Home > ஆலய தரிசனம் (Page 3)

இவர் தீர்க்காத நோய் இல்லை – வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் – DOCTORS DAY SPL 1

இன்று மருத்துவர்கள் தினம் (DOCTOR'S DAY). இந்த இனிய நாளில், வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனாக விளங்கி, உடற்பிணி மட்டுமல்ல, பிறவிப்பிணியையும் சேர்த்து நீக்கும் நம் ஈசனுக்கு நன்றி கூறுவோம். 'வைத்தியநாதர்' என்கிற திருநாமத்தில் அவன் எழுந்தருளிருக்கும் புள்ளிருக்குவேளூர் என்கிற வைத்தீஸ்வரன் கோவில் பற்றி அறிந்துகொள்வோம். வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. வைத்தீஸ்வரன்

Read More

நூம்பல் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தர்கள் முறைப்படி மஹா ம்ருத்ஞ்சய வேள்வி!

சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வேலப்பஞ்சாவடியிலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது நூம்பல் கிராமம். காசி விஸ்வநாதருக்கு உகந்த மலரான நூம்பல் என்னும் பெயருடைய இந்த கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப் புராதனமான கருங்கற்களால் கட்டப்பட்ட கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் கூடிய சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. (பிரதி மாதம் நமது தளத்தின் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வரும் இரு ஆலயங்களுள் இது ஒன்று). இமயம் விட்டு பொதிகை நாடி

Read More

வேதமாகிய மலைகளுக்கு நடுவில் எழுந்தருளியிருக்கும் திரிசூலம் திரிசூலநாதர்!

உழவாரப்பணிக்கு கோவிலை தேர்ந்தெடுக்கும்போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று : அதிகம் வெளியுலகினரால் அறியப்படாத அதே சமயம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த கோவிலாக இருக்கவேண்டும் என்பது. எனவே நமது தளத்தின் உழவாரப்பணிக்காக கோவிலை தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்னர் (2012 ஆம் ஆண்டு) நாம் சென்று வந்த திரிசூலம் திரிசூலநாதர் கோவில் நினைவுக்கு வந்தது. திரிசூலம் திரிசூலநாதர் கோவில், சென்னையில் உள்ள மிக மிக பழைமையான தலங்களுள் ஒன்று.

Read More

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

முதலையை வைத்து ஒரு நாடகம் நிகழ்த்தி, அன்னையிடம் துறவறத்துக்கான ஒப்புதலை பெற்றுவிட்டான் சங்கரன். அன்னையிடம் ஒப்புதல் பெற்ற கையோடு வீட்டை துறந்து வெளியேற தயாரானான் பால சந்நியாசி. ஒரு வேகத்தில் ஆர்யாம்பாள் துறவறத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டாளே தவிர, ஏற்கனவே குடும்பத் தலைவர் சிவகுருனாதனை இழந்துவிட்ட நிலையில், ஒரே மகனையும், இழக்க எந்த தாய்க்கு விருப்பம் இருக்கும்? ==========================================================  * இந்த பதிவில் நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள், சங்கரரின் ஜன்ம பூமியில் உள்ள அவரது கோவில்

Read More

எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை !

திருச்சியில் நாம் பங்கேற்ற 'வள்ளுவன் பார்வை' உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது. நமது உரையும் இறைவனருளால் சிறப்பாக அமைந்தது என்றே கருதுகிறோம். அது பற்றி தனி பதிவை விரைவில் அளிக்கிறோம். இதற்கிடையே, ஞாயிறு மாலை திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நமது பிரார்த்தனை கிளப் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பற்றி ஒரு சிறிய அப்டேட் இது. 'வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பதிவு' பற்றி நாம்

Read More

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று கூறுவார்கள். ஆனால், தற்போது ஆணுக்கு மட்டுமின்றி பெண்ணுக்கு கூட அது ஒரு முக்கிய லட்சணமாக மாறிவிட்டது. காரணம் அடியோடு மாறிவிட்ட திருமண சந்தை. எனவே 'உத்தியோகம் திருமண ப்ராப்தம்' என்று சொல்வதே சரி. விரும்பியபடி விரும்பிய இடத்தில் வேலை என்பது அனைவருக்கும் வாய்க்காது. அது பூர்வ ஜென்ம கர்மாவோடு தொடர்புடையது. படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு வித நிர்பந்தத்தில் பேரில்

Read More

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி மற்றும் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த 'சொர்ணத்து மனை' ஆகிய இடங்களுக்கு கடந்த அக்ஷய திரிதியை அன்று நாம் மேற்கொண்ட பயணம் குறித்த பதிவு இது. காலடி நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையும், குளிர்ச்சியும்... பூலோக சொர்க்கம் அது. இந்த தொடரின் நோக்கமே காலடியின் மனதை வருடும் இயற்கை அழகை உங்களிடம் பகிர்ந்துகொள்வது தான். வெறும் புகைப்படங்களாக இல்லாமல், அப்படியே சங்கரரின்

Read More

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)

சென்னை மறைமலை நகரை அடுத்து அமைந்துள்ள 'ஔஷதகிரி' எனப்படும் ஆப்பூர் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி குறித்த அப்டேட் இது. இந்த உழவாரப்பணியில் எண்ணற்ற சுவையான சமபவங்கள் நடைபெற்றதையடுத்து, இரண்டு பகுதிகளாக இந்த உழவாரப்பணி குறித்த அப்டேட்டை அளிக்கிறோம். இந்த வாரம் வெளியிடப்படும் முதல் பகுதி, உழவாரப்பணிக்கு செல்லும்போது மலையில், வழியில் அனுமனின் வழித்தோன்றல்களிடம் நாம் மாட்டிக்கொண்டு விழித்த கதை பற்றியது. இந்த கோவிலை பற்றி

Read More

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

சுமார் 60 ஆண்டுகளுக்கு வள்ளிமலையில் படிகள் அமைக்கும் திருப்பணி நடந்த போது நடைபெற்ற அதிசய சம்பவம் இது. வாரியார் ஸ்வாமிகள் தாம் இருந்த காலத்தில் வருடந்தோறும் வள்ளி பிறந்த, முருகன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்கு சென்று திருப்புகழ் பாடி படி உற்சவம் நடத்துவார். திருப்புகழ் பாடிக்கொண்டே கிரிவலமும் வருவார். நடக்க முடியாத நாள் வரையில் அவர் கிரிவலம் வரத் தவறியதில்லை. வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் தொடங்கி வைத்த இந்த படி உற்சவம்

Read More

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

பல யுகங்கள் கண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கும் தமிழர்க்கும் உண்டு. ஆனால் சில நூறு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லை. அவற்றில் ஒன்று தான் ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுவது. நாம் உண்மையில் கொண்டாடவேண்டியது தமிழ்ப் புத்தாண்டு தான். நாளை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு. இதையொட்டி தமிழகத்தில் முருகனின் சில குறிப்பிட்ட தலங்களில் பின்பற்றப்படும் அருமையான நடைமுறை ஒன்றைப் பற்றி பார்ப்போம்.

Read More

அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சோறூட்டுவார்கள். அதை 'அன்னப்பிராசனம்' என்பர். அன்னப்பிராசனம் என்பது மிகவும் புனிதமான ஒரு விஷயம். உங்கள் குழந்தை நன்கு வளர்வதும் ஆரோக்கியமாக வளர்வதும் அது உண்ணும் உணவில் தான் இருக்கிறது. எனவே இந்த குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் நிகழ்வை இறைவனின் சன்னதியில் வைத்து செய்வர். இதற்கு தான் அன்னப்பிராசனம் எனு பெயர். இது ஆண் குழந்தைகளுக்கு 6 ஆம், 8 ஆம் அல்லது 10 ஆம்

Read More

ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!

நாளை மார்ச் 28, சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமி. உங்களையெல்லாம் அந்த ராமச்சந்திர மூர்த்தியை காண அழைத்துச் செல்லவேண்டி அளிக்கப்படும் சிறப்பு பதிவு இது. இந்த வருட ராம நவமியை முன்னிட்டு நாம் அளித்து வரும் ராம நாம மகிமை தொடரின் இறுதிப் பதிவாக ஏதேனும் ஒரு பிரசித்தி பெற்ற ராமர் கோவில் பற்றிய ஆலய தரிசன பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டு வந்தோம். அப்போது நினைவுக்கு வந்தது தான் மதுராந்தகத்தில்

Read More

வட திருநள்ளாறு – சனிப்ரீதி செய்ய இதோ சென்னையில் ஒரு திருநள்ளாறு!

சனிப்பெயர்ச்சியால் கலங்கித் தவிப்பவர்கள், திருநள்ளாறு செல்ல விருப்பம் இருந்தும் நேரமின்மை மற்றும் இதர நடைமுறை சிக்கல்கள் காரணமாக தவிப்பவர்கள் ஆகியோருக்கு ஆறுதலும் தேறுதலும் தீர்வும் அளிக்கக்கூடிய ஒரு பதிவு தயாராகி வருவதாக சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இதோ அந்த பதிவு. 2014 டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம். ரைட்மந்த்ரா அலுவலகத்திற்கு இடம் பார்த்து வந்த நேரம். ஒரு நாள் நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு மேற்கு மாம்பலம் வீராசாமி

Read More

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது பௌர்ணமியையொட்டி ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் நீர்நிலைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம். சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் நேற்றைக்கு மெரீனா கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். கடல்வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு தரிசனம் தர விரும்பியே இறைவன் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். இதைப் பார்ப்பதும், அது சமயம் கடலில் நீராடுவதும் மிகவும் சிறப்பு. அளவற்ற

Read More