Home > episode (Page 4)

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

'தனிமனிதனால் என்ன செய்துவிடமுடியும்?' என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, தனிமனிதன் சாதித்து காட்டியுள்ள உண்மை நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த விரும்பினால், "நான் ஒருத்தன் நினைத்து என்னவாகப்போகிறது?" என்று நினைக்காமல் அதை செயல்படுத்த உறுதியுடன் களமிறங்க வேண்டும். மனதின் சக்தி அளவற்றது. நல்ல நோக்கத்திற்காக அதை திருப்பும்போது அதற்கு யானைபலம் வந்துவிடும். நினைப்பதை எப்படியோ சாதித்துவிடும். சாதனையாளர்கள் வாழ்வில் நிகழ்வது இது தான். சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம்

Read More

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள். ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர்

Read More

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

தானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன? அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு

Read More

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது. அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு

Read More

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!' என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தோம். அது பற்றிய பதிவு இது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும்

Read More

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

இன்று (ஜூன் 28) சாண்டோ சின்னப்பா தேவரின் பிறந்த நாள். மருதமலை முருகன் என்றால் தேவர் பெயர் நினைவுக்கு வராதவர்கள் இருக்க முடியாது. அதே போல தேவர் என்றாலும் மருதமலை ஆண்டவன் தான் நினைவுக்கு வருவார். எத்தனை பெரிய பாக்கியம் இது...! ஒரு மனிதன் வழி தவறி நடப்பதற்குரிய அத்தனை காரணிகளும் சர்வ சாதாரணமாக புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அதிலிருந்துகொண்டும் ஒருவர் கொள்கைக்குன்றாய் பக்திமானாய் வாழமுடியும் என்பதை நிரூபித்தவர் தேவர்.

Read More

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

ரமண திருவிளையாடற் திரட்டில் மூழ்கியெடுத்த மேலும் சில முத்துக்கள் இவை. சிறு சம்பவம் தான். ஆனால் அதன் மூலம் ரமணர் உணர்த்தும் நீதியும், சொடுக்கும் சாட்டையும் இருக்கிறதே... சுரீர் ரகம்!! எது அவமானம்? ஒரு முறை பகவான் மதிய உணவு அருந்தும்போது, பாடசாலை மாணவன் மோர் பரிமாறினான். பகவானுக்கு மோர் பரிமாறும்போது, "இன்னும் கொஞ்சம் மோர் விடு!" என்றார். பகவான் வழக்கமாக இரண்டாவது முறையாக ஏதும் கேட்பதில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இரண்டாவது முறை மோர்

Read More

“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”

சாண்டோ சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இப்படியெல்லாம் கூட ஒருவர் இறைவன் மீது பக்தி செய்ய முடியுமா என்று ஆச்சரியம் தான் மேலிடுகிறது. தந்தைக்கே பிரணவத்தின் பொருளுரைத்த அந்த சுவாமிநாதனை, தேவர்களின் சேனாபதியை, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனை, தேவர் ஒருமையில் அதட்டுவதும் அதைக் கேட்டு முருகன் ஓடோடி வந்து அவர் கேட்பதை செய்து தருவதும்... அட.... அட... ஒரு உணர்ச்சிக் கவிதை! சில வருடங்களுக்கு முன்பு ஒரு கடுமையான

Read More

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

சுமார் 60 ஆண்டுகளுக்கு வள்ளிமலையில் படிகள் அமைக்கும் திருப்பணி நடந்த போது நடைபெற்ற அதிசய சம்பவம் இது. வாரியார் ஸ்வாமிகள் தாம் இருந்த காலத்தில் வருடந்தோறும் வள்ளி பிறந்த, முருகன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்கு சென்று திருப்புகழ் பாடி படி உற்சவம் நடத்துவார். திருப்புகழ் பாடிக்கொண்டே கிரிவலமும் வருவார். நடக்க முடியாத நாள் வரையில் அவர் கிரிவலம் வரத் தவறியதில்லை. வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்த இந்த படி உற்சவம்

Read More

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

நண்பர் அனுப்பிய 'ரமண திருவிளையாடற் திரட்டு' படித்து வருகிறோம். மிகப் பெரிய நீதியை பகவான் ரமணர் மிக அனாயசமாக ஒரு சிறு செயல் மூலமோ அல்லது தனது மௌனம் மூலமோ உணர்த்திவிடுகிறார். இது ஒரு வித்தியாசமான அனுபவம். தொண்டு செய்பவர்களுக்கு, அது சமூகத் தொண்டோ சமயத் தொண்டோ ஒரு கட்டத்தில் அகந்தை ஏற்பட்டுவிடும். தான் மட்டும் தான் சேவை செய்வதாகவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் பயனில்லாமல் இருப்பதாகவும் எண்ணம் ஏற்படும். அது

Read More

ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!

நாளை மார்ச் 28, சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமி. உங்களையெல்லாம் அந்த ராமச்சந்திர மூர்த்தியை காண அழைத்துச் செல்லவேண்டி அளிக்கப்படும் சிறப்பு பதிவு இது. இந்த வருட ராம நவமியை முன்னிட்டு நாம் அளித்து வரும் ராம நாம மகிமை தொடரின் இறுதிப் பதிவாக ஏதேனும் ஒரு பிரசித்தி பெற்ற ராமர் கோவில் பற்றிய ஆலய தரிசன பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டு வந்தோம். அப்போது நினைவுக்கு வந்தது தான் மதுராந்தகத்தில்

Read More

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

பிள்ளையார் பழம்! குழுமணி நாராயண சாஸ்திரி தான் எழுதிய வால்மீகி இராமாயண உரையை பகவானிடம் சமர்பிக்க விரும்பினார். வெறுங்கையோடு போகக்கூடாது என்று ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினார். ஒரு விநாயகர் கோவிலை கடந்து தான் வரவேண்டியிருந்தது. கோவிலைக் கடக்கும்போது மானசீகமாக ஒரு பழத்தை விநாயகருக்கு அர்ப்பணம் செய்தார். ஆஸ்ரமம் வந்து சேர்ந்தவுடன் பகவானை வணங்கி, அந்த பழங்களை அவர் முன்னே வைத்தார். அங்கிருந்த சேவகர் அதை உள்ளே எடுத்து வைக்க முயன்ற போது, பகவான், "கொஞ்சம்

Read More

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

வெறும் படிப்பும், உத்தியோகமும், செல்வமும், தோற்றமும், ஒரு ஆணையோ பெண்ணையோ முழுமையடைச் செய்வதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஒருவரின் படிப்பை மதிப்பவர்கள் அவரின் உத்தியோகத்தை மதிக்கமாட்டார்கள். உத்தியோகத்தை மதிப்பவர்கள் படிப்பை மதிக்கமாட்டார்கள். சரி இரண்டையுமே மதிப்பவர்கள் என்றால் தோற்றத்தை மதிக்கமாட்டார்கள். பணத்தை மதிப்பவர்கள் மற்ற எதையுமே மதிக்கமாட்டார்கள். இந்த மதிப்பீடு நாம் சந்திக்கும் மனிதர்களிடையே கலந்து தான் இருக்கும். எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. காரணம் எல்லாருக்கும்

Read More