Home > 2015 > February (Page 3)

7வது இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – என்னென்ன பார்க்கலாம்?

இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் 7-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (விமான நிலையம் எதிரே) உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் செவ்வாய் மாலை தொடங்கியது. துவக்கவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வரம் தவில் முழங்க மங்கள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் பாடப்பட்டது. திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான், புத்தமத துறவி கென்டிங் தாய்

Read More

ஒரு கனவின் பயணம்!

பிப்ரவரி 1, 2015. ஞாயிறு காலை சுமார் 10.15 மணி. 'இராமநாம மகிமை' நாடக புகழ் திருமதி.பாம்பே ஞானம் அவர்கள்  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே நமது அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ரிப்பன் வெட்டுகிறார். நம்மை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம். இப்போது நினைத்தாலும் அனைத்தும் ஒரு கனவு போலவே இருக்கிறது. திறப்பு விழாவுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். "எப்படிஜி இப்படி ஒரு அருமையான இடத்தை

Read More

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது நடந்தது 1976 ஆம் ஆண்டு. ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வந்தார் அந்த மாணவர். நன்றாக படிக்கக் கூடிய மாணவர் அவர் என்றாலும் கல்லூரி மாணவர்களுக்கே உரிய விசேஷ சொத்தான அரியர்ஸ் அவருக்கும் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு தாள்கள் அரியர்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் இறுதியாண்டு தேர்வுக்கும் முந்தைய அரியர்ஸ் பேப்பர்களுக்கும் அந்த மாணவர் தயாராகிகொண்டிருந்தால் அனைத்தும் நல்லபடியாக முடித்து நாம்

Read More

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான். பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார். கூடவே லக்ஷ்மணனும். இதை நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய், வைகுண்டம் போய் கருடனிடம், "இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே

Read More

மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது எப்படி? வழிகாட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!

இந்து மதத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துக்கூறவும், பல்வேறு இந்து அமைப்புக்களின் சேவைகளை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவும் வருடா வருடம் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இதுவரை ஆறு முறை நடைபெற்றுள்ள இந்த கண்காட்சி ஏழாவது ஆண்டு ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். சென்ற ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்தப்

Read More

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

இந்தக் கதை சற்று பிரபலமான கதை தான். உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதனால் என்ன நல்ல விஷயம் தானே... இன்னொரு முறை படியுங்களேன். ஆனால் இதை தெரியாதவர்கள் யாராவது ஒருவர் இருந்து அவர் இதன் மூலம் பலன் பெற்றால் கூட நமக்கு சந்தோஷம் தான். இதற்கு முன் இந்தக் கதையை கேள்விப்பட்டவர்களோ அல்லது படித்தவர்களோ இதன் உட்கருத்தை சரியாக உள்வாங்கியிருப்பார்களா என்று தெரியாது. ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் சரி, நல்ல

Read More