Home > All in One (Page 3)

நம் தளம் சார்பாக விரைவில்….

மகாவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 அன்று வருகிறது. அதையொட்டி டிசம்பர் 9, ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நமது தளம் சார்பாக அவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. விழா நடைபெறும் இடம், பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் விபரம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவை விரைவில் தெரிவிக்கப்படும். மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருவுலகம் - இங்குள்ளன யாவையும் செய்பவளே

Read More

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!

நம் தளத்தின் பேட்டிக்காக வி.வி.ஐ.பி. ஒருவரை பார்க்க கடந்த  நாட்களுக்கு முன்பு சென்றிருந்தோம். இப்படி ஒரு பெரிய மனிதரை, சாதனையாளரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை என்னுமளவுக்கு சாதனையின் சிகரம் இவர். (இந்த தளத்துக்காக வேறு எந்த அடையாளத்தையும் நாம் பயன்படுத்தாமல் எடுக்கும் இரண்டாம் சந்திப்பு இது. முதல் சந்திப்பு திரு.காந்தி கண்ணதாசன். அது விரைவில் முழுமையாக இந்த தளத்தில் வெளியாகவிருக்கிறது!) [dropcap]உ[/dropcap]ங்களிடம் ஒரு கேள்வி.... அதிகம் பொருளீட்டுபவர் செல்வந்தரா? அல்லது அதிகம் கொடுப்பவர் செல்வந்தரா? அதிகம் கொடுப்பவரே செல்வந்தர்

Read More

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

ஆளுமை வளர்ச்சியில் நம்முடைய அணுகுமுறைகளை மாற்றிகொள்வது, பிறரிடம் பழகும்போது கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆளுமை வளர்ச்சியில் மிக மிக மிக முக்கிய பங்கை வகிக்கும் TIME MANAGEMENT பற்றி அதாவது நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பது பற்றி பார்ப்போம். மேலே படிப்பதற்கு முன்னர் நான் ஒன்றை சொல்லிக்கொள்ளா ஆசைப்படுகிறேன். கடந்த காலங்களில் நான் நேரத்தை நிறைய வீணடித்திருக்கிறேன். அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பதிவு.

Read More

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

கோவிலுக்கு போறது பத்தி நாம பதிவெல்லாம் போடுறதுனால நாம முதல்ல கரெக்டா இருக்கணும்னு இப்போ ரெகுலரா கோவிலுக்கு போய்க்கிட்டுருக்கேன். அதுவும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கட்டாயம் ஏதாவது பாரம்பரியம் மிக்க பழமையான கோவிலுக்கு செல்வதை இப்போ வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டேன். ஆகையால தீபாவளி அன்னைக்கு நிச்சயம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் பண்ணிடனுங்கிறதுல உறுதியா இருந்தேன். நெருங்கிய நண்பர்கள் பலர் தீபாவளிக்காக அவங்கவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. சென்னையிலிருந்த

Read More

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

'லக்ஷ்மி கடாக்ஷம்' என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம். பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட இந்த

Read More

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

தமிழ் சினிமாவில் எத்தனையோ தரமான பக்தி திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நமது ஆன்மீக பசியை தூண்டி விட்டிருக்கின்றன. துவண்டு கிடக்கும் உள்ளங்களை தட்டி எழுப்பியிருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை இன்றைய இணைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் மீண்டும் அடையாளம் காட்டும் ஒரு முயற்சியே இந்த பகுதி. நல்ல புத்தகங்களை, பக்தி நூல்களை படிப்பதற்கு தெரிந்து கொள்வதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்துவருவது பலருக்கு சிரமமாக இருக்கும் இன்றைய காலகட்டங்களில் அட்லீஸ்ட் இது போன்ற

Read More

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு; எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!

கடந்த சரஸ்வதி பூஜை திருநாளன்று, "அன்னயாவினும் புண்ணியங்கோடி" என்னும் தலைப்பில் நாம் ஒரு பதிவை அளித்திருந்தோம். அதில் கல்விக்கடவுள் அன்னை கலைவாணிக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதாவது ஒன்றை நாம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தோம். இதற்காக கோவை மாவட்டம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிய சாதனையாளர்கள் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி மற்றும் உதவி ஆசிரியர் திரு.பிராங்க்ளின் இருவருடனும் ஆலோசித்தோம். அப்போது ரீசார்ஜ்

Read More

உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்!

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்று சொல்கிறார்களே... அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா? ஆபத்தில் இறைவனின் திருவடி உதவுவதை போன்று உடன் பிறந்த அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது தான். ஆனால், நம்ம ஆட்கள் அடி, உதை, வெட்டு, குத்து என்று தங்கள் சௌகர்யத்துக்கு ஏற்றார்போல, இந்த அழகான பழமொழியை மாற்றிக்கொண்டு விட்டனர். எந்த  ஆலயத்திற்கு  சென்றாலும் இறைவனை தரிசிக்கும்போது, திருவடிகளை தான் முதலில் தரிசிக்கவேண்டும். அதுவும்

Read More

பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்?

அலுவலகத்திலோ அல்லது வெளியிடங்களிலோ அல்லது ஏன் நம் வீடுகளிலேயே கூட சில சமயம் சாதாரண விஷயத்தில் துவங்கும் ஒரு வாக்குவாதம் மிகப் பெரிய சண்டையாகி, அனைவரும் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பின்னர் நமக்கு தோன்றும்... "இப்படி ஆகிப்போச்சே...நாம இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டியதில்லையோ? என்று. பேசுபவர்கள் அருகே இருக்க ஆனால் நாம் கோபத்தில் இருக்கும்போது மட்டும் கத்துவது ஏன்? ஒரு குரு தன் சிஷ்யர்களுடன் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில், ஒரு வீடு முன்பு

Read More

யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!! — “இதோ எந்தன் தெய்வம்” — (2)

நமது “இதோ எந்தன் தெய்வம்” தொடரின் அடுத்த அத்தியாயம் இது. படிக்கும் உங்களுக்கும் பாவங்கள் தொலையும் என்பது மட்டும் உறுதி. சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்த செய்தி ஒன்று நெஞ்சை மிகவும் கனக்க வைத்தது. திருப்பதி நகரில் பிள்ளைகளுக்கு நடுவே வயதான தங்கள் தாயை யார் பராமரிப்பது என்று எழுந்த சண்டையில் அந்த 82 வயதான தாயை கட்டிலுடன் கொண்டு போய் ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டனர் மகன்கள். கடந்த 15 நாட்களாக மழையிலும்

Read More

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் பொதுமக்கள் அதிகம் அறிந்திராத நூற்றுக்கணக்கான அழகிய கோவில்கள் இருக்கின்றன. இத்தகைய கோவில்களுக்கு சென்று அந்த அனுபவத்தை ஒரு நான்கு பேரிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் செல்ல ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம். இவைகளில் ஆகர்ஷன சக்தியை தங்களுக்குள் கிரகித்துக்கொண்டு சிறந்த பரிகாரத் தளங்களாக  விளங்குபவைகளும் இருக்கின்றன. விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ போவதற்கு பல முறை யோசிக்க வேண்டியுள்ளது.

Read More

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். "இறைவா... இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??" என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள்

Read More

இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!

இயற்கையை விட மிகப் பெரியவர் எவரும் உண்டா? அது போடும் பல புதிர்களுக்கு விஞ்ஞானத்தில் இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கு விடை சொல்ல எந்த சர்ச் எஞ்சினும் இல்லை. அட சொல்ல மறந்துட்டேனே... பகுத்தறிவுவாதிகள் கடவுளுக்கு வெச்சிருக்கிற புத்திசாலித்தனமான பேர் தான் 'இயற்கை'. அவங்க பதில் சொல்லமுடியாத மாதிரி ஏதாவது எதையாவது கேட்டோம்னா "அது இயற்க்கை"ன்னு சொல்லி சாமர்த்தியமா தப்பிச்சிடுவாங்க. அந்த இயற்கையோட அதிசயத்தை நீங்களே பாருங்க! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல

Read More

அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!

சிவபெருமான் அபிஷேகப் பிரியன். திருமால் அலங்காரப் பிரியன். ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் சிவனுக்கு நடக்கும் அன்னாபிஷேகம் மிகுந்த சிறப்பு பெற்றது. பொதுவாக அன்னத்தை  போன்ற கலவை சாதம் (தயிர் சாதம், எலுமிச்சம் சாதம், எள் சாதம், சர்க்கரை பொங்கல்) செய்து அதைத் தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் சிவனுக்கு மட்டுமே வெறும் அன்னத்தை அபிஷேகம் செய்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா இன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது. அன்னாபிஷேகமே பஞ்ச

Read More