Home > 2016 > September (Page 2)

மாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை!

மிகப் பெரிய பதிவுகள் சில தயாரித்துக்கொண்டிருக்கிறோம். எப்போது நிறைவடையும் என தெரியவில்லை. ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக நம்மை பெரிதும் கவர்ந்த, கண்கலங்க வைத்த ஒரு கதையை பகிர்கிறோம். நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியது தான். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர்வாழ்கிறோம். நாம் நமது நிறைகளால் அருளை பெறுவதில்லை. நமது குறைகளை அவன் பொறுப்பதால் அருளை பெறுகிறோம். தன்னை சரணடைந்தவரின் கடந்த காலங்களை இறைவன் ஒருபோதும் பார்ப்பதில்லை. பரிபூரண

Read More

நேர்மைக்கு ஒரு விலை!

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் 'பச்சை தண்ணி' பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் 'பச்சை தண்ணி' பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார். "இறைவா... என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான்

Read More

தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club

சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்த அனைவருக்காகவும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அர்ச்சனை செய்தோம். தொடர்ந்து மறுநாள் திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சென்றோம். அங்கும் சுவாமி சன்னதியில் பிரார்த்தனையை வைத்து அனைவருக்காகவும் அர்ச்சனை செய்தோம். இரண்டு ஆலயங்களிலும் உண்மையில் அப்படி ஒரு அற்புதமான தரிசனம். எனவே கோரிக்கைகள் நிறைவேறினால் சோளீஸ்வரருக்கு மட்டும் அல்ல, திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கும், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரருக்கும் கூட உங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். சென்ற வார பிரார்த்தனைப்

Read More

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

சிவபுண்ணியம் பற்றி நம் தளத்தில் பல்வேறு கதைகளை படித்து வந்த வாசகர்கள், சிவாபராதம் பற்றி நேற்றைய பதிவில் அறிந்துகொண்டிருப்பீர்கள். சைவ மடத்தில் எச்சில் துப்பிய காரணத்தினால் துப்பியவர்களுக்கு நரகம் கிடைத்த கதையை பார்த்தீர்கள். நடைமுறையில் இதெல்லாம் சாத்தியம் தானா? இப்படியெல்லாம் வாழமுடியுமா என்று தோன்றும். முடியும். நிச்சயம் முடியும். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் திருவிடைமருதூருக்கு சென்றபோது அவருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டது. அதை அவர் எப்படி கையாண்டார் என்று

Read More

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

சிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும். கடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது. நமது தளத்தின்

Read More

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

கரூர் அருகே உள்ள நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் அதிஷ்டானம் அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒன்று. அதிஷ்டானங்கள் பொதுவாகவே அருட்சக்திகள் உறைந்து கிடைக்கும் இடங்கள். அங்கு அமர்ந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் பெரும்பாலும் அதிசீக்கிரம் நிறைவேறிவிடும். மேலும் ஐந்து இடங்களில் (நெரூர், மானாமதுரை, காசி, பூரி, கராச்சி) அதிஷ்டானம் கொண்டுள்ள ஒரே மகன் இவர் தான். நம் தளத்தில் நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் வாழ்க்கை வரலாறு மற்றும் அதிஷ்டானம் பற்றி விரிவான பதிவுகள் வெளியாகியுள்ளது.

Read More

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

இந்துக்கள் வாழ்க்கையில் காசியை போலவே குருஷேத்திரமும் ஒரு முக்கியமான இடம் என்றால் மிகையாகாது. இங்கு தான் பாரதப் போர் நடைபெற்றது. கீதையும் பிறந்தது. குருஷேத்திரப் புனித பூமி ஹரியானா மாநிலத்தில் சரஸ்வதி, திரிஷ்டாவதி நதிகளுக்கிடையே உள்ளது. இங்கு பாரதப்போரில் நினைவாகப் பல நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. கீதை பிறந்த இடமான ஜோதிஷர், பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தபோது அவர் தாகம் தணிக்க அர்ஜூனன் அம்பினால் உருவாக்கிய பீஷ்ம குண்டம், கிருஷ்ணர்

Read More

எப்படி வாழவேண்டும்? வாரியார் காட்டும் வழி!

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. தான் உபதேசித்தபடி கடைசி வரை வாழ்ந்த மகான். நாத்திகம் புரையோடிக்கொண்டிருந்த தமிழகத்தில் பாமரர்க்கும் புரியும் விதம் தன் இனிய எளிய தமிழால் நமது இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை பற்றி எடுத்துரைத்து பக்தியும் ஆன்மீகமும் தழைக்கச் செய்தவர். மிகப் பெரிய ஆன்மீக தத்துவங்களை கூட இவரைப் போல மிக எளிதாக யாரும் நமக்கு புரியவைக்கமுடியாது. இன்று ஆவணி சுவாதி. வாரியார்

Read More

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று நம் தளத்திற்கு பிறந்த நாள். இன்று நம் தளம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. விரிவான பதிவு பின்னர். இந்த நன்னாளில் நமக்கு என்றும் துணையாக நின்று வழிகாட்டி வரும் ஆனைமுகனை நினைவுகூரும் விதமாக ஒரு அற்புதமான தலத்தை பற்றி பார்ப்போம். - ஆசிரியர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நாம் காணவிருப்பது தமிழகத்திலேயே ஒரே சோடச கணபதி தலம் என்று பெயர் பெற்ற திருமக்கோட்டை

Read More

குருபக்திக்கும் தொழில்பக்திக்கும் உதாரணமாய் திகழ்ந்த ‘தனித்தவில்’ நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை!

எந்தக் இசைக்கருவிகளுக்கும் இல்லாத பெருமை தவிலுக்கும் நாதஸ்வரத்துக்கும் உண்டு. மங்கள இசைக்கருவிகள் என்கிற பெயர் அவற்றுக்கு மட்டுமே உரித்தாவன. மேலும் திருக்கோவில்களில் அபிஷேக ஆராதனை மற்றும் உற்சவங்களின்போது அவசியம் மங்கள இசையை இசைக்கவேண்டும். அந்தக் கலைக்காகவே தம்மை அற்பணித்து, அதையே மூச்சாக கருதி வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்று பார்ப்போம். தமிழ் வாத்திய உலகில் 'தவில்காரர்' என்றால் அது நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களையே குறிக்கும். இவரைப் பற்றி பேசினாலே போதும்,

Read More

சிறுவாபுரி முருகன் திருக்கல்யாணம்!

சென்னை சைதையை சேர்ந்த 'அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் ஒவ்வொரு ஆண்டும் சிறுவாபுரியில் முருகன் திருக்கல்யாணம் நடத்துகின்றனர். இந்த ஆண்டு திருக்கல்யாணம் வரும் ஞாயிறு காலை 04/09/2016 நடைபெறவுள்ளது. முழுவிபரங்கள் இந்தப் பதிவில் அளிக்கப்பட்டுள்ளது. திருமணத் தடை ஏற்பட்டாலோ பல ஆண்டுகள் திருமணம் நடைபெறாமல் இருந்தாலோ மற்றும் ஜாதகத்தில் இராகு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் இருந்தாலும் இந்த சிறுவாபுரி முருகனை மனம் உருகி நாடி வந்தால்

Read More

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான்!

சிலர் எதற்க்கெடுத்தாலும் "வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது" என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். உண்மையில் 'போராட்டம்' என்றால் என்ன தெரியுமா? இந்தப் பதிவை படியுங்கள். போராட்டம் என்றால் என்ன என்று புரியும். சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே நேரம், யஸ்ரா மர்தினி என்னும் 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து அகதியாக வெளியேறி ஐரோப்பா செல்ல துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவருடன் சேர்த்து சுமார் 20 பேருடன் வந்த

Read More