Home > 2015 > March (Page 2)

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

நாளை (19/03/2015) பங்குனி சதயம். 63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகளின் குருபூஜை. (அவர் இறைவனோடு கலந்த நாள்.) எந்த நாயன்மாருக்கும் இல்லாத சிறப்பு தண்டியடிகளுக்கு உண்டு. இவர் பார்வையற்றவர். (காலம் 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி). நாம் ஏற்கனவே கூறியது போல உண்மையான 'சமூகநீதிக் காவலர்' நம் தலைவர் சிவபெருமான் தான். எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் அனைத்து வர்க்கத்தினருக்கும் தனது அருளை வாரி வாரி வழங்கி

Read More

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர். நல்லவர். இருந்தாலும் பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணடித்து வருகிறார். அது கண்டு நமக்கு பொறுக்கவில்லை. இத்தனைக்கும் மனிதர் நம்மை விட வயதில் மூத்தவர். பழுத்த குடும்பி. ஒரு நாள் கேட்டேவிட்டோம். "இதுவரை எத்தனை பாடல் பெற்ற தலங்களுக்கு அல்லது திவ்ய தேசங்களுக்கு சென்றிருக்கிறீர்கள்? அல்லது குறைந்த பட்சம் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பாடல்பெற்ற தலங்கள் இருக்கின்றன என்று தெரியுமா?" இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் அவர்

Read More

“முதுகுல குத்திட்டாங்க சாமி…!” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன?

இன்றளவும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு போற்றும் சமயப் பெரியோர்களில் ஒருவர் திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். 'வேலை வணங்குவதே வேலை' என்று வாழ்ந்தவர். ஊருக்கு உபதேசித்தபடி தான் முதலில் வாழ்ந்து காட்டிய உத்தமர். வாரியார் அவர்கள் முருகனை வழிபாடு செய்யாத நாளே கிடையோது. முருகனை வழிபாடு செய்யாமல் அவர் உணவை அருந்திய நாளும் கிடையாது. அவருடைய பேச்சைக் கேட்டு ஆத்திகரானோர் பலர். தாய்தந்தைக்கு மதிப்பளித்து வணங்கியவர்கள் பலர்.

Read More

சுவாரஸ்யமான, மனநிறைவான வாழ்க்கை வேண்டுமா? – MONDAY MORNING SPL 84

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து "இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!"

Read More

வட திருநள்ளாறு – சனிப்ரீதி செய்ய இதோ சென்னையில் ஒரு திருநள்ளாறு!

சனிப்பெயர்ச்சியால் கலங்கித் தவிப்பவர்கள், திருநள்ளாறு செல்ல விருப்பம் இருந்தும் நேரமின்மை மற்றும் இதர நடைமுறை சிக்கல்கள் காரணமாக தவிப்பவர்கள் ஆகியோருக்கு ஆறுதலும் தேறுதலும் தீர்வும் அளிக்கக்கூடிய ஒரு பதிவு தயாராகி வருவதாக சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இதோ அந்த பதிவு. 2014 டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம். ரைட்மந்த்ரா அலுவலகத்திற்கு இடம் பார்த்து வந்த நேரம். ஒரு நாள் நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு மேற்கு மாம்பலம் வீராசாமி

Read More

அடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ? Rightmantra Prayer Club

ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய செங்கல்பட்டை அடுத்துள்ள பொன்விளைந்த களத்தூரில் நல்லார் ஒருவர் வாழ்ந்து வந்தார். பிறவியிலிருந்தே அவருக்கு பார்வை கிடையாது. அப்போதெல்லாம் பார்வையற்றோர் கல்வி பயில்வது மிக மிக கடினம். இருப்பினும் கல்வி கற்கவேண்டும் என்கிற தணியாத ஆவலில், தனது முதுகில் எழுத்துக்களை எழுதிக் காட்டச் சொல்லி கல்வி பயின்றாராம் இவர். (முதலில் ப்ரெய்லி முறையை கண்டுபிடித்தது இவர் தான் போல!) அந்தளவு கல்வி மீது தணியாத தாகம் கொண்டவர்

Read More

கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!!

கடந்த பிரார்த்தனை கிளப் பதிவில் வாசகர் ஒருவர் தனது பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அவரது தாயாருக்கு (ILD - Interstitial Lung Disease) எனப்படும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டு, மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியிருந்தார். அதை பார்த்த நமது வாசகர் திரு.அரவிந்தராஜ் என்பவர், பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை நமக்கு அனுப்பி குறிப்பிட்ட அந்த வாசகருடன் அதை பகிர்ந்துகொள்ளும்படியும், மேலும் முடிந்தால் நம்

Read More

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

"உத்தியோகம் புருஷ லட்சணம்" என்று சொல்வார்கள். ஆனால் IDEAL WORKPLACE என்று சொல்லும் 'கனவுப் பணியிடம்' ஒருவருக்கு அத்தனை சுலபத்தில் அமையாது. வேலை பிடித்திருந்தால் சம்பளம் கம்மியாக இருக்கும். சம்பளம் அதிகமிருந்தால் வேலையில் நிம்மதி இருக்காது. இரண்டும் இருந்தால் பிரயாணத்திலேயே பாதி நாள் போய்விடும். எல்லாமே கூடி இருந்தால் மேலதிகாரி தொல்லை கொடுப்பார். இப்படி ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. பணியிடத்தில் ஒருவருக்கு கிடைக்கின்ற மனநிறைவு மற்றும் மன அமைதி மிக மிக

Read More

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

சீனாவில் நடந்த உண்மை சம்பவம் இது. நினைவு தெரிந்த நாள் முதல் சைக்கிள் ரிக்க்ஷா இழுத்து தனது குடும்பத்தை காத்து வந்த ஏழைத் தொழிலாளி அவர். அவருடைய வயது 74 ஐ எட்டும்போது, உடல் ஒத்துழைக்க மறுக்க "போதும் ரிக்க்ஷா இழுத்தது" என்று முடிவுக்கு வந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வயல்களில் சிறு குழந்தைகள் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்தார். படிக்க வேண்டிய வயதில் இந்த குழந்தைகள் ஏன் வயலில் வேலை

Read More

திருமுறை வெள்ளத்தில் மூழ்க வாருங்கள் – அரனருள் ‘பன்னிரு திருமுறை இசைவிழா’!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரனருள் வழங்கும் 12ம் ஆண்டு திருமுறை இசை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 9 திங்கள் துவங்கி, மார்ச் 20 வெள்ளிவரை பன்னிரண்டு தினங்கள் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான அனுமதி இலவசம். வாசகர்கள் இயன்றபோது கலந்துகொண்டு திருமுறைத் தேனை பருகி அரனருள் பெறுங்கள். விழா நாட்களில் தினசரி காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

Read More

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

இராவண வதமெல்லாம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிவிட்டார். பட்டாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. மக்கள் குறையின்றி வாழவும், பருவ மழை தவறாது பெய்யவும் அப்போதெல்லாம் அரசர்கள் அடிக்கடி யாகம் செய்வர். இராமபிரானும் வசிஷ்டர், ஜனகர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளை கொண்டு யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்து அதற்குரிய ஏற்பாடுகளுக்கு ஆணையிட்டார். யாகமும் அயோத்தி நகருக்கு வெளியே ஒரு பரந்து விரிந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விமரிசையாக துவங்கியது. அப்போது அது வழியே

Read More

‘அணுகுமுறை’ என்கிற மந்திரச்சொல் – MONDAY MORNING SPL 83

அது ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனம். அதன் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக ஒரு தகுந்த நபரை தேர்வு செய்யவேண்டியிருந்தது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் மார்கெட்டிங் பிரிவு என்பது முதுகெலும்பு போல. வருவாய் ஆதாரங்களை கொண்டு வருவது அதன் பணி என்பதால் தகுந்த ஒருவரை எவ்வளவு சம்பளம் கொடுத்தேனும் அந்த பிரிவில் பணியில் அமர்த்த அதன் நிறுவனர் முடிவு செய்தார். நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் என்பதால் பலர் பணிக்கு விண்ணப்பித்தனர்.

Read More

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினத்திற்கு இதைவிட ஒரு பொருத்தமான பதிவை நாம் அளிக்க முடியாது. படியுங்கள்.... உங்களுக்கே புரியும்!! 1964 ஆம் ஆண்டு. பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தனது புதிய படம் ஒன்றுக்காக ஹீரோயினை தேடி மும்பை போய் எதுவும் வொர்க் அவுட் ஆகாமல் தோல்வியுடன் விமானத்தில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அந்த விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த அந்த பெண்ணையும் அவரது பாடி லாங்குவேஜையும் அவருக்கு மிகவும்

Read More

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது பௌர்ணமியையொட்டி ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் நீர்நிலைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது வழக்கம். சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் நேற்றைக்கு மெரீனா கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்தனர். கடல்வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு தரிசனம் தர விரும்பியே இறைவன் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். இதைப் பார்ப்பதும், அது சமயம் கடலில் நீராடுவதும் மிகவும் சிறப்பு. அளவற்ற

Read More