Home > 2014 > April (Page 2)

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

இன்று நாம் அண்ணாந்து பார்க்கும், உலகையே தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கும், பல முன்னணி தொழில் சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்தை பார்த்தோமானால் விடாமுயற்சியும், அற்பணிப்பும், எதற்கும் கலங்காத மனமும் கொண்ட தனி மனிதன் ஒருவர் தான் நிச்சயம் பின்னணியில் இருப்பார். பூகம்பத்தாலும் போரினாலும் மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு மண்ணிலிருந்து ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒருவரது நம்பிக்கையூட்டும் வரலாற்றை தற்போது பார்ப்போம். 1906 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் ஜப்பானில்

Read More

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

தமிழ் புத்தாண்டு நன்னாளாம் இன்று, தமிழகம் கண்டெடுத்த ஒரு ஆன்மீக பொக்கிஷத்தை பற்றியும் அவர் வாழ்ந்த திருக்குறள் வாழ்க்கை பற்றியும் தெரிந்துகொள்வோம். நமது புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் இதை விட வேறு எதுவும் இருக்க முடியாது. மஹா பெரியவாவுக்கு பிறகு அவருக்கு சமமாக நாம் ஒருவர் மீது அன்பும், மதிப்பும் வைத்து பக்தி செலுத்தி வருகிறோம் என்றால் திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தான். அண்மையில் வாரியார் ஸ்வாமிகள் பிறந்த

Read More

பல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் !

நாளை (13/04/2014) பங்குனி உத்திரம். சென்ற ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாம் அளித்த பதிவை மீண்டும் அளிக்கிறோம். இயன்றவற்றை கடைப்பிடித்து இறையருள் பெறுங்கள். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நம் தளத்தில் சிறப்பு பதிவுகள் இடம் பெறும். நன்றி! ======================================================================= எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம்,

Read More

வறுமையில் வாடிய புலவர் – அம்பிகை கொட்டிய பொற்காசுகள் ! RIGHTMANTRA PRAYER CLUB

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பொன் விளைந்த களத்தூரில் செங்குந்தர் மரபில், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், படிக்காசு தம்பிரான். திருவாரூரில் வாழ்ந்து வந்த வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியங்களை கற்றுப் புலவரானார். திருமணமான பிறகு வல்லை மாநகர் காளத்தியிடம் சென்று பாடிப் பொருளையும் ஒரு கறவை மாட்டையும் பெற்று வந்தார். மாவண்டூரில் உள்ள கறுப்ப முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க தொண்டை மண்டல சதகம் பாடி அரங்கேற்றி நவரத்தினங்கள் பதித்த ஹாரத்தையும் தங்கக் காசுகளையும்

Read More

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!

செவ்வாய்க்கிழமை ராமநவமி வரப்போகிறதென்று சென்ற வெள்ளிக்கிழமையே பதிவு அளித்து, 'எப்பவுமே இது போன்ற பண்டிகைகளை பற்றி கடைசி நேரத்துல சொல்றீங்களே' என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாசகர்களிடம் இம்முறை நாம் தப்பித்துவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், ஞாயிறு வெளியூர் சென்று ரோல் மாடல் சந்திப்பு முடித்துவிட்டு அதை எழுத உட்கார்ந்த மும்முரத்தில் செவ்வாய் இராமநவமி என்பதை மறந்துவிட்டோம். (ஏதாவது புரியுதா?) திங்கள் இரவு தான் மறு நாள் இராமநவமி என்பதே

Read More

நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

இதுவரை எத்தனையோ வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். புன்னகைத்திருப்பீர்கள். ஏன்...அழுதிருப்பீர்கள். சிலிர்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது நம் கணிப்பு. எப்படி வாழவேண்டும் என்பதற்கு வழிகாட்டும் அருமையான காணொளி இது. (வீடியோவின் நீளம் சுமார் 3 நிமிடம் தான்). இந்த வீடியோவை பார்த்து கண்கலங்காதவர்களே இருக்க முடியாது. நம் முகநூலில் நண்பர் கிரிதரன் இதை சமீபத்தில் நமக்கு பகிர்ந்திருந்தார். எந்த ஒரு மனிதன் சுயநலம் இல்லாமல் பிறருக்கு உதவி செய்து வாழ்கிறானோ

Read More

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

இன்று பாரதியை உலகே கொண்டாடும் ஒரு சூழ்நிலையில், அன்று அவர் எப்படி வாழ்ந்தார் அவர் இல்லறம் எப்படி நடைபெற்றது என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒரு அருமையான தொகுப்பு இது. (1951-ஆம் ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை!) "என் கணவர்!" ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ்

Read More

ராம நாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு? – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

எங்கெல்லாம் இராம நாமம் ஒலிக்கிறதோ, இராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அழுத கண்ணும், தொழுத கையும் உடையவனாக அனுமன் நிற்கிறான் (விளங்குகிறான்) என்பதை நாம் அறிந்திருப்போம். இராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான். ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணை கட்டி ‘சேது ராமனாக’ ஆகியே இலங்கை சென்றார். மூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் சென்றார்கள். சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த சங்கீத

Read More

கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன?

வேலைக்கு போவதும், பணத்தை சம்பாதித்து கொட்டுவது மட்டுமே ஆண்களின் வேலை அல்ல. மகிழ்ச்சியான ஒரு இனிய இல்லறத்திற்கு அதற்கு அப்பாலும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் எத்தனை ஆண்கள் அதை புரிந்துகொண்டு நடக்கிறார்கள் என்று தெரியாது. ஒரு மனைவியானவள் கணவனிடம் உண்மையில் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் எளிமையானவை, இனிமையானவை, யதார்த்தமானவை! எல்லாவற்றுக்கும் மேல் சுலபமாக நாம் நிறைவேற்றக்கூடியவை. நண்பர் கோபாலகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்ததை இங்கு

Read More

கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள் – MONDAY MORNING SPL 39

பாரதப்போர் நடைபெற்று வந்த நேரம். ஒற்றுமையா இருக்க வேண்டிய சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த விசித்தரமான போர் அது. கௌரவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்திருந்த போதும் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்கள் பக்கம் நின்றான் மாவீரன் கர்ணன். கர்ணனின் முன் முதலில் வந்தவன் பாண்டவரில் மூத்தவன் தருமன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன்

Read More

ராமநவமியன்று நாம் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் மஹா பெரியவா!

வரும் ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ராமநவமி. இராமபிரான் அவதரித்த திருநாள். பரமேஸ்வரனே ராம, ராம, ராம என்று மூன்று முறை மனமொன்றி சொன்னால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார் என்றால், இராம நாமத்தின் மகிமையை எப்படி அறுதியிட்டு சொல்வது? பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், எதற்கு மானிடனாக பிறந்து மரவுரி தரித்து காட்டிலும் மேட்டிலும் திரியவேண்டும்? திரேதா யுகத்தில் மக்கள், "இறைவன் படைத்த வேதங்களின் படி வாழ்வது

Read More

புண்ணியம் நல்கும் ஜடாயு மோட்சம் உணர்த்தும் நீதி! – Rightmantra Prayer Club

இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்கு போகும் வழியில் கழுகுகளின் அரசனான ஜடாயு எதிரே வந்தது. சீதையை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டும் இராவணன் சம்மதிக்காததால் ஜடாயுவிற்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான். தன்னைக் காப்பாற்ற வந்த ஜடாயு குரூரமாகத் தாக்கப்பட்டு கீழே வீழ்வதை வேதனையுடன் பார்த்தாள் சீதை. வேறு வழி எதுவும் தெரியவில்லை. உயரத்திலிருந்தபடியே தழுதழுக்கக் கேட்டுக் கொண்டாள்: "ஐயா, என் பொருட்டுத் தாங்கள் சிறிது காலம்

Read More

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

சமீபத்தில் நம்மிடம் பேசிய வெளியூர் நண்பர் ஒருவர், குடும்பத்தில், உத்தியோகத்தில், உறவுகளில், நட்பில் இப்படி எங்கு சென்றாலும் தாம் அவமதிக்கப்படுவதாகவும், இத்தனைக்கும் நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்தவனில்லை. சொல்லப்போனால் நான் வாழத் தெரியாதவன். நடிக்கத் தெரியாதவன். தில்லுமுல்லு செய்யத் தெரியாதவன். புறம் பேசத் தெரியாதவன். அவ்வப்போது உங்கள் பதிவுகளை படித்து ஆறுதல் அடைகிறேன். என் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து, இறைவன் தான் என்பதால் ஆன்மீகத்தின் மீது அளவற்ற

Read More

‘என் குழந்தைகளுக்கு இப்படியா?’ கதறி அழுதவரிடம் மகா பெரியவா சொன்னது என்ன?

நாம் இது வரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக எளிமையான ஒருவர் மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்கள் என்றால் மிகையாகாது. நமது பாரதி விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்புற செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். மகா பெரியவா அவர்களை பற்றி பாலன் அவர்களின் கருத்து என்ன? அவரை பற்றி ஏதேனும் பேசியிருக்கிறாரா அல்லது எழுதியிருக்கிறாரா என்கிற சந்தேகம் நமக்கு இருந்துகொண்டு வந்தது. என்ன ஆச்சரியம்... அடுத்த சில நாட்களில் அதற்கு

Read More