Home > சிவராத்திரி (Page 2)

சிவனோடு சில மணி நேரம் – ஊன்றீஸ்வரரோடு கழிந்த நம் சிவராத்திரி!

நம் வாசகர்கள் பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். பலர் முதல் முறையாக அனுஷ்டித்திருப்பீர்கள். தொடர்ந்து மஹா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் வாழ்வில் ஏற்றத்தை உணர்வீர்கள். இந்த பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து சிவனை தொழும் வாய்ப்பு கிடைப்பதும், சிவபெருமானை சிந்தை நினைப்பதும் கூட ஒரு மிகப் பெரிய பேறு தான். அந்த வகையில் நாம் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். விரதங்களை கடைபிடிப்பது, சிவாலயங்களை, வைணவ  ஆலயங்களை தரிசிப்பது

Read More

சிவராத்திரி சிறப்பு கூட்டு பிரார்த்தனை & சிவராத்திரி விரதம் – சில தகவல்கள்!

இன்று (பிப்ரவரி 27, வியாழன்) மகா சிவராத்திரி. இன்று இரவு சிவாலயங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடைபெறும். சென்ற ஆண்டு நாம் அளித்த பதிவிலேயே அனைத்தும் மிக மிக தெளிவாக கூறப்பட்டிருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு முறை நாம் தொகுத்த தகவல்களை அளிக்கிறோம். இயன்றவற்றை பின்பற்றி அவனருள் பெறுங்கள். சிவராத்திரி விரதத்தை முதல் நாளே (நேற்று முதல்)  தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில்

Read More

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

கடந்த ஞாயிறு பிப்ரவரி 23 அன்று, நமது தளம் சார்பாக பூண்டி மின்னொளி அம்பாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு உழவாரப்பணி மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது உழவாரப்பணிக்கு வழக்கமாக வரும் சில அன்பர்கள் வரவில்லையென்றாலும் வேறு சிலரை இறைவன் அனுப்பி வைத்து பணியை சிறப்பாக நடத்திக்கொண்டான். நாம் திட்டமிட்டபடி, ஒட்டடை அடிப்பது, தரையை பெருக்கி அலம்பி விடுவது, பழுதடைந்த பல்புகளை மாற்றி புதிய பிட்டிங்குகளை நிறுவுவது,

Read More

எளியோர்க்கு எளியோன் & தலைவர்க்கெல்லாம் தலைவன்! – சிவராத்திரி SPL (4)

தெய்வங்களில் மிக மிக எளிமையானவன் அதே சமயம் மிக மிக வலிமையானவன் யார் தெரியுமா? சாட்சாத் சிவபெருமான் தான். உள்ளன்போடு "ஓம் நம சிவாய" என்று நீங்கள் உருகி கூப்பிட்டாலே ஓடோடி வந்து ஏவல் செய்ய காத்திருப்பான். அவன் அருளை பெற நீங்கள் நாயன்மார்களை போல இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. 'அன்பே சிவம்' என்பதை உணர்ந்த மனிதர்களாக இருந்தால் போதும். நம்மை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக அவர் மீது ஒரு

Read More

இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..! சிவராத்திரி SPL (3)

சென்ற டிசம்பர் மாதம் நம் தளத்தின் சார்பாக பாரதி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது நினைவிருக்கலாம். பொதுவாக இது போன்ற விழாக்களில் நாம் என்ன பேசவேண்டும் என்று ஓரளவு முன்கூட்டியே தயார் செய்துகொள்வோம். ஆனால் பாரதி விழாவை பொருத்தவரை ஒய்வு ஒழிச்சலின்றி அடுத்தடுத்த பணிகள், எதிர்பாராத சோதனைகள் என்று நாம் அந்த விழாவை எதிர்கொண்டமையால் எதையும் தயார் செய்துகொள்ள நேரமிருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் விழாவில் நாம் உரையாற்றும்போது, இடையே

Read More

நந்தி இறைவனிடம் கேட்ட பதினாறு பேறுகள்! சிவராத்திரி SPL (2)

சிவபெருமான், நந்தி பகவானுக்கு பட்டாபிஷேகம் செய்து கணங்களின் தலைவனாக நியமித்தபோது, சிவனடியார்கள் வேண்டும் பதினாறு பேறுகளை வரமருள வேண்டும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டார் நந்தீஸ்வரர். அவை என்ன தெரியுமா? மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும் தறுகண் ஐம் புலன்களுக் கேவல் செய்யுறாச் சதுரும் பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும் உறுதி நல்லறம் செய்பவர் தங்களோ டுறவும் யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும் மாத வத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு

Read More

ரிஷபம் சிவபெருமானின் வாகனமானது எப்படி? நந்தி தேவரின் திவ்ய சரித்திரம் – சிவராத்திரி SPL (1)

பிப்ரவரி 27 ஆம் தேதி மஹா சிவராத்திரி. சிவராத்திரிக்கு உங்கள் அனைவரையும் தயார் படுத்துவதன் பொருட்டு இப்பொழுதிலிருந்தே சிறப்பு பதிவுகளை துவக்குகிறோம். சரியாக சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது என்பது குறித்த பதிவோடு இந்த தொடர் நிறைவு பெறும். நாம் அளிக்கவிருந்த சிவநாம மகிமை தொடர்பான பதிவுகளும் இதனூடே தொடர்ந்து அளிக்கப்படும். இந்த தொடரில் சிவநாம மகிமை, சிவபெருமானின் பெருமை, சிறப்பு, எளிமை முதலியவற்றை முற்றிலும்

Read More

மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

சிவராத்திரி அன்று காலையில் நாம் ஆற்றிய உழவாரப்பணியின் மூலமாக நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது செய்யும் சிறு சிறு தவறுகள் கூட ஆலயத்தை எப்படி அசுத்தப்படுத்துகின்றன என்று நன்கு தெரிந்துகொண்டோம். கோவிலை பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்றும் அறிந்துகொண்டோம். அந்த வகையில் இந்த உழவாரப்பணி இனி நாங்கள் கோவிலுக்கு செல்லும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எங்களுக்கு புரிய வைக்கும் பாடமாக அமைந்தது என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு முன்பு கோவிலுக்கு

Read More

விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கைவரப்பெற்று கடுமையான விரதங்கள் இருந்தால் தான் இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் நாம் பாத்திரமாவோம் என்றில்லை. இதயத்தின் ஓரத்தில் ஓரளவு சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் இந்த கலியுகத்தில் கடைத்தேற. திருக்குறிப்பு தொண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சலவைத் தொழில் செய்து வந்த இவர், சிவனடியார்களின் ஆடைகளை இலவசமாக துவைத்து தரும் அரும்பணியை செய்து இறைவவனின் அருளுக்கு பாத்திரமானார். 63 நாயன்மார்களுள் ஒருவர் என்ற சிறப்பை பெற்றார். இதிலிருந்து

Read More

சிவராத்திரி விரதத்தை விட மேன்மையான ஒன்று – நீங்கள் தயாரா? சிவராத்திரி ஸ்பெஷல் 2

சிவராத்திரி அன்று விரதமிருந்து கோவில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிப்பதை விட உயர்ந்த ஒன்று எதுவும் இருக்கிறதா என்ன? என்று இந்த பதிவின் தலைப்பை பார்க்கும் உங்களுக்கு ஆச்சரியம் மேலிடலாம். சிவராத்திரி போன்ற நேரங்களில் விரதமிருப்பது, இறைவனை தரிசிப்பது போன்றவை ஒரு புறம் இருக்கட்டும். இவையெல்லாம் நமது நன்மைக்காகவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் நாம் செய்வது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய அளவில் கூடும் சிவராத்திரி போன்ற வைபவங்களில் நாம் செய்யக்கூடிய

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது. சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி  திருப்பின. நான் 'என்னை' அறியச் செய்தன. நரசிம்மர்

Read More

அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

இதுவரை எத்தனையோ பாடல்பெற்ற தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசி ஏற்படுத்திய பிரமிப்பும் நெருக்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஏற்கனவே இது பற்றி நாம் சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறோம். மற்ற தலங்களை போல அல்ல அவிநாசி. விதியையே மாற்றி இழந்தவைகளை மீட்டுத் தரும் தலம். (நம்பிக்கை இருந்தால்!) பொதுவாக எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கம் இருக்கும் அம்பாள் இங்கு வலப்பக்கம் இருக்கிறார். இப்படி பல சிறப்புக்கள் அவிநாசிக்கு உள்ளன. மேலும் சுந்தரருக்கு

Read More

ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

இந்த சிவராத்திரிக்கு (24/02/2017 வெள்ளிக்கிழமை) மற்றுமொரு விசேஷமும் உண்டு. பிரதோஷம், சிவராத்திரி, திருவோணம் மூன்றும் சேர்ந்து வருவதே அது. எனவே நாளைய தினம் விரதம் இருப்பவர்கள் பிரதோஷம், சிவராத்திரி, திருவோண விரதம் மூன்று விரதமும் இருந்த பலன் கிடைத்துவிடும். எனவே மும்மடங்கு பலன் உண்டு. நாளை சிவாலயத்துடன் முடிந்தால் வைணவ ஆலயத்தையும் நாளை தரிசிக்கவும். ஹரிஹர கிருபா கடாக்ஷம் கிடைக்கும். "அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு" — இந்த

Read More

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

எந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது. ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட இந்த ஐந்தாண்டுகளில் பல சிவாலயங்களை பாடல் பெற்ற தலங்களை தரிசித்துவிட்டோம். ஒவ்வொரு தலமும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் சிறப்பை பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? இந்த ஆலயங்கள் எல்லாம் ஏதோ பொருளால் கட்டப்பட்டவை என்று பலர் கருதுகிறார்கள். இல்லை. இவை அருளால் கட்டப்பட்டவை. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களை ஒப்பந்தம் செய்தாலும்

Read More