கப்பட்ட பிறகு நாம் சம்பந்தப்பட்ட திரிபுராந்தகர் திருக்கோவிலுக்கு சென்று அர்ச்சனையும் வழிபாடும் செய்ததோடு, (இறுதியில் அது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன) மேலும் சில ஆலயங்களிலும் சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களுக்காக அர்ச்சனை செய்யவும் பிரார்த்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று திருப்பதி திருச்சானூரில் உள்ள சூரிய நாராயணப் பெருமாள் கோவில். சென்ற வாரம் ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக திருச்சானூர் சென்றபோது அப்படியே அங்கே அலமேலுமங்காபுரத்தில் உள்ள சூரியநாராயணப் பெருமாள் கோவிலுக்கும்

Read More

அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

கடந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று

Read More

தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்த அனைவருக்காகவும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அர்ச்சனை செய்தோம். தொடர்ந்து மறுநாள் திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சென்றோம். அங்கும் சுவாமி சன்னதியில் பிரார்த்தனையை வைத்து அனைவருக்காகவும் அர்ச்சனை செய்தோம். இரண்டு ஆலயங்களிலும் உண்மையில் அப்படி ஒரு அற்புதமான தரிசனம். எனவே கோரிக்கைகள் நிறைவேறினால் சோளீஸ்வரருக்கு மட்டும் அல்ல, திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கும், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரருக்கும் கூட உங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். சென்ற வார பிரார்த்தனைப்

Read More

கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club

நேற்று ஆகஸ்ட் 25 ஆங்கில தேதிப்படி வாரியார் சுவாமிகள் பிறந்தநாள். வாரியார், மகா பெரியவா, போன்ற அருளாளர்களை பொறுத்தவரை குருபூஜை அல்லது ஜயந்தி உற்சவத்திற்கு தான் நாம் பதிவளிக்க விரும்புகிறோம். ஆங்கிலத் தேதிப்படி அல்ல. (வாரியார் ஜயந்தி செப்டம்பர் 6 வருகிறது). இருப்பினும் நண்பர் ஒருவர் கேட்டுகொண்டபடியால் இன்றைய பிரார்த்தனை பதிவில் வாரியார் கூறிய அற்புதமான ஒரு விளக்கத்தை கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறோம். கோவில் கும்பாபிஷேகம் ஒன்றின் சிறப்பு மலருக்கு வாரியார் அளித்த

Read More

பிரார்த்தனைக்கு வந்த சோதனை!

நாம் பலமுறை சொல்லிவிட்டோம். நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்புகிறவர்கள், அதை தளத்தில் வெளியிடலாமா அல்லது வேண்டாமா, பெயர்களை வெளியிடவேண்டுமா அல்லது வெளியிடக்கூடாதா போன்ற விபரங்களை எல்லாம் தெரிவிக்கவேண்டும் இல்லையா குறைந்தபட்சம் மின்னஞ்சல் அனுப்பும்போது அவர்கள் அலைபேசி எண்ணையாவது  நமக்கு அனுப்பவேண்டும் என்று. இந்த பிரார்த்தனை கிளப் எவ்வாறு நடைபெறுகிறது என்று கூட அறிந்துகொள்ள முற்படாமல் பலர் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புவது வேதனையளிக்கிறது. நமது நேரம் திரும்பவும் சிலரால் வீணடிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை பதிவு

Read More

கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club

இந்த வார பிரார்த்தனைப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கதையை நாம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' இதழில் படித்தோம். படித்தபோது அத்தனை பிடித்துப் போனது. உங்களிடையே அக்கதையை பகிரலாம் என்று அதை தட்டச்சு செய்து தயார் செய்து வைத்த நிலையில், ஏனோ அப்போது அதை வெளியிட சந்தர்ப்பம் அமையவில்லை. பின்னர் ஒரு தருணத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து, DRAFT ல் SAVE செய்து வைத்துவிட்டோம்.

Read More