Home > 2015 > November (Page 2)

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

"மாயம் பல செய்து புறக்கண்ணை மறைத்தாலும் ஈசன் நானில்லை என்று ஏய்த்திட்டாலும் ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே" காஞ்சியில் மஹா பெரியவாளின் அதிஷ்டானத்திற்கு செல்லும் யாவரும், பிரதக்ஷிணம் வரும் போது இந்த படத்தை பார்க்காமல் இருக்கமுடியாது. தன்னையுமறியாமல் பெரியவா தன்னுடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தருணங்களில் ஒன்று இது. (நம்மைப் பொருத்தவரை அவர் ஸ்ரீஹரியின் அம்சம்!) 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை' என்னும் அரிய நூலில் காணப்படும் மீளா அடிமை என்றழைக்கப்படும் பிரதோஷம் மாமாவின்

Read More

கோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய மூன்றாம் பதிவு இது. மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு பிரதி மாதமும், நாள் கிழமை விஷேடங்களின் போதும் நம் தளம் சார்பாக தீவனம் அளித்து வருவது நீங்கள் அறிந்ததே. மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் இந்த கோ-சாலை ஊழியர்களுக்கு அவ்வப்போது நாம் ஏதேனும் மரியாதை செய்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவதும் நீங்கள் அறிந்ததே. மேலும் கடந்த

Read More

நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

முதலில் நமது தீபாவளி கொண்டாட்ட பதிவுகளில் இது இடம்பெறுவதாக இல்லை. இருப்பினும் பதிவில் உள்ள கருத்து அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்கிற காரணத்தினால் தளத்தில் அளிக்கிறோம். இதை பார்த்துவிட்டு ஒரு நான்கு பேராவது இதைச் செய்தால் மிக்க மகிழ்ச்சி. * தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட

Read More

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

நீண்ட நாட்கள் பூஜை செய்யாமல், அபிஷேகம் காணாமல், விளக்கு ஏற்றப்படாமல் இருக்கும் பிள்ளையார்களுக்கு 'வறண்ட பிள்ளையார்' என்று பெயர். தெரு முனைகளிலும், குளக்கரையிலும், மரத்தடிகளிலும் நம்மை சுற்றி பல வறண்ட பிள்ளையார்கள் உண்டு. அப்படிப்பட்ட பிள்ளையார்களை தேடிக் கண்டுபிடித்து பூஜை & அபிஷேகங்கள் முதலானவை செய்து, விளக்கேற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து நான்கு பேருக்கு கொடுத்தால் அதைவிட பெரிய புண்ணியம், திருப்பணி வேறு எதுவும் இல்லை. இதற்கு ஒன்றும் பெரிதாக

Read More

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

தானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன? அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு

Read More

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ரைட்மந்த்ரா தளத்தில் பல ஆன்மீக தொடர்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது எனும்போது தொடராக அதை வெளியிடுவது நமது வழக்கம். பெயர் தான் 'தொடர்' என்பதே தவிர, தனித் தனியாக படித்தாலும் புரியும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கும். தொடர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதன் நோக்கமே ஒரே பதிவில் அளவுக்கதிகமாக திணிக்க முடியாது என்பதாலும் பதிவுகளை தயார் செய்யவும், புகைப்படங்கள், ஓவியங்கள்

Read More

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

நமது சமீபத்திய மத்தூர் உழவாரப்பணியின்போது நடந்த ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் பற்றிய பதிவு இது. மத்தூர் உழவாரப்பணி பற்றிய பதிவில் பல புகைப்படங்களுக்கு நடுவே இதை அளித்தால் ஒருவேளை உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போய்விட இருக்கிறது. எனவே தனிப்பதிவாக அளிக்கிறோம். நமது உழவாரப்பணிகளின் போது நாம் செய்யும் மிக முக்கியமான ஒன்று, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிப்பது. ஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் சம்பந்தப்பட்ட கோவிலின் அர்ச்சகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள்,

Read More

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம், இப்படி நம் தேசம் வியக்கும் ஆளுமைகள் பலர் விவேகானந்தரை கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் மனதில் விவேகானந்தர் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. சித்துக்களை செய்தால் தான் ஒருவரை மகான் என்றே சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சித்துக்கள் புரியாமலே விவேகானந்தர் பலர் தன்னை பின்பற்ற வைத்தார் என்பது தான் விஷயமே. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில்

Read More

99 பொற்காசுகள் வேண்டுமா?

அந்த நாட்டு மன்னனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் ஏனோ நிம்மதி இல்லை. அதற்கு காரணமும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லுகையில், ஒரு குயவனின் குடிசையை கடக்க நேர்ந்தது. ஒரு சிறு கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு மிக மிக உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே பானையை செய்துகொண்டிருந்தான். அருகே அவன் குழந்தை உடைந்த மண் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. குடிசையிலிருந்து வெளிவே வந்த அவன் மனைவி,

Read More