Home > 2013 > November (Page 3)

உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பசுக்களை தெய்வமாக நாம் பூஜித்து வரும் வேளையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோ-சாலையில் பசுக்களும் கன்றுகளும் போதிய உணவின்றி இறந்தது தொடர்பாக வெளியான தினமலர் செய்தியை நம் வாசகர்கள் சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அது தொடர்பாக ஏதேனும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால்

Read More

ஒரு பென்சில் போல நம்மால் இருக்க முடியுமா? – Monday Morning Spl 18

வழக்கமான பாக்கெட் பால் தவிர எங்கள் வீட்டில் பூஜை, நைவேத்தியம் உள்ளிட்டவைகளுக்கு பசும்பால் வாங்குவது வழக்கம். பண்டிகை நாட்களில் சற்று கூடுதலாக வாங்குவோம். ஒரு முறை பால்காரர் வரும்போது அம்மா சமையலறையில் வேலையாக இருந்ததால் நான் பால் அட்டையை எடுத்துக்கொண்டு பால் வாங்கச் சென்றேன். பாலை வாங்கியவுடன் தன் காதில் சொருகியிருந்த பென்சிலை எடுத்த பால்காரர், என் கையில் வைத்திருந்த அட்டையில் அளவை குறித்துவிட்டு திருப்பித் தந்தார். "என்ன சார்... பென்சிலை வெச்சிருக்கீங்க?

Read More

மஹா பெரியவா கருணை – நிறைவேறிய மற்றொரு பிரார்த்தனை! Righmantra Prayer Club

நம் பிரார்த்தனை கிளப்பில் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனை நிறைவேறிய மற்றொரு நிகழ்வு இது. மதுரையை சேர்ந்தவர் நம் தள வாசகி சுந்தரி வெங்கட் அவர்கள். ஓர் தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிகிறார். நமது தளத்தை தினசரி தவறாமல் படித்து நம் தளம் வலியுறுத்தும் கருத்துக்களை தவறமால் கடைபிடித்துவருபவர்களில் ஒருவர். நம் தளத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றும் மதிப்பும் அவரது வார்த்தைகளிலேயே உணர்ந்துகொள்ள முடியும். சில வாரங்களுக்கு முன்னர், 'அவசரம்' என்று குறிப்பிட்டு

Read More

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாகவே சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று.நம்நாட்டின் பற்பல பகுதிகளிலுள்ள பற்பல மக்களாலும் பற்பல விதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஞான நூல்களுள் “பகவத் கீதை” சிறப்பான இடத்தைப் பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் “பகவத் கீதையின் தம்பி” என்று சொல்லியுள்ளார்கள். தீபம் என்றால்

Read More