Home > 2016 > August (Page 2)

லக்ஷ்மி ராவே மா இண்டிகி – இன்று வரலட்சுமி விரதம் – சிறப்பு பதிவு !

இன்று வரலக்ஷ்மி விரதம். நமது பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று. செல்வத்திற்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதியாக விளங்கும் அன்னை லக்ஷ்மியை இன்று பூஜித்து நன்றி செலுத்தவேண்டிய நாள். இந்நன்னாளில் அனைவரின் வீட்டிலும் சகல சௌபாக்கியங்கள் பெருகி இன்பங்கள் பொங்கட்டும். இறுதியில் 'லக்ஷ்மி ராவே மா இன்டிகி' காணொளி இணைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு அபாரமான இசையில் அற்புதமான குரலை கேட்டிருக்கமாட்டீர்கள். இது ஒலிக்கும்போது ஏற்படும் வைப்ரேஷனை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது...! அனைவரின் இல்லங்களிலும் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்தோங்க அன்னையை வேண்டிக்கொள்கிறோம்.  எல்லாரும்

Read More

கையில் கீதை நாவில் வந்தே மாதரம் – குதிராம் போஸ் எனும் மாவீரன் தூக்குமேடை ஏறிய கதை!

நம் வாசகர்கள் இந்த தளத்தில் வெளியாகும் எந்தப் பதிவுகளை படித்தாலும் படிக்காவிட்டாலும் இது போன்ற பதிவுகளை அவசியம் படிக்கவேண்டும். தெய்வத்தைவிட தேசமே உயர்ந்தது. தெய்வபக்தி இல்லாத நாடு கூட செழிக்கும். ஆனால் தேசபக்தி இல்லாத நாடு அழிந்துவிடும். எனவே ஆன்மீக / சுயமுன்னேற்ற பதிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற பதிவுகளுக்கும் அவசியம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

Read More

முதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்!

இன்று ஆடி சுவாதி. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. ஆண்டின் துவக்கத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றிய பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவினாசியில் முதலையுண்ட பாலகனை பதிகம் பாடி மீட்ட அந்தத் திருக்குளம் இன்னும் இருப்பதாகவும், அந்தக் குளக்கரையில் சுந்தரருக்கு என்று ஒரு கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். பதிகங்கள் பாடி மூவர் நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை என்பதை நிச்சயம் இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள்

Read More

செய்யும் தானம் எப்போது பலனளிக்கும்? ஒரு கதை சொல்லும் நீதி!

இரண்டு நண்பர்கள் ஒரு ஊரில் வியாபாரம் செய்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரம் சரியில்லாமல் போக தொழிலில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம், சுபகாரியத் தடை, வீட்டில் அமைதியின்மை இதெல்லாம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இருவரும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஜோதிடரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று உரிய பரிகாரம் செய்யலாம் என்று கருதி அவரை சந்திக்க புறப்பட்டனர். இருவரது ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்த ஜோதிடர்.... "உங்களுக்கு பிதுர்தோஷம் இருக்கிறது. அதனால்

Read More

இந்த உலகிலேயே மிகப் பெரிய கடவுள் பக்தன் யார்?

இன்றைக்கு “உண்மையான கடவுள் பக்தன் யார்?” என்பது குறித்து ஒரு தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. ஃபேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் பலரின் ஈடுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஒரு கடவுள் பக்தனின் சரியான இலக்கணம் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கதையை படித்தால் நிச்சயம் தெளிவு பெறுவார்கள் என்று நம்பலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய உங்களுக்கு பரிச்சமயான கதை தான் இது. இருப்பினும் நமது பாணியில் சற்று விரிவாக எழுதி

Read More

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

ஆடி மாதம் துவக்கத்திலேயே இந்தப் பதிவை அளித்திருக்கவேண்டும். பரவாயில்லை. BETTER LATE THAN NEVER அல்லவா? இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கிறதே. பதிவு சற்று பெரிது. ஆனால், முக்கியமானது. இறுதிவரை படியுங்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கும்! (*இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் நம் ரைட்மந்த்ரா அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி ஜெயமுத்து மாரியம்மன் ஆலயத்தின் ஆடி விழா புகைப்படங்கள்.) ஆடி

Read More

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

வீட்டில் சில சமயம் விருந்தினர்கள் சாப்பிட வரும்போது அவர்களை கவனிக்கும் மும்முரத்தில் நமக்கு எதுவும் கடைசியில் மிச்சமிருக்காது. நாம் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டோம். அம்மா அந்த சூழ்நிலையை சமாளிக்க அவசர அவசரமாக ஏதோ ஒன்றை நமக்கு செய்து தருவாள். ஆனால் அது விருந்தைவிட பிரமாதமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கேட்டால்... "இல்லையேடா கண்ணா... அவசரத்துக்கு இருந்த மிச்சம் மீதியை வெச்சு செஞ்சேன். நாளைக்கு பண்ணித் தரவா?" என்பாள். இது நம் எல்லார்

Read More

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

"நம் பாவங்களைத் தான் வாங்கிக் கொள்பவன் ஈஸ்வரன். அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர். முன் ஜன்ம நல்வினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ

Read More

அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் – ஒரு நிகழ்வும் அது தந்த மனநிறைவும்!

சென்ற ஆண்டு இதே நேரம் (ஆகஸ்ட் 2, 2015) அன்று நம் தளம் சார்பாக குன்றத்தூரில் 'அகத்தியர் தேவார திரட்டு' முற்றோதல் நடைபெற்றது நினைவிருக்கலாம். முற்றோதல் நடைபெற்ற பிறகு ஒரு சிறு அப்டேட் அது பற்றி அளித்ததோடு சரி மற்றபடி அது தொடர்பான பதிவை முடியவில்லை. பொதுவாக நாம் ஒரு அறப்பணியையோ அல்லது இது போன்ற நிகழ்ச்சியையோ செய்யப்போவதாக சொன்னால் திருவருள் துணையுடன் நாம் திட்டமிட்டதைவிட அதை சிறப்பாக நடத்திவிடுவோம். சற்று

Read More

குருபகவான் & தட்சிணாமூர்த்தி – குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

சென்ற குருபெயர்ச்சியை முன்னிட்டு நாம் அளித்த இந்த பதிவு தான் தற்போது முகநூல் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறது. ஏதோ தாங்களே எழுதியது போல பலர் பதிவிட்டு வருகிறார்கள். சிவ சிவ! நம் நண்பர்கள் சிலரும் வழக்கம் போல, நமக்கே அனுப்பி சிலாகிக்கின்றனர். எனவே மீள்பதிவு செய்கிறோம். உபயோகமாக இருக்கும். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும்

Read More

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

நமது தளத்தில் வாசகர்களுக்கு நாம் அடிக்கடி வலியுறுத்தி வரும் விஷயம் உங்கள் பிள்ளைகளிடம் "படி, படி அப்போ தான் நல்ல வேலைக்கு போகமுடியும் கை நிறைய சம்பாதிக்க முடியும்" என்று சொல்லி வளர்க்காமல் பிள்ளைகளுக்கு நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து, திருக்குறள், திருமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொடுத்து, உங்கள் கஷ்டங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தி வளர்க்கவேண்டும் என்பதே. (மேலும் அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்கவேண்டும்!) பணம் தரும் ஏ.டி.எம் எந்திரங்களாக மட்டுமே தங்கள் பிள்ளைகளை

Read More