Home > MONDAY MORNING SPL (Page 2)

கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73

அந்த ஊர் சுவாமியை தொடர்ந்து மூன்று புத்தாண்டுகள் தரிசனம் செய்தால் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒவ்வொரு புத்தாண்டும் அந்த தலத்து இறைவனை தரிசிக்க கூட்டம் முண்டியடிக்கும். எங்கெங்கிருந்தோ மக்கள் படையெடுப்பார்கள். அதே ஊரில் ஒரு மிகப் பெரிய பக்தர் இருந்தார். அனைவர் மீதும் கள்ளங்கபடமற்ற அன்பை செலுத்தும் பண்பாளரான அவர் அடுத்தவர்களுக்கு ஒரு தேவை என்றால் ஓடோடிச் சென்று உதவும் மனப்பான்மை உள்ளவர். அவர் மீது

Read More

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72

சென்ற வாரம் நடைபெற்ற நமது விருதுகள் வழங்கும் விழாவில் நாம் உரையாற்றும்போது இந்தக் கதையை கூறுவதாக இருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக கூற முடியவில்லை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட, படித்த சுயமுன்னேற்ற நீதிக் கதைகளில் மிகச் சிறந்த கதையாக இது இருக்கக்கூடும். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை இது ஏற்படுத்தக்கூடும். நம் முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த கதை இது. முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப்

Read More

பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71

ராமுவின் மனைவிக்கு ஒரு நாள் புடலங்காய் கூட்டு வைக்கவேண்டும் என்கிற ஆசை எழுந்தது. சந்தைக்கு போய் புடலங்காய் வாங்கி வாருங்கள் என்று அவனை அனுப்பினாள். புடலங்காய் கூட்டு அவனுக்கு  மிகவும் பிடிக்கும் என்றாலும் சரியான சோம்பேறியான அவனுக்கு சந்தைக்கு போய் அதை வாங்கி வரவேண்டுமே என்கிற அலுப்பு ஏற்பட்டது. இருப்பினும் சொன்னதை செய்யவில்லை என்றால் பலர் வீட்டில் உள்ள வழக்கத்தைப் போல அவன் மனைவியின் பூரிக்கட்டைக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால், வேறு வழியின்றி சந்தைக்கு

Read More

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

ஒரு உரையாடல் மூலம் நமது வாழ்வின் பிரச்சனைகள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு சொல்ல முடியுமா? "ஆம்... முடியும்!" என்று நிரூபித்திருக்கிறார்கள் அந்த குருவும் அவரது உண்மை மாணவனும். மாணவன் கேட்டது சாதாரண கேள்விகள் அல்ல. வாழ்க்கையில் போராடும் ஒவ்வொருவர் மனதிலும் உள்ள கேள்விகள். எல்லா தெய்வங்களிடமும் குருமார்களிடமும் கேட்டு கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள். பதில் சொன்ன குரு அந்த மாணவனுக்கு மட்டும் சொல்லவில்லை. நம் அனைவருக்கும் சேர்த்து தான் சொல்லியிருக்கிறார். ஸ்ரீ

Read More

நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69

அது ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனம். தனது நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு அந்த நிறுவனம் பல சிறப்பான வசதிகளை செய்து தந்தபோதும் அவர்களில் பலர் திருப்தியின்மையிலும் ஒரு வித மனச் சோர்விலும் வாழ்ந்து வருவதை அதன் நிறுவனர் கண்டுபிடித்தார். இதையடுத்து அவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்டவேண்டி ஒரு சிறந்த பேச்சாளரை கொண்டு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார். பயிற்சி வகுப்பு வந்த பயிற்சியாளர் அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசியதும் அவர்களின்

Read More

திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68

ஒரு உதவி நீங்கள் செய்ய முன்வந்தால் பலனடைவோரின் தகுதி, நேர்மை ஆகியவை பற்றி கவலைப்படவேண்டாம். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் பாராட்டும் அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களை மாற்றி பணியை நிச்சயம் சிறக்கச் செய்யும். நெல்லுக்கு இறைக்கும் நீர் சில சமயம் புல்லுக்கும் போகும். அது இயற்கை. அதை நம்மால் தவிர்க்க இயலாது. அதற்காக நீர் இறைப்பதை நிறுத்த முடியுமா? நீங்கள் சற்று விழிப்புடன் இருந்தால் போதும். காலப்போக்கில் நெல்லுக்கு

Read More

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு  அவரது  நண்பர்  ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை  எழில்  சூழ்ந்த  இடத்தில்  இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு  நாள்  மாலை, பண்ணை  மைதானத்தில்  விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை

Read More

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

ஒரு ஊரில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வரும் ஒரு ஏழை பிராம்மணன் வசித்து வந்தான். ஒரு நாள் ஒரு வீட்டு முன் நின்று அந்த பிராம்மணன் பிக்ஷை கேட்டான். அந்த இல்லத்தரிசியோ ஏழை எளியவர்கள் பால் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவி வரும் ஒரு நல்லாள். பிராமணன் பிக்ஷை கேட்பதை பார்த்து "சற்று நேரம் அந்த மரத்தடியில் உட்காருங்கள். நான் சமைத்து முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். சற்று நேரத்தில் சூடான உணவு கொண்டுவருகிறேன்"

Read More

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் நிலத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அரசின் வருடாந்திர விவசாய கண்காட்சியில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு முறையும் சிறந்த முறையில் மகசூல் செய்தமைக்கும், தரமான கதிர்களை மகசூல் செய்தமைக்கும் அரசாங்கத்தின் விருதும் பதக்கமும் தவறாமல் அவர் பெற்று வந்தார். அவரின் சாதனை பற்றி கேள்விப்பட்ட ஒரு நாளிதழ் அவரை பேட்டியெடுக்க தன் நிருபரை அனுப்பியது. நிருபர் விவசாயியிடம் பேச்சு கொடுத்தபோது அவர் செய்து வரும்

Read More

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

நம்மில் நிறைய பேர் ஒரு புது நட்பை தேர்ந்தெடுப்பது எதை அடிப்படையாக வைத்து என்று பார்த்தோமானால் அது பெரும்பாலும் புகழ்ச்சியை அடிப்படையாக வைத்து தான் இருக்கும். ஆனால் அது சரியான முறையா? "இந்திரனே, சந்திரனே, இவரைப் போல யாரும் இல்லை... உன்னைப் போல அந்த வேலையை செய்து முடிக்க யாருமில்லை!" என்று புகழ்ந்து கூறினால் போதும் சிலருக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. அதற்கு பிறகு அவர்களுக்கு வைக்கப்படும் ஆப்பு கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு

Read More

இந்த உலகம் யாரை கொண்டாடும்? — MONDAY MORNING SPL 63

அந்த ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனது கருமித்தனத்தால் ஊரார் அவனை அடியோடு வெறுத்தனர். ஒரு நாள் ஊராரிடம் அவன் சொன்னான்.... "உங்களுக்கு என்னை பற்றி இப்போது தெரியாது. கடவுளுக்கு  தெரியும். நான் போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. அது எனக்கு தெரியும். எனவே என் சொத்துக்களில் கணிசமான ஒரு பகுதியை இந்த ஊருக்கும் பல தர்மகாரியங்களுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டுத் தான் செல்வேன்!" என்றான். அவன்

Read More

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ? MONDAY MORNING SPL 62

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. "இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?" எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை

Read More

சாதனையாளர்களை உருவாக்குவது எது? MONDAY MORNING SPL 61

அந்த இளைஞன் ஒரு சிறந்த தோட்டத்தை அமைத்து தனது வீட்டில் பராமரித்து வந்தான். ஒரு நாள் பட்டாம்பூச்சி ஒன்று ஒரு பூந்தொட்டியில் முட்டையிட்டதை பார்த்தான். அது முதல் அந்த முட்டையின் வளர்ச்சியை மிகவும் ஆர்வமாக கவனித்து வரலானான். ஒரு கட்டத்தில் முட்டை அசைந்தது. முட்டை உடைந்து ஒரு உயிர் ஜனிப்பதை பார்க்க அவனுக்கு பரவசமாய் இருந்தது. மணிக்கணக்கில் அந்த முட்டையை கவனிப்பதில் கழித்தான். சிறிது நாளில் முதலில் ஒரு புழுவின் தலைமட்டும்

Read More

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் – MONDAY MORNING SPL 60

சிறு வயது முதலே அந்த சிறுவனுக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம் உண்டு. அவனுக்கு தெரிந்த ஒரே பியானோ ஆசிரியர் அவன் அம்மா தான். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டான், "அம்மா நாமெல்லாம் ஏழைகளா?" "ஆமாம்...  ஏழைகள் தான்!!!" "ஒரு நாள் நிச்சயம்  நான் உலகப் புகழ்  பெறுவேன். அன்று என் பெயர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்" என்றான். தன் அப்பா செல்லும் சர்ச்சில் ரெகுலராக பியானோ வாசித்து வந்தான். கிட்டத்தட்ட 11  வயதில், ஒரு கைதேர்ந்த

Read More