Home > 2015 > February (Page 2)

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் தின்ற அதிசய சம்பவத்தை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். தற்போது வேறு ஒரு சம்பவத்தை பார்ப்போம். சென்ற வாரம் சிவராத்திரி குறித்து நம் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் மகத்துவத்தை விளக்கி கடந்த கடந்த மூன்றாண்டுகளாக நாம் சிவராத்திரி விரதம் இருந்து வரும் விஷயத்தை சொல்லி அதன் மூலம் நமக்கு கிடைத்த மனநிறைவையும் உயர்வையும் சொன்னோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் குறித்து நாம் மேற்கொண்ட தேடலே

Read More

மஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!

நாளை மகா சிவராத்திரி. சிவராத்திரியின் மகிமையை பற்றி பல கதைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். மானை வேட்டையாடச் சென்ற வேடுவன் ஒருவன் எதிர்பாராமல் புலியிடம் சிக்கிக்கொள்ள, அதனிடமிருந்து தப்பிக்க ஒரு வில்வ மரத்தின் மீதேறி, தன்னையறியாமல் இரவு முழுதும் கண்விழித்து, வில்வ இலைகளை பறித்துப் போட, அது கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது வீழ்ந்து, அது சிவராத்திரி தினம் என்பதால் அவனுக்கு சிவராத்திரி விரத பலன் கிடைத்ததோடு சிவ தரிசனமும் கிடைத்தது. அதன்

Read More

பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80

சுயமுன்னேற்ற கருத்துக்களை கருவாக கொண்டே நமது ஒவ்வொரு MONDAY MORNING SPL பதிவும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய MONDAY MORNING SPL வழக்கதினின்று மாறுபட்டு சற்று வித்தியாசமாக தந்திருக்கிறோம். இதுவும் சுயமுன்னேற்ற கருத்து கொண்டது தான். ஆனால் இது நம் அகத்தை மேம்படுத்தக்கூடியது. இடையே அவ்வப்போது இது போன்ற கருத்துக்களை உள்ளடிக்கிய பதிவை தரலாமா என்று யோசித்து வருகிறோம். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவோம். நன்றி. ஒரு முறை துர்வாச

Read More

நான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

பாண்டவர்கள் துரியோதனனின் நிபந்தனைப்படி வனவாசம் இருந்த நேரம் அது. அகந்தை மனிதர்களுக்கு தலைதூக்குவது இயல்பு. அதுவும் கண்ணனைப் போல ஒருவனை நண்பனாக, வழிகாட்டியாக பெற்றவர்களுக்கு அகந்தை எழுவதில் வியப்பு இல்லையே. பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்வம் இருந்தது. பீமனுக்கு தன்னைப் போல பலசாலி இந்த உலகில் எவரும் இல்லை என்கிற அகந்தை இருந்தது. திரௌபதிக்கோ கௌரவர் சபை நடுவே அவள் துகிலுரியப்பட்டபோது அவளது மானத்தை கிருஷ்ணன் சேலையை வளர வைத்து காத்ததிலிருந்து

Read More

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

சென்ற மார்கழி மாதம் ஒரு நாள், போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் உள்ள நம் வாசகர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மார்கழி பஜனையில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற அவரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்திருந்தவர்களில் நெற்றி  நிறைய திருநாமம் இட்டுக்கொண்டு காட்சியளித்த ஸ்ரீராமுலு நம்மை மிகவும் ஈர்த்தார். பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம். இருப்பினும் விரிவாக பேச சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. மார்கழி கடைசி நாளன்றும் நாம் பஜனையில் பங்கேற்று பேசவேண்டும் என்று நமக்கு அழைப்பு

Read More

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

மகா பெரியவரே 'தாத்தா ஸ்வாமிகள்' என அன்போடு அழைத்த பெருமைக்குரியவர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்.  ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத

Read More

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

மகா சிவராத்திரி வரும் 17 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரியின் மகிமையை சொல்லவே வார்த்தைகள் போதாது எனும்போது மகா சிவராத்திரியின் மகிமையை எப்படி சொல்வது? மகா சிவராத்திரியின் மகிமையை விளக்கும் பிரத்யேக பதிவு ஒன்று அரிய புதிய தகவல்களுடன் தயாராகி வருகிறது. அதற்கு முன் மகா சிவராத்திரிக்கு இப்போதிருந்தே உங்களை தயார்படுத்த, சிவசிந்தனையில் உங்களை மூழ்கடிக்க சென்ற முறை அளித்ததைப் போலவே இந்த முறையும்

Read More

நல்லதோர் வீணை செய்தே….

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ....? சொல்லடி, சிவசக்தி... எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே.... சொல்லடி, சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ... விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன் நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் சிவ சக்தியைப் பாடும் நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ....? நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ....? சொல்லடி, சிவசக்தி...... [END]  

Read More

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

"பசுவிடமிருந்து நீங்கள் பாலை எப்படி அடைகிறீர்களோ அதே போல மிகுந்த பக்தியுடன் நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கு பூரண அனுக்கிரகம் கிடைக்கும்". இது சேஷாத்ரி சுவாமிகளின் சூட்சும அருள் மொழியாகும். உண்மையான, திடமான, மாறுபாடில்லாத நிரந்தரமான பக்தியையும் பிரார்த்தனையையும் செய்யும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் மகான்கள் வாழ்கிறார்கள். உள்ளத்திலிருந்தே உள்ளுணர்வை கிளப்பி கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி உதிக்கத் தவறுவதில்லையோ அதே போல உண்மை பக்தர்களுக்கு

Read More

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

இந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் பங்கேற்றது ஒருமறக்க முடியாத அனுபவம். இந்த வார பிரார்த்தனைக்கு போரூர் பாலமுருகன் கோவிலை சேர்ந்த திரு.துரைசாமி குருக்களை தேர்வு செய்திருந்தோம். ஜனவரி 18 அன்று பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணியின்போது, ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேட அர்ச்சனை செய்தோம் அல்லவா? அதை முன்னின்று நடத்தி தந்தது திரு.துரைசாமி குருக்கள் தான். வயதிலும், அனுபவத்திலும், தொண்டிலும் மூத்தவர். பல கும்பாபிஷேகங்களை தனது கரத்தினால் செய்தவர். துரைசாமி

Read More

சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79

வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்கள் முதல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு நல்ல இலட்சியத்திற்காக உழைப்பவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான விஷயம் சுற்றியிருப்பவர்கள் செய்யும் கேலி. சிலருக்கு காலம் கடந்த பிறகு ஞானோதயம் வரும். அதில் தவறே இல்லை. சாதனையாளர்கள் என்று நாம் இன்று வியக்கும் பலர் காலம் கடந்த பின்னர் ஞானோதயம் பெற்றவர்கள் தான். அப்படி தெளிவு பெற்று இலக்கை நோக்கி உழைப்பவர்களை உடனிருப்பவர்கள் கேலி செய்வதுண்டு. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசிப்

Read More

ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

7 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இருந்து 70

Read More

முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

முருகப் பெருமானையையே சிந்தித்து வாழ்ந்து வந்த தம்பதிகள் அவர்கள். செல்வத்திற்கோ சுற்றத்திற்கோ பஞ்சமில்லை. ஆனால் ஆயிரம் இருந்தும் என்ன? கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று இல்லையே என்கிற குறை அவர்களுக்கு. முருகனிடம் கதறித் துடித்தார்கள். அவர்கள் நிலை கண்டு இரங்கிய கந்தக் கடவுள், அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அழகிய ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் அவள். முருகப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் 'முருகம்மை' என்று முருகனின் பெயரையே

Read More

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

சிவகளை என்ற ஊரில் உள்ள சோரநாத விநாயகர் கோவில் சிதிலமடைந்திருந்தது. அதற்கு திருப்பணி செய்ய விரும்பிய சுப்பையாப் பிள்ளை என்பவர், மூர்த்திகள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்திருந்தார். வாரியார் சுவாமிகளை அவருக்கு நன்கு தெரியுமாதலால், திருப்பணிக்கு அவரை அணுகினார். வாரியார் தமது ஆயுட்காலத்தில் எண்ணற்ற ஆலயங்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். தனது சொற்பொழிவு மூலம் கிடைத்த வருவாய் அனைத்தையும் திருப்பணிகளுக்கே கொடுத்தான் வந்தார். எனவே சுப்பையாப் பிள்ளை வாரியார் சுவாமிகளை அணுகி, கேட்டபோது வாரியார் தாம்

Read More