Home > MONDAY MORNING SPL

தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87

வீரமும் பராக்கிரமும் மிக்க மன்னன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். எதிரி நாட்டு மன்னன், தோற்றுவிட்ட மன்னனை சங்கலியால் பிணைத்து தனது அரசவைக்கு இழுத்து வரச் செய்தான். "எங்கே உனது கோட்டை? ஹா...ஹா...ஹா..." என்று எகத்தாளமாக சிரித்தான். "இங்கே இருக்கிறது எனது கோட்டை!" என்று தனது மார்பின் மீது கைவைத்து கம்பீரத்துடன் சொன்னான் இழுத்து வரப்பட்ட மன்னன். அவன் சும்மா சொல்லவில்லை. நிரூபித்து காட்டினான். சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, தப்பிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து, க‌டுமையான க‌ட்டுக்

Read More

ஒரு சிறு புன்னகை செய்த மாயம்! – MONDAY MORNING SPL 86

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான். "நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை

Read More

ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ? MONDAY MORNING SPL 85

அந்தோணி பர்ஜஸ். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை கடந்துகொண்டிருந்த ஒரு சராசரி நடுத்த வர்க்கத்து மனிதர். அவருக்கு அன்பு மிக்க மனைவி. பிரிட்டிஷ் இராணுவத்தினரின் இசைக்குழுவில் இசை இயக்குனராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். சந்தோஷமாக போய்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பேரிடி விழுந்தது. அவருக்கு திடீரெனெ விசித்திர காய்ச்சல் ஒன்று வந்தது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் ஒரு சிறிய புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் அதிகபட்சம் இன்னும்

Read More

சுவாரஸ்யமான, மனநிறைவான வாழ்க்கை வேண்டுமா? – MONDAY MORNING SPL 84

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து "இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!"

Read More

‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

அது ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனம். அதன் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக ஒரு தகுந்த நபரை தேர்வு செய்யவேண்டியிருந்தது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் மார்கெட்டிங் பிரிவு என்பது முதுகெலும்பு போல. வருவாய் ஆதாரங்களை கொண்டு வருவது அதன் பணி என்பதால் தகுந்த ஒருவரை எவ்வளவு சம்பளம் கொடுத்தேனும் அந்த பிரிவில் பணியில் அமர்த்த அதன் நிறுவனர் முடிவு செய்தார். நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் என்பதால் பலர் பணிக்கு விண்ணப்பித்தனர்.

Read More

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க ஓஷோ சொல்லும் வழிமுறை :- அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. 

Read More

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81

ஒரு மன்னன் தனது அமைச்சரை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் அந்த நாட்டு பிரஜை ஒருவன் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான். அரசன் அவனை பார்த்துக்கொண்டே சென்றான். மறுநாள் அதே நேரம் அதே இடம். அந்த மனிதன் முதல் நாளைப் போலவே சிந்தனையிலிருப்பதை பார்க்கிறான். "அமைச்சரே, அந்த மனிதனை நேற்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். ஏனோ தெரியவில்லை அவனை பார்த்ததும் அவனுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டும் என்று தோன்றுகிறது. அவனை

Read More

பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80

சுயமுன்னேற்ற கருத்துக்களை கருவாக கொண்டே நமது ஒவ்வொரு MONDAY MORNING SPL பதிவும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய MONDAY MORNING SPL வழக்கதினின்று மாறுபட்டு சற்று வித்தியாசமாக தந்திருக்கிறோம். இதுவும் சுயமுன்னேற்ற கருத்து கொண்டது தான். ஆனால் இது நம் அகத்தை மேம்படுத்தக்கூடியது. இடையே அவ்வப்போது இது போன்ற கருத்துக்களை உள்ளடிக்கிய பதிவை தரலாமா என்று யோசித்து வருகிறோம். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவோம். நன்றி. ஒரு முறை துர்வாச

Read More

சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79

வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்கள் முதல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு நல்ல இலட்சியத்திற்காக உழைப்பவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான விஷயம் சுற்றியிருப்பவர்கள் செய்யும் கேலி. சிலருக்கு காலம் கடந்த பிறகு ஞானோதயம் வரும். அதில் தவறே இல்லை. சாதனையாளர்கள் என்று நாம் இன்று வியக்கும் பலர் காலம் கடந்த பின்னர் ஞானோதயம் பெற்றவர்கள் தான். அப்படி தெளிவு பெற்று இலக்கை நோக்கி உழைப்பவர்களை உடனிருப்பவர்கள் கேலி செய்வதுண்டு. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசிப்

Read More

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

இந்தக் கதை சற்று பிரபலமான கதை தான். உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதனால் என்ன நல்ல விஷயம் தானே... இன்னொரு முறை படியுங்களேன். ஆனால் இதை தெரியாதவர்கள் யாராவது ஒருவர் இருந்து அவர் இதன் மூலம் பலன் பெற்றால் கூட நமக்கு சந்தோஷம் தான். இதற்கு முன் இந்தக் கதையை கேள்விப்பட்டவர்களோ அல்லது படித்தவர்களோ இதன் உட்கருத்தை சரியாக உள்வாங்கியிருப்பார்களா என்று தெரியாது. ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் சரி, நல்ல

Read More

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

சலவைக்கல்லினால் ஆன (MARBLE) பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் அது. நகரில் அவர்களுக்கு மிகப் பெரிய ஷோரூம் இருந்தது. மிகப் பெரிய கடவுள் சிற்பங்கள் முதல் குழந்தைகள் விளையாடும் சிறு சிறு பொம்மைகள் வரை அவர்களிடம் அனைத்தும் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் அனைவரும் இங்கு தான் படையெடுப்பர். அந்தளவு சலவைக்கல் சிற்பங்கள் அங்கு பேமஸ். அந்த குடும்பத்தின் பரம்பரை தொழிலே அது தான். முப்பாட்டன் காலம்

Read More

மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76

சென்ற வாரம் ஒரு நாள் ஒரு வாசகர் நம்மை தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு "அங்கு நீண்ட நாள் பணியில் இருக்கிறேன். ஆபீஸே கதியாக கிடப்பேன். என்னைப் போல என் நிறுவனதிற்கு உழைப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில், என்னுடன் பணி சேர்ந்த ஒருவருக்கு ப்ரோமோஷனும் ஊதிய உயர்வும் கொடுத்துவிட்டார்கள். என் முதலாளி ஒரு தவறை இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே சூனியமாகிவிட்டது போல

Read More

நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75

ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர். ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர்

Read More

வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74

"வாழ்க்கையில் உயர என்ன வழி?" என்று ஆசிரியரிடம் கேட்டனர் மாணவர்கள். "இரு கோடுகள் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் உயரலாம்” என்றார் ஆசிரியர். "இரு கோடுகள் தத்துவமா? அதை கொஞ்சம் விளக்குங்களேன்" என்றான் ஒரு மாணவன் எழுந்து. கரும்பலகையில் கோடு ஒன்றைப் போட்ட அவர், "இதன் அருகே சிறிய கோடு போட்டால் இந்தக் கோடு பெரிதாகி விடும். பெரிய கோடு போட்டால் முன்னமே உள்ள கோடு சிறியதாகி விடும். இதுதான் அதன் விளக்கம்"

Read More