Home > 2014 (Page 26)

யார் உங்கள் தலைவர்?

யாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அவரது பண்புகள் என்ன? அவர் உங்களை சரியாக வழி நடத்துகிறாரா? உங்கள் குழப்பங்களை தீர்த்துவைக்கிறாரா? சுயநலமற்று இருக்கிறாரா? காட்சிக்கு எளியரா? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எல்லோரும் தலைவனாகிவிடமுடியாது. தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள்  இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும். தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால்

Read More

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

ஐந்தாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குமாரசாமிக்கு வழியில்லை. குடும்பத்தின் வறுமை நிலை தான் அதற்கு காரணம். `அதை அவரும் அறிவார். கல்வி கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. அந்த குறையை போக்குவதற்கு அவர் அவ்வப்போது நூல்களை படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நூல்களை படிக்க படிக்க அவருக்கு அறிவு வளர்ந்தது. பண்பு மிளிர்ந்தது. இயற்கையாக அமைந்திருந்த பண்போடு நூலறிவும் சேர்ந்ததால் அந்த பண்பு மெருகு பெற்று

Read More

நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில், மற்றும் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என்று வழங்கப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதி்காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், நாம் நந்தம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் கோதண்டராமர் திருக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் பங்குகொண்டு சொர்க்கவாசல் புகும் பாக்கியம் பெற்றோம். நந்தம்பாக்கம் கோவில் அடிப்படையில்

Read More

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

இறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலயத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பை கூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம். வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம்

Read More

அரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE

மார்கழி மாதம் வந்த  உடனே   நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது  வைகுண்ட ஏகாதசி. ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். வரும் 11/01/2014 சனிக்கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி. ========================================================= வைகுண்ட ஏகாதசியின் சிறப்பை ஒரு பதிவிற்குள் அடக்குவது என்பது கங்கையை கைக்குள் அடக்குவது போன்றது. இருப்பினும், பல

Read More

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

இதுவரை நாம் எத்தனையோ தன்னம்பிக்கை அளிக்கும் குட்டிக் கதைகளை படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அவற்றுள் ஒரு மிகச் சிறந்த கதை என்று கூறலாம். இந்தக் கதையை நீங்கள் முகநூலிலோ அல்லது வேறு எங்கோ படித்திருக்கலாம். படித்தவுடன் மறந்தும் இருக்கலாம். இந்த கதை மறக்கக்கூடிய கதை அல்ல. அடிக்கடி நாம் நமக்குள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு கதை. (முகநூலில் நல்லது நான்கை ஃபாலோ செய்தால், அல்லது நானூறு அல்லவா பலர்

Read More

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் இன்று. ஆம்... ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும். பெரியவரின் அந்து பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம். 1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை

Read More

ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

நண்பர்களே, நம் இனிய நண்பரும் பிரபல ஆன்மீக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் மஹா பெரியவா அவர்களின் சீரிய தொண்டர். குருவின் பெருமையை பரப்பவுதே தமது லட்சியமாக கருதி செயல்பட்டு வருகிறார். இதுவரை சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் மஹா பெரியவா அவர்களின் மகிமை குறித்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போர்களுக்கு குருவின் மகிமையை கேட்பதற்கு இனியதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விரைவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய அரபு

Read More

மும்மூர்த்திகளின் அருளைப் பெற வழிகாட்டும் ஸ்ரீ குரு சரித்திரம்!

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயா தேவி. கற்புக்கரசிகளில் ஒருவர். இவரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான முப்பெரும் தேவியரும் அனுசூயா மீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர். அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நியாசிகள் போல வேடம் புனைந்து அத்திரி மகரிஷியின் ஆசிரமம் வந்தனர். அவர்களை முறைப்படி வரவேற்ற அனுசுயா தேவி உணவு

Read More

பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL 27

ஆசிரியர் அன்று பாடத்தை துவக்கும் முன்னர், கையில் ஒரு கிளாஸில் நீரை நிரப்பி, "இதன் எடை என்ன தெரியுமா?" என்று கேட்க்கிறார். "50 கிராம்... 100 கிராம்.... 150 கிராம்...." என்று ஆளாளுக்கு கூறுகின்றனனர். "இதை எடை பார்க்காதவரை இதன் சரியான எடை என்ன என்று தெரியப்போவதில்லை. நான் கூறவருவது இதன் எடையை பற்றியல்ல.... என் கையை இப்படியே நான் சிறிது நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும்?" "ஒன்றுமாகாது!" "சரி.... ஒரு மணிநேரம் வைத்திருந்தால்...?" "உங்கள் கைகள்

Read More

புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைப்போம்!

ஆண்கள் பெண்களை நிராகரித்த காலம் போய், பெண்கள் ஆண்களை நிராகரிக்கும் காலம் இது. கல்யாண சந்தையே இப்போது தலைகீழாக போய்விட்டது. 20-30 வருடங்களுக்கு முன்னர் மணமகன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. தகுதியே இல்லையென்றாலும் ஆணாக இருக்கும் ஒரே காரணத்தால் அப்போதெல்லாம் திருமணம் கைகூடிய ஆண்கள் அநேகம் பேர். ஆனால் இன்று? நிலைமை அப்படியே தலை கீழ். பெண்கள் அதிகம் படித்திருக்கிறார்கள். சம்பாதிக்கவும் செய்கிறார்கள். வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு, கண்ணோட்டம் எல்லாம்

Read More

வாருங்கள் விதியை வலிமை இழக்கச் செய்வோம்….! Rightmantra Prayer Club

திருடர்கள் நள்ளிரவில் ஒரு வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் எதிர்பார்த்த எதுவும் அங்கில்லை. வீட்டைத் துருவித் துருவித் தேடினர். ஒரு மூலையில்  ஒரு சேவலைக் கண்டார்கள். திருடர்கள் அச்சேவலை மட்டுமே எடுத்துச் சென்றனர். தங்கள் வீட்டிற்குப் போனவுடன் சேவலைக் கொல்ல முயன்றனர். சேவல் அவர்களைப் பார்த்து, ‘‘ஐயா, என்னைக் கொல்லாதீர். நான் மனிதருக்கு மிகுந்த பயன் அளிப்பேன்; அதிகாலையில் கூவி எழுப்பி விடுபவன்  நான்தான்’’ என்று கூறிக் கெஞ்சியது. அரக்க குணம் மிகுந்த

Read More

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

பரபரப்பான உலகில் சுயநலத்தையே சுவாசித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவே, நம் தளம் சார்பாக நடைபெறும் எத்தனையோ அறப்பணிகளுக்கும், ஆன்மீக காரியங்களுக்கும் உறுதுணையாக இருந்து உதவி செய்பவர்கள் நம் வாசகர்கள். தங்களுக்கும் சரி தங்கள் குடும்பத்தினருக்கும் சரி.... புண்ணியம் தேடிக்கொள்வதில் அலாதி ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு புண்ணியம் சேர்ப்பது குறித்து மேலும் ஒரு பரிமாணத்தை விளக்கவேண்டியே இந்த பதிவை அளிக்கிறோம். புண்ணியம் என்பது ஏதோ அடுத்த ஜென்மத்திற்கும், இறுதியில் இறைவனடி சேர்வதற்கும் மட்டுமே

Read More