Home > பக்திக் கதைகள்

தனயனை காத்த தந்தையின் தருமம் – நெகிழ வைக்கும் கதை!!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த சனிக்கிழமை (04/03/2017) இரவு திடீர் பயணமாக திருவாரூர், திருக்குவளை, கஞ்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வந்தோம். செவ்வாய் அதிகாலை தான் சென்னை திரும்பினோம். இது திட்டமிடப்படாத பயணம். அவனிடமிருந்து அழைப்பு வந்தது. சென்றுவந்தோம். அவ்வளவே. சனிக்கிழமை மதியம் தான் பயண திட்டம் முடிவானது. இறையருளால் கடைசி நேரம் டிக்கட் கன்பார்ம் (கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆனது. சென்ற அனைத்து தலங்களிலும் நமது பிரார்த்தனை கிளப் பதிவை வைத்து

Read More

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!

'திருவிளையாடல்' படத்தில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்னும் பாட்டில் சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?" என்றொரு வரியை கவியரசர் எழுதியிருப்பார். சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? கண்ணதாசன் ஒரு பக்தி திரைப்படத்தில் பக்தி பாடலில் இப்படி ஒரு வரியை சும்மா எழுதுவாரா?

Read More

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி சமயத்தில் நம் தளத்தில் சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் வெளிவந்தாலும், அண்மைக் காலங்களில் நாம் ஈஸ்வரன் குறித்து பல பதிவுகள் அளித்து வருவதால் தனியாக தொடர் ஏதும் இந்த ஆண்டு அளிக்கவில்லை. இது போன்ற பதிவுகளே சிந்தைக்கு சிவானந்தம் அளிப்பதால் தனியாக சிவராத்திரி சிறப்பு தொடர் தேவையில்லை என்று கருதுகிறோம். சிவராத்திரி விரதம் முதன்முதலாக இருக்க ஆசைப்படுபவர்கள் மற்றும் இன்னும் சிறப்பாக விரதமிருக்க ஆசைப்படுபவர்கள் நலனுக்காக இந்தப் பதிவின் இறுதியில்

Read More

திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

குருசேஷத்திர போர் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?" என்றார். அதற்கு கிருஷ்ணர் நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில்

Read More

அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!

இன்று தைப்பூசம். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். முருகப் பெருமான் குறித்து ஏற்கனவே அளித்த பதிவை அளிக்காமல் புதிதாக ஏதேனும் அளிக்க விரும்பினோம். முருகனைப் பற்றி எழுதினாலே வினைகள் அறுபடும். (படிக்கும் உங்களுக்கும் தான்). இந்நிலையில் தளம் வேலை செய்யாததால் பணியில் மனம் ஒன்றவில்லை. (அதை ஏன் கேக்குறீங்க. These days were horrible). இன்று தற்காலிகமாக தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சென்ற

Read More

சிலிர்க்க வைத்த சிவபக்தி – ஈசனின் பிறை முழுநிலவான கதை!

'நல்லோர் தரிசனம் பாப விமோசனம்' என்று சொல்வார்கள். அக்காலத்தில் அடியார்களின் சத்சங்கத்திற்கும் தரிசனத்திற்கும் அரசர்கள் ஏங்கித் தவித்தனர். சிவனடியார்கள் மனம் குளிர்ந்தாலே போதும் சிவனின் அருளை வெகு சுலபமாக பெற்றுவிடலாம் என்று கருதினார்கள். எனவே அடியார்களை வரவேற்று உபசரிக்க பல பிரயத்தனங்களை செய்தனர். சிவதரிசனம் பாக்கியம் என்றால் அவன் அடியார்கள் தரிசனம் அதனினும் பெரிய பாக்கியம். சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தது தன்னை பாடிய நூல்களுக்கு கூட இல்லை. தனது அடியார்களை பாடிய

Read More

ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

"நீ ஒரு சிவத்தொண்டன் நீ போய் காளையை அடக்கலாமா?" கேட்டார் நீலகண்டம். "இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை" பதிலளித்தான் சிவக்கொழுந்து.. "நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?" "ஆம் அறிவேன்..." "தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..?" விடாமல் தொடர்ந்தார் நீலகண்டம். "மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்.. அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது.. என் நாவு யாரிடமும் இறைஞ்சாது.." நெஞ்சை

Read More

பாவலர் மானங்காத்த பாவை!

மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நூலை வடித்தார். அதன் மூலம் தான் நமக்கு சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் பற்றி ஓரளவு தெரிந்தது. பக்தர்களுக்கு அவன் அருள்பாலிக்கும் விதம், அவன் எதை விரும்புவான், எதை வெறுப்பான், யாருக்கு எப்போது அருள் செய்வான் இப்படி பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்துமே தமிழகத்தில் பல்வேறு

Read More

சிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு?

சமீபத்திய அவிநாசி பயணத்தின் போது கோவில் பிரகாரத்தின் சுவற்றில் ஒரு ஓவியத்தை கண்டோம். அவிநாசி தல மகாத்மியத்தை விளக்கும் கதை ஒன்றின் ஓவியம் அது. உங்களுக்காக அந்த ஓவியமும் கதையும். (இது ஒரு மீள் பதிவு. ஓவியம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது!) இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும்

Read More

களவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நம்முடைய நான்கு நாள் குமரி - ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுப் பயணம் மிக மிக இனிமையாக, வெற்றிகரமாக நடந்தேறியது. திருவருள் துணைக்கொண்டு அனைத்தையும் நல்லபடியாக முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் பாம்பனிலிருந்து காரைக்குடி வழியாக திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து திங்கள் அதிகாலை  சென்னை வந்து சேர்ந்தோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அசாதாரண சூழ்நிலையால் நமது பயணம் மற்றும் பாதுகாப்பை பற்றி பலர் அக்கறையுடன்

Read More

பக்கிரிக்கு யானை கொடுத்தவர்!

உ.வே.சா. என்னும் தமிழ்க் கடலில் நீந்தி வருகிறோம். எண்ணற்ற விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக சென்ற நூற்றாண்டை சேர்ந்தவர் யாருடைய எழுத்தையும் அத்தனை சீக்கிரம் நம்மால் கிரகித்துக்கொள்ள முடியாது. மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் தமிழ்த் தாத்தாவிடம் அந்த பிரச்சனை இல்லை. தெளிந்த நீரோடை போன்ற அவருடைய எழுத்தை எந்தக் காலத்தில் எந்த யுகத்தில் வாசித்தாலும் புரியும். அந்தக் காலத்திற்கே நம்மை இட்டுச் செல்லும். எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில்

Read More

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

எத்தனையோ கஷ்டப்பட்டு பல தியாகங்களை செய்து, நம் மன்னர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கட்டியவை நமது திருக்கோவில்கள். ஒவ்வொரு திருக்கோவிலின் வரலாற்றின் பின்னனியிலும் பலருடைய தியாகமும் உழைப்பும் ஒளிந்திருக்கின்றன. இவற்றில் வெளியுலகம் அறிந்தவை கடலில் ஒரு துளி போல கொஞ்சம் தான். பாடல் பெற்ற தலங்களும் சரி திவ்யதேசங்களும் சரி எந்தக் கோவிலும் பொருளிருக்கிறது, ஆள்பலம் இருக்கிறது என்று சுலபமாக கட்டப்படவில்லை. பலவித சோதனைகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்கித் தான் கட்டினார்கள். காரணம் 'தியாகமில்லாத

Read More

திருடனை துரத்திய துறவி….!

இன்றைக்கு துறவிகளின் இலக்கணமே மாறிவிட்டது. அடுத்த வேளை உணவைப் பற்றி ஒரு சந்நியாசி யோசிக்கக்கூடாது என்கிறார் யாக்ஞ வல்கியர். ஆனால் இன்று ? ஏதோ ஒரு மலையடிவாரத்தில் பல நூறு ஏக்கர்களில் ஆஸ்ரமம். ஹை-டெக் அறைகள், நீச்சல் குளம் என்று நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருக்கின்றன சந்நியாசிகளின் ஆசிரமங்கள். அருளைத் தவிர அங்கு அனைத்தும் கிடைக்கின்றன. அக்காலங்களில் துறவிகள் எப்படி இருந்தார்கள்? துறவின் இலக்கணம் என்ன? அவர்களின் குண நலன்கள் என்ன?

Read More

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன். குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா... நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே... வயதான உங்களால் முடியுமா... இத்தனை

Read More