Home > 2014 > September (Page 3)

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஒரு முறை தனது மகனின் திருமணச் செலவுக்காக தனது நண்பர் தண்டபாணி பிள்ளை என்பவரை சந்தித்து பொருளுதவி  கேட்டார். "எவ்வளவு  தேவைப்படும்?"  என்று தண்டபாணி பிள்ளை கேட்க, வ.உ.சி. "பத்தாயிரம் ரூபாய் இருந்தால் நலம்" என்றார். ஆனால் அவரிடம் அந்த நேரம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு பத்திரிக்கையின் ஆசிரியருமான வரதராஜுலு நாயுடு என்பவர் தண்டபாணி பிள்ளையிடம் ரூ.20,000/- கடன் பெற்றிருந்தார்.

Read More

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவையை சேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி திரு.சந்திரமௌலிக்கு ராயர் மீது அலாதி பக்தி உண்டு. தனது வீட்டுக்கருகே இருக்கும் குரும்பபேட் ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு அடிக்கடி தனது மகன் ஸ்ரீனிவாசனை அழைத்துக்கொண்டு செல்வார். அந்த பிருந்தாவனம் அங்கு தோன்றியது முதலே அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. புதுவை சங்கர வித்யாலாவில் +2 படித்து வந்த ஸ்ரீனிவாசன் படிப்பில் படுசுட்டி. எல்லாப் பாடங்களிலும் 90% மேல் எடுக்கும் நம்பர் ஒன் ஸ்டூடன்ட். ப்ளஸ்-டூ

Read More

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி தரிசனம்!

நமது ரிஷிகள் தரிசனம் தொடரின் ஆறாம் அத்தியாயம் இது. ஐந்தாம் அத்தியாயத்தில் வியாக்ரபாதரை பற்றி பார்த்தோம். தற்போது அவரது திருச்சமாதி பற்றி பார்ப்போம். ஸ்ரீவியாக்ரபாத முனிவர், பல சிவத் தலங்களை தரிசித்த பின், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் சிறுகனூர் கிராமத்துக்கு அருகில் உள்ள ‘திருப்பட்டூர்’ என்ற திருத்தலத்தில் சமாதி ஆனார். திருப்பட்டூர், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில்

Read More

அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்த கதை!

தூய்மையான, தன்னலமற்ற பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நாயன்மார்கள். நம் மண்ணில் நம்மிடையே  வாழ்ந்து மறைந்தவர்கள். எத்தனை சோதனை வந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட தொண்டிலும், கடமையிலும் பக்தியிலும் குறை வைக்காதவர்கள். சிவனடியாரும் சிவனும் வேறு வேறு அல்ல என்று கருதி, அடியார்களையே இறைவனாக தொழுதவர்கள். வேதத்தை முழுவதும் கற்று ஓதுவதற்கு இணையானது இவ்வடியார்களின் வரலாற்றை படிப்பது. இன்று ஆவணி மூலம். குங்கிலயக் கலய நாயனாரின் குருபூஜை. அவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள். இந்நன்னாளில்

Read More

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி திருமலை ஸ்ரீனிவாசனை காண கண் கோடி வேண்டும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் இல்லாமல் இல்லை. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு  நடத்திய, நடத்தும், நடத்தப்போகும் மகிமைகள் பலப் பல பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு அவன் நடத்திய `நாடகம்' தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர

Read More

அழுக்குகளை தள்ளுங்கள்; தங்கத்தை அள்ளுங்கள் – MONDAY MORNING SPL 58

நவம்பர் 25,  1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி.  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். பொருளில் தான் கார்னகியின் குடும்பத்தாருக்கு வறுமையே தவிர சிந்தனையில் அல்ல. எனவே நல்ல நல்ல நூல்களை படிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கார்னகியின் குடும்பத்தினர் வறுமையில் உழன்றபடியால், பெரும்பாலும் தன் பள்ளி புத்தகங்களை இரவல்

Read More