Home > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு (Page 5)

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

சென்ற வருடம் ஒரு நாள் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த ‘பட்டினத்தார்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ படத்தை வீட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்பதைவிட பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக ‘பட்டினத்தார்’ படத்தை பார்த்ததிலிருந்து  டி.எம்.எஸ். அவர்களை பார்க்கவேண்டும், அவரிடம் ஆசி பெறவேண்டும் என்ற உணர்வு என்னுள் பலமாக எழ ஆரம்பித்துவிட்டது. ('பட்டினத்தார்' படத்தை பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.) இந்த முதுபெரும் கலைஞரை, இறை அடியாரை (90 வயது!) அவர்

Read More

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கும் செல்வி.பிரேமாவின் சிறப்பு பேட்டியை நம் தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது நினைவிருக்கலாம். வெற்றியாளர்களை பற்றி எத்தனை முறை படித்தால் என்ன? திகட்டவா போகிறது? அதுவும் வறுமையிலும் போராடி வெற்றி பெற்றுள்ள பிரேமாவின் சரித்திரத்தை திரும்ப திரும்ப படிக்கவேண்டும். நம்மை சார்ஜ் செய்துகொள்ளவேண்டும். கீழே காணும் செய்தியில் பிரேமாவின் தந்தை கூறியுள்ளதை படியுங்கள். //"எனக்கு இதைவிட வேறென்ன சார் வேண்டும். வாழ்க்கையில் நான்

Read More

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

நம் நாட்டில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மிக மிக கடுமையான தேர்வு என்று கருதப்படுவது சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வு. 21 வயதில் எழுத ஆரம்பித்து தொடர்ந்து எழுதி எழுதி 60 வயது கடந்தும் கூட அதை பாஸ் செய்ய முடியாது தவிப்பவர்கள் பலரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அக்கவுண்டன்சியில் புலி என்று சொல்லப்படுபவர்கள் கூட சற்று கிலியோடு பார்க்கும் தேர்வு இது. இந்த தேர்வை மும்பையை ஒரு ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா

Read More

நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

"தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும். கழுகு தூக்கினும் குஞ்சுக்காக துடித்து எழும் கோழி. சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட திருப்பித்தாக்கும். சாக்கடை புழுக்களல்ல நீங்கள். சரித்திரத்தின் சக்கரங்கள்"  என்று முழங்கிய இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்த நாள் இன்று. 'ஜெய் ஹிந்த்' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய்

Read More

இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக்கிறாரா?

பூனையை நண்பர் காப்பாற்றிய சம்பவத்தை கூறியவுடன், அந்த வி.வி.ஐ.பி. பதிலுக்கு கூறிய கதை ஒன்றை அடுத்த பகுதியில் கூறுவதாக கூறியிருந்தேன் அல்லவா? அதற்கு முன்பு அவர் யார் என்று பார்ப்போமா?? இதுவரை எத்தனையோ பெரிய மனிதர்களை, சாதனையாளர்களை நான் பேட்டிக்காக சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களிடம் பல அரிய  குணங்களை கண்டு வியந்திருக்கிறேன். அவற்றில் நான் பின்பற்றக்கூடியவற்றை பின்பற்றி வருகிறேன். சிலவற்றை முயற்சித்து வருகிறேன். எனது - வாழ்வில் - அணுகுமுறையில் - ஏற்பட்டுள்ள

Read More

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!

நம் தளத்தின் பேட்டிக்காக வி.வி.ஐ.பி. ஒருவரை பார்க்க கடந்த  நாட்களுக்கு முன்பு சென்றிருந்தோம். இப்படி ஒரு பெரிய மனிதரை, சாதனையாளரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை என்னுமளவுக்கு சாதனையின் சிகரம் இவர். (இந்த தளத்துக்காக வேறு எந்த அடையாளத்தையும் நாம் பயன்படுத்தாமல் எடுக்கும் இரண்டாம் சந்திப்பு இது. முதல் சந்திப்பு திரு.காந்தி கண்ணதாசன். அது விரைவில் முழுமையாக இந்த தளத்தில் வெளியாகவிருக்கிறது!) [dropcap]உ[/dropcap]ங்களிடம் ஒரு கேள்வி.... அதிகம் பொருளீட்டுபவர் செல்வந்தரா? அல்லது அதிகம் கொடுப்பவர் செல்வந்தரா? அதிகம் கொடுப்பவரே செல்வந்தர்

Read More

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2

எந்த வித உடல் குறைப்படும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களே இந்த உலகில் எதையும் சாதிப்பதில்லை. “நானும் பிறந்தேன்.. வளர்ந்தேன்” என்று வாழ்நாளை கழித்துவிட்டு பூமிக்கு பாரமாய் இருந்துவிட்டு மறைந்துபோகிறார்கள். இந்த சூழ்நிலையில், பிறவியிலிருந்தே இரு கண்களும் பார்வையற்று, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியால் 1 to 10 வது, அதற்கு பின்னர் ரெகுலர் சிலபஸில் +1, +2  பின்னர் கல்லூரியில்

Read More

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

* வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்? * அலுவலகத்திலும் பிற இடங்களிலும் அனுதினமும் அவமானங்களை சந்தித்து சந்தித்து நொறுங்கிப் போகிறவரா? * எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை என்று புழுங்கித் தவிப்பவரா? * எங்கேயும் எப்போதும் சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் தொடர்ந்து இரையாகி வருபவாரா? * ஆண்டவன் உங்களுக்கு மட்டும் வஞ்சனை பண்ணிட்டான்னு குமுறுகிறவரா? * அல்லது மொத்தத்துல வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு... வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா? இந்த பதிவு

Read More