Home > 2016 (Page 3)

திருடனை துரத்திய துறவி….!

இன்றைக்கு துறவிகளின் இலக்கணமே மாறிவிட்டது. அடுத்த வேளை உணவைப் பற்றி ஒரு சந்நியாசி யோசிக்கக்கூடாது என்கிறார் யாக்ஞ வல்கியர். ஆனால் இன்று ? ஏதோ ஒரு மலையடிவாரத்தில் பல நூறு ஏக்கர்களில் ஆஸ்ரமம். ஹை-டெக் அறைகள், நீச்சல் குளம் என்று நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருக்கின்றன சந்நியாசிகளின் ஆசிரமங்கள். அருளைத் தவிர அங்கு அனைத்தும் கிடைக்கின்றன. அக்காலங்களில் துறவிகள் எப்படி இருந்தார்கள்? துறவின் இலக்கணம் என்ன? அவர்களின் குண நலன்கள் என்ன?

Read More

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா? சில விளக்கங்கள்!

சனிப் பெயர்ச்சியை நினைத்து பயப்படுவது சரியா?  Part 1 அடுத்து வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியை பற்றி ஒரு சார்ட் முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் வலம் வருகிறது. இந்த ராசிக்கு சுமார், இந்த ராசிக்கு மிகவும் தீமை, இவர்களுக்கு மிக மிகத் தீமை என்றெல்லாம் சார்ட் போட்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. இதைவிட அபத்தம் வேறு எதுவும் இல்லை. இவர்கள் கிரகங்களையும் புரிந்துகொள்ளவில்லை... தெய்வத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் புரிந்துகொண்டது - மக்களின் அறியாமை மற்றும் கிரகங்கள்

Read More

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

சிவபுண்ணியக் கதைகள் இத்துடன் 15 வது அத்தியாயத்தை எட்டிவிட்டது. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது. நம் தளத்திற்கு நாம் எழுதும் பதிவுகள் ஒவ்வொன்றையுமே ஒரு வேள்வி போலக் கருதி எழுதி தயாரித்து வந்தாலும் சிவபுண்ணியக் கதைகள் எனும்போது அது ஒரு தவமாகவே மாறிவிடுகிறது. மேலோட்டமாக இந்தக் கதைகளை கூறாமல் ஒரு வரலாற்று சான்றேனும் கூறவேண்டும் என்று ஒரு உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கதைகள் எல்லாம் ஒரு

Read More

உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லையா?

நென்மேலி சிரார்த்த சம்ரக்ஷன பெருமாள் கோவில் பட்டர் திரு.சம்பத் பட்டாச்சாரியார் அவர்களை நமது தளத்தின் பேட்டிக்காக சமீபத்தில் சந்தித்தபோது, பல விஷயங்களை நம்மிட பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பேசியிருக்கிறோம் என்றால் எத்தனை விஷயங்களை அவர் கூறியிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அவருடைய வித்தையும், சாஸ்திர சம்பிரதாய அறிவும் நம்மை வியக்க வைத்தன. அப்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தை கேட்டோம். "குலதெய்வ வழிபாடு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு

Read More

ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்!

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. இறைவன் என்னும் மாபெரும் ஆற்றலை நம்பி, அவரது அருளைச் சார்ந்து வாழும் யாரும் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட்டதில்லை. ஆனால் அந்த அருள் எப்படி செயல்படும், எந்த வழியில் நம்மை காக்கும் என்று இறைவன் ஒருவனுக்கே தெரியும். அற்புதமானவை அவரது வழிகள். சாதாரணமான மனிதனின் வாழ்க்கையிலேயே இது உண்மை என்றால் சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்களின் வாழ்க்கையில் அது இன்னும் எவ்வளவு உண்மையாக

Read More

சூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்! ரிஷிகள் தரிசனம் (5)

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் இருக்கும் நென்மேலி என்கிற கிராமத்தில் சிரார்த்த சம்ரக்ஷண பெருமாள் என்று ஒரு தலம் உண்டு. பித்ரு காரியம் செய்ய கயைக்கு ஈடான தலம் இது. ஆதரவற்றவர்களுக்கு யார் வேண்டுமானால் சிரார்த்தம் செய்யலாம். பெண்களும் இங்கு பித்ரு கர்மாக்களை செய்யலாம். இந்த ஆலயம் பற்றி ஏற்கனவே நம் தளத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பதிவு வெளியானது. இவ்வாலயத்தை மிகச் சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வரும் திரு.சம்பத்

Read More

ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்? குட்டிக்கதை!

ஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அலட்சியமாக பார்த்தது. பின்னர் செருக்குடன் பெருமையடித்துக் கொண்டது. "என்னைப் பார்... நடிகர்கள் கையில் புரள்கிறேன். தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்குகிறேன். அரசியல்வாதிகள் கைகளில் தவழ்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன். தங்க நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க பயன்படுகிறேன். வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க

Read More

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு!

நம் வாசகர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் நாட்டின் இரு பெரும் இதிகாசங்களான மஹாபாரதம், இராமாயணம் இரண்டையும் படிக்கவேண்டும். இவற்றில் இல்லாத நீதிகளே இல்லை. ராமாயணம் மஹாபாரதம் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல. உண்மையில் நடைபெற்றவை. (இதிகாசம் என்றாலே இப்படி நடந்தது என்று தான் பொருள்!) ராமாயணமும் மஹாபாரதமும் நடைபெற்ற பல இடங்கள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறன. சரி விஷயத்திற்கு வருகிறோம்... மஹாபாரதத்தில் வரும் அற்புதமான கருத்தாழம் மிக்க சம்பவம் ஒன்றை

Read More

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று!

நண்பர் ஒருவரின் முகநூலில் படித்தது இது. படித்தவுடன் நம் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே உங்களுடன் பகிர்கின்றோம்... இதில் உள்ள அத்தனை வரிகளும் நம்மில் சிலர், மன்னிக்க பலர் வாழ்வில் நடந்தவை... நடப்பவை!! அம்மா... நான் பிறந்து விழுந்த போது... உன் சேலைதான் ஈரமானது...!!! நான் உறங்க... உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! நான் பால் அருந்தும் போது... உதட்டினை துடைத்து உன் சேலை தான்...!!! எனக்கு பால் கொடுக்கும்போது... உன் சேலை தான் எனக்கு திரையானது...!!! நான் மழையில் நனையாமல் இருக்க... உன் சேலை தான் குடையானது...!!! நீச்சல் பழக... என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்...!!!! மழையில் நனைந்த என்

Read More

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

தமிழகத்திலேயே அதிகம் விற்பனையாகும் வார இதழான 'குமுதம்' இதழின் நிறுவன ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள். 1947 ஆம் ஆண்டு குமுதம் துவக்கப்பட்ட போது முதல் முறை சந்தைக்கு அனுப்பிய பல இதழ்கள் விற்பனையாகாமல் திரும்பி வந்தது. எஸ்.ஏ.பி. சோர்ந்துவிடவில்லை. வித்தியாசமாக சிந்தித்து கடுமையாக உழைத்து அதை தமிழகத்தின் அதிகம் விற்பனையாகும் வார இதழாக கொண்டு வந்தார். தமிழக எழுத்தாளர்கள் யாவரும் ஆன்மீகமோ, புலனாய்வோ, அரசியலோ அல்லது இலக்கியமோ அவர்கள்

Read More

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

நேற்றைக்கு மாலை சுமார் ஏழு மணியளவில் மும்பையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டார். சமீபத்தில் நமது முகநூல் பகிர்வு (தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?) ஒன்றை பார்க்க நேர்ந்ததாகவும் நம்மிடம் பேச விரும்புவதாகவும் சொன்னார். கந்தசஷ்டி தரிசனத்திற்காக அப்போது போரூர் முருகன் கோவிலில் இருந்தபடியால் "கோவிலில் இருக்கிறேன். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கூப்பிடமுடியுமா? என்று கேட்டோம். நிச்சயம் அழைப்பதாக கூறியவர் அதன் படி இரவு 9.00 மணியளவில் அழைத்தார். மனிதர்

Read More

பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

இந்தப் பதிவில் வரும் நபர்கள் போல இன்றும் பலர் உண்டு. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் அவர்கள் மீது அக்கறை உடையவர்களுக்கும் இது ஆறுதலாக / தீர்வாக இருக்கலாம். குருவார்த்தையே காயத்திற்கு அருமருந்து அல்லவா? யார் பைத்தியம்? ஒரு முறை ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார். அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஒரு மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்

Read More

இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

இன்று கந்தசஷ்டி நான்காம் நாள். இன்று வாரியாரைப் பற்றி பார்ப்போம். தேனும் அதன் சுவையும் போல வாரியார் சுவாமிகளையும் முருகப்பெருமானையும் பிரிக்கவே முடியாது. வாரியார் சுவாமிகளை நினைக்கும்போதெல்லாம வள்ளி மணாளன் நினைவுக்கு வருவான். அதே போன்று வள்ளி மணாளனை நினைக்கும்போதெல்லாம் வாரியார் நினைவுக்கு வருவார். இது எத்தனை பெரிய பேறு...! அவரை பற்றிய பதிவு இல்லாமல் கந்தசஷ்டி சிறப்பு பதிவுகள் பூரணம் பெறுமா? குமுதம் இதழுக்காக பிரபல புத்தக வெளியீட்டாளர் திரு.வானதி திருநாவுக்கரசு

Read More

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

அள்ள அள்ள குறையாத அருட்சுரங்கம் அன்னை ஆண்டவன் பிச்சி அவர்களின் சரிதம். அந்தளவு பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல விஷயங்களுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் சோகம். இருப்பினும் நமது தேடலில் ஆராய்ச்சியில் கிடைத்த நம்பகமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம். சில சந்தேகங்களுக்கும் விளக்கமளித்திருக்கிறோம். (இந்த பதிவின் முதல் பாகத்திற்கு : 'உள்ளம் உருகுதையா' தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் - கந்தசஷ்டி SPL 2) (இந்த பதிவில் அன்னை

Read More