பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 16/11/1916 அன்று தமிழகத்தை வரலாறு காணாத புயல் தாக்கிய நேரம். அப்போது பாரதி புதுவையில் இருந்தார். எங்கும் மழை வெள்ளம். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர். பல நூறு பேர் உயிரிழந்தனர். பாரதியும் அவர் நண்பர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள்.
Read More