Home > 2015 > June (Page 2)

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

நம் தளத்தின் ஓவியர் திரு.சையத் ரமீஸ் என்னும் இளைஞர். மிகவும் சாதாரண ஒரு அடித்தட்டு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். நாம் வெளியிடும் நீதிக்கதைகள் மற்றும் பக்தி கதைகள் பலவற்றுக்கு ஓவியம் தீட்டி வருகிறார். நமது தளம் துவக்கப்பட்ட காலகட்டத்தில் (2012), நமக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓவியரை தேடி வந்தோம். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. பிரபல ஓவியர்களை அணுகியபோது ஒரு சிறு ஓவியத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ.10,000/- வரை கேட்டார்கள். மேலும்

Read More

குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

ஒரு குருகுலத்தில் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தங்கி படித்தார்கள். படிக்கும் காலத்தே பலவற்றை கற்றுக்கொண்டார்கள். படித்து முடித்து புறப்படும்போது, குருவிடம், "குருவே தங்களுக்கு தட்சணை தர பிரியப்படுகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்... எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்றனர். அவர்கள் குரு தட்சணை தர விரும்பியது தவறல்ல. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதை குரு புரிந்துகொண்டார். மேலும் அவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை

Read More

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

இந்தப் பதிவை நேற்றே அளித்திருக்கவேண்டியது. தளத்தின் சர்வரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யவேண்டி பதிவுகள் அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. SCROLLING ANNOUNCEMENT கூட அளிக்க இயலவில்லை. இப்போது ஓரளவு சரிசெய்யப்பட்டுவிட்டது. இன்று மாலைக்குள் அப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம். நன்றி. வாரத்தின் முதல் வேலை நாள் டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இந்த வாரம்

Read More

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!

கடந்த மார்கழி மாதம் (டிசம்பர் 16 - ஜனவரி 14) மார்கழி விஸ்வரூப தரிசனத்திற்காக அதிகாலை வெவ்வேறு கோவில்களுக்கு நாம் தினசரி சென்று வந்தது நினைவிருக்கலாம். அப்படி செல்கையில் ஒரு நாள் குன்றத்தூரில் உள்ள வட திருநாகேஸ்வரம் சென்றிருந்தோம். அந்த கோவிலில் நாம் கண்ட, நம்மை பரவசப்படுத்திய ஒரு நிகழ்வை பற்றிய பதிவு இது. இந்த பதிவைப் பொறுத்தவரை புகைப்படங்கள் தான் வார்த்தைகள். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு. (காரணம் புகைப்படத்தில்

Read More

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

இன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ கேள்விகள் நம் மனதில் வட்டமடிக்கின்றன. அவற்றுக்குரிய சரியான பதிலை தரும் மெய்ஞானிகள் தான் யாருமில்லை என்கிற அபிப்ராயம் பலருக்கு இருக்கிறது. ஆனால், உங்கள் மனதில் எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு அன்றே காஞ்சி மகான் பதிலளித்திருக்கிறார் தெரியுமா? சற்று அழுத்தமாகவே!! ஆம்... தன் தெய்வத்தின் குரலில். பாமரர்களின் மனதில் எழக்கூடிய சந்தேகங்களை வினாக்களாக அடுக்கி வைத்துக்கொண்டு 'தெய்வத்தின் குரல்' என்னும் அந்த பொக்கிஷத்தில் அவர் கூறியிருப்பவற்றை

Read More

எது உண்மையான தர்மம்?

செல்வத்திற்கு பெயர் பெற்ற நாடு அது. நெற்களஞ்சியம் முதல் அரசின் கருவூலம் வரை அனைத்தும் நிரம்பி வழிந்தன. இருப்பினும் அரசனுக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒன்று தம்மிடம் இருந்து தவறுவதாக தோன்றியது அவனுக்கு. இந்த உறுத்தலுடனேயே ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் கிளம்பினான். அப்படி செல்லும்போது ஏதோ வேலை செய்துவிட்டு கூலி பெற்றுக்கொண்டு ஆனந்தமாக வந்துகொண்டிருந்த ஒரு குடியானவனை பார்த்தான். "உன்னை பார்த்தால் மிகவும் திருப்தியுடன் வாழ்பவன் போல தெரிகிறது. உன் வருமானம்

Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!

திருஞானசம்பந்தர் குரு பூஜையையொட்டி கடந்த 03/06/2015 புதன்கிழமை அன்று சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் என்னும் ஆதரவற்றோர் இல்லத்தில் நம் தளம் சார்பாக திரையிடப்பட்ட ஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'ஞானக் குழந்தை' திரைப்படம் பற்றிய பதிவு இது. குழந்தைகளுக்கு குறிப்பாக இதுபோன்ற ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பக்தியையும் நற்பண்புகளையும் வளர்க்கும் திரைப்படங்களை போட்டு காண்பிக்கவேண்டியதன் அவசியத்தை 'தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக

Read More

அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

திருவண்ணாமலை சித்தர், சேஷாத்ரி சுவாமிகளுக்கு 'தங்கக் கரம் உடைய மகான்' அதாவது 'தங்கக்கை மகான்' என்று என்று ஒரு திருப்பெயர் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு சுவையான, சிலிர்க்க வைக்கும் சம்பவம். இது நடந்தது 1885 ஆம் ஆண்டில். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கடைகள். பொம்மைக் கடைகள். பலகாரக் கடைகள். ஆங்காங்கு நீர்மோரும் பானகமும் தானம் செய்து கொண்டிருந்தார்கள்.

Read More

ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3)

திங்கட்கிழமை டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி!  இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!! 1) எந்த வேலை செய்தாலும் கவனக்குறைவா? தொழிலதிபர் ஜெ.ஆர்.டி. டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு

Read More

எது அமிர்தம் தெரியுமா? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – Rightmantra Prayer Club

சிவகங்கை அருகே உள்ள இளையான்குடியில் பிறந்த மாறனார் என்பவர் உழவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்தார். பெருஞ் செல்வம் கொண்டிருந்தாலும் பசி என்று வரும் அடியார் அனைவருக்கும் உணவு படைப்பதையே தொண்டாக கருதி செய்து வந்தவர் அவர். சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி வரவேற்று அவர்களுக்கு உணவளிப்பார். இவரது அருந்தொண்டின் தன்மை உணராத ஊர்மக்களுள் சிலர், "அவனுக்கென்ன, இருக்கு அள்ளிக் கொடுக்குறான்" என்று

Read More

ஜோலார்பேட்டை நாகராஜ் – நூற்றுக்கணக்கானோரின் பசியை ஆற்றும் ஒரு தனி மனிதன்!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நமது பணிகளில் மூழ்கியிருந்தபோது, ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால்... ஜோலார்பேட்டை நாகராஜ்! நம்மை நலம் விசாரித்தவர், தனது மனைவிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அட்மிட் செய்திருப்பதாகவும் இன்னும் இரண்டொரு நாள் சென்னையில் தான் இருப்பேன் என்றும் கூறினார். அன்றைக்கு நமக்கிருந்த அத்தனை முக்கிய பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு, புரசைவாக்கம் விரைந்தோம். சுமார் ஒரு

Read More

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வர்ணிக்கபப்டுகிறது. எங்கெங்கு பார்த்தாலும் தெய்வத்தின் சிலை உடைப்புகளும் வேள்விச் சாலைகளில் தீ வைப்புகளும் அரங்கேற்றப்பட்டன. வேதத்தைச் சார்ந்து பேசுபவர்களும் வைதிகர்களும் கழுமரம் ஏற்றிக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் திருஞானசம்பந்தரின் அவதாரம் மட்டும் நிகழவில்லை என்றால், தமிழகத்தின் வரலாறே திசை மாறி போயிருக்கும். அவரது காலத்தில் வேதத்தையும் வேள்விகளையும் வைதீகர்களையும் இழிவுபடுத்தும் கூட்டம் செழிப்புடன் வளர்ந்திருந்தது. "வேதம் பொய்.

Read More

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

நமது வாசகர் வாழ்வில் 'இடரினும் தளரினும்' பதிகம் நிகழ்த்தியுள்ள மற்றுமொரு அதிசயம் குறித்த பதிவு இது. 'இடரினும் தளரினும்' பதிகம் எப்படி தேவையான நேரத்தில் தேவையான பணத்தை நமக்கு பெற்று தருகிறது, எப்படி நமது பொருளாதார பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது என்பது பற்றி ஏற்கனவே தளத்தில் பல பதிவுகள் அளித்திருக்கிறோம். தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு மகள் திருமணத்திற்கு தேவைப்பட்ட மூன்று லட்ச ரூபாய் முதல் முதல் லாக் அவுட் செய்துவிட்ட நிறுவனத்திலிருந்து வரவேண்டிய

Read More

தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே நோய்க் கிருமிகள் அதை தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. எனவே தான் குழந்தை பிறந்து வளரும் காலகட்டங்களில், உயிர்க்கொல்லி நோய்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க தடுப்பூசி போடுவது வழக்கம். சில தடுப்பூசிகளை ஒரு முறை போட்டால் போதும் ஆயுசுக்கும் அந்த குழந்தைகளுக்கு அந்த நோய் வராது. உதாரணத்துக்கு காசநோய், ஹெபாடிடிஸ், இளம்பிள்ளை வாதம், பெரியம்மை, டெட்டனஸ் போன்ற தடுப்பூசிகள். அதே போன்று நாம் போடப்போகும் ஒரு தடுப்பூசி பற்றியது இந்த பதிவு.

Read More