தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!
மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் சர்வசாதரணமாக நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம் அநேகம். அவ்வாறு அவர் நிகழ்த்திய அற்புதம் ஒன்றை தந்திருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே இதை கேள்விப்பட்டிருந்தாலோ அல்லது படித்திருந்தாலோ மீண்டும் ஒரு முறை படியுங்கள். விஷயம் இருக்கிறது. திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம்.
Read More